புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
40 Posts - 63%
heezulia
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
232 Posts - 42%
heezulia
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
21 Posts - 4%
prajai
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_m10மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 11:03 am

இருபது வயதுகளில் இன்று பல பெண்கள் காதலிப்பது போல் ஆஷாவும் காதலித்திருக்கிறாள். அந்த காதலுக்கு அம்மா எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனோடு ரகசிய திருமணம் செய்து கொண்டு, தனிக்குடித்தனம் போய் இருக்கிறாள். இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. பின்பு அவள் வருமானத்திற்காக கணவரை நம்பிக் கொண்டிருக்காமல் எம்ப்ராய்டரிங் கற்றுக் கொண்டாள். அதை ஒரு தொழிலாக்கி, வீட்டில் வைத்தே வருமானம் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள்.

பெற்றோருக்கு அவள் ஒரே மகள். பெற்றோர் நிரந்தரமற்ற கூலி வேலை பார்ப்பவர்கள். மகள் நன்றாக வாழ்வது தெரிந்ததும், பெற்றோர் தேடிச்சென்று மகளை குடும்பத்தோடு அழைத்து வந்து, தங்கள் வீட்டிலே குடிவைத்துக் கொண்டார்கள்.

“அம்மாவோடு இருந்து கொண்டு, இப்போது சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகிறோம் என்றபடி தன் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினாள், ஆஷா.

அவள் கணவர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அவருக்கு எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இவள் வீட்டில் இருந்தே புடவை, சுடிதார்களுக்கு எம்ப்ராய்டரிங் போட்டுக் கொடுத்து மாதம் ரூ. 25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறாள்.

“என் கணவர் குடிப்பது எனக்குத் தெரியும். குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, நான் குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று ஏதாவது ஒருசில குறைகளை கூறிவிட்டு, சாப்பிட்டு தூங்கிவிடுவார். அவரை வேறு எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது என்பதால், அவர் குடிப்பதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் என் அம்மா அதை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றுகிறார். ‘அவர் குடித்துவிட்டு வந்தால், கதவை திறக்காதே. வீட்டுக்கு வெளியே நிறுத்திவிடு. நாலைந்து முறை அவ்வாறு செய்தால் தான் இந்த மாதிரியான குடிகாரர்கள் திருந்துவார்கள் என்று கூறினார். நானும் அதுபோல் ஒருசில முறை செய்ததால் எங்களுக்குள் பெரும் மோதல் உருவானது. அந்த மோதலை தணிக்கும் விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அம்மா, எங்களிடையே இருக்கும் பிளவை அதிகரிக்கும் விதத்தில் செயல்படுகிறார்.

என் கணவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறி எங்களை பிரிக்கப் பார்க்கிறார். என் அம்மா இப்படி நடந்துகொள்ள என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. பெற்றோரை கைவிட முடியாமலும், கணவரோடு மனமொத்து வாழ முடியாமலும் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்.

தனக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து, அதை தாயார் பூதாகரமாக்கிய விதத்தை அவள் கண்ணீரோடு விவரித்தபோது, உருக்கமாகத்தான் இருந்தது.

அவளது பெற்றோரின் பொருளாதார நிலை, அவர்கள் உடல் நிலை, வயது, வாழ்க்கை முறை போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக அவளிடம் கேட்டேன். அவர்கள் பொருளாதார நிலையில் ஏழ்மையாக இருப்பதையும், உடல் நிலையும் அவ்வளவு நன்றாக இல்லாமல் இருப்பதையும் தெரிவித்தாள்.

“நான் தினமும் அதிகாலையில் எழுகிறேன். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறேன். என் குழந்தைகளை கவனிக்கிறேன். கணவரையும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, என் பெற்றோருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுக்கிறேன். மாதந்தோறும் என் கணவருக்கு தெரியாமல் அவர்கள் செலவுக்கு பணமும் கொடுக்கிறேன். அவைகளை எல்லாம் செய்தும், என் தாயார் என் வாழ்க்கையோடு ஏன் விளையாடுகிறார் என்று தெரியவில்லை என்று கண்கலங்கினாள்.

நான் அவளிடம், “கணவருடனான உன் வாழ்க்கையை உடனடியாக காப்பாற்றி, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. அதற்கான எல்லா முயற்சிகளையும் நீ எடுக்கத்தொடங்க வேண்டும். உன் பெற்றோர் இப்போது உடல் அளவிலும், பொருளாதார அளவிலும் மிகவும் பலகீனமாக இருக்கிறார்கள். தங்கள் அனைத்து தேவைகளுக்கும் அவர்கள் இப்போது உன்னையே நம்பி இருக்கிறார்கள். நீ அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டால் தாங்கள் அனாதையாகி விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் உனக்கும் உன் கணவருக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி, அவரை பிரித்து விட்டு, உன்னையும் குழந்தைகளையும் மட்டும் தங்களோடு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு நீ பலியாகி விடக்கூடாது. அதே நேரத்தில் உன் பெற்றோரை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் உனக்கு இருக்கிறது. அவர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் என்றேன்.

‘நான் என்ன செய்ய வேண்டும்? என்றாள், அவள்.

“உன் பெற்றோரிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணம் தருகிறேன் என்று சொல். உணர்வு ரீதியான பாதுகாப்பு வழங்குவதாகவும், அவர்கள் தேவைக்கு எப்போதும் ஓடிவந்து உதவ தயாராக இருப்பதையும் விளக்கிச்சொல்.

அதே நேரத்தில் தனக்கு தன் கணவர், குழந்தைகள், வாழ்க்கை முக்கியம் என்பதையும் உணர்த்து. தங்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கணவர், குழந்தைகள் என்று நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். அதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு, நீ வேறு வீட்டிற்கு தனிக்குடித்தனம் செல். உங்கள் வாழ்க்கையில் வேறு யாரையும் தலையிட அனுமதிக்காதே. குடிப்பழக்கத்தில் இருந்து உன் கணவரையும் விலகச்சொல் என்றேன்.

அவள் புரிந்து கொண்டவளாய், கிளம்பிப்போனாள்.

முதுமையில் தங்கள் எஞ்சிய கால வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் ஒரு சில பெற்றோர், தங்கள் சுய லாபத்திற்காக மகளின் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து பிரச்சினை கொடுக்கிறார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

விஜயலட்சுமி பந்தையன்.

மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 13, 2013 11:24 am

முதுமையில் தங்கள் எஞ்சிய கால வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் ஒரு சில பெற்றோர், தங்கள் சுய லாபத்திற்காக மகளின் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து பிரச்சினை கொடுக்கிறார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

எனது கருத்தும் இதுவே தான்

காதல் திருமணத்தை எதிர்பவர்கள் இரு வீட்டாரும் சேர்ந்து செய்யும் திருமணம் மட்டும் வாழுதாக்கும்

இக்கரைக்கு அக்கறை பச்சை தான்

இதை புரிந்துகொண்டால் சரி தான்

மகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Mமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Uமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Tமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Hமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Uமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Mமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Oமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Hமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Aமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Mமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! Eமகளின் வாழ்க்கையில் விளையாடும் அம்மா! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக