Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
4 posters
Page 1 of 1
90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
சந்தையில் விற்கப்படும் குடிநீர் கேன்களில், 90 சதவீத கேன் குடிநீர் குடிக்க உகந்ததில்லை எனஇந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.
நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.
எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:
தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.
குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி-dinamani

Re: 90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
பணத்தை கொடுத்து வாங்கும் தண்ணீரும் சுத்தமில்லை....அதை விட மோசமாக உள்ளது அந்த கேன்கள்.. அவற்றாலே தண்ணீரில் கிருமிகள் பரவுகின்றது ...
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
பயனுள்ள தகவல்,
ஆயினும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து குடிக்கும் அளவுக்கு பலருக்கு பொறுமை இல்லை, நாளை வெட்டி வேர் நீர் என்று இதே கம்பெனிகள் பெயர் மாற்றி விற்றால் அதையும் துளியும் யோசனையின்றி வாங்கும் மக்கள் இங்குள்ளனர்.
சமீபத்தில் மக்களிடையே organic product மோகமும், நாகரிகமும் கேன் வாட்டர் கலாச்சாரம் போல் மெல்ல பரவி வருகிறது.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Similar topics
» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
» கடம்ப மலர் முருகனுக்கு உகந்தது!
» "வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது" - கவிஞர் வைரமுத்து
» தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
» கேன் வாட்டர் குடிப்பவரா உஷார் !!!
» கடம்ப மலர் முருகனுக்கு உகந்தது!
» "வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது" - கவிஞர் வைரமுத்து
» தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
» கேன் வாட்டர் குடிப்பவரா உஷார் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|