புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
7 Posts - 41%
heezulia
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
7 Posts - 41%
mohamed nizamudeen
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
3 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
430 Posts - 73%
heezulia
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
8 Posts - 1%
prajai
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
5 Posts - 1%
kaysudha
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 07, 2013 11:10 am

சோழர்கள் காலத்தில் நாடு பல மண்டலங்களாககவும், கோட்டங்களாகவும், நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் "இராமதேவன்' என்ற இயற்பெயருடைய வேளாளர் ஒருவர் இருந்தார். இவரது குடும்பமே சிவன்பால் சித்தத்தை வைத்து வாழ்ந்த குடும்பம். "சே' என்றால் காளை எனப் பொருள்படும். உழவுத் தொழிலைச் செய்து வந்த குடியில் வாழ்ந்த குடும்பம் ஆதலால் சே+கிழார் குடும்பம் என அழைக்கப்பட்டது. மேலும் சிவன்பால் சித்தம் கொண்டவராக இருந்ததால், சிவனுக்கு ஊர்தியாக விளங்குபவர்கள் - சிவனைத் தாங்குபவர்கள் என்பதால் சேக்கிழார் குடி என அழைக்கப்பட்டனர்.

இராமதேவனுக்கு இன்னொரு பெயர் அருண்மொழித் தேவன் என்னும் இராசராச சோழனின் பெயராகும். அருண்மொழித் தேவன் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கினார். சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரது தகுதியையும் திறமையையும் கேள்விப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் அவரை தனது அவையில் அமைச்சர் ஆக்கினான். மேலும் அவருக்கு "உத்தம சோழப் பல்லவன்' என்னும் பட்டமும் அளித்து கௌரவித்தான்.

அரசு நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியவற்றை திறம்பட நடத்தி இரண்டாம் குலோத்துங்கனுக்கு நற்பெயர் ஈட்டித் தந்தார் அருண் மொழித்தேவன்.

சிறந்த சிவ பக்தனாக இருந்ததால் சோழ சாம்ராஜ்யத்தின் அனைத்து சிவாலயங்களையும் கண்டு தரிசித்து வரும் வழக்கம் இருந்தது. அவ்வகையில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சுவரம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரானார். அதனைப் போலவே ஒரு ஆலயம் தன் சொந்த ஊரில் கட்டி சிறப்பிக்க வேண்டுமென விரும்பினார்.

மன்னன் அநபாயன் சமண இலக்கிய ஈடுபாட்டில் இருந்தான். சமண மதப் புலவர்கள் சிந்தாமணியின் கதையை எடுத்தியம்பி கதை - பொருள் விளக்கம் சொல்வார்கள். அதனில் மனம் லயிப்பான். அவை மன்னனை உலக வாழ்வில் இருந்து மாற்றி விடும் என நினைத்தனர். எனவே அவன் மனதை மாற்ற எண்ணினர்.

"இம்மை - மறுமை நலன் பயக்கக்கூடிய பல வரலாறு இருக்கும்போது சொல், பொருள், இன்பம் மட்டும் தரும் வரலாற்றைப் பேசி மகிழ்ச்சி அடைகின்றீர்களே. அந்தக் கதைகளை விட்டு இந்த வரலாறுகளைக் கேட்டு உணருங்கள்'' எனக் கூறி சைவ - அடியார்களின் வரலாறுகளை எடுத்து இயம்பலானார் அருண்மொழித் தேவன். சொல்லும் பொருளை சுவைபட அருண்மொழித் தேவன் என்னும் உத்தம சோழப் பல்லவராயர் சொல்ல, அடியார்கள் வரலாறுகளில் தன் மனதைக் கொடுத்த மன்னன் அதனை எழுத்தில் இலக்கிய வடிவம் ஆக்க வேண்டினான்.

திருநாகேச்சுவரம் மீது இருந்த ஈடுபாட்டைப் போலவே, தில்லையம்பலவாணன் மீதும் ஈடுபாடு கொண்ட அருண்மொழித் தேவர், பொன்னம்பலவாணன் முன் நின்று, தான் வரலாற்றைத் துவங்க முழு சக்தியை வழங்க வேண்டினார். பொன்னம்பல வாணனோ "உலகெலாம்' என்ற சொல்லை அசரீரியாக ஒலித்து புராணம் எழுத அடியெடுத்துக் கொடுத்தார்.

உணர்ச்சி மேலிட்ட அருண்மொழித் தேவனும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' எனத் தொடங்கும் இறைவனின் அடியார்களின் வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தை எழுதி அரங்கேற்றினார். இன்னும் தனது சைவப்பணி இருப்பதைக் கருத்தில்கொண்டு தன் சொந்த ஊரான சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரை அடைந்து மீண்டும் திருநாகேச்சுவரரை வேண்டி ஒரு புதிய கோயிலைக் கட்டத் தொடங்கினார். அங்கேயும் திருநாகேச்சுவரத்தை எழுந்தருள்வித்து குடமுழுக்கு செய்ததால் அத்திருக்கோயில் தற்போதும் குன்றத்தூருக்கு அருகில் உள்ள "திருநாகேச்சுவரம்' என்ற பெயரோடே வழங்கி வருகின்றது.

சேக்கிழார் என பின்னர் அழைக்கப்பட்ட அருண்மொழித் தேவன் சித்திரை திருவாதிரையில் புராணத்தை சிதம்பரத்தில் விரித்துரைக்கத் தொடங்க, மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் முடிவு பெற்றது.

அதற்காக மன்னன் உரிய மரியாதைகள் செய்து அவருக்கு "தொண்டர் சீர் பரவுவார்'' என்ற பட்டம் அளித்து சிறப்புச் செய்தார். அதுமுதல் சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக சேர்க்கப்பட்டு மொத்த திருமுறைகள் பன்னிரண்டு என்ற நிலையை அடைந்தது.

அவர் சைவத்திற்கு செய்த பணியாலும், திருநாகேச்சுவரம் கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்த காரணத்தாலும் ஒவ்வோர் ஆண்டும் அவர் முக்தி அடைந்த வைகாசி பூசத்தினை (வருகிற 12ஆம் தேதி) இறுதி நாளாகக் கொண்டு 10 தினங்கள் சேக்கிழார் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக