Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
மாறிவரும் நவீன யுகத்தில் என்னதான் ஆடம்பர வசதிகள் இருந்தாலும் சிலருக்கு பழமை தான் பிடிக்கும். வடித்த சாதம், செக்கில் ஆட்டிய எண்ணெய், வாழை இலை சாப்பாடு என்பதுபோல், நுரை பொங்கும் மூலிகை குளியலும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமே.
அவசர கதியான ஓட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் நமக்கு உதவினாலும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரைப்பு சீயக்காய் போன்றவற்றின் மகிமை அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் தெரியும்.
நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான சோப்புகள் கிருமிகளை நீக்கும் ஆசிட்களாகத்தான் செயல்படுகின்றன தவிர, தோலுக்கு எந்த நன்மையும் பயப்பது இல்லை. இவை தவிர பல்வேறு நிறத்திற்காக சோப்பில் சேர்க்கப்படும் சாயப்பொடிகளும், நுரைக்காக சேர்க்கப்படும் சல்பேட்டுகளும் தோல் வறட்சியை அதிகப்படுத்துவதுடன் அரிப்பையும், வறட்சியையும் உண்டாக்கிவிடுகின்றன. நாம் பலவகையான சோப்புகளை விரும்பி பயன்படுத்துவதற்கு காரணம் அவற்றின் நுரைப்புத்தன்மையே.
நுரை பொங்க குளித்துவிட்டு வந்தால்தான், குளித்தது போன்ற புத்துணர்ச்சி உண்டாகிறது என்ற மாயை அனைவரிடமும் நிலவிவருகிறது. பழங்காலத்தில் நுரை தரக்கூடிய பொருட்களை, குளியல் பொடியில் பயன்படுத்தினர். செம்பரத்தை பூ, துளசி, சுரை, பீர்க்கு குடுவைகள், வாழை மட்டை போன்றவை நுரை மற்றும் வழுவழுப்பு தருவதால், குளியல் பொடிகளில் இவற்றை பயன்படுத்தி குளித்து மகிழ்ந்தனர்.
நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான், நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.
வேறு பல உபயோகங்கள் :
1. தங்க நகைகளை இந்த பூவந்திக்கொட்டை ஊறவைத்த நீரில் தேய்த்தால் ரொம்ப பளபளப்பாக இருக்கும். நான் என் நகைகளை இப்படித்தான் பராமரிப்பேன்
2. பட்டுப்புடவைகளை இந்த பூவந்திக்கொட்டை ஊறவைத்த நீரில் தோய்த்தால் ரொம்ப 'மெத்' என்றும் புடவை shining - பளபளப்பாக இருக்கும். பட்டுப்புடவைகளை இதில் தோய்ப்பதால் பலவருடங்கள் அதன் பள பள ப்பு மங்காமல் இருக்கும். இது என் அனுபவத்தில் கண்டது
3. ஆந்திராவில் இதை பாத்திரங்கள் தேய்க்கவும் உபயோகிப்பார்கள்.
4. தலைக்கு குளிக்கணும் என்றால் ஒரு 4 -5 கொட்டைகளை ஊறவைத்து ( ஒரு 10 நிமிஷம்) கையால் கசக்கினால் நல்ல நுரை வரும்; அதை அப்படியே தேக்க வேண்டியது தான். நல்ல நுரை வரும் மேலும் தலை 'சில்க்' - பட்டு போல ஆகும்
இதுவும் நாடு மருந்து கடைகளில் கிடைக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
நல்ல பகிர்வும்மா.
அந்த தங்க நகைகள குரியர் பண்ணுங்க - நாங்க டெஸ்ட் பண்ணிட்டு நம்புறோம்.
அந்த தங்க நகைகள குரியர் பண்ணுங்க - நாங்க டெஸ்ட் பண்ணிட்டு நம்புறோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
பொன் நகைகளை இப்படி எல்லாம் பளபளக்க செய்யாலாமா ?
ஓ இதான் பூவாரம் பொன்னாரம் அப்படின்னு பாடினார்களோ ....
ஓ இதான் பூவாரம் பொன்னாரம் அப்படின்னு பாடினார்களோ ....
Last edited by பூவன் on Sat May 25, 2013 12:02 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.
அந்த தங்க நகைகள குரியர் பண்ணுங்க - நாங்க டெஸ்ட் பண்ணிட்டு நம்புறோம்.
இப்படி செய்யலாமே இனியவன், உங்க நகைகளை என்னிடம் அனுப்புங்கோ , நான் நல்லா வாஷ் பண்ணி தருகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
நீங்க நல்ல வசதியான ஆளுங்கள சொல்லுங்க - அவங்ககிட்ட அடிச்சு அப்புறம் அனுப்பிடறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
krishnaamma wrote:யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.
அந்த தங்க நகைகள குரியர் பண்ணுங்க - நாங்க டெஸ்ட் பண்ணிட்டு நம்புறோம்.
இப்படி செய்யலாமே இனியவன், உங்க நகைகளை என்னிடம் அனுப்புங்கோ , நான் நல்லா வாஷ் பண்ணி தருகிறேன்
இனியவரே தங்கம் தான் அவரை நாங்களே தேய்த்து பார்த்து பதில் சொல்கிறோம்.
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
ரத்தக் களரியா ஆக்க துடிக்கிறீங்க!!!ராஜு சரவணன் wrote:இனியவரே தங்கம் தான் அவரை நாங்களே தேய்த்து பார்த்து பதில் சொல்கிறோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
4. தலைக்கு குளிக்கணும் என்றால் ஒரு 4 -5 கொட்டைகளை ஊறவைத்து ( ஒரு 10 நிமிஷம்) கையால் கசக்கினால் நல்ல நுரை வரும்; அதை அப்படியே தேக்க வேண்டியது தான். நல்ல நுரை வரும் மேலும் தலை 'சில்க்' - பட்டு போல ஆகும் புன்னகை
ஷாம்பூ போட வேணாமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum