புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
284 Posts - 45%
heezulia
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
19 Posts - 3%
prajai
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_m10நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு'' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 25, 2013 10:44 am

இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் பேசுகையில் ""தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவராது. அது மட்டுமல்ல, இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்கும் கேள்விக்கே இடமில்லை'' என்றும் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது, "தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம்போல ஐ.நா.வில் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் அது வெற்றி பெறாது. இந்தத் தீர்மானம் வெற்றுவேட்டுத் தீர்மானம்' எனப் பேசியிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரானாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆனாலும் ஐ.நா.வின் வரலாற்றையோ அல்லது உலக வரலாற்றையோ - குறைந்த அளவு இந்தியாவின் வரலாற்றையோ - அறியாதவர்களாக இருப்பது பரிதாபத்திற்குரியதாகும்!

யூகோஸ்லாவியாவிலிருந்து மாண்டிநீக்ரோ பிரிந்து தனி நாடாவதற்குரிய பொது வாக்கெடுப்பு 2006-ஆம் ஆண்டில் ஐ.நா.வால் நடத்தப்பட்டு 55.5 சதவிகித வாக்குகள் அளிக்கப்பெற்று அதே ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி மாண்டிநீக்ரோ சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டது.

சூடானிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஐ.நா. பேரவை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தியது. 98.83 சதவிகித வாக்குகள் ஆதரவாகக் கிடைக்கப் பெற்றதால் தெற்கு சூடான் 2011-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது.

யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா பிரிந்து தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஐ.நா. பேரவை நடத்திய பொது வாக்கெடுப்பின்படி 88.5 சதவிகித வாக்குகளைப் பெற்று 1990-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி தன்னை தனிநாடாக அறிவித்துக் கொண்டது.

யூகோஸ்லாவியாவிலிருந்து, குரோசியா பிரிந்து தனி நாடாக வேண்டும் என்பதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா. 1991-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி நடத்தியது. 94.17 சதவிகித வாக்குகள் தனி நாடாவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டதன் காரணமாக குரோசியா 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தனி நாடானது.

1975-ஆம் ஆண்டு போர்ச்சுகலின் ஏகாதிபத்திய பிடியிலிருந்து விடுதலை பெற்ற கிழக்கு திமோர் நாட்டின் மீது இந்தோனேசியா படையெடுத்து அதைத் தனது 27-வது மாநிலமாக ஆக்கிக் கொண்டது. ஆனால், ஐ.நா. பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளபடி சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்தி கிழக்கு திமோர் 1999-ஆம் ஆண்டு உரிமை கொண்டாடியது. அதை ஐ.நா. ஏற்றுக்கொண்டதின் விளைவாக 2002-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி கிழக்கு திமோர் தனி நாடானது.

எத்தியோப்பிய கூட்டாட்சியில் ஒரு பகுதியாக விளங்கிய எரித்திரியா சுதந்திர நாடாவதற்காகப் போராடியது. ஐ.நா. தலையீட்டின் பேரில் 1991-ஆம் ஆண்டில் எரித்திரியா சுதந்திர நாடானது.

உலகெங்கும் ஐ.நா.வின் துணையுடன் பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தனி நாடுகள் உருவான வரலாற்றை அறியாதவர்களாக மத்திய அமைச்சர்களும் அவரது கட்சியினரும் இருப்பதைக் குறித்து வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர்களுக்கு இந்திய நாட்டின் வரலாறும் காங்கிரஸ் கட்சியின் வரலாறுமே தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கையானதாகும். அவற்றை அவர்களுக்குக் கற்பிப்பதற்கு "உலக வரலாறு' எழுதிய நேருவும் இன்றில்லை.

இந்திய துணைக் கண்டம், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்படுவது குறித்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்களிடையே ஆங்கிலேய அரசின் பிரதிநிதியான வைசிராய் மவுண்ட் பேட்டன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்கள் மீது முஸ்லிம் லீக் உரிமை கொண்டாடி முழுமையாக அந்த மாகாணங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத அடிப்படையில் பஞ்சாபையும், வங்காளத்தையும் இரண்டிரண்டாகப் பிரிக்க வேண்டும் எனக் கூறியது. அதாவது ஹிந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையினராக வாழும் கிழக்கு பஞ்சாப் இந்தியாவுடனும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானுடனும் சேர்க்கப்பட வேண்டும். அதைப்போல முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடனும், ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் மேற்கு வங்காளம் இந்தியாவுடனும் இணைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தக் கோரிக்கைகளுக்கு முஸ்லிம் லீக் இணக்கம் தெரிவித்தது.

ஆனால், பட்டாணி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் குறித்துப் புதிய பிரச்னை எழுந்தது. அங்கு 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சட்டமன்றத் தேர்தலில் எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் அவரது சகோதரர் கான் சாகிப் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் பெரு வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்திருந்தது. ஆனால், அந்த மாகாணத்தை பாகிஸ்தானுடன் சேர்த்தே ஆக வேண்டும் என முஸ்லிம் லீக் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பிரச்னை முற்றியது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது குறித்து அந்த மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நேரு, படேல் ஆகியோர் இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், கான் அப்துல் கபார்கான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பொது வாக்கெடுப்பு நடத்துவதாயின் இந்தியாவில் இணைவதா? பாகிஸ்தானுடன் இணைவதா? தனி பக்டூனிஸ்தான் அமைப்பதா என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை மீறுவதற்கு நேருவும் படேலும் இசையவில்லை.

கான் அப்துல் கபார்கானும் அவருடைய ஆதரவாளர்களும் பொது வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.

எல்லைப்புற மாகாண ஆளுநராக இருந்த ஒலாப் கரோர் என்ற ஆங்கிலேயர், முஸ்லிம் லீக் ஆதரவாளராகச் செயல்படுகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியதின் பேரில் அவர் உடனடியாக மாற்றப்பட்டு சர் ராப் லோக் கார்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பதிவான வாக்குகள் 2,89,244 ஆகும். இந்தியாவுக்கு ஆதரவாகப் பதிவான வாக்குகள் 2,874 மட்டுமே ஆகும். இந்தப் பொது வாக்கெடுப்புக்கிணங்கவும், மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ளவும் காங்கிரஸ் கட்சி முன்வந்தது. எல்லைப்புற மாகாணம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

உலகத்தின் பிற நாடுகளில் நடைபெற்ற பொது வாக்கெடுப்புகளை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தோ அல்லது மற்ற காங்கிரஸ் தலைவர்களோ அறியாமல் இருப்பது தவறல்ல. ஆனால், இந்தியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பைக் கூட அறியாதவர்களாக இருப்பது வரலாறு அறியாமையின் உச்ச கட்டமாகும்.

காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த தலைவர்கள் மட்டுமல்ல நாட்டு மக்களின் நன்மதிப்புக்கு உரியவர்களாகத் திகழ்ந்த பெருமைக்குரியவர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஆகியோர் ஆவர். அவர்களே மகாத்மா காந்தி ஒப்புதலோடு எல்லைப்புற மாநிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்துக்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானித்தார்கள். ஜனநாயக ரீதியாக நடந்துகொள்ள அவர்கள் அவ்விதம் முடிவு செய்திருக்காவிட்டால் தேச சுதந்திரம் பெறுவது என்பது பல்வேறு சிக்கலுக்கு உள்ளாகி இருந்திருக்கும். தொலைநோக்குப் பார்வையுடன் அவர்கள் யோசித்துத்தான் இத்தகைய முடிவினை எடுக்க நேர்ந்தது. இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவர்கள் இருவரையும்விட அறிவாற்றல், திறமை ஆகியவற்றில் மிஞ்சியவர்கள் அல்லர். அவர்களோடு ஒப்பிடும்போது இவர்கள் மிகமிகச் சாமானியர்கள்.

வடமேற்கு எல்லைப்புற மாநில மக்கள் பொது வாக்கெடுப்பில் அளித்த தீர்ப்பு இந்த மாபெரும் தலைவர்கள், வரப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதைப் போன்ற உரிமையைத்தான் ஈழத் தமிழர்கள் வேண்டுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஆதரவாக தமிழக சட்டமன்றம் ஒரே மனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகாரம் அளித்துள்ளது. மக்களின் விருப்பத்தை மதிக்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்பது உறுதியாகும்.

பழ. நெடுமாறன் / நன்றி-தினமணி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat May 25, 2013 10:49 am

இந்த வாக்கெடுப்பல்லாம் சரி வராது பதிலுக்கு பதில் தான் சரியா வரும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக