புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Yang Berhormat Dato' Seri
Anwar Ibrahim
Yang Amat Berhormat Dato' Sri
Mohammad Najib Abdul Razak
13-வது மலேசிய பொதுத் தேர்தலில் மோதும் முக்கிய இரு கட்சிகள்:
பாரிசான் நேசனல் (Barisan Nasional) - தேசிய முன்னணி
மற்றும்
பாக்காத்தான் ராயாட் (Pakatan Rakyat) - மக்கள் கூட்டணி
தேசிய முன்னணியில் இணைந்துள்ள முக்கிய கட்சிகள் விபரம்:
1.United Malays National Organization (UMNO) - அம்னோ
2. Malaysian Chinese Association (MCA) - மலேசிய சீனர் சங்கம்
3. Malaysian Indian Congress (MIC) - மலேசிய இந்திய காங்கிரஸ்
4. Malaysian People's Movement Party (GERAKAN) - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
5. People's Progressive Party (PPP) - மக்கள் முற்போக்கு கட்சி
6. Parti Pesaka Bumiputera Bersatu (PBB) - ஐக்கிய பூமிபுத்ரா பெசாக்கா கட்சி
7. Sarawak United People's Party (SUPP) - சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
8. Parti Bersatu Sabah (PBS) - சபா ஒற்றுமைக் கட்சி
9. Liberal Democratic Party (LDP) - மக்கள் சுதந்திரக் கட்சி
10. Parti Bersatu Rakyat Sabah (PBRS) - சபா மக்கள் ஐக்கிய கட்சி
11. United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO) - ஐக்கிய மூருட் காடாசான் பாசோக் மோமோமோகுன் கட்சி
12. Sarawak Progressive Democratic Party (SPDP) - சரவாக் மக்கள் முற்போக்கு கட்சி
13. Sarawak People's Party (PRS) - சரவாக் மக்கள் கட்சி
மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விபரம்:
1. Parti Keadilan Rakyat (கெஅடிலான்) மக்கள் நீதிக் கட்சி
2. Democratic Action Party - (டி.ஏ.பி) - ஜனநாயக செயல் கட்சி
3. Islamic Party of Malaysia - (பாஸ்) - மலேசிய இஸ்லாமிய கட்சி
4. Sarawak National Party - (சினேப்) - சரவாக் தேசியக் கட்சி
5. Malaysian People's Party - (பி.ஆர்.எம்) - மலேசிய மக்கள் கட்சி
6.Socialist Party of Malaysia - (பி.எஸ்.எம்) - மலேசிய சோசலிசக் கட்சி
7. Malaysian Democratic Party - (எம்.டி.பி) - மலேசிய ஜனநாயகக் கட்சி
8 Sabah Progressive Party - (சாப்) - சபா முன்னேற்றக் கட்சி
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த தேர்தலில் கிளந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை மக்கள் கூட்டணியிடம் பறிகொடுத்தது. இதனால் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்த தேசிய முன்னணி மக்களுக்கு சலுகைகளையும், பணத்தையும் வாரி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரியில் மலேசிய தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்க உள்ளேன். இச்செய்திகள் மலேசிய நாளிதழ்கள் மற்றும் இணையத் தளங்களிலிருந்து எடுத்து வழங்கப்பட உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மலேஷிய தேர்தல் கூத்துகளை ஒரு மாற்றத்துக்காக தருவது நன்று சிவா. எங்க ஊரு கூத்தைப் பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு.
எந்தக் கட்சிக்கு எத்தன கள்ள ஒட்டு வேனூன்னு முன்னாடியே சொல்லிடுங்க - ரெடி பண்ணி அனுப்பிடறோம்.

அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது ஏன்?
“நான் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறேன்” – என்ற அன்வாரின் அறிவிப்பு தான் தற்போது அரசியல் வட்டாரங்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஒரு விவாதம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்வார் சிலாங்கூரில் போட்டியிடலாம், ஜோகூரில் போட்டியிடலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் ஆளுக்கொரு ஆரூடங்களைக் கூறிவந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் நேற்று பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தார்.
ஆனால் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும் ஒரு கேள்வி, ஏன் அன்வார் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவை விட்டு பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார்?
ஏற்கனவே அன்வாருக்கு எதிராக அவ்வபோது கருத்துக்களை வெளியிட்டு வந்த தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு, அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக’ அமைந்துவிட்டது.
அன்வாருக்கு பெர்மாத்தாங் தொகுதியில் ஆதரவு குறைந்து விட்டது. அந்த தொகுதியில் சமீபத்தில் அவர் நடத்திய கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்கின்றனர். அதை பார்த்துத் தான் அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் என்று கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.
முன்னாள் பிரதமர் மகாதீர் முதல் தற்போதைய பிரதமரான நஜிப் வரை அனைவரும் அன்வார் பெர்மாத்தாங் பாவ் தொகுதியை விட்டு போவது குறித்து கருத்து தெரிவித்துவிட்டனர்.
நேற்று இது குறித்து கருத்துரைத்த நஜிப் ஆதரவில்லாத காரணத்தால்தான் அன்வார் தொகுதி மாறுகின்றார் என்றும் தன்னைப் பொறுத்தவரை தனது அரசியல் வாழ்வு தனது பாராம்பரிய தொகுதியான பெக்கான் தொகுதியோடு பின்னிப் பிணைந்தே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடும் சூட்சமம் என்ன?
கடந்த பொதுத் தேர்தலில், பி.கே.ஆர் கட்சி பேராக் மாநிலத்தில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இருப்பினும் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிய காரணத்தால் மக்கள் கூட்டணி பேராக் மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது.
ஆனால் அதன் பிறகு நடந்த உட்கட்சிப் பூசல்களில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற தேசிய முன்னணி பேராக் மாநிலத்தை மீண்டும் வலுக்கட்டாயமாக கைப்பற்றியது.
மீண்டும் தேசிய முன்னணியின் வசம் சென்ற பேராக் மாநிலத்தைக் கைப்பற்றவும், தேசிய முன்னணியிடமிருந்து மீட்கும் நோக்கத்தோடும், அன்வார் பேராக்கை நோக்கி நகர்வதாக ஒரு தரப்பு கூறுகிறது.
பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றினால் அங்கு ஆட்சி அமைக்க உறுதியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
அத்தகைய ஒரு தலைமைத்துவம் மலாய்க்கார தலைமைத்துவமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கடந்த பொதுத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
காரணம் சீனர் ஒருவரை மந்திரி பெசாராக நியமிக்க மக்கள் கூட்டணியும், ஜசெகவும் செய்த முயற்சிகள் பேராக் அரண்மனையினால் தடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் தகவல்கள் வெளிவந்தன.
அதனால் பாசீர் பாஞ்சாங் என்ற ஒரே ஒரு சட்டமன்றத்தை பாஸ் கட்சியின் சார்பாக வென்றிருந்த முகமட் நிசார் ஜமாலுடின் பேராக் சுல்தான் ஒப்புதலுடன் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு வலுக்கட்டாயமாக நடந்தேறிய ஆட்சி மாற்ற காட்சிகளில் பேராக் அரண்மனை முக்கிய பங்காற்றியதை மலேசியர்கள் குறிப்பாக பேராக் மாநில மக்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட மாட்டார்கள்.
எனவே, மீண்டும் பேராக் மாநிலத்தை கைப்பற்றி மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு பலமான தலைமைத்துவம் இன்றைக்கு பேராக் மாநிலத்திற்கு தேவைப்படுகின்றது.
அதற்காகத்தான் அன்வார் பேராக் மாநிலம் செல்கின்றார் என்ற அரசியல் கண்ணோட்டத்தையும் சிலர் கொண்டிருக்கின்றனர்.
பேராக் மாநிலத்தின் ஈப்போ தீமோர் தொகுதியிலிருந்து லிம் கிட் சியாங் தொகுதி மாறி, இந்த முறை அரசியல் சுனாமியை ஜோகூர் மாநிலத்திலிருந்து உருவாக்குவதற்காக கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவதால் பேராக் மாநிலத்தில் மக்கள் கூட்டணிக்கு இன்றைய சூழ்நிலையில் வலுவானதொரு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க தொகுதி மாறுவது அவசியம்
ஆனால் இன்னொரு தரப்பு கூறுவது என்னவென்றால், அன்வார் தனது சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது முக்கியமல்ல. மாறாக, புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் அன்வாரின் இலக்கு.
எனவே, வேறு யாரையாவது பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நிறுத்தி அந்த தொகுதியை வெற்றி கொள்ளும் அதே தருணம், தேசிய முன்னணிக்கு சாதகமான ஒரு தொகுதியில் அன்வார் போன்றவர்கள் போட்டியிட்டார் குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வென்று விடுவார்கள்.
அதனால் கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல முடியும் என்பதோடு, மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சிகளும் எளிதாகும் என்ற கணக்கோடுதான் அன்வார் பேராக் மாநிலத்தில் களம் இறங்குகின்றார்.
எனவே, ஏற்கனவே தங்கள் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு எளிதாய் வெற்றியடைவதை விட, பேராக் மாநிலத்தில் கடினமான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியடைவதன் மூலம் மக்கள் கூட்டணி மத்தியின் ஆட்சியைப் பிடிக்கலாம், தானும் பிரதமராகலாம் என்ற பெரிய இலக்கோடு அன்வார் காய் நகர்த்துவது தெளிவாகத் தெரிகின்றது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும், இதுவரை அம்மாநில பி.கே.ஆர் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமே அன்வாரின் முடிவை வரவேற்றுள்ளனர்.
ஜ.செ.க சார்பாக இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை. காரணம், அன்வார் ஜசெகவின் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்ற யூகமும் நிலவி வருகின்றது.
எனவே அன்வாருக்காக பேராக்கில் யார் தங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்கப் போகிறார்கள் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.
அன்வார் பேராக்கில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறதா?
அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் மிகுந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இதற்குத் தயாராக தேசிய முன்னணியும் தங்கள் வலிமையை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி வருகிறது.
பேராக் மாநிலத்தின் மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ ஸாம்பிரி அப்துல் காதீர், “அன்வார் பேராக்கில் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அன்வாரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில அம்னோ தலைவரான முகம்மட் சாஹிட் ஹமிடி, ஸாம்பிரி கூறியதை விட ஒரு படி மேலே போய், “அன்வார் பேராக் வந்தால் அவரைப் ‘புதைத்து விடுவேன்’ என்று நேரடியாகவே சவால் விடுத்துள்ளார்.
எனவே இந்த சவால்களை எல்லாம் முறியடித்து அன்வார் பேராக்கில் நின்று வெற்றி பெறுவாரா? இல்லையா என்பதுதான் தற்போது அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் கேள்வி.
- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்?
http://www.selliyal.com/wp-content/uploads/2013/04/Datuk-Seri-Anwar-Ibrahim.jpg
அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது தொர்பாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த சலசலப்பு நேற்று இரவோடு அடங்கியுள்ளது. தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவிலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக, கடந்த புதன்கிழமை அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் 1982 ஆம் ஆண்டு அம்னோவில் இணைந்தது முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் பெர்மத்தாங் பாவ்வை விட்டு வேறு தொகுதிக்கு மாறுவது ஏன் என்று அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.
பெர்மத்தாங் பாவ் தொகுதி மக்களும் அன்வார் தொகுதி மாறுவது குறித்த முடிவுக்கு தங்கள் வருத்தத்தையே தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவற்றையும் மீறி அன்வார் பேராக் மாநிலத்தில் தம்பூன் தொகுதியில் போட்டியிடுவது என்று நேற்று வரை உறுதியாக இருந்தார்.
அன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர்வதற்கான காரணத்தை விளக்கி கருத்தாய்வு ஒன்றை நேற்று செல்லியல்.காமில் “அன்வார் பேராக்கில் போட்டியிடுவது ஏன்? ” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அன்வாரிடம் சில யோசனைகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, தான் போட்டியிடப்போவது பெர்மத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியா என்று முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு அன்வார் தள்ளப்பட்டார்.
இறுதியாக நேற்று இரவு, தாமான் பாவ் ஜெயாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்வார், தனக்கு இத்தனை வருடங்களாக ஆதரவு அளித்து வரும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
அன்வாரின் இந்த திடீர் திருப்பத்தில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் தற்போதைய அரசியல் சூழலில், கடுமையான போட்டி நிலவும் பேராக் மாநிலத்தை நோக்கி அன்வார் செல்வது மக்கள் கூட்டணிக்கு அந்த அளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

கடந்த 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வசம் சென்ற பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றி மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு பலமான தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் அன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர திட்டமிட்டார்.
ஆனால் பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிட்டு வெல்ல வேண்டுமானால், மிக கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மக்கள் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் மற்ற தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதவாக பிரச்சாரங்களில் அன்வாரால் ஈடுபடமுடியாது.
அத்துடன் தான் போட்டியிடப்போகும் தொகுதியான தம்பூனிலேயே அன்வார் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் வரும்.இதனால் அன்வார் தம்பூன் என்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.
மேலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கும் மக்கள் கூட்டணிக்கு, ஒருவேளை அன்வார் தம்பூன் தொகுதியில் தோல்வியடைந்தால் அது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிடும்.
இதையெல்லாம், தவிர்க்கும் பொருட்டு தான், அன்வார் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்வில் மீண்டும் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளார். அன்வாரின் இந்த முடிவு மக்கள் கூட்டணிக்கு சாதகமான சுழ்நிலையையே ஏற்படுத்தப்போகிறது.
காரணம், பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சயமான தலைவரான அன்வார் அந்த தொகுதியில் அதிகமான பிரச்சார வேலைகளில் ஈடுபடத்தேவையில்லை. அதேநேரத்தில் தம்பூன் தொகுதிக்கு இடம் மாறி, தனது சொந்த தொகுதி மக்களின் கோபத்தையும் சம்பாதிக்கும் நிலை அன்வாருக்கு வரப்போவதில்லை.
எனவே, அன்வார் இனி சுதந்திரமாக மக்கள் கூட்டணியின் சார்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடுமையான போட்டி நிலவும் மற்ற தொகுதிகளில், அன்வார் தனது கவனத்தை செலுத்தி மக்கள் கூட்டணிக்கு அதிகமான வாக்குகளை பெற்றுத் தந்து, மேலும் பல தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளத.
செல்லியல்.காம்

கூடுதல் பணம் கிடைக்கும், எங்களுக்கு வாக்களியுங்கள், பின் கூறுகிறது
பிஎன்-னுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று இன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெற்ற அதன் ஆதரவாளர்கல் கூட்டத்தில் பாரிசான் மலேசியர்களிடம் கூறியது.
இன்று வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாதம் ரிம3,000 க்கும் குறைவான மாத வருமானம் ஈட்டும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது கொடுக்கப்படும் ரிம500 பந்துவான் ரக்யாட் மலேசியா (BR1M) பொதுநல உதவி ரிம1,200 ஆக உயர்த்தப்படும் என்று பாரிசான் அறிவித்தது.
குறைந்த வருமானம் பெறும் தனிப்பட்டவருக்கு தற்போது கொடுக்கப்படும் ரிம250 உதவித் தொகை ரிம600 ஆக உயர்த்தப்படும் என்று பின் தலைவர் நஜிப் ரசாக் அந்த அரங்கத்தில் கூடியிருந்த 15,000 பிஎன் ஆதரவாளர்களின் பெரும் ஆரவாரத்துடன் கூறினார்.
இந்த உதவித் தொகைகள் ஒருமுறை மட்டும் கொடுக்கப்படுவது அல்ல. அது ஆண்டுதோறும் கொடுக்கப்படும் என்று அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில் நஜிப் கூறினார்.
1மலேசியா புத்தகப் பற்றுச்சீட்டுகள் (BB1M) ரிம100 லிருந்து ரிம300 ஆக உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை ரிம150க்கு உயர்த்தப்படும்.
மலேசியர்கள் கார் விலை படிப்படியாக 20-30 விழுக்காடு குறைக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம். அகண்ட அலைவரிசைக்கான கட்டணமும் 20 விழுக்காடு குறைக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம்.
பாரிசானின் 31 பக்க தேர்தல் கொள்கை அறிக்கை ஒரே நாடு ஒரே விலை கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் சாபா மற்றும் சரவாக் மக்கள் பலன் அடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. வேலை செய்யும் தாய்மார்களுக்காக 1மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலம் வருகையளித்த ஆதரவாளர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே அரங்கத்திற்கு வந்து விட்டனர்.
அவர்களுக்கு வழங்கப்பட பரிசுப் பொருள்கள் பையில் வைக்கப்பட்டிருந்த “We Love BN” மற்றும் பிஎன் கொடிகளையும் உயர்த்திப் பிடித்து ஆரவாரம் செய்தவாறு ஆதரவாளர்கள் இருந்தனர்.
பாரிசான் மீண்டும் சிலாங்கூர், கிளந்தான், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை கைப்பற்றுமா என்று நிகழ்ச்சியை நடத்தி எம்சி கேட்ட போது அதற்கு ஆதரவாக கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டனர்.
பலத்த ஆரவாரத்திற்கிடையில் எம்சி “கெலாங் பத்தாவிலிருந்து வந்திருப்பவர்களுக்கு, (டிஎபி மூத்தBN manifesto4 தலைவர்) லிம் கிட் சியாங்கை முடிவு கட்டுவோம்” என்று கூவினார்.
நஜிப்பும் அவரது துணைவி ரோஸ்மா மன்சூரும் வந்தபோது அவர்களுக்கு உணர்ச்சிகரமான “Inilah Barisan Kita” என்ற பாடலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹம்சா அலியும் வந்தபோதும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிசான் தேர்தல் கொள்கையின் முக்கிய கூறுகள்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பாரிசான்:
1. BR1M உதவித் தொகையை தற்போதைய ரிம500 லிருந்து ரிம1,200க்கு உயர்த்தும்; தனிப்பட்டவருக்கு ரிம250 லிருந்து ரிம600க்கு உயர்த்தப்படும். இது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
2. 1மலேசியா புத்தகப் பற்றுச் சீட்டு (BB1M) ரிம200 லிருந்து ரிம300 ஆக உயர்த்தப்படும்; பள்ளி உதவி ரிம100 லிருந்து ரிம150 ஆக உயர்த்தப்படும்.
3. தேசிய வாகன கொள்கை மறுஆய்வு செய்யப்படும்; படிப்படியாக காரின் விலை 20-30 விலை குறைக்கப்பட்டு உள்நாட்டு வாகனங்களின் போட்டி ஆற்றலை மேம்படுத்தல்.
4. 1மலேசியா கடைகளின் (KR1M) எண்ணிக்கையை உயர்த்தல்.
5. 1மலேசியா பொருள்களை பெட்ரோல் நிலையங்களிலும் ஹைப்பர்மார்க்கெட்களிலும் விற்பனை செய்தல்.
6. அதிக மக்கள் வாழும் இடங்களில் 1மலேசியா கிளினிக்கள் அமைத்தல்.
7. வேலை செய்யும் பெற்றோர்களுக்காக அதிகமான 1மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைத்தல்.
8. 20 விழுக்காடு வரையில் அகண்ட அலைவரிசைக்கான (ஃபுரோட் பேண்ட்) கட்டணத்தை குறைத்தல்.
9. “ஒரே நாடு”, “ஒரே விலை” கொள்கை அமல்படுத்தல்.
செம்பருத்தி.காம்

பக்கத்தானில் இந்தியர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு விட்டன. தேர்தல் ஆணையம் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் கூட்டத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அதன் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும். ஆக, அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
13 ஆம் பொதுத் தேர்தலில் மோத விருக்கும் பாரிசான் மற்றும் பக்கத்தான் கூட்டணிகள் அவற்றின் சார்பில் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இங்கும் அங்குமாக சில வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், முழு பட்டியலும் இன்னும் இரு தரப்பிலிருந்தும் வெளிவரவில்லை.
பாரிசான் கூட்டணியின் சார்பின் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள், குறிப்பாக மஇகா வேட்பாளர்கள், எண்ணிக்கை சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு கூட எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.
ஆனால், பக்கத்தான் கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்த நம்பத்தகுந்த தகவல் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.
எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருக்கும் மலேசியர்கள் பக்கத்தான் சீன, இந்திய வேட்பாளர்கள் எண்ணிக்கை எப்படியிருக்கும் என்று வினவத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஎபி 10 நாடாளுமன்ற மற்றும் 16 சட்டமன்ற தொகுதிகளையும், பிகேஆர் 5 நாடாளுமன்ற மற்றும் 16 சட்டமன்ற தொகுதிகளையும் இந்திய வேட்பாளர்களுக்கு ஒதுக்கின.
இம்முறை இரு தரப்பினரும், அதிலும் அம்னோ, இந்திய வாக்காளர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்திய வாக்காளர்கள் பல தொகுதிகளில் வெற்றியாளரை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதால், இந்த அளவுக்கு அவர்கள்மீது அக்கறை காட்டப்படுகிறது. ஆனால், அம்னோ இந்திய வேட்பாளர்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானதாகும்.
இதற்கும் அப்பால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறலாம். கடந்த காலங்களில் நடந்த பொதுத் தேர்தல்களில் இந்திய சமூகத்தினர் காட்டிய ஆர்வத்தைவிட நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின், குறிப்பாக இந்திய இளைஞர்களின், ஈடுபாடு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இந்திய முதியவர்களும், பெண்களும் சற்று காரசாரமாகவே தங்களின் பாரிசான் எதிர்ப்பு கருத்தை அச்சமின்றி தெரிவிக்கின்றனர்.
இந்தச் சற்று மாறுபட்ட சூழ்நிலையில், பக்கத்தானில் இந்திய வேட்பாளர்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அது இந்தியர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று பேசப்படுகிறது. பாரிசானால் கடந்த 56 ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை பக்கத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இம்முறை எக்காரணத்திற்காகவும் கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களுக்கு டிஎபியும், பிகேஆரும் ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடாது. அப்படி நடந்தால், எதிர்மாறான விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பாஸ் கட்சி இந்திய மற்றும் சீன வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு தயாராக இருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகவே, பக்கத்தான் தலைவர்கள் இந்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

தேசிய முன்னணியை ஆதரிப்போம், நமது சமுதாயத்தை உயர்த்துவோம் - டி.மோகன்
சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றினால் கிள்ளான் புக்கிட் ராஜா தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் பிரச்சனைகள் முற்றாக தீர்க்கப்படும் என பிரதமர் நேற்று முன் தினம் மேரு தேசிய இடை நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மக்களோடு பிரதமர் நிகழ்வில் அறிவித்தார்.
உழைத்து உருக்குழைந்த தோட்டப்பாட்டாளிகளின் உள்ளத்தில் ஒளியேற்றிய பிரதமருக்கு புக்கிட் ராஜா தோட்டப்பாட்டாளிகள் மற்றும் இவர்களின் பிரச்சனைக்கு ம.இ.கா இளைஞர் பகுதியோடு சேர்ந்து குரல் கொடுத்த அனைத்து இந்திய அரசு சாரா அமைப்புகளின் சார்பாக டி.மோகன் தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.
இந்த தோட்டமக்கள் எதிர்கட்சியினரின் சூழ்ச்சி வலையில் சிக்கித்தவித்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கும் நடவடிக்கைகளின் தொடக்கம் ஆகும் எனவும், தோட்ட பாட்டாளிகளின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த பலன் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய சமுதாயத்துக்கு கடந்த காலங்களை விட நஜீப் அவர்களின் தலைமையில் இந்தியர்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழி திறக்கப்பட்டுள்ளது,மேலும் நமது வளமான எதிர்காலத்திற்கு வழிகள் திறக்கப்படும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்படும் என நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்றவாறு இந்தியர்களின் பல பிரச்சனைகள் களையப்பட்டு வருகின்றன என மோகன் தெரிவித்துள்ளார்
நமது பிரதமர் நஜீப் அவர்கள் இந்திய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறைக்கு எடுத்துக்காட்டாக இந்தியர்களின் பல பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அவ்வாறாக நம்மவர்களின் குடியுரிமை பிரச்சனை மைடப்தார் வழி தீர்க்கப்பட்டு வருகிறது இருந்தாலும் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தும் பொருட்டு உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் தலைமையில் தனி நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதை மோகன் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை பிரதமராக திகழும் நஜீப் அவர்களின் தலைமைத்துவத்தில் இந்தியர்களின் நிலை என்ற கோணத்தில் நமது சமுதாய மக்கள் உணர்ந்து பார்த்து கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் எதிர்கட்சியைபோல் இல்லாமல் நிறைவேற்றப்படுகின்ற வாக்குறுதிகளை கொடுக்கும் நமது பிரதமருக்கு மீண்டும் அவர் தலைமையில் அரசாங்கம் அமைய வேண்டும் அதற்கு இந்திய சமுதாயம் நம்பிக்கையோடு
தே.முன்னணியை ஆதரிப்போம்,நமது சமுதாயத்தை உயர்த்துவோம் என டி.மோகன் அளித்துள்ள அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
வணக்கம்மலேசியா.காம்

9 நாடாளுமன்றம், 19 சட்டமன்ற தொகுதிகளில் ம.இ.கா போட்டியிடும்
எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலில் ம.இ.கா மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. இவற்றில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளாகும். மேலும் 19 இடங்கள் மாநில சட்டமன்றத் தொகுதிகளாகும்.
ம.இ.கா-வுக்கான பெரும்பாலான தொகுதி பங்கீடு குறித்த விவகாரங்களை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் இணைந்து சுமூக தீர்வு கண்டு விட்டதாக ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
“பெரும்பாலான தொகுதிகள் தேவைக்கு ம.இ.கா –வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. இன்னும் இரண்டொரு தொகுதிகள் மட்டுமே இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. 9 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 19 சட்டமன்ற தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த 28 தொகுதிகளில் 20 தொகுதிகள் முடிவாகிவிட்டன. மேலும் 8 தொகுதிகள் குறித்து இன்னமும் விவாதிக்கப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5