ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty ரவா தோசை 4

Post by krishnaamma Wed May 29, 2013 8:25 pm

இது மற்றொரு விதமான ரவை தோசை .

தேவையானவை :

பாம்பே ரவா 1 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன் ( உடைக்கவும் )
வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/2 கப்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
நெய் மற்றும் எண்ணெய் கலந்து வைத்துக்கொள்ளவும் (தோசை வார்க்க )
கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு

செய்முறை :

பாம்பே ரவா வை நன்கு வறுக்கணும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு, ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும் வைக்கவும்;
வெங்காயம் , சீரகம், பச்சை மிளகாய் என எல்லாம் போட்டு கலக்கவும்.
தண்ணீர் தேவையானால் விட்டுக்கொள்ளவும்.
நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
மொரு மொறுப்பாக இருக்கும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty ரவா மசாலா தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 8:42 pm

தேவையானவை :

ரவா தோசை மாவு 2 கப் *
வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
பூண்டு 1 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கினது ( தேவையானால் )

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிவைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், வெங்காயம் போடவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக ரவா தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடவும்.
பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
பிறகு அதை மடித்து பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும். புன்னகை

* ரவா தோசை மாவு :

1 கப் கோதுமை மாவு , 2 கப் அரிசி மாவு, 3 கப் பாம்பே ரவா எடுத்துக்கணும். அவ்வளவு தான் ரவா தோசை அருமையாக பட்டு பட்டாக வரும் புன்னகை

இதில் தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை

கோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty வெங்காய ரவா தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 8:49 pm

தேவையானவை :

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 2 கப்
ரவை 3 கப்
பச்சை மிளகாய் 3 - 4
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தண்ணியான மோர் 2 கப்
கறிவேப்பிலை
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ரவை , இவற்றை நன்றாக மோர் விட்டு கரைக்கவும்.( தோசை மாவு பதத்திற்கு).
பச்சை மிளகாவை பொடி பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து , தோசை மாவில் போடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை தோசை மாவுடன் சேர்க்கவும்.
இந்த வெங்காய ரவா தோசை சாதாரண ரவா தோசையை விட 'மொறு மொறு ' வென்று இருக்கும்.
எல்லா ரவா தோசைகளுக்கும் தேங்காய் சட்னி ரொம்ப நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 8:51 pm

யாரோ ஒரு நண்பர் என் தோசை ரெசிபி எல்லாம் விரும்பி இருக்கீங்க புன்னகை so nice of you ; thank you நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty முந்திரி, வெங்காய ரவா தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 8:54 pm

தேவையானவை :

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 2 கப்
ரவை 3 கப்
பச்சை மிளகாய் 3 - 4
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
தண்ணியான மோர் 2 கப்
முந்திரி 1/2 கப் உடைத்தது
கறிவேப்பிலை
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ரவை , இவற்றை நன்றாக மோர் விட்டு கரைக்கவும்.( தோசை மாவு பதத்திற்கு).
பச்சை மிளகாவை பொடி பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து , தோசை மாவில் போடவும்.
முந்திரி போடவும்; சீரகம் ,மிளகு பொடித்து போடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை தோசை மாவுடன் சேர்க்கவும்.
இந்த தோசை சாதாரண ரவா தோசையை விட 'மொறு மொறு ' வென்று இருக்கும்.
எல்லா ரவா தோசைகளுக்கும் தேங்காய் சட்னி ரொம்ப நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty மைதா தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 8:58 pm

தேவையானவை :

மைதா மாவு 1 கப்
அரிசி மாவு 1 கப்
உப்பு
மோர் 1 கப்
எண்ணெய் அல்லது நெய் தோசை வார்க்க

செய்முறை:

மைதா மாவு மற்றும் அரிசி மாவு, இரண்டையும் மோர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.
அவ்வளவு தான், தோசை வர்க்க வேண்டியதுதான் புன்னகை

குறிப்பு : தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty மைதா கடலை மாவு தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 9:04 pm

தேவையானவை :

அரிசி மாவு 1 கப்
மைதா மாவு 1 கப்
கடலை மாவு 1 கப்
மிளகாய் பொடி 1 ஸ்பூன் (தேவைபட்டால்)
கறிவேப்பிலை
உப்பு

செய்முறை :

அரிசி மாவு, கடலை மாவு மற்றும் மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரைத்து வைக்கவும்.
பிறகு கறிவேப்பிலை, மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
மஞ்சள் வண்ணத்தில் தோசை அருமையாக இருக்கும் புன்னகை


Last edited by krishnaamma on Wed May 29, 2013 9:22 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty மைதா தக்காளி தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 9:09 pm

தேவையானவை :

மைதா மாவு 2 கப்
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1 கப்
தக்காளி 2 - 3
பச்சை மிளகாய் 2 - 4
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸ் இல் அரைத்து கொள்ளவும்.
பிறகு உப்பு, தக்காளி சாறு இரண்டையும் மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அவ்வளவுதான், இப்போ தோசை மாவு தயார்.
இனி தோசை வார்க்க வேண்டியது தான்.

குறிப்பு : தேவையானால் பச்சை மிளகாயையும் தக்காளி யுடன் அரைக்கலாம். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty மஞ்சுரியன் தோசை

Post by krishnaamma Wed May 29, 2013 9:20 pm

தேவையானவை :

1 கப் உளுத்தம் பருப்பு
4 கப் அரிசி
1 டீ ஸ்பூன் வெந்தயம்
2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
10 -12 காரட்
20 -25 பீன்ஸ்
1/2 கப் பச்சை பட்டாணி
5-6 பச்சை மிளகாய் (நறுக்கியது )
10 - 12 வெங்காய தாள் (நறுக்கியது )
சிறிதளவு இஞ்சி துருவவும்
3 -4 பூண்டு பற்கள்
2 ஸ்பூன் சோள மாவு
1/4 ஸ்பூன் அஜினோமோடோ
2 ஸ்பூன் சோயா சாஸ்
1 ஸ்பூன் சில்லி சாஸ்
கொத்துமல்லி சிறிதளவு
உப்பு
எண்ணெய்

செய்முறை :

உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தையம் மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 1 -2 மணி நேரம் ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை நன்றாக அரைக்கவும்.
பிறகு அரைத்த மாவை 6 -8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
காரட் மற்றும் பீன்ஸ் சை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் துளி உப்பு போட்டு நன்றாக வேகவைக்கவும்.
வாணலி இல் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.
பிறகு வேகவைத்த காரட் , பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி, சோயா சாஸ், அஜினமொடோ, சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
பிறகு இந்த சோள மாவை, வாணலி இல் உள்ள மஞ்சுரியனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் மற்றும் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
இப்பொழுது மஞ்சுரியன் தயாராகி விட்டது.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு தோசை வார்க்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு, மீண்டும் அதை பழைய படி போட்டு அதன் மேல் மஞ்சுரியன் வைத்து மூடி ( மசாலா போல ) எடுக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty பெசரட் - பாசி பருப்பு தோசை

Post by krishnaamma Thu May 30, 2013 4:30 pm

தேவையானவை :

2 1/2 கப் பாசி பருப்பு
1/2 கப் அரிசி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

பாசி பருப்பு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
ஹைதராபாத்தில் இதற்கு தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள் புன்னகை

குறிப்பு: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.


Last edited by krishnaamma on Thu May 30, 2013 4:33 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 4 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum