புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
60 Posts - 48%
heezulia
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_m10"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 22, 2013 4:10 pm

"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!" 27907593321724019415173

கோவை தமிழ் மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள்.

'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.

எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம்.

உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி):
"நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால், அவர்களும்வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழை அழித்ததைத் தவிர!"

சைமன் (நெதர்லாந்து):
"ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்குமுக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!"

டிட்மிடா (ஜெர்மனி):
"தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே, அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப்போகும்!"

தாமஸ் லேமன் (ஜெர்மனி):
"ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனதில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதை
யும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது, தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்!"

கலையரசி (சீனா):
"இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம்கொள்கிறீர்கள். பிறகு, மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன் என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும், ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனதில் பதியும். ஆகவே, ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ்மீதுகொண்ட காதலால்தான் என் பெயரை கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெக் (கனடா):
"சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணை இல்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அவை சுவையுடன் இருத்தல் அவசியம்."

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):
"பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்கு தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்' என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா. எனவே, எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்!"

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):
"உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்... பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது, அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவி ஆனாவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தை முதலில் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்!"

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):
"இதுபோன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இதுபோன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல், ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு இருக்க வேண்டும்!"

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):
"நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது, தமிழைச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும், மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு, வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டுசேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!"

(நன்றி: விகடன் / தமிழ்த் தேசியம் இணையம் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 22, 2013 4:17 pm

நல்ல பதிவு ..

பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 22, 2013 4:42 pm

பகிர்வுக்கு நன்றி சாமி , இப்படியே போனால் அடுத்த தலைமுறை தமிழை கூட வெளிநாட்டினரிடம் இருந் உகற்றுகொள்ளும் சூழ்நிலை வந்துவிடும் போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 23, 2013 1:06 am

தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டிய
நிலை வந்தது தான் வெட்கக்கேடு என்று சொன்னதுதான்
சம்மட்டி அடி - தமிழை மறந்து வரும் தமிழர்கள் நமக்கு

நல்ல பகிர்வு சாமி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 23, 2013 8:26 am

நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி....தமிழ்நாட்டுத்தமிழர்கள் எல்லாம் நாணித் தலைகுனிய வேண்டும் சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:46 am

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சாமி , இப்படியே போனால் அடுத்த தலைமுறை தமிழை கூட வெளிநாட்டினரிடம் இருந் உகற்றுகொள்ளும் சூழ்நிலை வந்துவிடும் போல

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 23, 2013 9:06 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சாமி , இப்படியே போனால் அடுத்த தலைமுறை தமிழை கூட வெளிநாட்டினரிடம் இருந் உகற்றுகொள்ளும் சூழ்நிலை வந்துவிடும் போல

அப்படியாவது தமிழ் உயிரோடு இருந்தால் நல்லதுதானே.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 23, 2013 9:13 pm

யினியவன் wrote:தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டிய
நிலை வந்தது தான் வெட்கக்கேடு என்று சொன்னதுதான்
சம்மட்டி அடி - தமிழை மறந்து வரும் தமிழர்கள் நமக்கு

நல்ல பகிர்வு சாமி.

எங்கள் பிள்ளைக்கு ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் நல்ல வரும் ஆனா இந்த தமிழ் மட்டும் சரியா வராது என்று தன் தாய்மொழியை சிறுமைபடுத்தி , தங்களின் பெருமையை உயர்த்தி கொள்ளும் எருமைகளுக்கு நல்ல சூடு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக