புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 2:07 pm

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்த அளவில் நாயின் மீது அன்பும், அதன் பராமரிப்பும் இருக்கும். நாய்கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழியில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லையென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல்மொழியையும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது விரட்டிச் செல்ல பிடித்த பூனை போன்றவற்றை எளிதில் கூறலாம்.

இதன் செய்கையால் அதன் தன்முனைப்பு நடத்தையை அறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். நாய் எப்போது பயமுறுத்தப்பட்டு பாய்வதற்கு முற்படுகிறது என்பதை அதன் உடல்மொழியை வைத்தே அறிந்து, நம்மையும், நாயையும் பாதுகாத்துக் கொள்ளலாம். நாயின் உடல்மொழியை படிக்கும் போது, அதன் ஒட்டு மொத்த உடல்மொழியையும் எடுத்து, தனி தனி வகைகளாக பிரித்து பார்த்தால். அதன் உடல்மொழியை வேகமாக கற்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த மிருகவதை சங்கம் கூறுகிறது.

குரல் :

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979064-voiced-600


நாயின் குரலை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாய் பலத்தரப்பட்ட சப்தங்களில் குரைக்கவும், பலமின்றிச் சிணுங்கவும் செய்யும். நாய் சிணுங்கினால், அது பயந்தோ அல்லது உடம்பு சரியில்லாமலோ அல்லது மிகுந்த ஆவலோடு உள்ளதாக அர்த்தமாகும். சில நாய்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கும் போது சிணுங்கும். அதே போல் தன் குரலை உயர்த்தியோ அல்லது அதிகமாக குரைத்தோ தன் உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஒரு நாய் தன் கோபத்தை வெளிப்படுத்தவே குரைக்கும் என்றில்லை. தன் குதூகலத்தை, சந்தோஷத்தை, சலிப்புத்தனத்தை, வெறுப்பை காட்டுவதற்கும் அது குரைக்கும். ஒரு உறுமும் நாய் தன் கோபத்தை காட்டவே அப்படிச் செய்யும். ஆனால் ஒரு குட்டி நாயின் உறுமல் இதில் அடங்காது, அது விளையாட்டுத்தனமான உறுமலாகும்.


வாய் :
நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979195-mouth-dog-600


நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வெற்று பற்களுடன் ஒரு சின்ன சிணுங்கலும் சேர்ந்து இருக்கும். சந்தோஷமாக இருக்கும் நாய் அமைதியாகவும் வாயை மூடியும் அல்லது சிறிது திறந்தும் இருக்கும். அந்த நேரம் சிறிது மூச்சிரைக்கவும் செய்யும். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாயும் மூச்சிரைக்கும். சில நாய்கள் பணிவாக போகின்ற நேரத்தில் பற்களை காட்டிச் சிரிக்கவும் செய்யும் என்று சொல்கிறார் நாய் நடத்தையின் வல்லுநர் டேவிட் டெய்லர்.

கண்:

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979293-dog-eye-600

நாயின் கண்களை பார்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாய்களின் கண்கள் இயல்பான நிலையில் பளிச்சென்று இருக்கும். குழம்பிய நிலையில் இருக்கும் நாய்கள், கண் இமைகளை உயர்த்தி தலையை சாய்த்து தன் உணர்வை காட்டும். பயத்துடன் இருக்கும் நாய், மூர்க்கத்தனமான கண்களுடன், தோள்கள் பின்னடைந்து, வெண்ணிற கண்கள் கலங்கியும் இருக்கும். மூர்க்கத்தனமான கோபத்துடன் இருக்கும் நாய்கள், எதிராளியான மனிதனிடமோ அல்லது மிருகமிடமோ துணிச்சலுடன் கண்ணை நோக்கி பார்க்கும். நாயின் கண்கள் இயல்பு நிலையை விட சின்னதாக இருந்தால், அது பயந்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமலோ இருக்கும் என்று ASPCA சொல்கிறது.

வால் :

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979324-tails-6000

நாயினுடைய வாலின் நிலையை பார்க்கவும். சந்தோஷமான தருணத்தில் அது தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வாலை ஆட்டினால் அது எப்போதும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதனால் வாலை ஆட்டும் போது, அதன் உடல்மொழியுடன் சேர்த்து முடிவு செய்ய வேண்டும். நாயின் வால் அதன் கால்களுக்கு நடுவில் இருந்தால் அது பயந்தோ அல்லது பணிந்தோ உள்ளது என்று அர்த்தம். பயத்துடன் இருக்கும் நாயின் வால் தரையை நோக்கி இறுகி போய் இருக்கும். அதுவே அது மிகுந்த கோபத்துடன் இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி இறுகி போய் இருக்கும். இப்படி வால் இருக்கும் நேரம், இறுகிய உடம்புடன், கூர்மையாக்கிய காதுகளுடன், பற்கள் தெரிய அது இருந்தால், அது யாரையாவது தாக்கப் போகிறது என்று நமக்கு தரும் எச்சரிக்கை.

காது:

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979357-earss-dog-600

நாயின் காதுகளை கவனிக்க வேண்டும். சுகமாக இருக்கும் நாய்களின் காதுகள் இயல்பாக இருக்கும். நாய் எதையாவது கவனிக்கும் போது அல்லது விழிப்பாக இருக்கும் போது காதுகள் தலையின் மேல் கூர்மையாக இருக்கும். அதுவே சற்று பின்னோக்கி இருந்தால், அது நட்புடைய உணர்வோடு இருக்கிறது என்று அர்த்தம். பணிந்து அல்லது பயந்து போன நாய்களின் காதுகள் தலையோடு தட்டையாக அல்லது ஓரமாக இருக்கும்.

ஒட்டுமொத்த உடல் :

நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 26-1366979395-overallbody--dog-600

நாயின் ஒட்டுமொத்த உடல் தோரணையை கவனிக்கவும். அது விளையாட வேண்டுமானால், கீழே குனிந்து, முன்னங்காலை கூனிக் குறுகும். சந்தோஷமாக இருக்கும் நேரம், அதன் தசைகள் லேசாகி ஓய்வெடுக்கும். இதுவே பயந்த நிலையில் இருந்தால், தன் உடலை பின்னோக்கிச் சென்று தன்னை சிறியதாக காட்டச் செய்யும். மேலும் தரையை நோக்கி பதுங்கும். ஆளுமை அல்லது விழிப்புடன் இருக்கும் நேரத்தில், அது தன் தசைகளை இறுக்கமாக்கி, நிமிர்ந்து நிக்கும். பணிந்து போகும் நாய்கள் பின்னங்காலை தூக்கி, பின்பக்கமாக சுற்றிக் கொள்ளும்.

Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2013/how-read-your-dog-body-language-003106.html




நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Mநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Aநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Dநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Hநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... U



நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 2:16 pm

நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.

இப்படி கவனித்தால் நாம் அரசு மருத்துவமனை போக போறோம் அப்படின்னு அர்த்தம் ...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 3:12 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 5:40 pm

அருமையான தகவல். ஒரு டவுட்டு. நாம நாய் வாய பார்க்குற நேரத்தில் அது நம்மள புடுங்கிடுச்சின்னா அழுகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 5:42 pm

ஊசி போடணும்



நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Mநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Aநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Dநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Hநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... U



நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 5:43 pm

MADHUMITHA wrote:ஊசி போடணும்

ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 5:44 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:ஊசி போடணும்

ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும் மண்டையில் அடி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 5:46 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:ஊசி போடணும்

ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும் மண்டையில் அடி

நான் கூட ஆடு வெட்டும் முன்பு ஊசி போடணும்
வெட்டிய பிறகு ஊசி போகும்னு நினைத்தேன் ...

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 5:47 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:ஊசி போடணும்

ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும் மண்டையில் அடி
ஆமா உங்கள கடுச்ச்க நாய்க்கு தான் போடணும்



நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Mநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Aநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Dநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Hநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... U



நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 5:49 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:ஊசி போடணும்

ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும் மண்டையில் அடி

நான் கூட ஆடு வெட்டும் முன்பு ஊசி போடணும்
வெட்டிய பிறகு ஊசி போகும்னு நினைத்தேன் ...
இது கொஞ்சம் ஓவரு
நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்... Images?q=tbn:ANd9GcRTse4drZ5hpuHBgH1RNmxz5HPrra4TXhnyUoV5h5c2Io07wLSIjQ

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக