புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_m10உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 3:07 pm

1.முகமது (கி.பி 570-632)

உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களின் பட்டியலில் முகமதுவை முதலிடத்தில் வைத்திருக்கும் எனது முடிவு சில வாசகர்களை ஆச்சரியப்படுத்தலாம். சில வாசகர்கள் இதற்கு எதிராகக் கேள்வியெழுப்பலாம். ஆனால் வரலாற்றில் மதரீதியிலும், மதசார்பற்ற ரீதியிலும் சிறப்பான வெற்றியடைந்தவர் முகமது மட்டுமே.

எளிமையான குடியிற்பிறந்த முகமது உலகின் மாபெரும் மதங்களுள் ஒன்றை நிறுவினார்; செயல்திறன் கொண்ட அரசியல் தலைவராக மாறினார். அவர் மரணம் அடைந்து பதிமூன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவருடைய தாக்கம் சக்தியுடையதாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நூலில் காணப்படும் பெரும்பான்மையான நபர்கள் நாகரிக மையங்களில், கலாசார, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பிறந்தவர்கள். ஆனால் முகமது அக்கால உலகின் பிற்போக்கான பகுதியாக, கலை, வணிகம், கல்வி முதலிய சிறப்புகள் அண்டாத இடமாக இருந்த தெற்கு அரேபியாவின் மெக்கா நகரில் கி.பி. 570ல் பிறந்தார். ஆறு வயதில் அனாதையான அவர் எளிமையான சூழலில் வளர்ந்தார். அவர் எழுத்தறிவற்றவர் என்று இஸ்லாமிய பாரம்பரியம் நமக்குத் தெரிவிக்கிறது. அவர் தனது இருபத்தி ஐந்தாவது வயதில் ஒரு பணக்கார விதவையைத் திருமணம் செய்து கொண்ட போது அவரது பொருளாதார நிலை உயர்ந்தது. அவர் நாற்பது வயது அடையும் வரைக்கும் அவரிடம் எந்த சிறப்புமிக்க வெளிப்புற அடையாளங்களும் காணப்படவில்லை.

பெரும்பாலான அரேபியர்கள் அச்சமயத்தில் சிலைவழிபாட்டுக்காரர்களாகவும், பல தெய்வங்களை வழிபடுகிறவர்களாகவும் இருந்தனர். இருந்தாலும் மெக்காவில் சிறுபான்மையினராக கிறிஸ்தவர்களும், யூதர்களும் இருந்தனர். சர்வசக்தி படைத்த ஒரே கடவுள் பிரபஞ்சத்தை ஆளுகிறார் என்கிற கோட்பாட்டை முகமது அவர்களிடமிருந்து தான் கற்றிருக்க வேண்டும். அவருக்கு நாற்பது வயதாகும் போது இந்த ஒரே உண்மையான கடவுள் (அல்லா) தன்னிடம் பேசுவதாகவும் (தலைமைத் தூதன் காபிரியேல் மூலம்), அவரைக்குறித்த நம்பிக்கையைப் பரப்பத் தன்னை நியமித்திருப்பதாகவும் நம்பினார்.

மூன்று வருடங்களுக்கு முகமது தன்னுடைய நெருங்கிய தோழர்களுக்கு மட்டுமே போதித்தார். கி.பி.613-ல் இருந்து அவர் பொதுமக்களுக்கு போதிக்கத்துவங்கினார். மெதுவாக அவரது மதத்துக்கு நம்பிக்கையாளர்கள் வரத்துவங்கினார்கள். மெக்காவின் அதிகாரிகள் அபாயம் மிக்க தொல்லை என்று அவரைப் பற்றி நினைத்தார்கள். கி.பி.622ல் பாதுகாப்பு கருதி முகமது மெதினாவுக்கு வெளியேறினார். (மெக்காவுக்கு சுமார் 200 மைல்கள் வடக்கிலிருக்கும் ஒரு நகரம்) அங்கே அவருக்கு அரசியல் சக்தி வாய்ந்த ஒரு பொறுப்பு கிடைத்தது.

ஹிஜிரா என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு முகமவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. மெக்காவில் அவரைப் பின்பற்றியவர்கள வெகு சிலரே. மெதினாவில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரு சர்வாதிகார ஆட்சியாளருக்குரிய அங்கே அவருக்கு இருந்தது. அடுத்த சில வருடங்களில் முகமதுவின் தாக்கம் இன்னும் அதிகமானது. மெக்காவுக்கும், மெதினாவுக்கும் இடையே தொடர்ச்சியாக போர்கள் நிகழ்ந்தன. கி.பி.630ல் முகமது வெற்றியாளராக மெக்காவுக்குத் திரும்பிய போது இப்போர் முடிவுற்றது. அவரது வாழ்வில் எஞ்சியிருந்த இரண்டரை வருடங்களில் ஏராளமான அரேபியக் குழுக்கள் இப்புது மதத்தை விரைவாகத் தழுவின. அவர் கி.பி.632ல் மரணமடையும் போது தெற்கு அரேபியா முழுமையிலும் அவரே சக்தி படைத்த ஆட்சியாளராக இருந்தார்.

அரேபியாவின் பதாவின் பழங்குடிகள் கடுமையான போர்வீரத்துக்குப் பெயர்போனவர்கள். ஆனால் அவர்களது எண்ணிக்கையோ குறைவு; மட்டுமல்லாமல் அவர்களிடையே ஒற்றுமையின்மையும், உட்பூசலும் நிலவி வந்தது. வடக்கிலிருக்கும் நாகரிகமடைந்த அரசுகளின் படைகளுக்கு அவர்கள் இணையானவர்கள் அல்ல. வரலாற்றில் முதல்முதலாக முகமதுவால் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே இறைவனின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் உந்தப்பட்ட இவர்கள், மனித வரலாற்றில் ஆச்சரியப்படத்தக்க போர் வெற்றிகளைக் கண்டார்கள். அரேபியாவின் வடமேற்கில் சசநீத அரசர்களின் புதிய பாரசீக சாம்ராஜ்யம் இருந்தது; வடகிழக்கில் கான்ஸ்டான்டிநோபிளை மையமாகக் கொண்ட மேற்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையளவில் அரேபியர்கள் தங்கள் எத போர்ிரிகளுக்கு இணையானவர்கள் அல்ல. ஆனால் உணர்ச்சியால் உந்தப்பட்ட அரேபியர்கள் போர்க்களத்தில் மெசப்பட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முதலிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். கி.பி.642ல் மேற்கு ரோமப் பேரரசிடமிருந்து எகிப்து கைப்பற்றப்பட்டது. கி.பி 637ல் காதிசியாவிலும், கி.பி. 642ல் நிகவந்திலும் நடந்த முக்கியமான போர்களில் பாரசீகப்படை நொறுக்கப்பட்டது.

முகமதுவைத் தொடர்ந்து ஆண்டவர்களான அபுபக்கராலும், உமர் இபின் அல்-கத்தாபாலும் நிகழ்த்தப்பட்ட இப்படையெடுப்புகளோடு அரேபியர்களின் முன்னேற்றம் நிற்கவில்லை. கி.பி.711ல் அரேபியப்படைகள் வடக்கு ஆப்பிரிக்காவையும், அட்லாண்டிக் சமுத்திரத்தையும் கடந்தன. பின்பு வடக்காகத்திரும்பி ஜிப்ரால்டர் நீரிணையைக் கடந்து விசிகோதியர்களின் ஸ்பெயினைக் கைப்பற்றினார்கள்.

முஸ்லிம்கள் கிறிஸ்தவ ஐரோப்பாவைக் கபளீகரம் செய்யக்கூடிய நிலையில் இருந்தார்கள். இருந்தாலும், கி.பி.732ல் டூர்ஸில் நடைபெற்ற புகழ்பெற்ற போரில் பிரான்சின் நடுப்பகுதி வரை முன்னேறிய இஸ்லாமியப்படை பிரெஞ்சுக்காரர்களால் முறியடிக்கப்பட்டது. ஆனாலும் ஒரே நூற்றாண்டில் தீர்க்கதரிசியின் வார்த்தைகளால் உந்தப்பட்ட அரேபியர்கள் அதுவரை உலகம் கண்டிராத மாபெரும் பேரரசை, இந்தியாவின் எல்லையிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரை உருவாக்கினார்கள். படைகள் வெற்றிபெற்ற எல்லா இடங்களிலும் புதிய மதத்துக்கு மக்கள் அதிகமாக மாறினார்கள்.

எல்லா வெற்றிகளும் நிலைக்கவில்லை. தீர்க்கதரிசியின் மதத்தை நம்பிய பாரசீகர்கள் அரேபியர்களிடமிருந்து சுதந்திரமடைந்தார்கள். ஸ்பெயினில் ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளாக நீடித்த போருக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் முழு தீபகற்பத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். பழங்கால நாகரிகத் தொட்டில்களான எகிப்தும், மெசப்பட்டோமியாவும், வடக்கு ஆப்பிரிக்கக் கரைப்பகுதிகளும் இனும் அரபுப் பகுதிகளாகவே இருக்கின்றன. இப்புது மதம் முஸ்லிம்களின் படையெடுப்புகளையும் கடந்து அடுத்து வந்த நூற்றாண்டுகளில் பரவத்துவங்கியது. இப்போது ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், பாகிஸ்தானிலும், வடக்கிந்தியாவிலும், இந்தோனேசியாவிலும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தோனேசியாவில் இப்புது மதம் ஒற்றுமைக்கான சக்தியாக இருந்தது. ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான பிரச்சினையே ஒற்றுமைக்குத் தடைக்கல்லாக இருக்கிறது.

அப்படியானால் வரலாறு முழுமைக்குமான முகமதுவின் தாக்கத்தை எப்படி மதிப்பிட முடியும்? எல்லா மதங்களைப் போல் இஸ்லாமும் அதைப் பின்பற்றுபவர்கள் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே உலகின் பெருமதங்களை நிறுவியவர்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் முஸ்லிம்களைப் போல் இரண்டு மடங்கு அளவிற்கு கிறிஸ்தவர்கள் இருப்பதால் முகமதுவை இயேசுவுக்கு மேலே வைத்திருப்பது விசித்திரமாகத் தோன்றலாம். இம்முடிவுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக இயேசு கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் இயேசுவுக்கு இருக்கும் பங்கை விட, முகமதுவுக்கு இஸ்லாமின் வளர்ச்சியில் பங்கு அதிகமாகவே உண்டு. கிறிஸ்தவத்தின் ஒழுக்கக் கோட்பாட்டை வடிவமைத்ததில் இயேசு முதன்மையானவர் என்றாலும், (யூத மதத்திலிருந்து வேறுபட்ட இடங்களில) பரி. பவுலே கிறிஸ்தவ இறையியல் வளர்ச்சியிலும், மத பரப்புதலிலும் முக்கிய பங்காற்றியவர்; புதிய ஏற்பாட்டின் பல நூற்களை எழுதியவர்.

ஆனால் முகமதுவோ இஸ்லாமிய இறையியலையும், மத ஒழுக்கக் கோட்பாடுகளையும் கட்டமைத்தார். மட்டுமல்லாமல், மதப்பரப்புதலிலும் ஈடுபட்டு, இஸ்லாமிய மத பழக்கங்களையும் நிறுவினார். மட்டுமல்லாமல் இஸ்லாமிய புனித நூலான குரானும் முகமதுவால் இறையூக்கத்தால் சொல்லப்பட்ட தொகுப்பு என்றே நம்பப்படுகிறது. பெரும்பாலான போதனைகள் முகமது வாழ்ந்த போதே எழுதிவைக்கப்பட்டன. அவர் இறந்து சில காலத்திற்குள்ளதாகவே தொகுக்கப்பட்டன. எனவே குரான் முகமதுவின் சிந்தனைகளையும், போதனைகளையும், குறிப்பிடத்தக்க அளவில் அவரது சொந்த வார்த்தைகளையும் கொண்டுள்ளது. கிறிஸ்துவின் போதனைகள் அவ்வளவு துல்லியமாக தொகுக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போல் முஸ்லிம்களுக்கு குரான் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் குரான் மூலமான முகமதுவின் தாக்கம் மிக அதிகமானதாகிறது. முகமது இஸ்லாமிய மதத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம், இயேசுகிறிஸ்து, பரி.பவுல் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தின் மீது ஏற்படுத்திய கூட்டுத்தாக்கத்தை விட அதிகமாகவும் இருக்கலாம். எனவே மத அடிப்படையில் முகமதுவும் இயேசுவின் அளவுக்காவது தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆகிறார்.

மட்டுமல்லாமல் முகமது (இயேசுவைப் போல் அல்லாமல) மதசார்பற்ற தலைவராகவும், மதத் தலைவராகவும் இருந்தார். அரேபிய படையெடுப்புகளின் பின்னிருந்த உந்துசக்தியான அவரை உலகத்தில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர் என்றும் குறிப்பிடலாம்.

பல முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாதவை என்றும், அவற்றை வழிநடத்திய அரசியல் தலைவர் இல்லாவிடினும் அவை நடந்திருக்கும் என்றும் நாம் சொல்லலாம். எடுத்துக்காட்டாக, சைமன் பொலிவர் வாழாமலே இருந்திருந்தாலும் தென்னமெரிக்க காலனிகள் ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும். ஆனால் அரபு படையெடுப்புகளைப் பற்றி நாம் அப்படி சொல்ல முடியாது. முகமதுவுக்கு முன் அப்படி நடக்கவில்லை. அவர் இல்லாமலிருந்தால் அப்படையெடுப்புகள் நிகழ்வதற்கு ஒரு காரணமும் இல்லை. மனித வரலாற்றில் இதனோடு ஒப்பிடக் கூடிய படையெடுப்புகள் செங்கிஸ்கானின் தலைமையில் நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்புகள் தான். இந்த படையெடுப்புகள் அரேபியர்கள் படையெடுப்புகளை விட பெரும் பரப்பளவைக கைப்பற்றினாலும், நிரந்தரமாக நீடித்திருக்கவில்லை. செங்கிஸ்கானுக்கு முன் மங்கோலியர் வாழ்ந்த நிலப்பரப்பு மட்டும் தான் இன்று அவர்களிடம் இருக்கிறது.

அரேபியப் படையெடுப்புகளிலிருந்து அது மிக வித்தியாசமானது. ஈராக்கிலிருந்து மொராக்கோ வரை இஸ்லாமிய நம்பிக்கையால் மட்டுமல்லாமல் அரெபிய மொழி, வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றால் அரபு நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமில் குரானுக்கு இருக்கும் முக்கியத்துவத்தால் அது எழுதப்பட்டிருக்கும் அரபு மொழி பல கிளை மொழிகளாக மாறிச் சிதையாமல் பதிமூன்று நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரபு நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இச்சிறு வேற்றுமைகள், ஒற்றுமையின் முக்கியமான அம்சங்களைக் காணாமல் நம்மைக் குருடாக்கி விடக்கூடாது. எடுத்துக்காட்டாக எண்ணைத் தயாரிப்பு நாடுகளான ஈரானும், இந்தோனேசியாவும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும் 1973-74 கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையில் கலந்து கொள்ளவில்லை. அரபு நாடுகள் மட்டுமே இத்தடையில் பங்கு கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல.

ஏழாம் நூற்றாண்டின் அரபு படையெடுப்புகள் இன்றுவரையிலும் மனித வரலாற்றிய் முக்கிய பங்காற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஈடு இணையற்ற இந்த மதரீதியிலான மற்றும் மதசார்பற்ற தாக்கமே முகமதுவை மனித வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவராக்குகிறது.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 14, 2013 3:32 pm

பொதுவாக எனக்கு தெரிந்தவரை முஸ்லிம்கள் வியாபாரத்தில் நேர்மையாக இருப்பார்கள் என்று. அவர்கள் சிறந்த நிர்வாகிகள் நில அளவை முறைகள் இன்றும் முகலாயர்கள் நமக்கு கொடுத்துவிட்டு போனதுதான் ஆங்கிலேயர்கள் கூட அதில் இருந்து தான் நில அளவை முறையாய் மாதிரியாக எடுத்துகொண்டார்கள் இந்தியாவில் உதாரணமாக பிர்க்கா, கஸ்ரா இதெல்லாம் இனியும் உபயோகத்தில் உள்ளன



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Sat May 04, 2013 11:43 am

சில பாரிய பிழைகள் இந்த கட்டுரையில் உள்ளன ..முஹம்மத் (ஸல்) .அவர் ஒரு சர்வாதிகாரி அல்ல..(அவருடைய வரலாறை படித்தால் தெரியும் )....மற்றயது குரான் அவரால் தொகுக்கப்பட்டது அல்ல ...மற்றயது முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள் ...அவ்வாறான இறைத்தூதர்களில் இருவர்தான் மோசேயும் ...ஜெசசும் ....அவர்களுக்கு அவர்களின் நிலைகளில் வழங்கப்பட்ட வேதங்கள்தான் ..தவ்ராத் ..மோசே கால யூதர்களுக்கு
...பைபிள் ...தூய ஜெசுஸ் காலத்தில் அருளப்பட்டது...இப்போது பைபிள் பலரது கை வண்ணத்தில் பல வடிவங்களில் உள்ளது ...

மற்றது குரான் அருளப்பட முன்னர் ..முஹம்மத் ..கல்வி அறிவு அற்றவராகவே காணப்பட்டார் ... நடமாட்டமில்லா ஒரு கட்குகயிலே இறைவன் அவருக்கு தன் வானவர் மூலம் தன் வார்த்தைகளை இறக்கி வைத்தான் ...குரானை ஆராய்ந்தால் அதில் உள்ள விசயயன்களை மனிதர்களால் கூற முடியாது என்று அறி வுள்ளவர்களுக்கு புலப்படும் ... வீணான விவாதங்களை விட்டுவிட்டு ....உண்மையை அறிவோம்...அறிவுள்ளவருக்கு நல்ல அத்தாட்சிகள் உண்டு.....

Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

PostRenuka.k Sat May 04, 2013 12:37 pm

Code:
மற்றயது முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று
சரிங்க நண்பரே பிறகு எதற்கு இதை அனைவரையும் நம்ப வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.முஸ்லிம்கள் மட்டுமே அறிவுள்ளவர்கள் என்று சொல்ல வரிங்களா.வீணான விவாதங்களை விட்டு உண்மையை அறிவோம் என்று சொல்லியிருக்கிங்க ஆனா நீங்களே கட்டாயம் நம்பவேண்டும் என்றும் சொல்லுரிங்க ஒரே குழப்பமா இருக்கு. உங்க(முஸ்லிம்கள்) நம்பிக்கையை உங்களோட மட்டும் வச்சுக்குங்க மற்றவர்களை கட்டாயம் நம்பவேண்டும் என சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை.
கடுமையான கருத்து சொன்னதற்கு மன்னிக்கவும் ஈகரை நிர்வாகிகளே

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Sat May 04, 2013 2:52 pm

Renuka.k wrote:
Code:
மற்றயது முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று

இதன் விளக்கத்தை பிழையாக விளங்கி விட்டீர்கள் நண்பரே ....முஸ்லிம்கள் அவர்களது மார்க்கத்தில் கட்டாயம் நம்ப வேண்டும் என்று குறிப்பிடப்படும் சில விடயங்களில் ஒன்றுதான் ....இறைத்தூதர்களை நம்புதல் ..அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..மற்றவர்களின் நம்பிக்கை பற்றியது அல்ல....கூல் ...

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Sat May 04, 2013 2:53 pm

Renuka.k wrote:
Code:
மற்றயது முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று

இதன் விளக்கத்தை பிழையாக விளங்கி விட்டீர்கள் நண்பரே ....முஸ்லிம்கள் அவர்களது மார்க்கத்தில் கட்டாயம் நம்ப வேண்டும் என்று குறிப்பிடப்படும் சில விடயங்களில் ஒன்றுதான் ....இறைத்தூதர்களை நம்புதல் ..அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..மற்றவர்களின் நம்பிக்கை பற்றியது அல்ல....கூல் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 2:59 pm

imz wrote:முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள்
அதானே இஸ்லாமியர்கள் கட்டாயம் நம்ப வேண்டும் என்று தானே சொல்லி இருக்காரு.

ரேணுகா மீண்டும் படித்து பாருங்கள் - விவாதம் இல்லை இது விளக்க வேண்டும் என்று தான் மேற்கோள் இட்டேன் இதை புன்னகை




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat May 04, 2013 3:06 pm

யினியவன் wrote:
imz wrote:முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள்
அதானே இஸ்லாமியர்கள் கட்டாயம் நம்ப வேண்டும் என்று தானே சொல்லி இருக்காரு.

ரேணுகா மீண்டும் படித்து பாருங்கள் - இவாதம் இல்லை இது விளக்க வேண்டும் என்று தான் மேற்கோள் இட்டேன் இதை புன்னகை

சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 04, 2013 3:39 pm

யினியவன் wrote:
imz wrote:முஸ்லிம்கள் கட்டாயம் நம்ப வேண்டிய விடயங்களில் ஒன்று நபிமார்கள் எனும் இறைத்தூதர்கள்
அதானே இஸ்லாமியர்கள் கட்டாயம் நம்ப வேண்டும் என்று தானே சொல்லி இருக்காரு.

ரேணுகா மீண்டும் படித்து பாருங்கள் - விவாதம் இல்லை இது விளக்க வேண்டும் என்று தான் மேற்கோள் இட்டேன் இதை புன்னகை

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 04, 2013 5:54 pm

நல்ல பதிவு imz இன் விளக்கமும் அருமையிருக்கு




உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Mஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Uஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Tஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Hஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Uஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Mஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Oஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Hஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Aஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Mஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் Eஉலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக