புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வைகாசி விசாகம் I_vote_lcapவைகாசி விசாகம் I_voting_barவைகாசி விசாகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகாசி விசாகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 24, 2013 9:05 am

வைகாசி விசாகமான இன்று முருகப்பெருமானை, இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவோமே!

த உள்ளம் அமரும் உத்தமனே!
அருணகிரிக்கு அருளிய முருகனே!
ஆறுபடை அமர்ந்தவனே!
பழநியில் வாழும் பாலகுமாரனே!
சிக்கல் சிங்காரவேலனே!
செந்தில் ஆண்டவனே!
தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே!
மயிலேறிய மாணிக்கமே!
எமக்கு நல்வாழ்வு தந்தருள்வாயாக.

வடபழநியாண்டவனே!
வல்வினை தீர்ப்பவனே!
வயலூர் வாழ் வள்ளலே!
செங்கோட்டு வேலவனே!
தணிகைநாதனே!
வள்ளி மணாளனே!
திருப்பரங்குன்றம் வாழ் நாதனே!
சுப்பிரமணியனே!
தேவசேனாபதியாக விளங்குபவனே!
உன்னருளால் எங்கள் வாழ்வு மலரட்டும்.

குன்றுதோறும் எழுந்தருளிய குமரக் கடவுளே!
ஆவினன்குடிவாழ் அமுதனே!
ஆதிபரஞ்சுடராம் சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்தவனே!
ஆனைமுகன் தம்பியே!
முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவனே!
சூரசம்ஹாரனே!
பால தண்டாயுதபாணியே!
எமக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.

பார்வதி பெற்றெடுத்த பாலகனே!
தெய்வானையின் உள்ளம் கவர்ந்தவனே!
சேவல் கொடியானே!
மரகதமயிலில் உலகை வலம் வந்தவனே!
வேலாயுதமூர்த்தியே!
சரணவபவனே! சண்முகனே!
சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே!
எமக்கு வளமான வாழ்வு தர வேண்டும்.

செந்தூர் கந்தனே! சுவாமிநாதனே!
சென்னிமலை சேவகனே! அவ்வைக்கு கனி அளித்த சுப்பிரமணியனே!
மால் மருகா! கார்த்திகேயனே!
விசாகத்தில் அவதரித்த வித்தகனே!
சரணடைந்தவரைக் காக்கும் தயாபரனே! சித்தநாதனே! எம்மைக் காக்க சீக்கிரம் வந்தருள்க.

தஞ்சமென வந்தவரைத் தாங்குபவனே!
அபயம் அளித்திடும் அம்பிகை புதல்வனே! கதிர்காமம் அமர்ந்தவனே! பன்னிருகையனே! பாமரர் போற்றும் பரம்பொருளே! காங்கேயனே! கடம்பனே! குறிஞ்சி நாதனே!
உம் பன்னிரு கண்களால் எங்கள் மீது கருணை மழை பொழிவாயாக!

குமரப்பெருமானே!
திருப்புகழ் போற்றும் திருமுருகா!
பிரணவ மந்திரத்தை உபதேசித்தவனே!
அருணாசலத்தில் உறையும் கம்பத்து இளையவனே!
முருகம்மையாரைக் காத்தவனே!
முக்திக்கு வித்தே! தமிழ்த்தெய்வமே!
உன்னருளால் இந்த வையம் வாழ்வாங்கு வாழட்டும்.


வைகாசி விசாகம் கொண்டாட்டம் ஏன்?


வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இந்நாள் முருகனின் பிறந்தநாள் ஆகிறது. "விசாகன்' என்றால் "குமரன், இளைஞன்' என்ற பொருள்கள் உண்டு. முருகன் என்றும் இளையவன் என்பதால், விசாகம் நட்சத்திரம் அவருக்குரியது ஆயிற்று. பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகனிடத்தில் காணலாம். இந்நாளில் முருகன் தலங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்வர்.

சரவணபவ மந்திரம்


முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக "சரவணபவ' அமைந்துள்ளது. இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி(பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. "சரவணன்' என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப்பொய்கை' என்று சொல்வர்.


வந்தான் வடிவேலன்

திருவண்ணாமலையில் வசித்த அருணகிரிநாதரின் பக்தியையும், பாடல் திறனையும் கண்டு, சம்பந்தாண்டன் என்ற புலவர் பொறாமை கொண்டார். இதையடுத்து பிரபுட தேவன் என்ற மன்னன் முன்னிலையில் இருவரில் யாருடைய பக்தி சிறந்தது என்ற போட்டி நடந்தது. முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் திருக்காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்தான். ஆனால், மந்திரங்களை முறியடித்த முருகப்பெருமான், கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் இடதுபுறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார்' என்ற பெயர் பெற்றார். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா'' என்று குறிப்பிடுகிறார்.


திருச்செந்தூரில் நீராடும் முறை

வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். இந்த ஊரில் இருந்த சூரனை சம்ஹாரம் செய்யத்தான் முருகன் அவதாரமே நிகழ்ந்தது. இங்கு பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு அடுத்து நாழிக்கிணற்றில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. கடலில் குளித்த உப்புத்தண்ணீரைக் கழுவுவதற்காக நாழிக்கிணறில் குளிப்பதாக கருத்து கொண்டுள்ளனர். முருகப்பெருமான் பத்மாசுரனை அழிக்க லட்சம் வீரர்களுடன் சென்றார். அவர்களின் தாகம் தீர்க்க தன் வேல் கொண்டு எறிந்து கடற்கரையிலேயே அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் நல்ல தண்ணீர் உள்ள நாழிக்கிணறை உருவாக்கினார். முருகன் உருவாக்கிய அந்த நாழிக்கிணறில் தான் அனைவரும் முதலில் நீராடவேண்டும். பிறகு கடலுக்குச் சென்று கூச்சலிடாமல், பக்தியுடனும், கவனமாகவும் குளிக்க வேண்டும். கடலில் சென்று குளித்த பிறகு அறைகளில் சென்று குளித்து, பெற்ற புண்ணியத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.


விசாக நட்சத்திரக் கோயில்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான திருத்தலம். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் படுவதால், இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் இந்த கோயிலைத் தரிசிக்க வேண்டும். 500 அடி உயரத்தில், 544 படிகளுடன் அமைந்த குன்றுக்கோயில். படியேற முடியாதவர்கள் வாகனத்தில் மலைக்குச் செல்லலாம். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முற்காலத்தில் இந்த நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்களது முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் ஓட வள்ளி, நளமூலிகை, திருலைச்செடி ஆகிய மூலிகைகள் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருலைச் செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து, முருகனுக்கு பூஜித்தார்கள். இத்தல முருகனை தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலையடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

தினமலர்



வைகாசி விசாகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக