ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by பூவன் Sat May 18, 2013 9:02 pm

இது எனக்கு மெயிலில் வந்தது , உறவுகள் யாருக்கேனும் பயன்படும் வகையில் இதை இங்கே பதிவிடுகிறேன் .....


திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (diploma in lyric writing )



பிரியம் நிறைந்த அத்தனை பேருக்கும் பிரியனின் வணக்கங்கள்..

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Cine-chance-to-poet

பாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும்.. ஒரு மிகப் பெரிய காரியத்தை எனக்குள் வைத்து.. இத்தனைக் காலம் பயணித்திருந்தேன்.. இந்நோக்கத்தை.. மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின..

இப்போது.. அது கைக்கூடிய.. அதை சாத்தியப்படுத்திய.. பெரும் தருணத்தின் மகிழ்வில் நிற்கிறேன்.. பகிர்கிறேன்..

தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது..

ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்..

வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற.. உங்கள் ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..

ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.


ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்..

உலக வரலாற்றில் முதல்முறையாக.. பாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றின் திரைப்படக்கல்லூரிப் பிரிவில்.. வரும் ஜீலையில் இருந்து துவங்கப்பட இருக்கிறது.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.

இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். அனைத்தும் வசம்.

மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் நிறைத்து.. அனைத்தும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த வாழ்த்துகள்..


ஜீலை 2013 – 2014-ஆம் ஆண்டிற்கான, திரைப்பாடல் இயற்றுநர் - தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விருப்பம் கொண்டவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல், பத்திரிக்கைப் படைப்பு என, முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பித் தகவலறிந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.

மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண்கள் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..

வகுப்பு :
திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
(தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்)
குறைந்தபட்சக் கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு ( any group)
சிறப்புத் தகுதி - தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.

மேலும் விவரங்களுக்கு..
பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) - 8056161139,
மின்னஞ்சல் - diplyric.piriyan@gmail.com .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by யினியவன் Sat May 18, 2013 9:18 pm

காதல் சோக கீதத்துக்கு மட்டும் பிரத்தியேக படிப்பு இருந்தா சொல்லுங்க - எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அதில் முனைவர் பட்டமே வாங்குற அளவுக்கு இருக்காரு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by பூவன் Sat May 18, 2013 9:21 pm

யினியவன் wrote:காதல் சோக கீதத்துக்கு மட்டும் பிரத்தியேக படிப்பு இருந்தா சொல்லுங்க - எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அதில் முனைவர் பட்டமே வாங்குற அளவுக்கு இருக்காரு. புன்னகை

வேணும்னா வைத்து ஒரு படம் தயாரியுங்கள் நல்ல ஓடும் இல்லைனா ஓடிடும் ...
காதல் சோக கீதங்கள் அப்படினு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by யினியவன் Sat May 18, 2013 9:23 pm

அண்ணன் ராராவுக்கே நாங்க இன்னும் தயாரித்த பாடில்லை இதில் உங்களுக்காக ஒண்ணா?

ஆசை இருக்கத்தான் செய்யுது - ஆனா முதல் வேணுமே - மூளை மட்டும் பத்தாதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by பூவன் Sat May 18, 2013 9:27 pm

யினியவன் wrote:அண்ணன் ராராவுக்கே நாங்க இன்னும் தயாரித்த பாடில்லை இதில் உங்களுக்காக ஒண்ணா?

ஆசை இருக்கத்தான் செய்யுது - ஆனா முதல் வேணுமே - மூளை மட்டும் பத்தாதே!!!

என்னையா நீங்கள் உங்களுக்கு தெரிந்தவருக்கு அப்படினு சொன்னீங்க அண்ணா ....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மூளை அப்படின எந்த மூலையில் இருக்குது அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by யினியவன் Sat May 18, 2013 9:30 pm

எங்களுக்கு இங்க இருக்கறவங்கள விட்டா வேற யாரை தெரியப் போவுது.

புழலுகுள்ள என்ன மாதிரியே தான இருப்பாங்க எல்லா மூலையிலும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by பூவன் Sat May 18, 2013 9:32 pm

யினியவன் wrote:எங்களுக்கு இங்க இருக்கறவங்கள விட்டா வேற யாரை தெரியப் போவுது.

புழலுகுள்ள என்ன மாதிரியே தான இருப்பாங்க எல்லா மூலையிலும் புன்னகை

நல்ல வேளை நான் தப்பித்து கொண்டேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எல்லாம் வேலூர் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by யினியவன் Sat May 18, 2013 9:35 pm

பெரிசா ஏதாவது செஞ்சுட்டு திகாருக்கு போகணும் அதான் ஆசை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by பூவன் Sat May 18, 2013 10:43 pm

யினியவன் wrote:பெரிசா ஏதாவது செஞ்சுட்டு திகாருக்கு போகணும் அதான் ஆசை புன்னகை

எவ்வளோ பெரிய ஆசை அண்ணா சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 11:14 pm

யினியவன் wrote:பெரிசா ஏதாவது செஞ்சுட்டு திகாருக்கு போகணும் அதான் ஆசை புன்னகை

எதாவது இப்ப அப்போன்னு இழுத்துகிட்டு கிடக்கற பெருசை லைட்ட தட்டின பொட்டுனு போயிடும். அப்புறம் நீங்க நினச்ச மாதிரி தான்... ட்ரை பண்ணிபாருங்கள் பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு  Empty Re: திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum