புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
65 Posts - 64%
heezulia
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
16 Posts - 3%
prajai
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகனாக வந்தவன்! Poll_c10மகனாக வந்தவன்! Poll_m10மகனாக வந்தவன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனாக வந்தவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 2:46 am



அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பினான் விஷ்ணு.

ஆவி பறக்கும் காபியுடன் அம்மா ஆஜர்.

""ஏம்மா... இப்படி வீட்டு வேலையெல்லாம், நீ மட்டும் தனியா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறது போதாதுன்னு, நான் எப்ப ஆபீசிலிருந்து வருவேன்னு காத்துக்கிட்டிருந்து காபி போட்டுக் கொண்டு வருவது, கொஞ்சம் கூட நல்லாயில்ல. ஒரு வேலைக்காரியை வெச்சுக்கச் சொன்னா, அதுவும் கேக்கமாட்டேங்கிற.''

வழக்கமான அங்கலாய்ப்புடன் காபியை உறிஞ்சினான் விஷ்ணு.

""அதுக்குத்தான் கூடிய சீக்கிரத்துல, இந்த வீட்டுக்கு ஒரு மருமகளைக் கொண்டு வரச் சொன்னா... நீ தான் கேக்க மாட்டேங்கறியே?''

அம்மாவும் பதிலுக்கு, பழைய பல்லவியே பாடினாள்.

""ஆரம்பிச்சுட்டியா,'' என்று அலுத்துக் கொண்டே, "டை'யைத் தளர்த்தினான். வாசலில் நிழலாடியது.

""ஆண்ட்டி.''

குரல் கேட்டுத் திரும்பினான் விஷ்ணு. தங்கச்சிலை போல், ஒரு பெண்.

""அடடா...மதுராந்தகியா வாம்மா,'' என, அவளை வரவேற்றாள் அம்மா.

""நானும், அம்மாவும் பக்கத்து ஊருக்கு கிளம்பறோம். நாளைக்கு சாயந்திரம் தான் திரும்புவோம். காலைல பால்காரப் பையன் பாக்கெட்டை வைச்சுட்டு போயிடுவான். அதை எடுத்து, உங்க பிரிட்ஜ்ல வெச்சுருங்க ப்ளீஸ்... சாயந்திரம் வந்து வாங்கிக்கிறேன்.''

மென்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

""சரிம்மா.''

""அப்ப நாங்க கிளம்பறோம்.''

""இரும்மா. காபி குடிச்சிட்டு போயேன்.''

""தேங்க்ஸ் ஆண்ட்டி. நேரமாச்சு... இன்னொரு நாளைக்கு வர்றேன்.''

பறந்து விட்டாள்.

""யாரும்மா அது?'' என்று கேட்டான் விஷ்ணு.

""பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க. பாவம்... அந்தப் பொண்ணு,'' என்றாள் அம்மா.

""ஏம்மா?''

""தாயும், மகளுமாய் ரெண்டே பேரு தான். இந்தப் பொண்ணுக்கு நேர்ந்த கொடுமை, வேறு எந்தப் பெண்ணுக்கும் நேர வேணாம்.''

""அப்படி என்ன நடந்தது?''

""கட்டிக் கொடுத்த மூணாவது நாளே விதவை ஆயிட்டா.''

திடுக்கிட்டான் விஷ்ணு.

""நீ என்னம்மா சொல்றே? பார்த்தா, இப்பத் தான் பைனல் இயர் முடிச்சிட்டு காலேஜ்லேர்ந்து வெளியே வந்த மாதிரி இருக்கா. அவளுக்கா, இந்தக் கொடுமை?''

""இதுதாம்பா விதிங்கிறது. வேலை விஷயமா வெளியூர் போன, அவள் கணவன் விபத்து ஒன்றில் இறந்து போயிட்டான். நல்ல வேளை... இவள் டீச்சர் வேலைப்பார்க்கறதாலே, குடும்பத்தை நல்லவிதமா ஓட்டிக்கிட்டிருக்கா. இல்லைன்னா பிரச்னையா போயிருக்கும்.''

நம்பவே முடியவில்லை விஷ்ணுவால்.

ஏனோ தெரியவில்லை. ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை என்கிற அக்கறையா, இளம் வயதில் கணவனை இழந்து விதவையாகிவிட்டாளே என்கிற அனுதாபமா, சொல்லவொண்ணாப் பச்சாதாபமா, எதுவென்றே புரியவில்லை. அவனையுமறியாமல் மதுராந்தகி மீது, அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவள் பள்ளிக்கூடத்துக்கு போகும் போதும், திரும்பி வரும் போதும், அவள் அறியாத வண்ணம், இடைவெளி விட்டு, அவளைக் காக்கும் கவசமாய், பைக்கில் பின்தொடர்ந்து வந்தான்.

மதுராந்தகி, ஒர் இளம் விதவை என்கிற சேதி, அந்தக் காலனி முழுக்கப் பரவியிருந்தது. கேட்க யாரும் இல்லை, என்கிற தைரியத்தில், மீதி காசு கொடுக்கிற சாக்கில் மளிகைக்கடைக்காரன், அவள் கையை உரசுகிறான். லாண்டரி கடைக்காரன், அவளை விழுங்கி விடுவது போல் முறைக்கிறான். இந்த உலகம் பொல்லாதது என்பதை அறிந்திருந்ததால், இது பற்றி, அறிந்தும் அறியாதது போல் இருந்தாள்.

அன்றும் வழக்கம் போல், பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், மதுராந்தகி.

காலனி ஒரமாய் நின்றிருந்த இளைஞர்கள், இருவர் அவளைப் பார்த்து கமென்ட்ஸ் அடித்ததோடு இல்லாமல், விசில் வேறு அடித்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த விஷ்ணு, பைக்கை ஓரமாய் நிறுத்தி விட்டு வந்து, அந்த இளைஞர்களை பின்னியெடுத்து விட்டான்.

""தேங்க்ஸ்,'' என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்றாள்.

எம்.டி.,யின் பி.ஏ., வந்து, ""சார்...உங்களை எம்.டி. வரச் சொன்னார்.'' என்றதும் பதறி விட்டான் விஷ்ணு.

அவர் அறையை அடைந்து, கதவை லேசாகத் தட்டினான்.

""கம் இன்.'' என்ற எம்.டி., விஜயராகவன், அவன் உள்ளே நுழைந்ததும், ""உக்காருங்க மிஸ்டர் விஷ்ணு.'' என்றார்.

எதிர் இருக்கையில் தயங்கி அமர்ந்தான்.

""மிஸ்டர் விஷ்ணு, உங்களை இப்ப அழைத்திருப்பது முழுக்க, முழுக்க சொந்த விஷயம் பத்திப் பேசத்தான்,'' என்று அவர் சொன்னதும் குழம்பிப் போனான்.

எம்.டி.பேசினார்...

""எனக்கு ரெண்டு பசங்க. ஓரு ஆண், ஒரு பெண். ரெண்டு பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி, நல்லா படிக்க வைச்சேன். பையனுக்காக, என் நண்பரின் மகளைப் பேசி வைச்சிருந்தேன். ஆனா, பையன் யாரோ ஒரு பெண்ணைக் காதலிச்சு, அவளையே கல்யாணம் செய்துகிட்டான். நண்பனுக்கு கொடுத்திருந்த வாக்கை என்னால் காப்பாத்த முடியலே. அவன் வந்து, "காச், மூச்'சென்று கத்திவிட்டு போனான். அது பத்தி நான் என் பையனை தட்டிக்கேட்ட, ஒரே காரணத்துக்காக எல்லாத்தையும் தூக்கியெறிஞ்சிட்டுப் போனவன் தான். ரோஷக்காரன். இது வரை என் வீட்டு வாசப்படியை மிதிக்கலை. அவன் எங்கிருக்கான், என்ன செய்றான்னே தெரியலை.''

விழியோரம் படர்ந்த ஈரக் கசிவை, மூக்குக் கண்ணாடியை கழற்றி துடைத்துக் கொண்டார்.

"இதையெல்லாம் எதுக்கு என்னிடம் சொல்கிறார் எம்.டி...' என்கிற குழப்பத்துடன் நெளிந்தான் விஷ்ணு.

அதை புரிந்து கொண்டார் விஜயராகவன்.

""ஓ...ஐம் சாரி... நான் பாட்டுக்கு, ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன். <உங்களை எதுக்குக் கூப்பிட்டேன்னா...'' சற்றுத் தயங்கி, மீண்டும் தொடர்ந்தார்.

""உங்க நேர்மை, திறமை, உண்மை, ஒழுக்கம், மனிதாபிமானம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாமே எனக்கு, ரொம்ப பிடிக்கும். உங்களைப் போன்று, ஒரு மகன் எனக்குப் பிறந்திருக்கக்கூடாதான்னு, நான் பல தடவை ஏங்கியதுண்டு. என்னோட ஒரு விருப்பம்...விருப்பம்ன்னு சொல்றதை விட, என்னோட ஆசைன்னே வெச்சுக்குங்களேன். என் வீட்டு மருமகனா நீங்க வரணும்.''

அதிர்ந்தான் விஷ்ணு.

""சார்...நீங்க என்ன சொல்றீங்க?''

""வேணும்னா, ஒரு வாரம் டைம் எடுத்துக்குங்க. அம்மாகிட்ட கலந்தாலோசிங்க. நிதானமா உங்க பதிலைச் சொல்லுங்க.''

என்ன சொல்வதென்றே புரியவில்லை விஷ்ணுவுக்கு. எம்.டி., இவ்வாறு கேட்பார் என்று, அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை,

""ஒ.கே., சார். நான், என் அம்மாவோடு பேசிட்டு சொல்றேன்,'' என்றவாறு எழுந்து கொண்டான்.

காலனியை அடைந்தபோது, பக்கத்து வீட்டில் ஏதோ விவகாரம்.

யாரோ ஒருவன், வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தான்.

பைக்கை நிறுத்தி விட்டு, அவசரமாய் நெருங்கினான் விஷ்ணு.

""இதோ பாரும்மா... இது உன் புருஷன் என்கிட்ட வாங்கிய கடனுக்கான பத்திரம். இப்ப நீதான் அதை அடைக்கணும்.'' அந்த முரட்டு ஆசாமி உச்சஸ்தாயில் இரைந்து கொண்டிருந்தான். இழுத்துப் போர்த்திய சேலையும், கவிழ்ந்த தலையுமாய் அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தாள் மதுராந்தகி.

அவனுடைய வக்கிரப் பார்வை, அவள் உடல் மீது அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்த விஷ்ணுவுக்கு, தேகமெங்கும் தீப்பிடித்தது போன்ற உணர்வு.

""ஹலோ... என்ன விஷயம்? ஏன் தனியா இருக்கும் பொண்ணுக்கிட்ட சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க...'' என்று கேட்டான்.

குரல் கேட்டு திரும்பிய அந்த தடியன், ""இந்த அம்மா எனக்கு, 20 ஆயிரம் ரூபா கொடுக்கணும், அதை நீ தருவியா? பெரிசா பஞ்சாயத்து செய்ய வந்துட்டாரு...'' என்றான் நக்கலாக.

""இந்த ஆளு சொல்வது உண்மையா?'' என்று கேட்டான் மதுராந்தகியைப் பார்த்து...

"ஆமாம்' என்பது போல் தலையாட்டினாள்.

""ஒரு அஞ்சு நிமிஷம் பொறு,'' என்று அந்த ஆசாமியிடம் சொல்லி விட்டு பைக்கில் பறந்த விஷ்ணு, ஏ.டி.எம்.,மெஷினில் இருந்து பணத்தை எடுத்து வந்து, அவன் முகத்தில் விட்டெறியாத குறையாக கொடுத்தான்.

பணத்தை எண்ணிப்பார்த்து, சட்டைப் பையில் வைத்துக் கொண்டான் அவன்.

""இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது.' என அதட்டலாய் சொன்னான் விஷ்ணு.

""அம்மா மேல இவ்வளவு கரிசனம் காட்டும், ஐயா யாரோ?''

இளக்காரமாகவும், ஏளனமாகவும் கேட்டான் முரடன்.

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த விஷ்ணுவின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகள், அவனையும் அறியாமல் விழுந்து தெறித்தன.

""நானா... நான் இந்த அம்மாவோட புருஷன்டா.''

அதிர்ந்த முரடன் திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

நிலைகுலைந்து போன மதுராந்தகி, அதிர்ச்சியுடன் விஷ்ணுவை நிமிர்ந்து பார்த்தாள்.

சுய உணர்வுக்கு திரும்பியவன், ""ஐ'ம் சாரிங்க, ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். சும்மா, அவனை பயமுறுத்தத்தான், அப்படி சொன்னேன்,''என்றான்.

மதுராந்தகியின் பின்னால் நின்றிருந்த, அவள் தாய் முன்னால் வந்தாள்.

""இல்லை தம்பி. நீங்க வாய்தவறி இதைச் சொல்லலை. உங்க அடிமனசுலேர்ந்து வந்த உண்மையான, யதார்த்தமான வார்த்தை தான் இவை. மதுராந்தகி, ஒரு வேலி இல்லாத பயிருன்னு கண்டவனெல்லாம் மேயப் பார்க்கிறான். நீங்க மனசு வைச்சா இவளுக்கு வேலியா, பாதுகாப்பா இருக்கலாம்.''

வீட்டு வாசலில் நின்று, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் அம்மா ஓடி வந்தாள்.

""என்னைக்கு நான் மதுராந்தகியை பார்த்தேனோ, அன்னைக்கே என் உள் மனசு சொல்லிடுச்சி. இவ தான் என் மருமகள்ன்னு. விஷ்ணு... சரின்னு சொல்லிடுப்பா,'' என்றாள்.

இரு அம்மாக்களும் விருப்பப்பட்டனர். விஷ்ணுவும், மதுராந்தகியும், இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்த விஷ்ணுவுக்கு, ஒரே குழப்பமாக இருந்தது.

எம்.டி.க்கு என்ன பதில் சொல்வது?

ஒரு வாரம் டைம் கொடுத்திருக்கிறாரே...

யோசித்து, யோசித்து கடைசியில், தன் பதிலை மின்னஞ்சல் மூலம் தட்டிவிட்டான்.

எம்.டி.,யிடமிருந்து, எந்த அழைப்பும் இல்லை. ஒரு வாரம் ஒடி விட்டது.

ப்யூன் வந்து நின்றான்.

""சார்... உங்களை எம்.டி.,கூப்பிடறார்.''

"போச்சுடா. போயும், போயும் உனக்கு விதவை தானா கிடைச்சா, அழகா என் பொண்ணைக் கட்டிக்கிட்டு, ஏகப்பட்ட சொத்து சுகத்தோடு வாழ்வதை விட்டு விட்டு, இப்படி உன் வாழ்க்கையை வீணடிக்க நினைக்கிறியே'ன்னு எகிறப் போறார் என்று மனதிற்குள் நினைத்து, பயந்தவாறே எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தான்.

""வா... விஷ்ணு. உக்காரு.''

அவர் முதல் முறையாக, தன்னை ஒருமையில் அழைத்தது, அவனுக்கு வினோதமாய்ப்பட்டது.

ஒருவேளை ஏகக் கடுப்பில் இருக்கிறாரோ?

ஆனால், அவர் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். கலகலப்பாக பேசினார்.

""உன்னை என் மருமகனாக்க விரும்பினேன். ஆனா, நீயோ என் மகனா வந்து நிக்கறே,'' என்றார்.

திடுக்கிட்டான்.

""சார்...நீங்க என்ன சொல்றீங்க?''

""ஒரு விதவைக்கு வாழ்வளிக்கப் போறதா நீ "இ-மெயில்' மூலம் தகவல் அனுப்பியிருந்த. அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு, அந்தப் பெண்ணிடம்ன்னு ஆட்களை வெச்சு விசாரிச்சப்பதான், ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்துச்சு. மதுராந்தகி வேறு யாருமில்லை. என்னோட மருமகள். விபத்துல இறந்து போன... அவள் கணவன் தான் என் மகன். கடைசியில், அவன் முகத்தை கூட பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கலை.''

விஜயராகவன் கண்களில் கண்ணீர்.

அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த விஷ்ணு, "சட்'டென எழுந்தான்.

""அழாதீங்க அப்பா. நான் தான் வந்துட்டேனே...'' என்று அவர் கரங்களை, ஆதரவாக பற்றினான்.

"குபீ'ரென எழுந்தவர், விஷ்ணுவை ...இல்லை, இல்லை... தன் மகனை அணைத்துக் கொண்டு கதற ஆரம்பித்தார் விஜயராகவன்.


மலர்மதி



மகனாக வந்தவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 10:53 am

உருக்கமான கதை அருமை சூப்பருங்க



மகனாக வந்தவன்! Mமகனாக வந்தவன்! Aமகனாக வந்தவன்! Dமகனாக வந்தவன்! Hமகனாக வந்தவன்! U



மகனாக வந்தவன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 22, 2013 11:31 am

நல்ல கதை ...தல சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:04 pm

அருமையான கதை...! சூப்பருங்க



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:06 pm

கதை சூப்பருங்க




மகனாக வந்தவன்! Mமகனாக வந்தவன்! Uமகனாக வந்தவன்! Tமகனாக வந்தவன்! Hமகனாக வந்தவன்! Uமகனாக வந்தவன்! Mமகனாக வந்தவன்! Oமகனாக வந்தவன்! Hமகனாக வந்தவன்! Aமகனாக வந்தவன்! Mமகனாக வந்தவன்! Eமகனாக வந்தவன்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 11:31 am

வாவ்! சூப்பர் கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:12 pm

கதை அருமை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:21 pm

அருமையான பதிவு ....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக