புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
32 Posts - 42%
heezulia
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
2 Posts - 3%
prajai
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
1 Post - 1%
jothi64
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
398 Posts - 49%
heezulia
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
26 Posts - 3%
prajai
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10மெய்பொருள் காண்பதறிவு! Poll_m10மெய்பொருள் காண்பதறிவு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்பொருள் காண்பதறிவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:26 am



"இப்ப என்ன சொல்றீங்க பாலு?''

சண்முகத்தின் குரலில் கோபமும், வெறுப்பும் பளிச்சிட்டன. அக்கவுண்டன்ட் பாலு, சண்முகத்தை நிதானமாக பார்த்தார். பலமுறை பொறுமையாக எடுத்துக்கூறியும், என்ன நிர்பந்தமோ, சண்முகம் விடாப்பிடியாக மல்லுக்கு நிற்பது புரிந்தது.

"இந்த மாசம் முடியாது, மிஸ்டர் சண்முகம். நேத்தியோட லோன் பைல் கிளியர் செய்து, மேனேஜர் கிட்ட கையெழுத்து வாங்கி, ஹெட்ஆபீசுக்கு டெஸ்பாட்ச் ஆகப்போவுது. அடுத்த மாதம் கண்டிப்பாக, உங்க அப்ளிகேஷனை அனுப்புறேன். ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க?''

"போதும் உங்க அட்வைஸ்! இன்னும் டெஸ்பாட்ச் ஆகல்லே...அப்ப, இந்த ஒரு அப்ளிகேஷனை சேத்தா என்ன? நான் என்ன பிச்சையா கேக்கறேன்; திருப்பி கட்டுற கடன் தான!'' சண்முகத்தின் கோபம் அதிகமானது. பி.எப்., கடனுக்கு இந்த பாடு.

"ஓகே மிஸ்டர் சண்முகம். இனிமே, நீங்க மேனேஜர்கிட்ட பேசிப் பாருங்க... என்னோட நேரத்தை வீணாக்காதீங்க.''

சண்முகத்திடமிருந்து பார்வையை எடுத்து, தன் பைலுக்குள் செலுத்தினார் பாலு. அந்த அலட்சியம், சண்முகத்தை மேலும் சீண்டியது. விடுவிடுவென்று நேராக மேனேஜர் அறைக்குள் செல்ல முற்படும் போது, அட்டென்டர் சகாயம் தடுத்தான்.

"சார்... ஒரு விருந்தாளி வந்திருக்காங்க கொஞ்சம் வெயிட் செய்யுங்களேன்.''

"சண்முகம் பல்லைக் கடித்தார். ஏய்... இங்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்னை. இதுல விருந்தாளி கூட என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு?''

சர்ரென்று மேனேஜர் அறைக்குள் நுழைந்த சண்முகத்தை, மேனேஜர் பிரபாகரன் சற்று ஆச்சரியமாக பார்த்தார். எதிரிலிருந்த, அந்த விருந்தினரிடம், "ஒரு நிமிஷம்' என்றவர்... சண்முகத்திடம், "ஒரு ஐந்து நிமிடம் கழிச்சு வாங்க ஓகே?'' என்றார் நாகரிகமாக. சண்முகம் பற்களை கடித்து கொண்டார். "மன்னிக்கணும் சார். ரொம்ப அவசரம். அதான் உங்ககிட்ட பேசணும், என் லோன் அப்ளிகேஷன் விஷயமா...'' சற்று படபடப்பாக பேசினார்.

சண்முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் பிரபாகரன். "ஆர் யு சிவிலைஸ்ட்? நீங்க என்னைப் பத்தி என்னை நினைச்சுட்டு இருக்கீங்க? நான் உங்க பாஸ். முதல்ல, இங்க இருந்து போங்க,'' என்றார். சத்தமாக கடுமையான குரலில், எச்சரித்த பிரபாகரன், காலிங்பெல்லை அழுத்தினார்... "சகாயம் உள்ளே வா. உனக்கு அறிவில்ல ஏன் இவர உள்ளவிட்ட... முதல்ல கூட்டிகிட்டு போ,'' என, அதட்டினார். அவ்வளவு தான் சண்முகத்திற்கு பி.பி., அதிகமானது. கோபம் தலைக்கேறியது.

"சார்... என்ன பேசுறீங்க. நான், இங்க சீனியர் அசிஸ்டென்ட். என்னமோ அட்டென்டர வைச்சுக்கிட்டு, "இன்சல்ட்' செய்யறீங்க? எனக்கு முக்கியமான பிரச்னை. அதப்பத்தி பேசறத விட, உங்களுக்கு விருந்தாளி முக்கியமா போச்சா சார்? அப்பறம் திடீர்ன்னு கார்ல வெளியில போயிடுவீங்க, போன்லையும் பேச முடியாது. இப்ப நீங்க, என் பிரச்னையை தீர்த்து வைச்சே ஆகணும்... இல்ல.''

சண்முகம் முகம் துடிக்க, கண்கள் சிவக்க பேசினார். அந்த விருந்தாளி எழுந்திருக்க, பிரபாகரன், அவரை அமரச் சொன்னார். இதுபோன்ற, பல கடினமான சூழ்நிலைகளை கையாண்ட அனுபவத்தில், சண்முகத்தை பார்த்து, "சரி... சுருக்கமாக சொல்லுங்க,'' என்றார். மனதில் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு!

"எனக்கு பணம் அவசரமா தேவை. லோன் அப்ளிகேஷன் கொடுத்தா அக்கவுண்டன்ட் பாலு எல்லாம் முடிஞ்சு போச்சு, அடுத்த மாதம்ன்னு சொல்றாரு... நீங்க தலையிடணும் சார்.''

"என்ன தலையிடணும் சண்முகம்?''

"இந்த மாசமே என்னோட அப்ளிகேஷனை சேக்கணும். அதுக்கு, நீங்க கையெழுத்து போடணும்.''

சண்முகம் ஆர்டர் போடுவது போல பேச, "சண்முகம் நீங்க வேகமாகவே பேசிகிட்டிருக்கீங்க. இந்த மாசத்துக்குள்ளே சீலீங் அமவுண்ட் சேங்ஷன் செய்ய இனிமே சேக்க முடியாது. உங்களுக்கு ரொம்ப அவசரம்னா முன்னாடியே கொடுத்திருக்கணும். இது சிட்பண்ட் கம்பெனி இல்ல. கார்பரேட் ஆர்கனைசேஷன். நடைமுறை முக்கியம். உங்களுக்கு இந்த விளக்கம் போதும்ன்னு நினைக்கறேன். அப்பறம்...'' பிரபாகரன் சொல்ல,

"என்ன சார் பெரிசா அலட்டறீங்க நீங்க கையெழுத்து போடுவீங்களா, மாட்டிங்களா?'' என, சற்று எல்லை மீறி சண்முகம் கேட்க, மேனேஜர் பிரபாகரன் சட்டென்று எழுந்து, தன் நாற்காலியை பின்னுக்கு உதைத்து, "ஆர் யு மேட்? சகாயம்... செக்யூரிட்டியை கூப்பிட்டு, இந்தாளை பிடிச்சு வெளியில தள்ளு...'' கோபமாக கத்தினார். சகாயம் வெளியே செல்ல, இனி அங்கு நிற்பது அவமானம் என்று உணர்ந்த சண்முகம், சட்டென்று துவண்டுபோய், சற்று பயத்துடன், அந்த அறையை விட்டு வெளியேற திரும்பிய போது, தலை சுற்றுவதை உணர்ந்தார். கண்கள் இருண்டு, உடல் முழுவதும் வலிமை குன்றி, கால்கள் தொய்ந்து தொப்பென்று கீழே சரிந்தார்.

அடுத்த பத்து நிமிடங்கள் ஆபிஸ் அல்லோலப்பட்டது. தன் காரிலேயே சண்முகத்தை ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

"சார்... அவரோட வீட்டுக்கு எப்ப போகணும்?'' என்று கேட்ட சகாயத்திடம், "நீ சண்முகம் கூட மருத்துவமனைக்கு போ, அவரோட வீட்டுக்கு நானே போய் தகவல் சொல்றேன். முகவரி மட்டும் சொல்லு,'' என்ற பிரபாகரன், முகவரி குறித்து கொண்டார்.

ஒரு ஆட்டோ பிடித்து சண்முகம் வீடு நோக்கி விரைந்தார். ஏன் இந்த நிகழ்வு, எல்லாவற்றிற்கும் எது மூலம் என்று யோசித்தார் பிரபாகரன்.

முழுதாக இரண்டு நாட்கள் கழித்து, ஒரு மாலை வேளை —

சாந்தி நர்சிங் ஹோமின், பதினெட்டாம் நம்பர் அறை கட்டிலில் சண்முகம் அமைதியாக ஓய்வெடுத்த நிலையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அவர் மனைவி சாந்தா, சாத்துக்குடி ஜூஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருக்க, கதவு தட்டப்படும் ஒசை கேட்டது.

சாந்தா கதவைத் திறக்க மேனேஜர் பிரபாகரன் சிரித்த முகத்தோடு உள்ளே வந்தார். சண்முகம், அவரை எதிர்பார்க்கவில்லை. "வாங்க' என்றும் கூப்பிடவில்லை சாந்தா மட்டும் பரபரப்பாக, "வாங்க வாங்க.'' என்று வரவேற்றாள்.

"என்ன சண்முகம்... எப்படி இருக்கீங்க?'' என்று விசாரித்தார் பிரபாகரன்.

"பரவாயில்லை,'' என்று சற்று மெலிதான குரலில் வேண்டா வெறுப்பாக பதிலளித்தார் சண்முகம். அதைப் புரிந்து கொண்ட பிரபாகரன், "இன்னும் கோபமாக இருக்கீங்க போலருக்கு...?'' என்றார்.

"நான் யாரு, உங்க மேல கோபப்பட... ஒரு சாதாரண குமாஸ்தா தான் சார் நான்... என் தலையெழுத்து, உங்க கிட்ட கெஞ்ச வேண்டிய நிலைமை. அதோட விளைவு எனக்கு நோய் வந்து, இந்த மருத்துவமனை வாசம்.'' விரக்தியில் புலம்பினார் சண்முகம்.

"சோ...உங்க அப்ளிகேஷனை வாங்கி பாலுவோ, இல்ல நானோ உடனே ஒப்புதல் செய்து, ஹெட் ஆபீசுக்கு அனுப்பி இருந்தா, நீங்க மயக்கமாயிருக்கமாட்டீங்க இல்ல?''

"பின்ன... அப்புறம் ஏன் சார், எனக்கு பி.பி., ஏறப்போவுது, ஏன் மயங்கப் போறேன்? இது எல்லாத்துக்கும் மூலகாரணம் பாலு, அப்புறம் நீங்க சார். இதுக்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?'' என கேட்டார் சண்முகம்.

"வேற ஒரு காரணம் மட்டுமில்ல. பல காரணம் இருக்கு மிஸ்டர் சண்முகம். இத உங்க மனைவி இருக்கும் போது, உங்க கிட்ட ஒரு அண்ணனா பகிர்ந்துக்கணும்ன்னு தான் இப்ப வந்தேன். அதை புரிஞ்சுக்க நீங்க பொறுமையா என்ன பேச விடணும், அதுல நியாயம் இருந்தா, நீங்க அதை பின்பற்றணும்'' என்று சொல்லி, பிரபாகரன் இருவரையும் பார்த்தார். "என்ன புதிர் இது...' என்று சாந்தா யோசிக்க, சண்முகம் இது என்ன கதை என்று அலட்சியமாக பிரபாகரனை ஏறிட்டார்.

"சண்முகம் எந்த ஒரு விஷயமும் விபரீதமாகும் போது, அதற்கு கொஞ்சம் முன் நடந்த நடவடிக்கை தான் காரணம்ன்னு நினைக்கிறோம். அது ஒரு சின்ன வழி அவ்வளவு தான். உடம்புல, ஒரு பகுதில ஒரு சின்ன கொப்புளம் வந்தா, அது அந்த இடத்துல ஏற்பட்ட பிரச்னைன்னு சொல்ல முடியாது. உடம்புல, பல நாள் ரத்தத்துல உள்ள சர்க்கரை வியாதியோட, வெளிப்பாடா இருக்கலாம்.

"அதாவது, பாலு அவரோட வேலையை சரியாய் செய்து முடிச்சுட்டாரு. நீங்க, உங்க லோன் அப்ளிகேஷனை கடைசி நேரத்துல எல்லாம் முடிஞ்சப்பறம் கொண்டு போய் தர்றீங்க; அதசேத்தா என்னன்னு கேக்குறீங்க. உங்களுக்கு பணம் அவசரமா தேவை. அதாவது, அடுத்த மாதம் வரைக்கும் கூட, அத ஒத்தி போட முடியாது. உடனே பணம் வேணுங்கிற உங்க சூழ்நிலை, கோபமா அவர்கிட்ட பேச வைக்குது. அவர் நியாயமா மறுக்க, எங்கிட்ட வந்தீங்க... காரணம் எப்படியாவது, என் கையெழுத்து வாங்கி, அப்ளிகேஷனை இந்த மாசமே சேத்துடணும். ஒரு விருந்தாளி இருக்கறத கூட பெரிசா எடுத்துக்காம உள்ள வர்றீங்க... என்ன பேசறோம்ன்னு தெரியாம கமென்ட் செய்றிங்க. எனக்கு, "ஈகோ' வருது, நான் மறுக்குறேன். விளைவு, வார்த்தை ரொம்ப கடுமையாக விழுந்து, நீங்க பதட்டப்பட்டு, மயக்கநிலைக்கு போயிட்டீங்க.

"மேலோட்டமா பாத்தா, இது ஆபீஸ்ல ரெண்டு பேரு சத்தம் போட்டதா தெரியும். ஆனா, ரொம்ப தீர்க்கமா யோசிச்சா, உங்க பணத்தேவை உங்கள அதுமாதிரி நடந்துக்க சொல்லுது, அதோட விளைவு, நான் உங்ககிட்ட நடந்துக்கிட்ட விதம்! சரி... அந்த அடிப்படையான பணத்தேவை, உங்களுக்கு நியாயமா இருந்தா, அந்த நிலைமைல, ஒரு மனுஷன் இப்படி நடந்துக்கறது வழக்கம்ன்னு சொல்லலாம்.

"ஆனா, மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குற நீங்க, இந்த சென்னையில ஏன் சராசரி வாழ்க்கையை நடத்த முடியல? ஏகப்பட்ட கடன், தவணை முறையில் பொருள் வாங்கியிருக்கீங்க... தன் சுமையை தானே ஏத்துக்கிட்டு, அதனால, ஆபீஸ் பி.எப்.,லையும் தொடர்ந்து, கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினது தானே. அந்த பணத்தேவைக்கு காரணம் என்ன சண்முகம்? நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?

என்று பிரபாகரன் நிறுத்தி, கேட்டார்.

சாந்தாவிற்கு ஒரளவு புரிந்தது. சண்முகமோ புரியாமல் காணப்பட்டார்.

"இன்னும் விவரமா சொல்றேன். நீங்க மயக்கமானதும், உங்கள இங்க அனுப்பிவிட்டு, உங்க வீட்டுக்கு நானே போனேன். அதுக்கு காரணம், ஏன் நீங்க, அவசரமா கடன் கேட்குறீங்க. அப்படி என்ன சூழ்நிலைன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு தான், உங்க வீட்டுக்கு போனேன். ஆனா, உங்க வீட்டு சூழ்நிலையை பார்த்ததும் புரிஞ்சுக்கிட்டேன். உங்க சம்பளம் போதாதுன்னு.

"நான் அங்க இருந்த அந்த பத்து நிமிஷத்துல பாத்தது ரொம்ப சங்கடமா இருந்தது மிஸ்டர் சண்முகம். பகல்ல எல்லா ரூம்லையும் லைட் எரிஞ்சுது; பேன் சுத்திகிட்டிருந்தது; வீட்ல ரெண்டு "டிவி' உங்க பையன் ஸ்கூல்ல படிக்கிறானே... அவன் நெட்ல உட்கார்ந்திருந்தான்; ரெண்டு ரூம்லையும் "ஏசி'யை பார்த்தேன்; உங்களுக்கு, உங்க பெரிய பையனுக்குன்னு ரெண்டுவண்டி; ஹால்ல ஹோம் தியேட்டர் வசதி; விலை உயர்ந்த வால்பேப்பர்.

" அப்பத் தான் இஸ்திரி போடுற ஆளு ஒரு அடுக்கு துணியை கொடுத்திட்டு, முந்நூறு ரூபாய் வாங்கிட்டு போனாரு. வீட்ல ஏகப்பட்ட வார, மாத பத்திரிகைகள், வாசல்ல செருப்பு, ஷூன்னு குவிஞ்சு கிடக்கு. அப்புறம், பெரிய மீன் தொட்டி. பொமேரியன் நாய்குட்டி, உங்க மனைவிக்கு, ஸ்மார்ட் போன். நல்ல வேளை, வீடு சொந்தம்ன்னு சொன்னாங்க. இருந்தாலும், ஒரு சம்பாத்தியத்துல இப்ப இருக்கிற விலைவாசியில கரன்ட், பெட்ரோல், கேபிள், போன்பில், ஸ்கூல் பீஸ் இப்படி பல செலவுகள்ல நீங்க சிக்கனமா இருந்தா தான், வாடகை இல்லாம ரெண்டு பசங்க உள்ள குடும்பத்துக்கு, முப்பதாயிரம் கரெக்டா இருக்கும்.

"ஆனா, உங்கள மாதிரி, உங்க குடும்பம் மாதிரி எதுலையும் வரம்பு இல்லாம செலவு செய்றவங்களுக்கு, மாச செலவுக்கே இந்த பணம் போதாது சண்முகம். அதான் கடன் வாங்க சொல்லுது. அதோட, வட்டி வேற கூடுதல் செலவு. அத சமாளிக்க ஆபிஸ்லயும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அதுவே ரொம்ப அவசரம்ன்னு ஆகும் போது பொறுமை போய், கோபம் வருது! இதுவே ஒரு முக்கியமான அவசர தேவைன்னு வந்தா, நீங்க எந்த எல்லைக்கும் போய்டுவீங்க! உண்மையை சொல்லுங்க... ரொம்ப அவசர தேவைக்கா, நீங்க அன்னிக்கு ஆபீஸ்ல அப்படி மோசமா நடந்துக்கிட்டீங்க?

"நான் உங்க மனைவிகிட்டே விசாரிச்சிட்டேன். அவங்களுக்கு அது பத்தி தெரியல. பாவம்... நீங்க மனைவிக்கு தெரியாம, மாத செலவை சமாளிக்க தான் இந்த கடன்னு புரிஞ்சுகிட்டேன். இப்ப கடன் வந்தாலும், உங்க பிரச்னை தற்காலிகமாத் தான் தீரும் சண்முகம். நீங்க, உங்க வாழ்க்கை நடைமுறையை மாத்திக்கணும். மனைவி, மகன்கள் கிட்ட உட்கார்ந்து பேசணும். சிக்கனத்த பத்தி நீங்க புரிஞ்சுகிட்டு, அத, அவங்களுக்கும் சொல்லி கொடுக்கணும். எந்த ஒரு விஷயத்தோட விளைவுக்கும், மூல காரணத்தை கண்டுபிடிச்சா, அந்த விஷயம் சுலபமாயிடும். உங்களோட இந்த நிலைமைக்கு காரணம், மத்தவங்க இல்ல. உங்களோட அவசர பணத்தேவை. அதுக்கும் காரணம், உங்களோட சிக்கனமில்லாத வாழ்க்கை முறை. இத ஒரு அண்ணனா சொல்றேன் சண்முகம்.

"அப்புறம் ஒரு விஷயம். நான் ஒரு குரூப் இன்சூரன்ஸ் ஸ்கீம்ல நம்ப ஆபீசை சேர்த்திருக்கிறேன். இந்த ஹால்பிடல் பில்ல ஆபீஸ் கட்டிடும். கவலைப்பட வேணாம். கெட் வெல் சூன்...'' என சொல்லிவிட்டு மேனேஜர் வெளியேறினார்.

கணவரைப் பார்த்தாள் சாந்தா .

புது அண்ணன் சொன்ன எதையும் மறுக்க முடியாமல், தன்னைப் பற்றிய ஒரு சுயசிந்தனையில் ஈடுபட்டார் சண்முகம். அதன் விளைவாக, அவர் மெய்பொருள் காண்பது நிச்சயம் என்றே தோன்றியது.

- கீதா சீனிவாசன்



மெய்பொருள் காண்பதறிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 26, 2013 9:12 pm

நல்ல பகிர்வு சிவா.

கடைசி வரை அந்த மெய்பொருள் என்னன்னு சொல்லவே இல்லையே!!! புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 26, 2013 9:28 pm

அருமையிருக்கு நன்றி




மெய்பொருள் காண்பதறிவு! Mமெய்பொருள் காண்பதறிவு! Uமெய்பொருள் காண்பதறிவு! Tமெய்பொருள் காண்பதறிவு! Hமெய்பொருள் காண்பதறிவு! Uமெய்பொருள் காண்பதறிவு! Mமெய்பொருள் காண்பதறிவு! Oமெய்பொருள் காண்பதறிவு! Hமெய்பொருள் காண்பதறிவு! Aமெய்பொருள் காண்பதறிவு! Mமெய்பொருள் காண்பதறிவு! Eமெய்பொருள் காண்பதறிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 8:53 am

நல்ல eye opener கதை சிவா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 29, 2013 9:34 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு சிவா.

கடைசி வரை அந்த மெய்பொருள் என்னன்னு சொல்லவே இல்லையே!!! புன்னகை

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சிவா

மெய் என்றால் உடம்பு
பொருள் என்றால் பணம்
உடம்பு நல்லா இருக்கனும்னா பணம் வேணும். அதுதான் மெய்ப்பொருள். பைத்தியம்




மெய்பொருள் காண்பதறிவு! Aமெய்பொருள் காண்பதறிவு! Aமெய்பொருள் காண்பதறிவு! Tமெய்பொருள் காண்பதறிவு! Hமெய்பொருள் காண்பதறிவு! Iமெய்பொருள் காண்பதறிவு! Rமெய்பொருள் காண்பதறிவு! Aமெய்பொருள் காண்பதறிவு! Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 9:56 am

Aathira wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு சிவா.

கடைசி வரை அந்த மெய்பொருள் என்னன்னு சொல்லவே இல்லையே!!! புன்னகை

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சிவா

மெய் என்றால் உடம்பு
பொருள் என்றால் பணம்
உடம்பு நல்லா இருக்கனும்னா பணம் வேணும். அதுதான் மெய்ப்பொருள். பைத்தியம்

நல்ல விளக்கம் ஆதிரா புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 10:00 am

Aathira wrote:
நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சிவா

மெய் என்றால் உடம்பு
பொருள் என்றால் பணம்
உடம்பு நல்லா இருக்கனும்னா பணம் வேணும். அதுதான் மெய்ப்பொருள். பைத்தியம்
ஒ அதான் அதன் மீது போதை கொண்டு அந்த போதை
பொருளுக்கு அடிமையா ஆயிடறோம் போலிருக்கு!!! புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக