ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

+2
யமுனாஸ்
மீனு
6 posters

Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by மீனு Thu Oct 22, 2009 1:05 pm

இந்த பதிவு..முதலே ஈகரைல வந்ததோ தெரியல..ஆனா கண்டிப்பா படியுங்கப்பா..

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்படும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மன நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பின் ஹாஸ் டேனன் என்பவர் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.உலகம் முழுதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 சதவீதம் பேர் இணையதள அடிமைகளாக உள்ளனர் என்று இவர் மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்டர்நெட் அடிக் ஷன் டிஸ்ஸார்டர் என்று அவர் குறிப்பிடும் இந்த நோயால் பலருக்கு மிதமானது முதல் தீவிர மன உளைச்சல் ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இந்த நோய் உண்மையிலேயே ஒருவரை பீடித்திருக்கிறதா என்பதை அறிய மற்ற சில அடிமைப் பழக்கம் போலவே இதனையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அதாவது போதைப்பழக்கம், சூதாட்டத்திற்கான விழைவு, அதிகப்படியான காமத்திற்கான விழைவு ஆகியவற்றுடன் இந்த இணையதள அடிமை நோயையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார் டாக்டர் டேனன்.

ஒரு சிலர் தொடர்ந்து செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர். அதாவது எப்போதாவது எதையாவது சுத்தம் செய்து கொண்டே இருப்பது. வீட்டில் தண்ணீர் கொஞ்சம் தீர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நிரப்பி வைப்பது போன்ற அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் (Obsessive Compulsive Disorder) வகையில் இந்த இணையதள மோக நோயையும் மன நோய் நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

அதாவது எந்த ஒன்றையும் ஒரு சடங்கார்த்தமாக செய்வது, சிந்திப்பது என்பது தான் இந்த பீடிப்பு மனநோய்.

ஆனால் இணையதளத்தின் மீதான மோகம் ஏதோ ஒரு விழைவு போல் நம்மை நெருக்குவது அல்ல, மாறாக இந்த மோகம் ஆழமானது, அதாவது ஒரு ஆழமான நாட்டம் இன்டர்நெட் மீது ஏற்படுகிறது. இதனை தவிர்க்க முடியாமல் தவிக்கும் நபர்களும் இருந்து வருகிறார்கள் என்கிறார் டாக்டர் டேனன்.

அதாவது இளைஞர்கள், பெண்கள் மற்றும் 50 வயது ஆன ஆண்கள் ஆகியோர் தங்களது தனிமையைப் போக்க இணையதளத்திற்கு அடிமையாகின்றனர். இதனால் நீண்ட நேரம் தூங்காமல் பிரவுஸ் செய்து கொண்டேயிருப்பது என்ற பழக்கம் ஏற்படுகிறது. தூக்கத்தை இழப்பது மன நோய்க்கு இட்டுச் செல்வதாகும்.

மேலும் தனிமை குறித்த ஒரு விதமான பீதி மனோ நிலை, அதனால் ஏற்படும் ஒரு ஆழமான மன உளைச்சல், சோர்வு என்று நோய்க்கூறுகள் அதிகரித்துக் கொண்டே வரும் என்கிறார் அவர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இணையதளப் பயன்பாடுகள் உள்ள அலுவலகங்களில் இந்த புதிய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்தது என்று டாக்டர் டேனன் பரிந்துரை செய்கிறார்.

டாக்டர் டேனனுடைய இந்த கண்டுபிடிப்புகள் 'ஜர்னல் ஆஃப் சைக்கோ பார்மகாலஜி" என்ற இதழில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by யமுனாஸ் Thu Oct 22, 2009 1:17 pm

nalla thagaval

nantri
yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 22, 2009 1:18 pm

புகைப்பழக்கத்திற்கு அடிமை, மது பழக்கத்திற்கு அடிமை, காபிக்கு அடிமை போன்று இப்போது இந்த இணையதளத்திற்கு அடிமையாவதும் ஒரு நோய்க்கூறாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் டேனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் நேரம் அதிகம் செலவிடாமல், நம் சிந்தனைக்கும் , மற்றவர்களுக்கு நல்லதொரு படிப்பையும் கொடுத்தல் சிறப்பு. இவர்கள் மன நோய்க்கு அடிமையாவது இல்லை.
நல்ல செய்திகளை முந்தித் தருகிறார் மீனு! வாழ்த்துக்கள்!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by யமுனாஸ் Thu Oct 22, 2009 1:20 pm

valthukkal meenu bujji and namaellorum eegaraikku adimai, ethu sariya kalyan ayya?

yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 3:27 pm

தேவையான கட்டுரை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 3:30 pm

தகவலுக்கு நன்றி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல் Empty Re: இன்டர்நெட்டினால் ஏற்படும் மன உளைச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum