புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
2 Posts - 1%
prajai
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
432 Posts - 48%
heezulia
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
29 Posts - 3%
prajai
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தன்னேரிலாத தமிழ் Poll_c10தன்னேரிலாத தமிழ் Poll_m10தன்னேரிலாத தமிழ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னேரிலாத தமிழ்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 10:10 am

”ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்” – தண்டியலங்காரவுரை மேற்கோள்


[You must be registered and logged in to see this image.]

4000 ஆண்டுகளுக்கு முன் ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல் திராவிட மொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற திராவிட மொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் ([You must be registered and logged in to see this link.]) குடியேறத் துவங்கினர். ஆரியர் அரப்பாவிற்கு வந்த போது சிந்து வெளி நாகரீகம் (கி.மு. 2900 – 1900) பெரும்பாலும் அழிந்திருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தொல் திராவிட மொழி பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியல் பேராசிரியர் அசுகோ பர்ப்போலா ([You must be registered and logged in to see this link.]) அவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த திரு ஐராவதம் மகாதேவன் ([You must be registered and logged in to see this link.]) அவர்களும் கூறுகின்றனர். ஆனால் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பல மொழிகள் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் சமசுகிருதப் பேராசிரியர் மைக்கல் விட்சல் ([You must be registered and logged in to see this link.]) அவர்கள். அவர் அப்பகுதியில் முண்டா மொழிகளும் பேசப்பட்டிருக்கக் கூடும் என்கிறார். எது எப்படியோ சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. தொல் திராவிட மொழி அங்கு பேசப்பட்டிருக்கும் வாய்ப்புமுள்ளது என்பது வேதகாலத்தில் ஆரியர்கள் எழுதிய இருக்கு (Rig Veda : 1500 -1200 BCE) வேதத்திலிருக்கும் திராவிடச் சொற்கள் மூலம் தெரிகிறது. முண்டா மொழிச் சொற்களும் இருக்கு வேதத்திலிருப்பதிலிருந்து முண்டா மொழியும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

ஆரியர் வருகைக்குப் பின் வட மொழியின் நெருக்கடியினாலும் ஆரிய மன்னர்களின் பலத்தினாலும் வடக்குத் திராவிட மொழிகள் ஒன்றன்பின் ஒன்றாக அழியத் துவங்கின. தென்னிந்தியாவில் அக்காலத்தில் ஆரிய மொழியின் தாக்கம் அதிகமில்லாததால் திராவிடமொழி அங்கு தொடர்ந்து வழக்கத்திலிருந்தது. தொல் திராவிட மொழியிலிருந்து முதலில் தோன்றியது தமிழ் மொழி. அதன் பின் கன்னடமும் தெலுங்கும் தோன்றின. ஆனால் இவ்விரண்டு மொழிகளிலும் சமசுகிருதத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளது. 12-ம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழிலிருந்து தோன்றிய மலையாள மொழியிலும் வட மொழியின் தாக்கம் அதிகமுள்ளது. ஆனால் தமிழர் மட்டும் வட மொழி ஆதிக்கத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தமிழின் தனித்துவத்தைக் காத்து வருகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் இலக்கியத் தொடர்ச்சி வியக்கத் தகுந்தது. அதனால்தான் அன்று எழுதப்பட்ட சங்கத் தமிழ் இன்றும் நம்மால் படித்து புரிந்துக் கொள்ள முடிகிறது. இந்த இலக்கியத் தொடர்ச்சி எம்மொழிக்குமில்லை என்பது வெறும்புகழ்ச்சியில்லை, உண்மை. இதற்குக் காரணம் நம் முன்னோர்களின் உழைப்பும் தமிழுணர்வுமாகும். தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டாலும் தமிழ்ப்புலவர்கள் தமிழுணர்வோடு மன்னர்களினிடையில் அமைதிக்காகப் போராடியுள்ளனர் என்பதை புறநானூற்றுப் பாடல்களில் காணலாம். (எ.கா. புறம் 27). அதியனுக்கு ஆதரவாக ஔவை மூவேந்தர்களிடம் பேசியது சங்கப் பாடல்களில் காண்கிறோம்.

தமிழின் தொன்மையை அறிய மற்றுமொரு சான்று கி.மு. 2-ம் நூற்றாண்டில் காரவேல மன்னனின் புவனேசுவரம் நகர் (ஒரிசா மாநிலம்) அருகிலுள்ள உதயகிரி மலையிலுள்ள அதிகும்பா கல்வெட்டுக்கள் ([You must be registered and logged in to see this link.]). அக்கல்வெட்டுக்களில் காரவேல, ’த்ரமிரா (தமிழ்) கூட்டரசை (confederacy)’ தோற்கடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதை ஆய்ந்த அமெரிக்காவில் வாழும் முனைவர் சு. பழனியப்பன் அவர்கள் அகநானூற்றின் 31-ம் பாடலை மேற்கோள் காட்டித் தமிழர் கூட்டரசு இருந்ததை நிறுவியுள்ளார். மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதிய அப்பாடல், “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பல் மலை”. இப்பாடலில் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. இம்மூவரின் தமிழ்ப் படை வடக்குத் தமிழகத்தில் நிலை கொண்டு தமிழகத்தைக் காத்து வந்தது என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது. பழனியப்பன் அவர்களின் ஆய்வைக் கீழ்க்கண்ட இந்தியவியல் குழுமத்தில் காணலாம்.

[You must be registered and logged in to see this link.]

மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ ஒரு தமிழ்த் தேசியவாதியாக வாழ்ந்துள்ளார் என்பது அவரது காவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சேரநாட்டில் பிறந்த அவர் சோழநாட்டையும், பாண்டிய நாட்டின் பெருமையையும் தம்நூலில் விவரித்துள்ளார். செக்கோசுலேவியால் பிறந்த பெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் சிலப்பதிகாரத்தைத் ‘தமிழில் எழுதப்பட்ட முதல் தமிழ்த்தேசிய நூல்’ என்று வருணித்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் அவர் எழுதிய”Smile of Murugan, The Tamil Literature” என்கிற நூலில்,

”There is no “Dravidian” Literature per se. It is however entirely different with respect to Tamil Literature. It is of course only the earliest period of the Tamil literature which shows those unique features. But the early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by its literary excellence. There is yet another important difference between Tamil and other Dravidian literary languages: the meta language of Tamil has always been Tamil, never Sanskrit.

Tamil and Sanskrit cultures have shared with each other. The very beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence – just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic hymns, and show traces of Dravidian influence. On the other hand, there are some sharply contrasting features which are typical for Tamil classical culture alone, for the Tamil cultural and literary tradition as opposed to other non-Tamil tradition – and in this respect, Tamil cultural tradition is independent, not derived, not imitative; it is pre-Sanskritic, and from this point of view Tamil alone stands apart when compared with all other major languages and literatures of India”

[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவில் பணியாற்றிய மற்றுமொரு பெரும் தமிழறிஞரான பேராசிரியர் அ.கி. இராமானுசன் அவர்கள் தமிழைக் குறித்து எழுதும் போது, ”In most Indian languages the technical gobbledygook is Sanskrit; in Tamil the gobbledygook is ultra-Tamil. Tamil, one of the two classical languages of India, is the only language of contemporary India which is recognizably continuous with a classical past”.

அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள பொருந்தல் என்கிற கிராமத்தில் புதை குழியொன்றில் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு இறந்தவருடன் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த மணிகள் போன்ற பல பொருள்களுடன் நெல்மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த நெல்மணிகள் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்று ஒரு அமெரிக்க நிறுவனம் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்பானையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களினால் ‘வயரா’ என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கையில் பிராமி எழுத்துக்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. ([You must be registered and logged in to see this link.]) இக்கண்டுபிடிப்பினால் பிராமி எழுத்துக்கள் அசோகப் பேரரசனுக்கு பின்பு தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்தது என்பது கேள்விக்குறியாகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்கப் பாடல்கள் மூலம் பழந்தமிழர் வாழ்வை நாம் தெளிவாக அறிய முடிகிறது. சாதி, மத பேதமின்றி, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி தமிழர்கள் வாழ்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. தன்னேரிலாத தமிழ் மொழியை இன்று நாம் படிப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ்ப் பெரியவர்கள் உ.வே.சாமிநாதைய்யரும் ஈழத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களும்தான். அதுவரை சங்க இலக்கியங்கள் தமிழ் அறிஞர்களால் அறியப்படாமல் இருந்தன. இவர்கள் இருவரைத் தொடர்ந்து பல தமிழறிஞர்கள் சங்க நூல்களைப் பதிப்பித்து உரையெழுதியுள்ளனர்.

திராவிட மொழிக்குடும்பம் குறித்த ஆய்வு கி.பி 1800-க்கு பின்புதான் துவங்கியது. அதற்கு முன் அனைத்து மொழிகளும் (தமிழ் உட்பட) சமசுகிருதத்திலிருந்து தோன்றியதாகத்தான் அறிஞர்கள் கருதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் திராவிட மொழியிலிருந்து தோன்றின என்கிற உண்மையை உணர்த்தியர்வர்கள் மேலை நாட்டு மொழியிலறிஞர்கள்தான். 1816-ம் ஆண்டு பிரான்சிசு எல்லிசு (Francis W. Ellis) அவர்கள் A.D. Campbell அவர்களின் ‘A Grammar of the Teloogoo Language’ என்கிற நூலின் அறிமுகவுரையில் திராவிட மொழிகளைக் குறித்து எழுதியுள்ளார். அவர் முதலில் தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று அழைத்தார். அதன் பின்பு 1856-ம் ஆண்டில் இராபர்ட் கால்டுவெல் என்கிற பாதிரியார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான ‘A comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்கிற நூலில் முதன் முறையாகத் திராவிட மொழிக்குடும்பத்தைக் குறித்து எழுதி, தமிழ் உட்பட மற்றைய திராவிட மொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றவில்லை. இவையொரு தனி மொழிக் குடும்பம் என்று உலகிற்கு உணர்த்தினார். (Preface of ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau).

தமிழ் மொழிக்கு மேலை நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டு சிறப்பு மிக்கது. அவர்கள் தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர். இராபர்ட் கால்டுவெல், அருட்தந்தை ஜியு போப், பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர் அ.கி. இராமானுசன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு, முனைவர் சு. பழனியப்பன் மற்றும் பலருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களுடன் தமிழகத்தில் தமிழைக் காக்க உழைத்த மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், திரு.வி.க, இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு நாம் செய்யும் கடமையொன்றே. தன்னேரிலாத தேனினும் இனிய தமிழை நாமும் கற்று அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் அது.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுக் காரணங்களினால் நல்ல தமிழறிஞர்கள் தமிழகத்தில் தோன்றுவது பின் தங்கி விட்டது. அதற்கு அரசும் ஒரு காரணம் என்று கூறுவதில் தவறேதுமில்லை. மீண்டும் தமிழை அரியணையிலேற்றி அதை மேம்படுத்துவது நம் கடமை. அதற்கான பணியை நாம் தமிழுணர்வாளர்களுடனும், தமிழ் நாட்டிலும் மேலை நாட்டிலும் வாழும் தமிழறிஞர்களுடனும் இணைந்து செயல்பட்டு உருவாக்க வேண்டும்.

நன்றி க.தில்லைக்குமரன்




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 10:17 am

நல்ல பகிர்வு ராஜூ.

தமிழின் சிறப்பு தமிழர்கள் நமக்கு தெரியவில்லை அப்புறம்ல நம் நாட்டினருக்கு தெரியப் போவுது. வெளி நாட்டுக்காரர்களுக்கு இது தெரிந்ததால் நமக்கு தெரிய வருது இதுதான் நம் நிலை இன்று - வருத்தம்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 10:21 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு ராஜூ.

தமிழின் சிறப்பு தமிழர்கள் நமக்கு தெரியவில்லை அப்புறம்ல நம் நாட்டினருக்கு தெரியப் போவுது. வெளி நாட்டுக்காரர்களுக்கு இது தெரிந்ததால் நமக்கு தெரிய வருது இதுதான் நம் நிலை இன்று - வருத்தம்.

மனிக்கவும் இங்கு தான் தமிழன் தன்னை பற்றி அறியாதவன் என கூற தோன்றுகிறது தல புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக