புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
63 Posts - 75%
heezulia
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
228 Posts - 75%
heezulia
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
8 Posts - 3%
prajai
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_m10மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 5:18 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/May/857840d1-10b9-4ff5-96b9-bfe66962eb72_S_secvpf.gif
நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல்தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்-சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும்.
பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவைகளுக்கு டாக்டரின்பரிந்துரையின்றி மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அத்தகைய மருந்துகளால் அவர்களுக்கு நோய் குறைந்ததுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடல் மெல்ல மெல்லஆரோக்கிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும்.
-
டாக்டரின் பரிந்துரை இல்லாத மருந்துகளை சுயமாக வாங்கி தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.டாக்டர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து சரியான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவேமுழு பலனைத்தரும்.
உலக நாடுகள் சிலவற்றில் டாக்டரின் பரிந்துரையின்றி சிலவகை மருந்துகளை மட்டும் சுயமாகவே மெடிக்கல் ஷாப் நடத்துபவர்கள் விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. நம் நாட்டில் ஏராளமான வகை மருந்துகளை அவ்வாறு வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
-
இதில் அரசு கவனம் செலுத்தி, என்னென்ன வகை எமர்ஜென்சி மருந்துகளை டாக்டர் பரிந்துரையின்றி பெறலாம் என்று வழி காட்டவேண்டும். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நோயாளிமட்டுமே பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காய்ச்சலோ, ஜலதோஷமோ ஏற்பட்டால் உடனே பயந்து விடவேண்டாம். முதல் நாள் ஓய்வெடுங்கள். மறுநாளும் காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தியுங்கள். உங்கள் மெடிக்கல் ஹிஸ்டரி தெரிந்த ‘பேம்லி டாக்டரிடம்’ சிகிச்சை பெறுவது நல்லது. மருந்து சாப்பிட்ட உடன் நோய் குணமாகவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
-
உடனே நோய் குணமாகாத போது, கொடுக்கும் மருந்தின் அளவை கூட்டலாமா என்றும் சிலர் யோசிக்கிறார்கள். டாக்டர் குறிப்பிடும் அளவைவிட அதிகமாக மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகாது என்பதை விட, பக்கவிளைவுகளை தோற்றுவிக்கும். பாதுகாப்பான மருந்தாக கருதப்படும் பாராசிட்டமாலை கூட அதிகமாக உட்கொண்டுவிட்டால் சிலநேரங்களில், சிலருக்கு பாதிப்புகள் உருவாகும்.
சிலர் டாக்டரிடம் செல்வார்கள். டாக்டர் அவரது நோய்த்தன்மைக்கு ஏற்ப ஒருவாரத்திற்கு மருந்துகள் எழுதிக்கொடுத்து, ‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என்பார். அவரோ அதே மருந்தை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு டாக்டரிடம் வருவார்.இது ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும் செயல்முறையாகும்.
-
டாக்டர் குறிப்பிடும் காலம்வரை மட்டுமே குறிப்பிட்ட மருந்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதே சரியான வழிமுறையாகும். சிலர் முதலில் இரண்டு நாட்கள் ஒரு டாக்டரிடம் காட்டி, அவர் வழங்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். மூன்றாம்நாள் இன்னொரு டாக்டரிடம் செல்வார்கள்.
முதலில் வாங்கிய மருந்து சீட்டை காட்டாமலே ஆலோசனை பெற்று, அவர் வழங்கும் மருந்துகளையும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்ற, சரியான அணுகு சிகிச்சை பெறவேண்டும். நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, நோயாளிகளுக்கு உணவு சாப்பிட மனம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கட்டாயம் உணவு தேவை.
அதில் அன்றாடம் உடலுக்கு தேவையான கலோரியும்,சத்தும் இருக்கவேண்டும். சாப்பிடாவிட்டால், உடல் மேலும் தளர்ந்து போகும். காய்ச்சல் இருக்கும்போது எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும்.குளிர்ந்த, பழகிய உணவுகளை தவிர்க்கவேண்டும். வாந்தி,வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு சேர்த்த கஞ்சி, ஓ.ஆர்.எஸ்.திரவம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
-
டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை கடையில் வாங்கும்போது சீட்டை வைத்து மருந்துகளை சரிபாருங்கள். மருந்தின் காலாவதி மாதத்தை கவனியுங்கள். ஒருமுறை வாங்கி பயன்படுத்திய பாட்டில் மருந்துகளை, சிலர் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் நோய் வரும்போதும் கொடுக்கிறார்கள்.
அது தவறு. ‘சிரப்’ வடிவில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்து பாட்டில்களை திறந்த சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதன் பின்பு அதன் சக்தி குறைந்துவிடும். அதனால் திறந்த பாட்டில் மருந்துகளை நோய் தீர்ந்த பின்பு சேமித்து வைக்கவேண்டாம். பாரசிட்டமால், இருமல் சிரப் போன்றவைகளை காலாவதி தேதிவரை பயன்படுத்தலாம்.
-
சில மாணவர்கள் அன்றாடம் பாடங்களை படிக்காமல், பாடங்களை சேர்த்துவைத்துக்கொண்டு பரீட்சை காலத்தில் அதிக சிரத்தை எடுத்து படிக்கிறார்கள். அப்போது தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தூக்கத்தை கலைக்கும் ‘ஆம்பிட்டமின்’ வகை மாத்திரைகளை, மருந்துகடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இது அவர்கள் உடலுக்கு அவர்களே செய்துகொள்ளும் தீங்காகும். ஒருசில விளையாட்டு வீரர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை ‘ஊக்கமருந்தாக’ பயன்படுத்துகிறார்கள். அதுசட்ட விரோதமானது. உடலுக்கும் ஆபத்து. நீங்கள் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சைக்காக செல்லும் டாக்டர் முறையாக கற்றவரா? போலி டாக்டரா என்பதை கண்டறியும் பொறுப்பு உங்களை சார்ந்ததுதான்.
போலி டாக்டர்கள் தங்களுக்கு தெரிந்த விதத்தில், கேள்வி ஞானம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை அளிப்பார்கள். அதனால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும். முறையாக கற்ற டாக்டர்கள் வழங்கும் மருந்துகளும் ஒருசில நேரங்களில் பக்கவிளைவுகளைஏற்படுத்தலாம்.
-
அப்படி ஏற்பட்டால் உடனே, அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும். வெளிநாடுகளில் டாக்டர்கள்மருந்துகளை எழுதும் போது கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. டாக்டர்கள் எழுதுவது புரியாத போது மருந்து மாறிவிடக் கூடும்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 5:24 pm

அதனால் வாங்கிய மருந்தை டாக்டரிடமோ, நர்சிடமோ காட்டிவிட்டு பயன்படுத்ததுவது நல்லது.
வீடுகளில் மருந்துகளை எப்போதுமே குழந்தைகளுக்குஎட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர் ஒருவருக்கும், குழந்தை ஒன்றுக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பெரியவர் டாக்டரைப் பார்த்து வாங்கிய மாத்திரையில் அரை அல்லது கால் பகுதியை குழந்தைக்கு கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு.
-
மருத்துவ சாஸ்திரம் குழந்தைகளை ‘சில்ரன் ஆர் நாட் ஸ்மால் அடல்ட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. ‘குழந்தைகள் வயதுக்கு வந்தவர்களின் சிறிய உருவம் அல்ல’ என்பது இதன் அர்த்தமாகும். சிறுவர்களின் ஈரல், கிட்னிபோன்றவைகளின் செயல்பாடுகளிலும், இரைப்பையில் சுரக்கும் அமிலங்களிலும் வித்தியாசம் இருக்கிறது.
அதனால் பெரியவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை, அளவு குறைத்து ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. கவனிக்காமல் இன்னொரு மருந்தை மாற்றி சாப்பிட்டுவிட்டால், உடனே கவனிக்கவேண்டும். மிகக் குறைந்த அளவே சாப்பிட்டிருந்தால் பெரியபாதிப்பு எதுவும் நேராது. அளவு அதிகம் என்றால் தொந்தரவுதான்.
-
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது வாந்தி வரச்செய்வதுதான் சிறந்த வழி. உப்பு கலக்கிய நீரை குடித்தோ, சிறிய துணியால் தொண்டையின் உள்பகுதியை தொட்டோ வாந்தி வரச்செய்யவேண்டும். வாந்திவரச் செய்யும்போது அவர் முழு நினைவுடன் இருக்கவேண்டும். மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவைகளை குடித்தால் வாந்தி எடுக்கவைக்கக்கூடாது.
உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிடவேண்டும்.இருமல் சிரப் மற்றும் காய்ச்சலுக்கான சில மருந்துகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமின் தூக்கத்தை வரவழைக்கும். சோர்வு, உற்சாகக்குறைவு போன்றவைகளும் தோன்றும். அதனால் அத்தகைய மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் நாளில் ஓய்வெடுப்பதே நல்லது.
வாகனங்கள் ஓட்டுவதையும் தவிர்க்கவேண்டும். முறையாகப் படித்த டாக்டரை தேர்ந்தெடுப்பது- மருந்து, மாத்திரைகளை முறையாக வாங்குவது- சாப்பிடுவது போன்ற விஷயங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். இதில் டாக்டர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
மருந்துகடை நடத்துபவர்களும், சமூகமும் இதில் இணைந்து செயல்பட வேண்டும். சில நாடுகளில் நோய்கள் மற்றும் மருந்துகள் வாங்கும் முறை, சாப்பிடும்முறை பற்றி பள்ளிப்பாடத்திட்டத்திலே சேர்த்திருக்கிறார்கள். அது போன்ற பாடத்திட்டங்களை அரசு இங்கும் நடைமுறைப்படுத்தினால், சமூகத்திற்கு மிகுந்த பலன் ஏற்படும்.
-
கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc.,F.R.C.S.
தலைவர்:தமிழ்நாடு மருத்துவர் சங்கம்,
சென்னை.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 5:34 pm

அருமையான தகவல் பவன் சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:04 am

நல்ல தகவல்கள் ராஜ் புன்னகை
.
. ஆமாம் நீங்க பவுன் ராஜா? பவன் ராஜ் ஆ? நண்பரே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக