ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_m10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_m10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10 
heezulia
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_m10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10 
i6appar
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_m10ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

+3
யினியவன்
ஹர்ஷித்
balakarthik
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by balakarthik Mon May 27, 2013 6:15 pm

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! JackieChan

ஜாக்கி சான்... இந்த பெயர் உங்கள் நரம்புகளை முறுக்கேற வைக்கிறதா? அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா? மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம்! எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில்! முதலில் பார்த்த படம் - "Armour of God". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம் என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம்!). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன்! அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார்! தொடர்ந்த மாதங்களில், வருடங்களில் அவருடைய வேறு சில, பல படங்களை பார்க்கப் பார்க்க நான் கிட்டத்தட்ட ஒரு ஜாக்கி வெறியனாகவே மாறியிருந்தேன்!

பொதுவாக ஆங்கில மொழிப்படம் என்றால் என்னை தனியாக அனுப்ப மாட்டார்கள். ஜாக்கியின் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு - அவரின் படங்களில் "சீன்" காட்சிகள் ஜாலி இருக்காது என்ற என் பெற்றோரின் (சற்றே தவறான) அபிப்ராயம் அதற்கு முக்கிய காரணம்! அந்த வகையில் நான் முதலில் தனியாக பார்த்த (டப்பிங்) ஆங்கிலப் படம் ஜாக்கியுடையதுதான்! ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டரில் ஆண்கள் கூட்டம் அள்ளும்! அவரின் பெரும்பாலான படங்கள் "Golden Harvest" என்ற பட தயாரிப்பு / விநியோக நிறுவனத்தின் வெளியீடுகளே! படம் ஆரம்பிக்கும் போது Golden Harvest நிறுவன லோகோ முதலில் காட்டப்படும் - டம்... டம்... என்ற சத்தத்துடன் நான்கு செவ்வகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் தோன்றி, இணைந்து ஒரு சதுரமாக மாறி பல வண்ணங்களில் ஒளிர அதன் கீழே "A GOLDEN HARVEST PRESENTATION" என்று காட்டப் படும் போதே விசில் சத்தம் காதைக் கிழிக்கும்! ஜாக்கியின் அறிமுக காட்சி பற்றி கேட்கவே வேண்டாம் - ரஜினிக்கு ஒப்பான வரவேற்பு இருந்த காலம் அது!

ஹாலிவுட் ஆக்சன் படங்களை விட ஜாக்கியின் ஹாங்காங் ஆக்சன் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன! அவர் படத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும் - நிஜமாகவே அடிப்பார், அடிபடுவார், கீழே விழுவார், சுவரேறிக் குதிப்பார் - முடிந்த அளவு டூப் போடாமலேயே இவற்றையெல்லாம் செய்வார்! இந்த காரணத்தினாலேயே பல தடவை கை கால்களை ஒடித்துக்கொண்டு படுக்கையில் இருந்திருக்கிறார்! ஹீரோ என்றால் ஒரு அடியும் வாங்கக் கூடாது என்பதான cliche-வை தன் படங்களில் உடைத்தெறிந்தவர் ஜாக்கி! அதே சமயம் சண்டை காட்சிகள் ஆக்ரோசமாக இல்லாமல் ரசிக்கும் படியும், சிரிக்கும் படியும் இருந்தது எங்களைப் போன்ற சின்ன பையன்களை (அந்த காலத்துல பாஸ்!) அவர் பால் கவர போதுமானதாக இருந்தது! அவரின் படம் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது சைக்கிள் தன்னால் வேகமாக பறக்கும் - யாரையாவது நாலு குத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல கை கால்கள் தினவெடுக்கும்! புன்னகை புன்னகை புன்னகை அடுத்த நாள் பள்ளியில் நண்பர்களிடம் அந்த படத்தை பார்த்தது பற்றி பீற்றிக் கொள்வது எனக்கு பிடித்தமான ஒன்று!

எனக்கு பிடித்த ஜாக்கி படங்களில் "Police Story" தொடர் படங்கள் பிரதானமானவை! தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஜாக்கியின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியிருந்தது! அதில் அவர் மிகப்பெரிய வெற்றியும் கண்டார்! அவருடைய ஹாலிவுட் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவை "Rush Hour" மற்றும் "Shanghai Noon". அதிலும் Shanghai Noon ஒரு கௌபாய் ரக படம் என்பதால் மனதுக்கு நெருக்கமான படமாகிப் போனது!

அவருடைய படங்களில் மற்றுமொரு சிறப்பம்சம் - வணக்கம் போட்டவுடனேயே தியேட்டரில் இருந்து யாரும் நடையை கட்டிவிட மாட்டார்கள்! திரையின் ஒரு பாதியில் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறு பாதியில் அந்த பட ஷூட்டிங்கின் போது நடந்த காமெடியான சம்பவங்கள் / ரீடேக் வாங்கிய காட்சிகள் காட்டப்படும்! இதை சீட்டில் இருந்து எழுந்து நின்று பார்த்து விட்டு புன்னகையுடன் மெதுவாக வாசலை நோக்கி நடந்தால்தான் ஜாக்கி படம் முழுதாய் பார்த்த திருப்தி கிடைக்கும்! அவரின் பெரும்பாலான படங்களில் வரும் கொழுகொழு மனிதரான சாமோ ஹங்கை மறக்க முடியுமா? ஜாக்கியின் பல படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்தவர் இவரே - தவிர சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்! ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி முகத்துடன் இவர் செய்யும் காமெடி குசும்புகள் ரசிக்கும்படியாக இருக்கும்!

ஜாக்கி தன்னுடைய படங்களில் சீன கலாச்சாரத்தை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுவார் / காட்டுவார்! சீனா எனது மனதுக்கு நெருக்கமான நாடாக மாறியதில் ஜாக்கிக்கு பெரும் பங்கு உண்டு! இப்படி இருக்க எனது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவுக்குத்தான் என்றிருந்தால் சந்தோசத்திற்கு கேட்க வேண்டுமா? 2002-இல் வேலை நிமித்தமாக Shanghai-க்கு ஒரு வாரம் சென்றிருந்தேன்! அங்கிருந்த அலுவலக நண்பர்களிடம் ஒரு மதிய வேளையில் ஜாக்கி சான் மீதான என் அபிமானத்தை தெரியப்படுத்தினேன்! இந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! ஆனால் ஜாக்கி சான் படங்களை நான் சைனிஸ் படங்கள் என்று குறிப்பிட்டதை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அவர்களை பொறுத்த வரை ஹாங்காங் மனதளவில் இன்னமும் சீனாவுடன் இணைந்திருக்கவில்லை - ஜாக்கி ஹாங்காங்கை சேர்ந்தவர், எனவே அவருடைய படங்கள் ஹாங்காங் படங்கள் - அவ்வளவே! அவர்களுக்கு பிடித்தமான ஆக்சன் ஹீரோ யார் என கேட்டபோது பட்டென்று "Jet Li" என்ற பதில் வந்தது!

சமீப வருடங்களில் ஜாக்கி நடித்த பல படங்கள் என்னை ஏமாற்றி விட்டன என்றே சொல்ல வேண்டும் ("The Karate Kid" நீங்கலாக)! அவருக்கு உடலளவில் வயதாகிப் போனதும் (தற்போது 58 வயது!)
எனது ரசனையின் அளவு சற்றே முதிர்ந்து போனதும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்! 2008-இல் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தபோது, மல்லிகாவுடன் சேர்ந்து பப்ளிக்காக அடித்த லூட்டியும் அவர் மேலான எனது மரியாதையை கொஞ்சம் குலைத்து விட்டது! நான் இந்த பதிவை இடுவதற்கு முக்கிய காரணம் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்திதான்! ஜாக்கி, ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போகிறார் என்பதே அது! அந்த செய்தி வெளியான ஓரிரு நாட்களிலேயே ஜாக்கியிடம் இருந்து ஒரு மறுப்பும், தன்னிலை விளக்கமும் வெளிவந்துள்ளது - அதாவது அவர் ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் கை விடப் போவதில்லையாம், ஆனால் உயிரை பணயம் வைக்கும் படியான ஆக்சன் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்று மட்டும் முடிவு செய்துள்ளாராம்!

எது எப்படியோ, எனது பள்ளி / கல்லூரி நாட்களில் அவரின் படம் பார்க்கும் போதெல்லாம் சில மணி நேரங்களுக்காவது அதி வீர உணர்வை என்னுள் விதைத்த அட்டகாசமான நடிகர் என்ற முறையில் அவரின் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! நாம் ரசிக்கும் படியான ஆக்சன் படங்களை மீண்டும் அளிப்பார் என நம்புவோமாக!

நன்றி :- Karthik Somalinga - BLADEPEDIA.COM


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 6:30 pm

பதிவிற்கு நன்றி அண்ணா.நானே எழுதியதுபோல ஒரு உணர்வு.....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by balakarthik Mon May 27, 2013 6:37 pm

உண்மைத்தான் ஜேன் எதையோ தேடபோய் இதை கண்டேன் படிச்சதும் எனக்கும் அப்படித்தான் இருந்தது ரொம்ப சின்ன வயசுலையே எனக்கு ஜாக்கினா புடிக்கும் அனேகமா அவரோட எல்லா படங்களையுமே பார்த்தாச்சு இப்பவரைக்கும் சலிப்பு தட்டலை இனியும் தட்டாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 6:46 pm

balakarthik wrote:உண்மைத்தான் ஜேன் எதையோ தேடபோய் இதை கண்டேன் படிச்சதும் எனக்கும் அப்படித்தான் இருந்தது ரொம்ப சின்ன வயசுலையே எனக்கு ஜாக்கினா புடிக்கும் அனேகமா அவரோட எல்லா படங்களையுமே பார்த்தாச்சு இப்பவரைக்கும் சலிப்பு தட்டலை இனியும் தட்டாது
அவரின் பல படங்களில் அவரது தங்கையை வில்லனிடமிருந்தும்,சில சமயம் ஹீரோக்களிடமிருந்தும் காப்பாற்ற அவர்படும் பாடு...விழுந்து விழுந்து சிரித்த நினைவு இப்போதும் கண்முன் தெரிகிறது அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by balakarthik Mon May 27, 2013 6:55 pm

அவரோட ஒரு படத்தை ரொம்ப சண்டை போட்டு அடிதடியில இறங்கி டிக்கெட் வாங்கி பார்த்தது WHO AM I படம் இப்பவும் நினைவிருக்கு செம கலாட்டா அன்னைக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 7:07 pm

balakarthik wrote:அவரோட ஒரு படத்தை ரொம்ப சண்டை போட்டு அடிதடியில இறங்கி டிக்கெட் வாங்கி பார்த்தது WHO AM I படம் இப்பவும் நினைவிருக்கு செம கலாட்டா அன்னைக்கு
ஒன்னேமுக்கா ரூவா அண்ணா...,நான் அந்த படத்த திருவள்ளூர் வெங்கடேஸ்வரா தேட்டர்ல பாக்கும் பொது.............. இப்பவும் சென்னைல அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் கட்டணமா பெரும் திரையரங்குகளில் ஒன்று...என் நண்பர்களுடன்.பணம் தான் வாழ்க்கைன்னு தெரியாத வயசு.அப்ப செலவும் பன்னல,செலவு பண்ண பணமும் இல்ல.எவ்வளவு மாற்றங்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by balakarthik Mon May 27, 2013 7:14 pm

அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 7:15 pm

balakarthik wrote:அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை
அந்த தியேட்டர் இருந்த இடத்துல இப்ப EA இருக்கு அண்ணா...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by balakarthik Mon May 27, 2013 7:18 pm

ஹர்ஷித் wrote:
balakarthik wrote:அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை
அந்த தியேட்டர் இருந்த இடத்துல இப்ப EA இருக்கு அண்ணா...,
ஆமாம் ஆமாம் நிறையா இதுபோல மாறிடுச்சு நான் பல படங்கள் பார்த்த டேட்டருகள் இப்போ இல்லை அலங்கார் , ஆனந்த , ராம் , பயிலட், சபையர், சன் , இப்படி பெரிய லிஸ்டே இருக்கு ஒருகாலத்துல இதெல்லாமே ரொம்ப பிறேபலம் இப்போ இப்படி ஒன்னு இருந்துதானே யாருக்கும் தெரியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 7:21 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote:
balakarthik wrote:அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை
அந்த தியேட்டர் இருந்த இடத்துல இப்ப EA இருக்கு அண்ணா...,
ஆமாம் ஆமாம் நிறையா இதுபோல மாறிடுச்சு நான் பல படங்கள் பார்த்த டேட்டருகள் இப்போ இல்லை அலங்கார் , ஆனந்த , ராம் , பயிலட், சபையர், சன் , இப்படி பெரிய லிஸ்டே இருக்கு ஒருகாலத்துல இதெல்லாமே ரொம்ப பிறேபலம் இப்போ இப்படி ஒன்னு இருந்துதானே யாருக்கும் தெரியாது
இந்த தியேட்டர் பேர்ல இப்ப பஸ் stoping தான் இருக்குது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! Empty Re: ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum