ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையை வளர்க்கும் தேர்த் திருவிழா!

2 posters

Go down

ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Empty ஒற்றுமையை வளர்க்கும் தேர்த் திருவிழா!

Post by சிவா Sun Jun 02, 2013 12:14 pm



தமிழகத்தில் மாதந்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சித்திரை மாதத்தில் பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவதைக் காண்கிறோம்.

இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எனினும் தமிழகத் திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகின்றன.

தேர் பற்றிய தொன்மையான குறிப்புகள் வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் தேர், தேர்ப்பாகன், குதிரை முதலியவை மனிதனுடைய உடல் புலன்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு கூறப்படுகிறது. தேர் செய்யும் முறை பற்றி மயமதம்- மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. தேர்களில் விஜயம், காந்தம், ஸ்ரீகேசம், விசாலம், நிபத்ரம், பத்ரவிலாசம் என்று பல வகைகள் உள்ளது பற்றி "குமார தந்திரம்' என்ற ஆகம நூல் குறிப்பிடுகிறது.

தேர்களில் அரசன் ஏறிச் செல்வது, போர்களில் பயன்படுத்துவது போன்ற பிரிவுகள் இருந்தன. திருக்கோயில்களில் விழாக்களின்போது மக்கள் இழுக்கும் தேரினை "ரதம்' என்று கூறுவர். மாடுகள் இழுக்கும் ரதத்தினை "கோரதம்' எனக் குறிப்பிடுவர். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் உலா வரும் தேர் "கோரதம்' என அழைக்கப்படுகிறது. இராமபிரானின் தந்தையான தசரதன், பத்து திசைகளிலும் தனது தேரை செலுத்த வல்லமை பெற்றிருந்ததால் "தசரதன்' என அழைக்கப்பட்டார் என அறிகிறோம்.

சங்க இலக்கியங்களிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒரே பகலில் எட்டு தேர்களைச் செய்யும் தச்சன் இருந்ததாக புறநானூறு கூறுகிறது. படருவதற்கு இடம் இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்காக தனது தேரையே அளித்த பாரிவள்ளலைப் பற்றி நாம் அறிவோம். மேலும் பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகையிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

பசுவின் கன்று மீது தேரினை ஏற்றிக் கொன்ற தனது மகனை, மகன் என்றும் பாராமல் தேர்காலில் இட்ட மனுநீதிச் சோழன் வரலாறு தேரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதை திருவாரூர் கோயிலில் கண்டு மகிழலாம். சென்னை அருகே மப்பேடு சிங்கீசுவரர் கோயிலிலும் காணலாம்.

திருநாவுக்கரசர் பெருமான் தமது திருப்பதிகத்தில் கோயிலின் அமைப்பில் பல வகைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒன்று "கரக்கோயில்'. சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோயிலின் கருவறை தேர் வடிவில் சக்கரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோயிலை "தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்' என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.

சிதம்பரம் கோயிலில் ஆடல் வல்லான் எழுந்தருளும் கருவறைக்கு எதிரே "நிருத்த சபை' என்ற மண்டபம் உள்ளது. இங்கு இறைவன் 'ஊர்த்துவ தாண்டவம்' ஆடும் நிலையில் கண்டு வணங்கலாம். இம்மண்டபத்தின் இருபக்கங்களிலும் சக்கரங்களும்- அதனை குதிரை இழுத்துச் செல்வது போன்ற சிற்பமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தை "தேர்க்கோயில்' என விக்கிரமசோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது போன்ற அமைப்பு உள்ள தேர் மண்டபங்களை ஸ்ரீரங்கம், தாராசுரம், கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில், துக்காச்சி, திரிபுவனம், திருவக்கரை, குன்றாண்டார் கோயில் போன்ற கோயில்களில் காணலாம்.

கும்பகோணம் சாரங்கபாணித் திருக்கோயில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது. திருமங்கையாழ்வார் இத்தலத்திற்காக "திருவெழுகூற்றிருக்கை' என்ற சித்திரக் கவிதையை தேர் போன்ற ரத பந்த அமைப்பில் பாடி அருளியுள்ளார். இக்கோயிலின் கருவறையும் தேர் வடிவில் குதிரை- யானை இழுப்பது போல அமைந்துள்ளது. இதனை வைதீக விமானம், சோமசந்த விமானம் எனக் குறிப்பிடுகின்றனர்.

சிற்பங்களிலும் தேர் வடிவம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழிக்கச் செல்லும்போது தேரில் செல்கிறார். தேரை பிரம்மன் செலுத்த, சூரியன், சந்திரன் இருவரும் சக்கரங்களாக அமைகின்றனர். அத்தகைய நிலையிலிருக்கும் சிற்பங்களை திருவதிகை, தாராசுரம், காஞ்சிபுரம், தஞ்சை கோயில்களில் காணலாம்.

சூரியனது வடிவம் உள்ள சிற்பங்களில் ஒரு சக்கரம் உடைய தேரின் மீது ஏழு குதிரைகள் இழுத்து வரும் நிலையில் காணலாம். இத்தகைய சிற்பங்களை சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் காணமுடிகிறது. காதல் தெய்வமான மன்மதனும் வில்லேந்தி தேரில் செல்வது போன்று சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் காணப்படும் ஓவியங்களிலும் தேர்கள் இடம் பெற்றுள்ளன. இராமாயண காப்பியத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களில் இராமனும்- இராவணனும் போர் செய்யும் காட்சியில் தேரில் இருவரும் நின்று போர் செய்வதைக் காண முடிகிறது. மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் தேவி மீனாட்சி எண்திசை காவலர்களுடன் போரிடும் (திக்விஜயக் காட்சி) காட்சி பொற்றாமரைக்குளம் அருகே மண்டபத்தில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நாயக்கர் கால ஓவியம் இது! மீனாட்சி தேரில் இருந்தபடி போர் செய்யும் காட்சியைக் காணலாம்!

தேர்த் திருவிழாக்கள் பல திருக்கோயில்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மதுரை, திருவையாறு, திருவிடைமருதூர், திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, எலவானாசூர் போன்ற பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழா நடத்தவும், தேர்களையும் செய்து அளித்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மதுரை நாயக்க மன்னர்கள் பலவகையான காசுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்றில் ஒருபுறம் தேரின் வடிவமும்- மறுபுறம் "ஸ்ரீதர' என்று தெலுங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்க மன்னர் மதுரை கோயிலுக்குத் தேர்களை செய்து அளித்துள்ளார். அதன் நினைவாக இக்காசுகளை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இன்று பல திருக்கோயில்களில் தங்கத் தேரில் இறைவன்- இறைவி எழுந்தருளுவதைக் காண்கிறோம் பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம், ரத்தினகிரி, திருவேற்காடு, வடபழனி, மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயில் போன்ற பல திருக்கோயில்களில் தங்கத்தேர் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தேர் மரத்தால் செய்யப்பட்டாலும் ஒரு கோயிலின் அனைத்துப் பகுதிகளும் உள்ளன. இதனை "நகரும் கோயில்' எனக் குறிப்பிடுவர். தேரில் இறைவனை தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும், தேரோட்டம் நாட்டில் அமைதியையும் செழிப்பினையும் உண்டாக்கும் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

தேர்த் திருவிழாக்கள் மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறக்கவும்- ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகின்றன என்றால் மிகையில்லை! இவற்றை போற்றி காக்க வேண்டியது நமது கடமை!

-கி.ஸ்ரீதரன்
தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)


ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Empty Re: ஒற்றுமையை வளர்க்கும் தேர்த் திருவிழா!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 12:49 pm

எங்க ஊரிலும் நிறைய தேர் திருவிழா நடக்கிறது அனைத்துமே தேர் விழாக்களும் ஒற்றுமையை வளர்கிறது என்பது உண்மை தான்


சில இடங்களில் பிரச்சனைகள் வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் மதுபானம் தான்

பதிவு அருமையிருக்கு நன்றி



ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Uஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Tஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Hஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Uஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Oஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Hஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Aஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Eஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum