ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 9:42 pm

First topic message reminder :

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Issnew

பாகம் -1

விண்வெளியில் தற்போது ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் விண்தளம் தான் அனைத்துலக விண்வெளி நிலையம் இதை நம் தமிழில் அவிநி அல்லது அவிநியம் என்று அழைக்கலாம். சுமார் 15 நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன மேலும் இந்திய இந்த திட்டத்தில் இல்லை.

விக்கிபீடியா

சரி மேற்கொண்டு இந்த திட்டத்தை பற்றி விரிவாக பாப்போம்.

அமெரிக்கா தான் தனது கனவு திட்டமான அனைத்துலக விண்வெளி நிலையத்தை - அவிநியம் (ISS) உருவாக்க முதன் முதலில் அடிகோலியது.1984 ஆம் ஆண்டில், ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்த ஒரு தளத்தை உருவாக்க தனது ஆதரவை அறிவித்தார். அவர் இந்த திட்டத்தை சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அணைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.1985-ல் அமெரிக்காவின் அழைப்பு மூலம், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தனர். 1993 இல், ரஷ்யாவும் இத்திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டது. இப்போது 15 நாடுகள் இத்திட்டத்தில் பங்கு வகுக்கின்றன. உண்மையிலேயே இது தற்போது ஒரு பெரிய உலக திட்டமாக மாறிவிட்டது.

அனைத்துலக விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் பங்கேற்கும் 15 நாடுகளின் பிரதிநிதித்தும் பின்வரும் படத்தின் மூலம் அறியலாம்.

ஒவ்வொரு நாட்டின் பங்கு பற்றி மேலும் அறிய ஒவ்வொரு நாட்டின் கொடி மேல் கர்சரை நகர்த்துங்கள்.



இது ஒரு விண்வெளி சோதனை தளம், எழு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கி தங்கள் சோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள சோதனை சாலைகள் உள்ளன. அவிநியில் இருவித தொகுதிகள் (Module) உள்ளன,.ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் செய்ய "பரிசோதனை தொகுப்பு" , விண்வெளி வீரர்கள் தங்க "உறைவிட தொகுப்பு" உள்ளன. இந்த நிலையத்திற்கு வேண்டிய மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. மேலும் அவிநியில் உள்ள "தொலைமுக கையாளும் அமைப்பு (Remote Manipulator System) நிலையத்தின் வெளிப்புறத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக பயபடுதப்படுகிறது.

கர்சரை கிழே உள்ள படத்தில் நகர்த்துவதன் மூலம் ஒவ்வொரு "தொகுப்பு(Module)" பற்றி பார்க்கலாம்.



அவிநி எந்தளவிற்கு பெரியது எவ்வளவு எடையுள்ளது

கட்டுமானம் முடிந்தவுடன் அவிநி (ISS) 72,8 மீட்டர் X 108,5 மீட்டர் பரிமாணம்(Dimension) கொண்டதாக இருக்கும். முழு அளவிலான கால்பந்து மைதானத்தை விட சற்று பெரியதாக இருக்கும். எடை 450 டன் எடை கொண்டதாக இருக்கும் . ஒரு சிறிய பயணிகள் கார் சுமார் 1 டன் எடையுள்ளதென்றால், அது ஒரு காரை போல் 450 மடங்கு எடை கொண்டாதாக இருக்கும்.

அளவு

அனைத்துலக விண்வெளி நிலையம் (108.5m x 72.8m)
கால்பந்து மைதானம்(105m x 68m)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Issupஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Soccer

எடை

அனைத்துலக விண்வெளி நிலையம் - 450 டன்
சிறிய கார் - 450 கார்கள்

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Tenbin

பாகம் -2

சர்வதேச நிலையம் தனி தனி பாகங்களாக செய்யப்பட்டு விண்வெளியில் ஒன்றிணைக்கப்படுகிறது.

அவிநி (ISS) யை ஒரே ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அது பல பிரிவுகளாக (தொகுதிகள்) பிரிக்கப்பட்டு மேலும் அந்த பிரிவுகள் ரஷ்சியவின் புரோட்டான் ராக்கெட்டுகள் மற்றும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை ஒன்றிணைக்கப்படுகிறது. மொத்தம் 40 விண்வெளி ஓடங்கள் இந்த பணியை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகள் விண்வெளியில் ஒன்றிணைக்கப்பட்டு மாபெரும் விண்வெளி நிலையமாக உருவெடுக்கிறது .

1998 இல் இந்த பனி தொடங்கப்பட்டு மே 2011 இல் முடிவுற்றது .


ஒவ்வொரு பிரிவுகளின் பெயர்கள்:

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Issassembly

1) ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

2) கணு-1 (Node 1 - Unity)

3) அழுத்த இணைபொருத்தி ( Pressurized Mating Adapters - பம)

4) சவீஸ்ட சேவை தொகுதி ( Zvezda Service Module)

5) Z1-டிரஸ் (Z1-Truss)

6) விதி ஆய்வுகூட தொகுதி (Destiny Laboratory Module - U.S. Lab)

7) கனடா கரம்-2 (Canadarm2 -SSRMS)

8) வளிபுகா இணைப்பு (Joint Airlock - Quest)

9) வின்முக அறைகள் (Docking Compartment 1 - Pirs)

10) நகரும் அடியமைப்பு (Mobile Base System -MBS)

11) கணு-2 (Node 2 - Harmony)

12) கொலம்பஸ் ஆய்வகம் (Columbus Laboratory)

13) கிபோ ஆய்வகம் (Kibo laboratory)

14) சிறு ஆராய்ச்சி தொகுதி -2 (Mini Research Module-2 - Poisk)

15) கணு-3 (Node 3 - Tranquility)

16) குபோல - Cupola

17) சிறு ஆராய்ச்சி தொகுதி -1 (Mini Research Module-1 - MRM-1)

18) நிரந்தர பல்நோக்கு தொகுதி (Permanent Multipurpose Module (PMM)

ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Fgbe
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Fgb1

இது அவிநி திட்டத்தில் அனுப்பப்பட்ட முதல் தொகுதியாகும் (Module), மேலும் இது சரக்கு செயல்பாட்டு தடுப்பு (Functional Cargo Block - FGB) என்றும் அழைக்கப்படுகிறது.அமெரிக்கா இதற்கான நிதியை வழங்கியது, ரஷ்யா இதனை கட்டுமானம் செய்தது. இந்த தொகுதி அவிநியின் ஆரம்பக்கால கட்டுமானங்களுக்கு தேவையான மின்சாரம், மிதக்கும் கட்டுபாடு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் அவிநிக்கு தொடர்ச்சியாக பூமியில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்தபடுகிறது.

அவிநி சேர்மான திட்டம் - 1 A/R
செலுத்து வாகனம் - ப்ரோடான் ராக்கெட்
செலுத்து நாள் - 20 நவம்பர் 1998
நீளம் - 41.2 அடி
குறுக்களவு - 13.5 அடி
எடை - 19.3 டன்

கணு -1 (ஐக்கியம்)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Node11
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Unityh

இந்த கனு(Node) ஐக்கியம்(Unity) என்றும் அழைக்கபடுகிறது. முதன்முதலில் அமெரிக்காவால் அவிநிகென்று தயாரிக்கப்பட்ட பாகமாகும், இது ஒரு அழுத்தமிகு தொகுப்பு (Pressurized Module).இந்த தொகுப்பில் ஆறு பொதுவுறக்க பொறியம் (Machanism) - CBM உள்ளது. இந்த ஆறு CBM களும் முனை மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அழுத்தமிகு தொகுப்புகள் (PMA -1 மற்றும் PMA -2) கணு-1 டுடன் இயக்கப்படுகின்றது. PMA -1 ஆனது ஜர்யா கட்டுபாட்டு தொகுதியையும் கணு -1 தொகுதியையும் இணைக்கும் அழுத்தமிகு பாதையாக (pressurized tunnel) செயல்படுகிறது. PMA -2 வானது அமெரிக்க விண்வெளி ஓடத்தை நிறுத்தும் வின்முகமாக செயல்படுகிறது.கணு-1 நான்கு நிலையான பேலோடு அலமாரிகள் கொண்டுள்ளது.

அவிநி சேர்மான திட்டம் - 2A
செலுத்து வாகனம் - எண்டோவர் விண்வெளி ஓடம் - Space Shuttle Endeavour (STS-88)
செலுத்து நாள் - 4 டிசம்பர் 1998


பாகம்-3 தொடரும்...


(இந்த கட்டுரை குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்)


Last edited by ராஜு சரவணன் on Fri Jun 07, 2013 10:35 am; edited 10 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 11:09 pm

ஒரு சூப்பரான மேலாண்மை பற்றிய தகவலை நிச்சயம் போடுவோம் பாஸ். அதற்க்கு உங்க உதவி தேவை. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் Fri May 17, 2013 11:11 pm

பக்க வாத்தியம் நல்லாவே நாங்க வாசிப்போம் - ஆரம்பிங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Fri May 17, 2013 11:45 pm

கட்டுரை புதுப்பித்தல் எண் -1

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 11:28 am

SWF புதுப்பித்தல் செய்து விட்டேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் Sat May 18, 2013 11:30 am

அபாரம் பட்டய கெளப்புங்க ராஜூ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat May 18, 2013 11:52 am

மிகவும் நல்ல அறிவியல் பதிவு.
வி. பொ. பா ...ராஜு மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 12:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல அறிவியல் பதிவு.
வி. பொ. பா ...ராஜு மகிழ்ச்சி

நன்றி அய்யா,

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் பற்றி நானாகவே ஒரு கட்டுரை எழுதும் போது இதற்க்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் சவிநி (சர்வதேச விண்வெளி நிறுவனம்) என்று அழைக்கலாமா என்று யோசித்தேன். இப்போது விக்கிபிடியாவில் பார்த்த போது அதற்கு அவிநி என்ற பெயரை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைதேன்.

உண்மையில் நல்லதொரு கலைச்சொல் இது. நம் இலக்கண விதி படி அவிநி என்று ஒரு சொல்லாக அழைக்காலாமா அல்லது ஆவினி என்று அழைக்காலாமா?

அவிநி என்ற கலை சொல்லை பற்றிய தங்களின் கருத்து என்ன?

(கடைசியில் இந்த வி. பொ. பா பற்றி சொல்லுங்கள் இல்லை என்றால் இனியவன் இதை வைத்து புள்ளி கோலம் போட்டு விடுவார்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் Sat May 18, 2013 12:14 pm

விருப்பப் பொத்தானை பாவித்தேன்னு சொல்லுறார்.

கோலம் போடலேன்னா எப்படி?

விறு விறுன்னு பொழந்து பாட்டு கட்டிட்டேன்னு சொல்லுவோமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 10:36 am

நண்பர்களே இந்த தொடரில் பாகம் -2 சேர்கப்பட்டுள்ளது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by பூவன் Fri Jun 07, 2013 10:59 am

தெரியாத அறியாத அறிவியல் தகவல்கள் , நன்றி நண்பரே ... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) - Page 2 Empty Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum