ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்!

Go down

இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Empty இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்!

Post by சாமி Mon Jun 03, 2013 11:10 am

தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் பலவற்றுள் குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகமே மிகவும் சிறப்புடையதாக் கருதப்படுகிறது. கலம்பக உறுப்புகளுள் ஒன்று "மடல்'.

இந்நூலில் தலைவி கூற்றுப் பாடல்களாக 21 பாடல்கள் உள்ளன. இந்த 21 பாடல்களுள் 13 பாடல்கள் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் அகமரபு இலக்கணத்துக்கு ஏற்ற இலக்கியமாக அமைந்துள்ளன. இரண்டு பாடல்கள் நம்பியகப்பொருளில் கூறப்பட்டுள்ள இலக்கணத்துக்கே ஏற்படையதாக உள்ளன. ஆனால், தொல்காப்பியத்தில் அதற்கான இலக்கணம் காணப்படவில்லை. ஏனைய ஆறு பாடல்கள் இவ்விரு இலக்கண நூல்களுக்கு உட்படாமல் அகமரபை மீறிய பாடல்களாக அமைந்துள்ளன.

இங்கு சுட்டப்படும் பாடல் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள அகமரபுக்கு உட்படாத பாடலாகும்.

மடலேறுதல் என்பது காமம் மிக்கவர் தம் அன்புக்குரியவரைப் பெறாவிடத்து அவர்தம் வடிவத்தையும் பெயரையும், தம் பெயரையும் ஒரு படத்தில் சித்திரம் போல எழுதி, கையில் ஏந்திக்கொண்டு, பனைமடலால் ஒரு குதிரை உருவம் செய்வித்து அதன்மேல் ஏறி, அதைப் பிறரால் இழுப்பித்து வீதிவழியே பலரும் கூடும் பொது இடங்களில் செல்லுதல். இதனால் இவரது அன்புறுதியைக் கண்டு உறவினரோ, அரசரோ காதலர் இருவரையும் கூட்டுவிப்பர். இது பெரும்பான்மை ஆடவர்க்கே உரியது. ஆனால், மதுரைக் கலம்பகத் தலைவியோ, தான் மடலேறுவதாகக் கூறுகிறாள்.

இடம்கொண்ட மானும் வலம்கொண்ட
ஒள்மழுவும் எழுதும்
படம்கொண்டு வந்தனை நெஞ்சமே
இனி பங்கயப்பூந்
தடம்கொண்ட கூடல் சவுந்தர
மாறர் பொன்தாள் பெயர்த்து
நடம் கொண்டது ஓர்வெள்ளிமன்று
ஏறுதும் இன்று நாளையிலே!''

(பா-33)

"இடக்கரத்தில் மானையும் வலக்கரத்தில் மழுவாயுதத்தையும் ஏந்தியுள்ள சிவபெருமானின் அழகிய ஓவியத்தைக் கொண்டு வந்தாய் நெஞ்சமே! இனிமேல் பொற்றாமரைக் குளத்தையுடைய மதுரையில் எழுந்தருளியுள்ள சொக்கநாதக் கடவுள் பொன்போன்ற தம் அழகிய திருவடிகளை மாற்றிவைத்துத் திருநடனஞ் செய்தருளும் இடமாகிய வெள்ளியம்பலத்திலே அவர் மீது நான் செலுத்தும் அன்பினைப் பிறர் அறியும் வண்ணம் இன்றேனும் நாளையேனும் நான் மடலேறுவேன்' என்கிறாள் தலைவி. இல்லின்று வெளிவருவதே இழுக்கென்னும் பண்பாட்டில் வளர்ந்தவள், ஊர்நடுவே "மடலேறுவேன்' என்பது தலைவன் மீது கொண்ட காதல் மிகுதியினால் அன்றோ! அகமரபை மீறியதாக இப்பாடல் இருந்தாலும் பெண்களின் மன ஓட்டங்கள் இப்படியும் செல்கின்றன என்பதைக் குமரகுருபரரைத் தவிர வேறு யாரால் இவ்வளவு அழகாகக் கூறமுடியும்!
நன்றி-தமிழ்மணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum