ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்

3 posters

Go down

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Empty இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்

Post by ராஜு சரவணன் Thu May 02, 2013 8:54 pm

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  12007562134287142385121

MKG - காந்தி
NVG -கோட்சே

MKG யை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர் NVG
நவம்பர் 15- தூக்கில் தொங்கிய NVG --யின் வாக்குமூலம்

NVG-- இந்த மனிதனை மேற்கோள் காட்டியோ அல்லது ஆதரவாக கருத்து சொன்னாலோ ஒரு எதிரியை போல் பார்க்கப்படும் தேசத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது ...

"இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"-- NVG

உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..? என்ற மனோபாவத்தோடு MKG கொலைபற்றிய NVG யின் வாக்கு மூலத்தை படித்த போது பல்வேறு சிந்தனைகளும் குழப்பங்களுமே மிஞ்சின.

டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், MKG கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி NVG வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை NVG படித்தார். வாக்குமூலத்தில் NVG கூறியிருந்ததாவது:-

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை.

தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன்.

அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன.

இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது.

நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை MKG ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்-ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை MKG யால் படித்திருக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.

மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர்.

11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் MKG, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

MKG அவர்களை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை.

பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, MKG அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை;

அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர்.

அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.

அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். MKG யே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.

அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும்.

அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. MKG வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

M.A.J வின் இரும்புப்பிடி, எஃகு உள்ளத்தின் முன்பு MKG யின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. MAJ விடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் M.A.J வுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலை போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார்.

நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

MKG யைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும்.

மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், MKG யடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது.

நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் MKG யைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன்.

இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் MKG எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார்.

அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு நேதாஜி ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து நேதாஜி தூக்கி எறியப்படும் வரை, MKG யின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

நேதாஜி 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை MKG ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர்.

1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு நேதாஜி இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் MKG யின் அதிர்ஷ்டம் நேதாஜி இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது MKG அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். MKG க்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. MKG மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர்.

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று MKG அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு MKG சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து.

தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் MKG யை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை.

கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.

வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி வீரசவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன்.

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன்.

இந்தச் செயல் முற்றிலும் ஹிந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "ஹிந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும்.
இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும்.

இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."
இவ்வாறு NVG கூறியுள்ளார்.

நன்றி முகனூல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Empty Re: இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்

Post by யினியவன் Sat May 04, 2013 3:02 am

இதை விட முக்கியம் தற்பொழுது காந்தியின் பெயரைக் கொண்ட
குடும்பம் நமை கூறு போட்டு விற்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டும்.

காந்தியை பின்பற்றுபவர்கள் ஒரு பக்கம்
கோட்சேயை ஆதரிப்பவர்கள் மறு பக்கம்
எது எப்படியோ நாமோ வெறும் கிழிந்த பக்கம் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Empty Re: இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்

Post by Muthumohamed Sat May 04, 2013 8:44 am

என்ன ஆனாலும் கோட்சே ஒரு கொலை காரன் தானே

அதை முதலில் தெரிந்து கொண்டால் சரி



இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Mஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Uஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Tஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Hஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Uஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Mஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Oஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Hஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Aஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Mஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Eஇந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்  Empty Re: இந்தியா இந்துக்களுக்கே - கோட்சேவின் வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum