Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிசி
+2
அசுரன்
சிவா
6 posters
Page 1 of 1
அரிசி
கிச்சடி, ஆர்க்காடு, வாடன் சம்பா, பூவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதிபெரட்டி, தூயமல்லி, குள்ளக்கால் என்று பல வகை நெல் வகைகள் 1950-60-ம் ஆண்டுகளில் இருந்தன. அதன்பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளில் பல்வேறு புதுவகையான நெல் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐ.ஆர்.8, ஐ.ஆர்.10 என்று பல வகைகள். மானாவாரி நிலத்தில் விளையும் நெல் விதைகள் ஒரிசா மாநில கட்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட பாரம்பரிய வகை பழைய நெல் விதைகள் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன.
அரிசி என்ற சொல்லே "ரைஸ்' என ஆங்கிலத்தில் மருவி உள்ளது. மாவீரர் அலெக்ஸôண்டர் மூலமாக அரிசி பயிரிடும் முறை மேலை நாடுகளுக்குச் சென்றது. உணவுத் தொழிலைத் திட்டமிட்டு முதன்முதலில் உலகில் நடத்தியது தமிழர்கள்தான் என்று மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
பெரும்பாணாற்றுப் படையில், 2-ம் நூற்றாண்டில் ஏர் மற்றும் பயிர்த் தொழில் பற்றிப் பாடப்பட்டுள்ளது. ஒற்றை நாற்று நடவு முறை மிகவும் பழமையானது. அது தமிழர்களின் அடையாளமாகும். மட்கும் எருவைப் பயன்படுத்தியதை அகநானூறு குறிப்பிடுகின்றது.
பீகாரில் பயிர் செய்யப்படும் பெளியா நெல், வெள்ளம் பாய்ந்தாலும் தாக்குப்பிடித்து வளரக் கூடியது. ஜார்க்கண்டில் மேட்டு நிலங்களில் கோடா நெல் வகை வறட்சிக் காலங்களிலும் விளையும். உத்தரப் பிரதேசத்தின் ஆற்றுப் படுகைகளில் போரா வகை நெல் பயிரிடப்படுகிறது. ஒரிசாவில் விளையும் கோரா பூட், காளி மூரி போன்றவை விலங்குகளிடமிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையாகும்.
இது போன்றே துல்லபூடியா வகை நெல், வெள்ளத்தில் பல நாட்கள் மூழ்கிக் கிடந்தாலும் பின்னர் தழைத்து வளரக்கூடிய தன்மை கொண்டதாகும்.
கர்ஹைனி, துன்சி மாசா, மைனா பாங்கி, காளிமோரி போன்ற பாரம்பரியமிக்க நெல் வகைகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன. வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் ஈடுகொடுக்கும் நெல் விதைகள் ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்தன.
ஒரு பக்கத்தில் அதிக உற்பத்தி கிடைக்கின்றது என்பதற்காகக் கலப்பு வகை நெல்லை விவசாயிகள் பயிரிட்டாலும், சில இடங்களில் விவசாயிகள் பண்டைய கால அபரிமிதமான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நெல் வகைகள் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன.
பாரம்பரிய விதைகள் நிலத்தின் தன்மையையும் நீராதாரத்தையும் கொண்டு பயிர் செய்யப்படுகின்றன. பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் விதைக்காக அலைய வேண்டியது இல்லை.
இந்த வகை விதைகள் தட்பவெப்ப நிலையையும் பாதுகாத்துக் கொள்ளும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இதற்குத் தேவையில்லை. இந்த நெல் வகைகளில் உள்ள கார்போ ஹைட்ரேட் எளிதில் கரையும். இதனால் எளிதில் ஜீரணமடையும்.
ஆனால் கலப்பு ரக, புதுரக விதைகளால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகின்றது.
இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைக் கொண்டே கலப்பு ரக விதைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
உற்பத்திதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்த நெல்லிலிருந்து வரும் அரிசியில் சுவை இருப்பதில்லை.
மேலும் கலப்பு ரக விதைகளைப் பயிரிடுவதற்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியுள்ளது.
கலப்பு ரக நெல் விதைகளுக்கு ஆர்வம் காட்டுவது போன்று, பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டிய முனைப்பும், அவசியமும் எதிர்காலத்தில் நிச்சயம் வரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரிசி
மீண்டும் இயற்கை உரத்தை பயன்படுத்தி பழைய முறையில் விவசாயம் செய்தால் மீதி உள்ள நிலங்களும் காக்கப்படும். அருமையான தகவல்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அரிசி
ஆனால் நாம் மக்கள் தான் செயற்கை உரத்தை பயன்படுதி பழகி விட்டார்கள் இனிமேல் பழைய நிலைக்கு செல்வது என்பது சந்தேகமான ஒன்று
Re: அரிசி
விவசாயம் பற்றிய விரிவான பதிவு ...
இப்படி கூட அரிசி உள்ளதா ?
பூவன் சம்பா,
இப்படி கூட அரிசி உள்ளதா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அரிசி
பாத்து அண்ணா,,, நாம் இனியவன் ராஜு அண்ணா மோசமானவங்க உங்கள துக்கிட்டு போய் இடிசுற போறாங்க இடிச்சுபூவன் wrote:விவசாயம் பற்றிய விரிவான பதிவு ...பூவன் சம்பா,
இப்படி கூட அரிசி உள்ளதா ?
Re: அரிசி
தற்போது உழவர்கள் செயற்க்கை உரம் பயன்படுத்துகிறார்கள்; பூச்சிக் கொல்லி பயன்படுத்துகிறார்கள்; கலப்பு ரக விதைகள் பயன்படுத்துகிறார்கள்; உணவில் ருசி இல்லை; சத்து இல்லை; நோய் வருகிறது என்று எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்..
இயற்க்கை உரம் பயன்படுத்தினால் மீதம் உள்ளவையாவது பாதுகாக்கப்படும்.. பாரம்பரிய விதைகள் பயன்படுத்த வேண்டும் (விளைச்சல் குறைவு என்றாலும்).. பூச்சிக் கொல்லி பயன்படுத்தக் கூடாது.. எல்லாம் சரி தான்..
ஆனால் இன்றைய நிலை என்ன????
உண்ணும் உணவை உற்பத்தி செய்து உயிரூட்டும் உழவனின் இன்றைய நிலை என்ன?
இயற்கை உரத்தைப் பயன்படுத்தும் முறை முழுமையாக ஒழிந்து விடவில்லை. இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிக விளைச்சல் வேண்டி செயற்கை உரமும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறன. உழவர்கள் இப்படி மாறியதன் காரணம் என்ன?
அவர்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு சரியான விலை அவர்களுக்கு கிடைக்கிறதா?? இடைத் தரகர்களும், வியாபாரிகளும் தான் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். வெயிலில் வெந்து, புழுதியில் புதைந்து, மண்ணோடு மாயும் உழவனுக்கு சொற்ப விலை தான்.
பின், அவர்கள் மாறாமல் என்ன செய்வார்கள். ஜெட் வேகத்தில் உயரும் விலைவாசிகளை சமாலிக்க அவர்கள் அதிக விலைச்சல் பெறுவதைத் தவிர உழவே தொழிலாய்க் கொண்ட இவர்களுக்கு வேறு வழி இல்லை.
இவை ஒரு புறம் என்றால்... மறுபுறம்...
முப்போகம் கண்ட பூமி கூட இன்று வானம் பார்த்த பூமியாய் மாறி நிற்கிறது.. விதைத்த பயிர் நீரின்றி மண்ணோடு காய்வது கண்டு, மனமெல்லாம் நொந்து, பழைய கஞ்சி கூட குடிக்க மனமில்லாமல் பசியோடு, தொண்டை அடைக்கும் துக்கத்தோடு, வானத்தைப் பார்த்து படுத்துக்கொண்டு, நடுநிசி வரை தூக்கமின்றி , துக்கத்தில் வடியும் கண்ணீரைத் துடைத்து கொண்டு, நாளையாவது விடியுமா மழை வருமா செத்துக் கொண்டிருக்கும் பயிர் தப்பிப் பிழைத்து விடுமா என ஏங்கும் பாவப்பட்ட உழவர்களின் பரிதாப நிலை எத்துனை பேருக்குத் தெரியும்...????
உழவர்களுக்கு அவர்கள் விலைவிக்கும் பொருள்களுக்கு உரிய விலை அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டியது யார் கடமை?
உரிய, குறைந்த விலையில் இயற்கை உரங்களும், பாரம்பரிய நடவு முறைகளுக்குத் தேவையான ஆட்களும் இன்று உண்டா??
விவசாயம், விவசாயி, விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் மாணவி/ மாணவன் என்றால் எல்லாருக்கும் தோன்றுவது... "பட்டிக்காடு".. 'ஏளனம்'.... 'பரிகாசம்'...
"உழவன் அவன் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியாது" என்பதை எத்துனை பேர் உணர்ந்துள்ளனர்??
வெள்ளை சொக்கா வேலை னா புருவத்த உயர்த்துறாங்க.. விவசாயம் னா மனசுக்குள்ள சிரிக்கிறாங்க..
மாற்றம் வருமா னு வருசம் முழுசா ஏங்கிகிட்டு இருப்பது உழவனின் பொழப்பாய்ப் போச்சு..!! அவன் தயாரிப்பதை வாங்கித் தின்று கொண்டு அவனையே கேவலமாய்ப் பார்ப்பதும், அவனைக் குறை சொல்வதும் மற்றவரின் பொழப்பாய்ப் போச்சு..!!
"என்று விடியும் இவர்கள் வாழ்க்கை..! என்று உயரும் உழவர் தம் கை..!"

"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Similar topics
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» கருப்பு அரிசி
» மல்லிகை அரிசி
» கைக்குத்தல் அரிசி
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» கருப்பு அரிசி
» மல்லிகை அரிசி
» கைக்குத்தல் அரிசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|