புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
40 Posts - 63%
heezulia
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
232 Posts - 42%
heezulia
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_m10எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 19, 2013 11:23 am

http://1.bp.blogspot.com/-WXvHYUmw3sI/UZZVUD_ou0I/AAAAAAAACIY/3bGY6tu8j-8/s1600/maya-home-black-web_r1_c1.jpg

இன்று மாலை (17/5/13) 5.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பினேன். 5.30 மணியளவில் ஹைதராபாத்தில் நாங்கள் தங்கி இருக்கும் கச்சிபோவ்லி என்னும் இடத்தில் (வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்) வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்பட்டது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாகச் சென்று பார்த்தேன்.

சாலையில் ஒரு பாதியில், வானத்தைப் பார்த்து ஒரு உடல் சரிந்து கிடந்தது. பின்தலையில் அடி. அவரின் தலை இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை மீட்டர் தூரத்திற்கு ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. காது, வாய், மூக்கு இவற்றிலும் ரத்த ஓட்டம் குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தது. சட்டை, கைகள் முழுதும் ரத்தம். ஆனால் இதயத்துடிப்பு நிற்கவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு இன்னும் உயிர் இருந்தது.

ஒரு நீர் குமிழியில் நீர் கொப்பளித்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே கொப்பளித்துக் கொண்டு வெளிவந்தது மூக்கில் இருந்து சுவாசக் காற்றுடன் கலந்துவந்த ரத்தம். அதை ஒரு மிகப்பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரின் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்க, நெஞ்சை பிடித்து அழுத்தினேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற முதலில் 108 ஆம்புலன்சிற்கு அழைத்து சொல்லிவிட்டு, வீட்டில் இருக்கும் என் நண்பனை அந்த இடத்திற்கு வரச்சொன்னேன். சுட்டெரிக்கும் சூட்டில், வாகன நெரிசலுக்கிடையே நடுரோட்டில் கிடக்கும் அவரை ஓரமாக தூக்கிவைத்து முதலுதவி ஏதேனும் செய்ய நினைத்தேன்.

நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதில் கைகளைப் பிடித்து தூக்க ஒருவர் முன்வந்தார். அடிபட்டுக் கிடந்த அவரின் இரண்டு கால்களையும் பிடித்து நான் தூக்கினேன். ஆனால் அருகில் இருந்தவன், போலீஸ் வரட்டும் தொடாதீர்கள் என்று சொல்லியதும், கைகளைப் பிடித்தவர் விட்டுவிட்டார்.

என்ன செய்ய ? போலீஸ் வருவதற்குள் இவன் செத்தால் பரவாயில்லையா என்று என்னை அறியாமல் நடு ரோட்டில் கத்தினேன். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் கான்ச்டபுள் அந்த இடத்திற்கு வந்தார். எப்படியும் இந்த நெரிசலில் அம்புலன்ஸ் வருவது அவ்வளவு எளிதல்ல என்று எண்ணி, ஓரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோக்களை வலி மறித்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் முதலுதவி செய்ய முயற்சித்தேன். போலீஸ்காரரும் தன் பங்கிற்கு ஆட்டோக்களை வழிமறித்தார். அவரையும் மதிக்காமல் பலர், விட்டால் போதும் என்று முறுக்கிப் பிடித்து ஓடினார்கள். ஒருகூட்டம் பார்த்துக் கொண்டே போனது.

கடைசியில் ஒரு இளம் ஓட்டோ ஓட்டுனர் உதவ முன்வந்தார். இருவரின் உதவியுடன் அவரை தூக்கி ஆட்டோவின் பின்புறத்தில் படுக்க வைத்தேன். எனக்கு ஹிந்தி, தெலுங்கு தெரியாது, அதனால் இங்கு வசிக்கும் யாரேனும் என்னுடன் வாருங்கள் என்று கேட்டேன். ஒருவரும் முன்வரவில்லை.

அந்த உடல் உயிருக்கு போரட்டிக்கொண்டு ஆட்டோவில் கிடந்தது. அந்த இடத்தில் குறைந்தது 5 நிமிடம் விரயமானது. கடைசியில் ஒருவர் முன்வந்தார். ஆட்டோ டிரைவர், போலிஸ்காரர், நான் மூவரும் முன் சீட்டில் அமர்ந்து கொண்டோம். அந்த ஒருவர் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு அடிபட்டவரின் தொல்ப்பட்டையை பிடித்துகொண்டார்.

அடிபட்டது பின்தலை என்பதால் நடம்புமண்டலம் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் போல் தெரிந்தது. காரணம் அவரின் கால்களை மடக்கி ஆட்டோவின் உள்ளே வைக்க முடியவில்லை. முற்றிலும் விரைத்தபடி இருந்தது. அதனால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பின்புறம் திரும்பி அவரின் கால்கள் தரையில் படாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இருந்தும் முயற்சி செய்து பிடித்துகொண்டு, பின்புறம் அமர்ந்திருபவரிடம் அடிபட்டவரின் நெஞ்சை அழுத்தச் சொன்னேன். அந்த நபர் அடிபட்டவரைப் பார்த்து எனது கசின் என்றார். யாரோ தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இருவரின் பெயரையும் கேட்டேன். இரண்டு முஸ்லிம் பெயர்களைச் சொன்னார் (அந்த நேரத்தில் சொல்லப்பட்டதை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை).

ஒரு வழியாக ஒரு சிறிய மருத்துவமனையைப் பார்த்து முதலுதவிக்காக ஆட்டோக்காரர் நிறுத்தினார். ஓடிப்போய் ரிசப்சனில் அவசரத்தை போலீஸ்காரரும், நானும் சொன்னோம். நான்கு சக்கர வண்டியில் அவரை உள்ளே தூக்கி கொண்டு சென்றோம். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர் சொன்னார்.

அடிபட்டவரின் சகோதரனும் நண்பரும் அப்போது அங்கே வந்துவிட்டார்கள். மாருதி ஆம்னி காரின் பின்புறத்தில், அடிபட்டவரை அவரின் கசின் மற்றும் சகோதரன் தாங்கிப் பிடித்துக்கொள்ள, நான் மற்றும் போலீஸ்காரர் முன்னே அமர்ந்து கொண்டோம். அவரின் நண்பர் காரை வேகமாக இயக்கினார். அப்போது மணி 6.15 இருக்கும். போலீஸ்காரர் அந்த நேரத்து கடும் வாகன நெரிசலை வண்டியில் அமர்ந்துகொண்டு விசிலடித்து விளக்க முடிவு செய்தார். நான் எனது கை வெளிப்புறம் எட்டிய அளவிற்கு காரை பலமாக தட்டிக்கொண்டே போனேன்.

கார் வேகமாக வந்து பிரிமியர் மருத்துவமனையை அடைந்தது. அவர் ICU அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் என்னைப் பற்றிய ஆதாரங்களை திரட்டிக்கொண்டார். திடீரென எங்களை மருத்துவர் அழைத்தார். ICU விற்குள் சென்றோம். அடிபட்டவரின் கை, கால் நரம்புகள் முற்றிலும் முறுக்கிக் கொண்டிருந்தது.

கையுறை அணிந்திருக்கும் மருத்துவரின் கையில் ரத்தம் நிறைந்த ஏதோ ஒரு சிறிய துண்டு இருந்தது. அதைக் காண்பித்து மூளையில் பலத்த அடிபட்டுள்ளது, ஏறக்குறைய முற்றிலும் சிதைந்து விட்டது, அதன் சிறிய பாகம் தான் இது என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போது என்னை அறியாமல் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பதாக மட்டும் உணர முடிந்ததது. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அவரின் அறைக்குள் போனோம்.

0% மட்டுமே இவரால் உயிர்வாழ முடியும் என்றார். அடிபட்டவரின் சகோதரனுடன் சேர்ந்து நானும்

"எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்றேன்.

"நான் ஒன்று சொல்லவா ? நீங்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள். அதோடு இவர் இருக்கும் நிலைக்கு உலகில் உள்ள எந்த நரம்பியல் மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் உயிர்வாழ்வார்" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்போது என் நண்பனும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவனிடம் மருத்துவர் சொன்னதை சொல்லிவிட்டு அங்கு இருக்க மனமில்லாமல் அவனிடம் போகலாம் என்றேன்.

போலீஸ்காரரிடம் நான் கிளம்புறேன் சார் என்றேன். அவர் கையைக் குலுக்கி "மனிதாபிமனத்தொடு வந்ததற்கு நன்றி, என்னிடம் உங்களுடைய தகவல் இருப்பதால் பயப்படவேண்டாம்" இது வெறும் சாட்சிக்கே என்றார்.

காய்ந்துபோன சில துளி ரத்தக் கரைகள் படிந்த கைகளோடு நண்பனுடன் 7 மணியளவில் வீடு திரும்பினேன்.

இதில் கவனிக்கப் படவேண்டிய சில விடயங்கள்:

1. விபத்து நடந்தது நான்கு சாலைகள் இணையும் இடம். ஒவ்வொருநாளும், அந்த இடத்தில் பள்ளி வாகனம் முதல் அனைவரும் கண்மூடித்தனமாக ஓட்டுவார்கள். அது ஹைதராபாத் நகரின் ஓரமாகச் செல்லும் மும்பை தேசிய நெடுஞ்சாலை. மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த இடத்தில் ஒரு சிக்னல் இல்லை. அந்த இடத்தில் முன்பெல்லாம் இருந்த ட்ராபிக் போலிஸ் சில நாட்களாக இருக்கவில்லை (இருந்தாலும் சாலையின் ஓரமாக உட்காந்து அவன் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான் - பல முறை பார்த்திருக்கிறேன்). இது முதல் தவறு.

2. ஒரு கார்க்காரன் மோதிவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னார்கள். அதோடு அடிபட்டவர், அவரோடு வந்த ஒருவர், யாரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை (யார் ஒட்டியது என்று எனக்குத் தெரியாது, கூட வந்தவருக்கு காலிலும் வயிறிலும் பலத்த காயம்)

3. 43 டிகிரி சுடும் மே மாத வெயிலில், சமமாக இருக்கும் சாலையில் ஒன்றரை மீட்டர் அளவிற்கு ரத்தம்போக குறைந்தது அரைமணி நேரம் ஆகாமல் இருந்திருக்காது. அந்த வெப்பத்தில் விரைவாக உறையும் ரத்தம் ஒன்றரை மீட்டர் அளவிற்கு போகும் வரை உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். இவர்களை என்ன செய்ய ? தனக்கு வந்தால்தான் உயிரின் அருமை தெரியுமா ?

4. விபத்து என்று தெரிந்ததும் பல ஆட்டோக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிக்கவே முயற்சி செய்தார்கள். உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு இந்த நிலை வராதா ?

5. எனது வேண்டுகோளுக்கிணங்க ஒருவர் அடிபட்டவரை சாலையின் ஓரமாகத் தூக்கிவைக்க முன்வந்தார். போலீஸ் வரட்டும் என்று சொல்லி அதையும் ஒருவன் தடுத்தான். அவனது மண்டையை அடித்து உடைத்து படுக்கவைத்து போலீஸ் வரட்டும் என்று சொன்னால் நன்றாக இருக்காதா ?

6. அவரவர் ஐடியா கொடுத்தார்களே தவிர, ஒருவர்கூட ஆட்டோவில் ஏற முன்வரவில்லை. ஒவ்வொருவரையும் கெஞ்சி வரச்சொன்ன அந்தப் போராட்டத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் வீணானது. அந்த நேரம் மிக முக்கியானது என்பது இந்த மனிதர்களுக்கு தெரியாமலா போய்விடும் ?

7. விழுந்துகிடந்தது ஒரு முஸ்லிம் சகோதரன். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு முஸ்லிம்கள் இதைச்செய் அதைச்செய் என்று மொழிதெரியாத என்னிடம் முன்மொழிந்தார்களே ஒழிய, அவனை காப்பாற்ற முன்வரவில்லை.

மனிதம் போதிக்கும் மதக்கொள்கைகளைப் பின்பற்றாமல் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் என்ன பயன் ? (இதை எல்லாரும் செய்கிறார்கள் என்று பொதுமைப் படுத்தவில்லை. அதனால் இதைப் படிப்பவர்கள் தயவு செய்து இஸ்லாம் சகோதர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கவேண்டாம். அனைத்து மதத்திலும் நல்லவர் கெட்டவர் உண்டு)

ஒரே ஒரு மன நிம்மதி. எப்போதும் நாம் குறைசொல்லும் போலீஸ்காரர்களில் மனிதாபிமானமிக்க ஒருவரையும், மனிதம் நிறைந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரையும் சந்தித்ததில்.

எது எப்படியோ மனிதாபிமானமற்ற பலரின் செயலால் முன்பின் தெரியாத ஒரு சகோதரனை கண்முன்னே இழந்தேன். இங்கே தெரிந்தது அவர்களின் இன, மொழிப்பற்றும் கேடுகெட்ட நகர கலாச்சாரமும்.

இதே விபத்து எனது கிராமத்திற்கு அருகே நடந்திருந்தால், அடிபட்ட அடுத்த நிமிடமே மடியில் ஏந்தி சோடா கொடுத்திருப்பான் ஒருவன். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருப்பான் மற்றொருவன். எதை எதையோ எதிர்பார்த்து பல பட்டங்கள் பெற்ற இவர்களை விட, எதையும் எதிர்பார்க்காமல் ஓடிவரும் படிக்காத அந்தப் பாமரன் எவ்வளவோ மேல்.

இதே போன்று முன்பொருமுறை எனக்குக் கிடைத்த அனுபவம் இங்கே http://kakkaisirakinile.blogspot.in/2012/11/blog-post_4.html

தயவு செய்து கட்டாயம் இதைப் பகிருங்கள். இது போன்ற விபத்துக்கள் அடுத்தவருக்கு மட்டுமே வராது, நமக்கும் வரும் என்பதை இந்த உலகம் உணரட்டும்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_1954.html

கனத்த மனதுடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 19, 2013 11:33 am

மனம் வலிக்கிறது இந்த சகோதரன் இறந்ததற்கு
மட்டுமல்ல மனிதம் இறந்து வருவதால் நம்மிடையே

ஆபத்து என்று வருகிறபொழுதாவது இந்த
ஜாதி, மத, மொழி, இன பேதங்கள் ஒழியாதா?

அதே சமயம் தங்களைப் போன்ற இளைஞர்களும் இருக்கிறார்கள்
எனும்பொழுது நம்பிக்கை ஒளிக்கீற்று பிரகாசமாகத் தெரிகிறது
மனிதம் குறையலாம் ஆனால் அழியாது என்பது உறுதி

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அகல்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 19, 2013 11:37 am

உங்களின் நல்ல எண்ணத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நகரங்களில் வாழ்க்கை இப்படிதான் உள்ளது. நமக்கேன் வம்பு என்று ஒதுங்க நினைப்பவர்களே அதிகமாகிவிட்டனர். அதோடு காவல்துறையினர் தரும் தொல்லைகளும் இந்த நிலைக்கு ஒரு காரணம். உங்களால் முடிந்த உதவியை செய்துள்ளீர்கள். நமது ஈகரை உறவுகளுக்கு இது ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 19, 2013 11:51 am

அந்த சகோதரன் இறந்த செய்தி வருத்தமானது என்றாலும் அவருக்காக கடைசி வரை போராடிய தங்களின் மனிதநேய செயல் பாராட்டுதற்குரியது. இதுபோன்ற நகர கலாச்சாரங்கள் தானாக வருவதில்லை. கிராமங்களில் உள்ளவர்கள் அனைவரின் எண்ணங்களும் ஒன்றே. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்வதால் நமக்கேன் வம்பு என்று இருக்கிறார்கள். ஒருநாள் அவர்களும் இதுபோல் தான் நாதியற்று போவார்கள் என்பது தெரிந்தும். சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 19, 2013 11:59 am

உங்களின் இந்த பதிவு நெஞ்சை தொட்டுவிட்டது

நீங்க நிறைய முயற்சி எடுத்து ஒரு உயிரை காப்பாற்ற நினைத்தீர்கள் அதுவே பெரிய விஷயம் தான்

நாம் அனைவரின் கடமை தான் ஆனால் யார் தனது கடமையை செய்ய விழைகிறார்கள்


நம் உறவுகள் அனைவருக்கும் பயன்படும் + உதவும் குணம் வரவழைக்கும் இந்த பதிவு சூப்பருங்க




எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Mஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Uஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Tஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Hஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Uஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Mஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Oஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Hஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Aஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Mஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! Eஎனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 12:09 pm

அகல் முதலில் உங்களுக்கு தான் நனறி சொல்லவேண்டும் .மொழி தெரியாத ஊரில் இவ்வளவு சிரத்தை எடுத்து ஒரு உயிரை காப்பாற்ற போராடிய உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி. அடிபட்ட உடன் அந்த நபரை காப்பற்ற யாரும் முன் வராது வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மனிதர்கள் உண்மையில் மனித பதர்கள். நீங்கள் உதவிகொண்டிருக்கும் வேளையில் கூட யாரும் உதவ முன்வராதது நமக்கேன் வம்பு என்ற சுயநலம். இந்த சுயநலம் தான் நாட்டின் வளர்ச்சியில் உள்ள தடைகல்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 19, 2013 12:18 pm

எனது "தினம் ஒரு குறள் யாப்போம்" திரியில் நான் எழுதிய ஒரு குறள் வெண்பா ஞாபகம் வருகிறது. அதைக்கீழே கொடுத்துள்ளேன்.


Uploaded with ImageShack.us
குறள் வெண்பா : ௦௯௧ (091)

சொல்லும்நற் சிந்தனையும் சொல்லாமல் சென்றதுபார்
செல்தந்த கேடிதுவாம்.....செல்லு
சோகம் என்ன கொடுமை சார் இது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 20, 2013 10:38 am

வருத்தமான செய்தி, தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்..

மனிதாபிமானத்தில் கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நகர மக்கள்தொகையில் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களை விட , ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் இருந்து கல்வி, வேலை என்ற காரணத்துக்கு குடி பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களும் நகரத்தை பிரதிபளிப்பவர்களே.

கிராமங்களில் ஒவ்வொருவரும் பிறருக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்களாக இருக்கிறார்கள், ஏன் அவர்கள் வீட்டில் எங்கு பெண் எடுத்தனர், கொடுத்தனர், திருமண வீட்டுப் பந்தியில் நடந்த சண்டை உட்பட அனைத்தும் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

ஆனால் நகரத்தில் இப்படி ஒரு சூழல் இல்லை. மேலும் நகரத்தில் உள்ள பலருக்கு வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து/மறந்து போகிறது. வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வாழ்வை அடகு வைத்து வாழ வேண்டிய சூழல் பலருக்கும் நேர்ந்துள்ளது. அதிக விலை, கொடுக்கும் விலைக்கு தரமற்ற பொருள்கள், தரமற்ற சேவை, காசு கொடுத்து சாப்பிட காத்திருக்கும் அவலம் இங்கு மலிந்துள்ளது. மக்களின் அறியாமை மேலும் பல நெருக்கடி கொடுத்து, பிரச்சனைகளை கண்டு விலகவே ஆசைபடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வை கண்ட அனைவரும், மனதளவில் அய்யோ அவர் பிழைக்க வேண்டும் என்று ஒரு சில நிமிடம் கடவுளை நினைத்திருப்பர். இவர்களும் மனிதாபிமானிகள் தான். ஒருவரும் ஒருவரின் இழப்பை விரும்பார்.

சமூக அக்கறையுள்ள செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளங்கள், சமூக வலைப்பூக்கள், தினசரி பத்திரிக்கைகள் ஒரு பாதாள சாக்கடை மூடி திறந்திருந்தால், அதை படம்பிடித்து வெளியிட்டு மறுநாள் அதற்குரிய அரசு நிறுவனம் வேலை செய்யும் பொழுது அதையும் படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் திறந்திருக்கும் சாக்கடையை கண்ணில் கண்ட உடன் உடனே மூடவேண்டும் என்று சொல்லித்தருவதில்லை

இன்றைய இணைய உலகில் தினசரி செய்திகளுக்கு நாம் இடும் பின்னூட்டம் அனைத்தும், இந்த மனதளவில் ஏற்படும் உணர்வின் வெளிப்பாடு தான். செயல்வடிவம் இல்லை. செயலில் செய்ய பலரும் விரும்புவதில்லை. இது தான் இன்றைய சமூக அக்கறை. பொறுப்பை தலையில் சுமக்காதவர், ஒரு சில விதிவிலக்கானவர்கள் உடனடியாக களத்தில் இறங்கும் வாய்ப்புண்டு. ஆனால் இது மேலும் குறையும் அபாயமே இங்குள்ளது.

இதில் இருந்து வெளிவர, வாழ்வியல் நெருக்கடிகளை குறைத்து வாழப் பழக வேண்டும், அப்பொழுதான் அருகில் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் கண்ணில் கருத்தில் இருப்பர்.














சதாசிவம்
எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே ! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 20, 2013 11:28 am

உங்களின் மனிதநேய செயல் மிகவும் பாராட்டுதற்குரியது .

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்களுக்கு முன்பு போல் சட்டத்தில் கெடுபிடி இல்லை என்று படித்தேனே .... என்ன சட்டம் வந்தால் என்ன ....மனிதம் வளர வேண்டும் ...

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன்






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக