புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
19 Posts - 3%
prajai
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_m10வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 4:50 pm

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/934729_498444133562022_1794408239_n.jpg

திருச்சியில் மறைந்த அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் கொளுத்திப் போட்ட பேச்சு. இந்தக் கத்திரிவெயிலில் தமிழ்நாடு காங்கிரஸை வறுத்தெடுக்கிறது. கார்த்தி கொத்தளித்தது ஏன்? அவருடன் பேசினோம்:

உட்கட்சிப் பிரச்னைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?

மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய தலைவர். அவரது பிறந்த நாளையொட்டி நடந்த படத்திறப்பு விழாவில் என மன ஆதங்கத்தை வெளியிட்டேன். திராவிடக் கட்சிகளில் பிரமுகர்கள் யாரேனும் மறைந்தால், அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் படத்திறப்பு நடத்துவார்கள். ஆனால் தமிழக காங்கிரஸில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லையே என்ற மன வருத்தத்தைச் சொன்னேன். தவிர ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் தமிழக காங்கிரஸ் சார்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெறும். இந்த முறை அதுவும் நடத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசாமல் வேறு எங்கு போய் பேசமுடியும்? தமிழக காங்கிரஸ் தலைமை ஏதேனும் ஆலோசனைக் கூட்டம் போட்டால் அங்கு போய் பேசலாம். ஆனால் அது போல கூட்டம் நடத்தவில்லையே! தவிர, இவையெல்லாம் சாதாரண ஏ.ஐ.சி.சி. உறுப்பினரான நான் சொல்லிச் செய்ய வேண்டிய காரியமல்ல; 45 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையில் நமது செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று மாநிலத்தில் சக்தியை நிரூபிக்க முடியும். இல்லையேல் செயல்படாத தமிழக காங்கிரஸ் என்ற விமர்சனம்தான் வரும். அன்று நான் பேசிய கருத்துக்கு கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் ஒரு தொண்டனின் நியாயமான கருத்தை வெளிப்படுத்தியதாகத்தான் அன்று கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் நண்பர்கள் சொன்னார்கள். என் கருத்துகளை ஒரு தொண்டனின் குமுறலாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பட்ஜெட் கூட்டம் நடத்தவில்லையே என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் அன்றைய சூழலில் காங்கிரஸ் மீது கோபமாக இருந்த மாணவர்கள் ஈழ விவகாரத்தில் போராடி வந்த நிலையில், கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கியிருக்குமே?

வெள்ளையனை எதிர்த்துப் போராடிய கட்சி காங்கிரஸ். சில சிறு இயக்கங்களும் அதன் சில்லறைத் தலைவர்களும் காங்கிரஸை எதிர்க்கிறார்கள் என்பதற்காக காங்கிரஸ் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா? தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்புகள் எது வந்தாலும் தயங்காமல், பயப்படாமல் பொதுக்கூட்டம் போடுகிறார்களே. அடுத்த சில நாட்களில் நாங்கள் அம்பேத்கார் பிறந்த தின விழா கூட்டம் போட்டோமே? அதில் பட்ஜெட் பற்றியும் பேசினார் நிதியமைச்சர். எந்தப் பிரச்னையும் வரவில்லையே. தமிழ்நாடு காங்கிரஸ் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது கட்சி ஏதோ சில்லறைத் தலைவர்களுக்கு பயந்து போனது போன்ற தோற்றம் தானே உருவானது.

திருச்சியில் நீங்கள் ராகுலை விமர்சித்துப் பேசியதாக காங்கிரஸில் ஒரு சாரார் சொல்கிறார்களே?

சுத்தப் பொய். மாணவர் காங்கிரஸ் தேர்தலை மிக நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ராகுல் எடுத்த முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பது போலச் செயல்பட்ட சில இடைத்தரகர்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் பேசினேனே தவிர, ராகுலை விமர்சனம் செய்து பேசவில்லை.

உங்கள் பேச்சு குறித்த சி.டி. ராகுலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதே?

நல்லது. கார்த்தி சிதம்பரம் 45 நிமிடம் தமிழில் தொடர்ச்சியாகப் பேசினார் என்று தில்லி மேலிடத்துக்குத் தெரிய நல்ல வாய்ப்பு. மற்றபடி மேலிடம் என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதே?

யாரும் எங்களைத் தனிமைப்படுத்த முடியாது. ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்று சொல்வார்கள். இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசுடன் சுமுகமான உறவுகொள்ள கட்சிகள் வரும். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளோடு காங்கிரஸ் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்திருக்கிறது. தேர்தல் அரசியலில் பல திருப்பங்கள் வரும்.

த.மாகா. மீண்டும் உதயமாகும் என்று செய்தி அடிபடுகிறதே?

காங்கிரஸை விட்டு பிரிந்து தனியாக த.மா.கா. கண்ட நிலையில் சில காலத்துக்குப் பின்பு காங்கிரஸைத்தான் தஞ்சமடைய வேண்டியிருந்தது என்பது தெளிவாக இருக்கும் நிலையில் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்பது சிலரது சுயலநத்தின் அடிப்படையில் எழுந்த விபரீத ஆசையாக இருக்க வேண்டும்.

காங்கிரஸை ஊழல் நாறடிக்கிறதே?

ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டுமே? அதுவரை பொறுமை காட்டாமல் நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தவிர்த்து, அதை முடக்கும் மட்டமான செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுவது ஏன்? கர்நாடகத்தில் ஊழல் மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸை விமர்சிக்க அருகதை இல்லை.

ஈழ விவகாரத்தில் மக்கள் காங்கிரஸின் மீது கடும் கோபமாக இருக்கிறார்களே?

உண்மை நிலையை மறைத்து உணர்வுகளை கிளப்பும் சில பிரமுகர்கள்தான் இதற்குக் காரணம். காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களுக்கு, சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் சம உரிமை, சம அந்தஸ்து, கௌரவம் தரப்பட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். அதேபோல வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் தனித்தனியாக உருவாக்கப்பட்டோ அல்லது இணைந்த ஒரு மாநிலமாகவோ உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அழிக்கப்பட்ட கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டும். அங்கே மத்திய அரசில் தமிழர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு வேண்டும். இதையெல்லாம் எப்படி செய்ய முடியும்? இங்கே உள்ள லெட்டர்பேட் இயக்கங்கள் ஆவேசக் கூச்சல் போடுவதாலும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடுவதாலும் இதெல்லாம் சாத்தியப்படாது. இலங்கையுடன் முறையான தூதரக உறவைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் ராஜீய அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் தான் செய்ய முடியும்.

ஈழத்தில் ராஜபட்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?

நிச்சயமாக! அதில் எந்தக் கருத்து வேற்றுமையும் இல்லை. சர்வதேச அமைப்புகள் மூலம் எந்த வகையில் சாத்தியப்படுகிறதோ அந்த வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசுடன், இந்திய அரசு தொடர்ந்து உறவு வைத்துக் கொள்வதன் மூலமே தமிழர்களுக்குத் தேவையான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர முடியும். ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமாகவும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமும் என்ன சாதித்தோம்? ஆக்கப் பூர்வமாக நடவடிக்கை என்பது வேறு; அரசியலை மனத்தில் வைத்துப் போடும் ஆவேசக் கூச்சல் வேறு. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் படுகொலை குரூரமானது; கண்டிக்கத்தக்கது. அதே சமயம் சிறுமி கோகிலவாணி உயிரை விட்டதைக் குறித்து யாரும் கவலைப்பட வில்லையே? அந்த அப்பாவிச் சிறுமி செய்த குற்றம் என்ன? கோகிலவாணி யார் என்று இன்றைய மாணவர்களுக்கு தெரியாது. மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்திபடுகொலை செய்யப்பட்டபோது, அவருக்கு மாலை போட்டு அருகில்நின்று, உயிரைவிட்டவள்தான் கோகிலவாணி. இதை நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர்களுக்கு எதிரி காங்கிரஸ் என்று கொடி பிடிக்கிறார்கள்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியடப் போகிறீர்களாமே?

நான் சொல்வதை அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள். எந்தப் பதவியைம் நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவும் நான் உழைக்கவில்லை. என் தந்தைக்கு கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை எந்தக் தலைவரும் தில்லியில் இத்தனை உச்சிக்குச் சென்றதில்லை. அந்த வகையில் எங்கள் குடும்பத்துக்கு கௌரவத்தைக் கொடுத்த கட்சிக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேனே தவிர, எந்தப் பதவியையும் எதிர்பார்த்தல்ல.

- ப்ரியன் @ கல்கி



வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 26, 2013 4:59 pm

ரொம்ப நல்லவரு இவரு - எந்த பதவிக்கும் ஆசைப் படல.

சிவகங்கை சீமை முழுக்க இருந்த அனாமத்து இடத்தை எல்லாம் வளச்சு போட்டத பார்க்கவே இவருக்கு நேரம் பத்தாது - அப்புறம் எப்படி பதவியில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும்?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 5:02 pm

இவரு இன்னும் கட்சியில் இருக்காரா



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 26, 2013 5:13 pm

காங்கிரஸ் பழம் பெரும் குப்பை கூளம் பாலா
அதுல இதுபோல ஈ கொசு மொய்க்கத்தானே செய்யும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 5:16 pm

யினியவன் wrote:காங்கிரஸ் பழம் பெரும் குப்பை கூளம் பாலா
அதுல இதுபோல ஈ கொசு மொய்க்கத்தானே செய்யும்
இருந்தாலும் தமிழ் நாட்டுல இந்த கொசுதொல்லைகள் கொஞ்சம் கம்மித்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக