புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
156 Posts - 79%
heezulia
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
321 Posts - 78%
heezulia
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_m10காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டில் கலவரம் - சிறுவர் இலக்கியம் பகுதி 7


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 2:15 pm

சிறுவர் இலக்கியங்கள் வெளிவருவது குறைவு. அந்தவகையில் "காட்டில் கலவரம்" என்ற இந்த சிறுவர் நாவலை தொடராகப் பதிவேற்றுவதற்கு ஒரு முயற்சி.

சமூகத்தினை தன எழுத்தாற்றலால் நல்வழிப்படுத்தும் பாரிய பொறுப்புக்களை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். சிறுவர்களுக்கு இளமையிலேயே நல்ல கருத்துக்களைச் சிறுவர் இலக்கியங்கள் மூலம் எடுத்துக் கூறிவரும் எழுத்தாளரான திரு. ச.அருளானந்தம் அவர்கள் எழுதியதே இந்த "காட்டில் கலவரம்" என்ற இந்த சிறுவர் இலக்கியம்.

இந்நாவல் முழுக்க முழுக்க இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தை புலமாக வைத்து அதன் வட்டார பேச்சுவழக்கு மொழிப்பாணியில் எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் இயற்கை வளத்தினையும் கிராம மக்களது இயல்பான வாழ்க்கை முறைகளையும், மட்டு நகரின் சூழல் வனப்பினையும், மட்டக்களப்பு வாவியின் புகழையும், பாடும்மீன், கல்லடிப்பாலம், கொட்டைமுனைப் பாலம், சுவாமி விபுலானந்தரின் நினைவாலயம், மட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்களின் பெயர்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

உப தலைப்புக்களில் தொடர்ந்து இதைப் பதிவதற்கு முயற்சிக்கிறேன்.





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 2:16 pm

1. அமைதி வாழ்க்கை

அது அழகான பெரிய காடு. உயர்ந்த மரங்கள் காற்றில் அசைந்தன. செடிகளும், பசும்புல்லும் செறிந்திருந்தன. காட்டின் நடுவே ஒரு புல்வெளி இருந்தது. புல்வெளியூடாக சிற்றாறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. புல்வெளியில் பல ஒற்றையடிப் பாதைகள் தெரிந்தன. அவை மிருகங்களால் ஏற்பட்டவை.

மாலையானது மிருகங்கள் யாவும் புல்வெளிக்கு வந்துவிடும். பகலில் காடுகளில் உலாவரும். யானைகள், குதிரைகள், மான்கள், மரைகள், நரி, பன்றி, புலி, கரடி, குரங்கு, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, கங்காரு, சிறுத்தைகள், காட்டெருமைகள், முயல், ஆமை, பாம்புகள் என பல்வேறு விலங்குகளும் வாழ்ந்தன. பலவித பறவைகள் நிறைந்திருந்தன. தீக்கோழி, காட்டுச் சேவல், கிளி, மைனா, குயில், மயில், வான் கோழி, புறா போன்றனவும் வாழ்ந்தன.

விலங்குகளும், பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. பயமின்றி புல்வெளியில் உலா வந்தன. மாலை நேரத்தில் விலங்குகளும் பறவைகளும் ஒன்றாகக் கூடும். காட்டின் தலைவனாக "கொம்பன்" யானை இருந்தது. கொம்பன் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும். பறவைகளுக்கு வான் கோழியான 'சீட்டா" தலைவனாக இருந்தது. இவை காட்டின் அமைதி வாழ்க்கைக்கு பொறுப்பாயிருந்தன.

ஒவ்வொரு பறவை இனத்திற்கும் ஒவ்வொரு பறவை தலைமை வகித்தது. அதேபோல் ஒவ்வொரு விலங்கினதிற்கும் ஒவ்வொரு விளங்கு தலைவனாக இருந்தது. இத்தலைவர்கள் ஒன்று கூடிய சபையில் கொம்பனும், சீட்டோவும் பெருந்தலைவர்களாக விளங்கின. காட்டின் பாதுகாப்பிற்கு எல்லோரது ஒத்துழைப்பும் கிடைத்தது. நரிகளின் தலைவன் "டொக்சர்" உளவுத்துறைக்குப் பொறுப்பாயிருந்தது. காவலுக்கு புலிகளின் தலைவன் "வைரன்" பொறுப்பாயிருந்தது. பறவைகளில் "ஆக்காண்டி" உலவுத்துரைக்குப் பொறுப்பாயிருந்தது. தகவல் துறைக்கு குரங்குகளின் தலைவன் 'மக்கன்சி" பொறுப்பாயிருந்தது. தூது அனுப்பப் புறாக் கூட்டத்தின் தலைவன் "சூரி" இருந்தது.

காட்டில் திருமண வைபவங்கள் பெரிய கொண்டாட்டமாக நடக்கும். கொம்பனும், சீட்டோவும் மணமக்களை வந்து வாழ்த்திச் செல்லும்.

அன்று காண்டா மிருகங்கள் படு சந்தோசமாக இருந்தன. இரண்டு இளம் காண்டாமிருகங்களுக்கு திருமணமாம். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. விலங்குகள், பறவைகள் புல்வெளியில் கூடியிருந்தன. பெருந்தலைவர்களான கொம்பனும், சீட்டோவும் வந்து அமர்ந்தன. சிற்றாறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. யானைக் குட்டிகள் துதிக்கையில் நீரை நிறைத்து மற்ற விலங்குகளுக்கு பிசிறி அடித்தன. குரங்குகள் பாய்ந்து திரிந்தன. பெருந்தலைவர்கள் முன் மணமக்கள் வந்து நின்றனர். கொம்பனும், சீட்டோவும் எழுந்து மணமக்களை வாழ்த்தின.

கொம்பன் தன் பெரிய துதிக்கையை உயர்த்தியது. பிளிறியது. மணமக்களின் தலைகளைத் தொட்டது. மணமக்கள் இருவரையும் மெதுவாக அன்போடு அனைத்து தடவியது. சீட்டோ தன் பொல்லாச் சிறகை விரித்து கலகலத்துச் சத்தமிட்டு முன்னும் பின்னுமாக வளைந்து ஆடியது. பின் கொம்பனும், சீட்டோவும் அமர்ந்து கொண்டன.

மறந்கொத்திகள் மரங்களைக் கொத்தி மேளந்தட்டின. இசைக் குயில்கள் கூவின. மயில்கள் சேர்ந்து ஆடின. கலை மான்கள் கொம்புகளை நிமிர்த்தின. கால்களை அசைத்தன. அவை முன்னங் கால்களையும், பின்னங் கால்களையும் அசைத்து அசைத்து ஆடின. கலைவிழாபோல் காட்டில் யாவும் கொண்டாடின.

காட்டெருமைகள் அணிவகுத்துக் காவல் செய்தன. "வைரன்" தன் சகபாடிகளுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தது. விடிய விடிய கொண்டாட்டம் நடந்தது. ஆக்காண்டி, டொக்சர், மக்கன்சி தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தன.

தொடரும்....
2. திடுக்கிடும் செய்தி...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 2:29 pm


02. திடுக்கிடும் செய்தி

வானத்தில் நிலவு ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. வெள்ளிகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. விடி ஆலாக்கள் குரல் எழுப்பின. விடியலை அவை கூறி வைத்தன. மயில்களும் சேர்ந்து கொண்டன. பொழுது புலரும் போது புல்வெளி வெறிச்சோடி விடும். ஆற்றோரத்தில் ஆமை, பாம்பு, பல்லிகளும், சிறு பறவைக் கூட்டங்களுமே காணப்படும்.

கொம்பன் எழுந்தது. சீட்டோ சோம்பல் முறித்துத் தோகையை விரித்தது.ஆக்காண்டி தூரத்தே இருந்து எச்சரிக்கை விடுத்தது. விரைவாக வந்த டொக்சர் வைரனின் காதுகளில் ஏதோ கூறியது. மக்கன்சி பாய்ந்து வந்து சேர்ந்தது. வைரன் கொம்பன் அருகில் சென்றது.

“வணக்கம் தலைவா’ என்றது.

“வைரன் என்ன சேதி.... ஆக்காண்டி எச்சரித்தது..... நானும் கேட்டேன்.” கொம்பன் கூறியது.

“திடுக்கிடும் சேதி தலைவா...” டொக்சரும் மக்கன்சியும் பக்கத்தில் வந்து விட்டன. ஆக்காண்டி.... பறந்து வந்து சேர்ந்து கொண்டது.

“திடுக்கிடும் சேதியா.... என்ன அது” கொம்பன் அலட்சியமாகக் கேட்டது.

“நம் காட்டின் எல்லைக்குள் மனிதர்கள் நுழைந்துள்ளார்களாம்.” வைரன் கூறியது.

“மனிதர்கள் நுழைய மட்டும் பார்த்து சும்மா இருந்தீர்களா... இதுதானா உங்கள் காவல் துறையின் லட்சணம்?” கோபமாகக் கொம்பன் கூறியது.

“நமது எல்லைப்படை அவர்களைத் தாக்க முனைந்தது. ஆனால் அவர்கள் ஒரு தீங்கும் செய்யவில்லை. அத்துடன் அவர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ளார்கள். அதனால் முன் எச்சரிக்கை எடுத்து பதுங்கி இருக்கிறது.” வைரன் எடுத்த நடவடிக்கைகளைக் கூறியது.

கொம்பன் சீட்டோ பக்கம் திரும்பியது. சீட்டோ ஆழ்ந்த யோசனையில் இருந்தது. கொம்பன் திடீரென காடே அதிரும்படி பிளிறியது. ஆபத்து வேளைகளில் மட்டுமே இப்படி கொம்பன் பிளிறும். அச்சத்தத்தின் பின் அங்கு அமைதி நிலவியது. விலங்குகளும், பறவைகளும் கொம்பன் பக்கத்தில் நெருங்கின. கொம்பன் முகத்தை உற்றுப்பார்த்தன. அதன் கட்டளைக்காக காத்திருந்தன. எல்லோர் மனதிலும் ஒரு கலவரம்.

“எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். இந்தக் காட்டுக்குள் மனிதர்கள் வந்திருக்கிறார்கள். உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குட்டிகளையும், குஞ்சுகளையும் பத்திரமாக வைத்திருங்கள். நாளை நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லோரும் பத்திரமாகச் செல்லுங்கள்.” கொம்பன் கட்டளையிட்டது. வைரனைக் கொம்பன் பார்த்தது. புரிந்து கொண்ட வைரன் உடனடியாக பாதுகாப்பு சபையை அழைத்தது.

கூறிய கொம்புகளையுடைய காட்டெருமைக் கடாக்கள் அணிவகுத்து நின்றன. அதன் தலைவன் ‘டிட்டோ’ தன் அணியை ஒரு சுற்று சுற்றி வந்து அணியின் முன்னால் நின்றது. கொம்பன் ‘டிட்டோவின்’ கொம்பைத் தன் துதிக்கையால் தடவிப் பார்த்தது. அடுத்து கலைமான்களின் பக்கம் திரும்பியது. கலைமான்களின் அணியை முன் நடாத்தி ‘டிமாக்கோ’ முன்நின்றது. கரடிகளின் அணியை நெறிப்படுத்தி ‘கபோட்டா’ முன்நின்றது. காண்டாமிருகங்களின் அணித் தலைவர் ‘றிம்போ’ தன் அணியோடு நின்றது. ஒவ்வொரு அணியாகப் பார்வையிட்ட கொம்பன் கட்டளையிட்டது.

“வந்திருக்கும் மனிதர்கள் பொல்லாதவர்கள். அவர்களது நோக்கத்தை அறிய வேண்டும். நமது எல்லைக்குள் புகுந்து அட்டகாசம் செய்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. நமது உளவுப்படையை அனுப்புங்கள். விபரங்களைத் திரட்டி வரட்டும். நமது காட்டின் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் பொறுப்பாக இருத்தல் வேண்டும். வைரன் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.” என்று கூறிவிட்டு நடந்தது. பின் திரும்பி “பொழுது வருமுன் கலைந்து விடுங்கள். நாளை சந்திக்கலாம்.” கூறிக்கொண்டு காட்டுக்குள் போய் மறைந்தது. பின்னால் சீட்டோவும் சென்று விட்டது. விலங்குகளும், பறவைகளும் வந்த வழியே செல்லத் தொடங்கின.

வைரனுக்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. டொக்சரையும், மக்கன்சியையும் அழைத்தது.

தொடரும்...
03. ஆலோசனை




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 14, 2012 8:56 pm

03. ஆலோசனை

சற்று நேரம் அமைதி நிலவியது. பொழுது கிளம்பும் அறிகுறி தெரிந்தது. கிழக்கு வெழுத்து வருவது புரிந்தது. புல்வெளி மங்கலாகத் தெரிந்தது. டிட்டோ, டிமாக்கோ, கபோட்டா, றிம்போ ஆகியனவும் வந்து சேர்ந்தன. ஆக்காண்டி மெதுவாக வந்து சேர்ந்தது.

"வைரன், மனிதர்கள் நமது காட்டின் எல்லைக்குள் இன்னும் நுழைய வில்லை. நாளை நுழையலாம். அவர்களைக் கண்காணிக்க வேண்டும்." ஆக்காண்டி அவசரமாகக் கூறியது.

"ஆக்காண்டி நீ உடனே போ. அவர்களது நடமாட்டத்தைக் கவனித்து தெரிவி. உன் ஆட்களை அசிரத்தையாக இருக்க விடாதே. மக்கன்சி.... அடிக்கடி செய்தியைத் திரட்டி அறிவிக்க வேண்டும். புரிகிறதா....?" என்று வைரன் கூறிவிட்டு எல்லோரையும் பார்த்து "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வந்திருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்" என்று கூறியது. அங்கிருந்து பிரிந்து காட்டினுள் மறைந்தன.அவசர பீடத்துக்குச் சென்றன.

இப்போது விடிந்து வெயில் ஏறியிருந்தது. காட்டினுள் வெயில் விழவில்லை. உயர்ந்த மரங்கள் இல்லை குழைகள் வெயிலைத் தடுத்தன. காட்டின் எல்லையில் சிறு புதர்கள் இருந்தன. அதையடுத்து சிறு சிறு வெளிகள். வெளிகளைத் தாண்டி வெகு தூரம் சென்றால்தான் இந்த பெரிய காட்டை அடையலாம். காடு பல கிலோமீற்றர் பரப்பினைக் கொண்டது. காட்டின் மையப்பகுதியிலேயே புல்வெளி இருந்தது. சலசலத்து ஓடும சிற்றாறு புல்வெளியை இரு பகுதிகளாக்கி ஓடிக்கொண்டிருந்தது.

விலங்குகளினதும், பறவைகளினதும் காவல் படை, மனிதர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பதுங்கியிருந்தன. வைரனுக்குச் செய்தி போய்க் கொண்டிருந்தது. அங்கே கொம்பனும், சீட்டோவும் அவசரபீடத்தில் இருந்தன. வைரனும், டிட்டோ, டிமாக்கோ, கபோட்டா, றிம்போ ஆகியனவும் வந்து சேர்ந்தன.

அவசர பீடத்தில்தான் பாதுகாப்புச் சபை கூடும். காட்டின் நடுப்பகுதியின் சிறிய வெளி அது. வானளாவிய உயர்ந்த மரங்கள் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. விஷேட காவல் படையைத் தவிர வேறு விலங்குகளோ, பறவைகளோ அங்கு போக முடியாது. நெருக்கடியான நேரங்களில் மட்டும் இங்கு ஆலோசனை நடைபெறும். பாதுகாப்புப் பற்றி விவாதம் நடைபெறும். தகவல்கள் இங்குதான் வந்து சேரும். ஆக்கண்டிப்படை மனிதர்களினது செயற்பாடுகளைக் கவனிக்கும். செய்திகளை ‘சூரி’யின் படை ஆலோசனைச் சபைக்கு ‘அவசர பீடத்தில்’ ஒப்படைக்கும்.

சூரி பறந்து வந்தது. கொம்பன் முன் மரியாதை செய்தது. பின் செய்திகளை வைத்தது. சேகரித்த தகவல்களைக் கூறத் தொடங்கியது.

“மனிதர்கள் ஒன்பது பேர் வந்துள்ளார்கள். அவர்களிடம் ஆயுதங்கள் உண்டு. ஐந்து கூடாரங்கள் அமைத்துள்ளனர். நடுவில் ஒரு கூடாரம் அமைந்துள்ளது. அதைச் சுற்றி நான்கு கூடாரங்கள் உள்ளன. பெரிய கயிறுகளும், பெட்டிகளும், வண்டிகளும் இருக்கின்றன” எனக் கூறி முடித்தது.

கொம்பனின் முகத்தில் கோபம் தெரிந்தது. கண்கள் சிவந்தன. பெரிய சுளகுக் காதுகளைப் படபட என ஆட்டியது. சீட்டோ தோகையைச் சிலிர்த்துக் கொக்கரித்தது. கொம்பன் தும்பிக்கையை மேலே தூக்கிப் பிளிறியது. “பெரிய திட்டத்தோடுதான் மனிதர்கள் இங்கு வந்துள்ளார்கள். அவர்களை விரட்டி அடிக்க வேண்டும். இன்று இரவு அந்த வேலை முடிய வேண்டும். வைரன் மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். நமது பக்கமோ அல்லது மனிதர்கள் பக்கமோ வீணாக உயிர் அழியக்கூடாது. புரிகிறதா.... அத்துடன் எல்லையில் நடப்பது காட்டுக்குள் தெரியாதிருக்க வேண்டும். செய்து முடித்துவிட்டு என்னைச் சந்தியுங்கள்” சொல்லி விட்டு கொம்பனும் சீட்டோவும் நடந்தன.

தொடரும்...
4. முதல் தாக்குதல்




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:04 pm

நல்ல தொடர் றினா - வாழ்த்துகள்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 19, 2012 8:05 pm

04. முதல் தாக்குதல்

எல்லையை நோக்கி வைரன் சென்றது. பின்னால் டிட்டோ, டிமாக்கோ, கபோட்டா, றிம்போ சென்று கொண்டிருந்தன. வழியில் டொக்சரும், மக்கன்சியும் சந்தித்தன. எல்லைப்புற நிலவரம் பற்றிக் கூறின. வட்டமாகக் கூடி ஆலோசித்தன. பொழுது போய்க் கொண்டிருந்தது. மெதுவாக எல்லையை அடைந்தன.

எல்லையில் படைகள் உசாராக இருந்ததை வைரன் அவதானித்து. படைகளை உட்சாகப்படுத்தியது. படைகளோடு பதுங்கியிருந்து மனிதர்களது நடவடிக்கைகளை நோட்டம் விட்டது. டொக்சர் மறைந்து சென்று உளவு பார்த்தது. மக்கன்சி பாய்ந்து மிக அண்மையில் சென்றது. மனிதர்கள் இவற்றைக் கவனிக்கவில்லை. அவர்கள் தங்களது கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நடுவில் இருந்த கூடாரத்தில் இருந்து சாக்கோ வெளியே வந்தான். அவன்தான் அக்கூட்டத்தின் தலைவன். கூடாரத்தின் முன்னாள் நின்று காட்டை நோட்டம் விட்டான். கையைத் தட்டி மற்றவர்களையும் அழைத்தான். பெரிய கயிறுகளை அவர்கள் எடுத்து வந்தனர். ‘ட்ராக்டர்கள்’ நின்றிருந்தன. ட்ராக்டர்களிலிருந்து மரம் அறியும் வாள், கோடரிகள், கத்திகள் இறக்கப்பட்டன. கூடாரங்களைச் சுற்றி வேலிகள் அமைக்க ஆயத்தங்களைச் செய்தனர்.

பொழுது சரிந்து வெயில் தணியத் தொடங்கியது. எல்லைப் புறத்திலிருந்த சில மான்கள் வெளியில் எட்டிப் பார்த்தான. டொக்சர் போக வேண்டாம் என்று எச்சரித்தது. எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது சில மான்கள் மனிதர்கள் இருக்கும் வெளிக்கு வந்தன. தூரத்தே இருந்த மனிதர்களின் கண்கள் அவற்றைக் கண்டு விட்டன. சத்தமிடாதவாறு அருகில் இருந்த பற்றைகளில்மறைந்து கொண்டனர்.

மான்கள் துள்ளி ஓடி விளையாடின. ஒன்றை ஒன்று முட்டித் தள்ளி ஓடின. ஓடிய வேகத்தில் தங்களை மறந்தன. வைரன் சத்தமிடவும் அவைகள் ஓடின. ‘டுமீல்’ என்ற சத்தம் காட்டில் எதிரொலித்தது. பறவைகள் கீச்சிட்டு பறந்து ஒலி எழுப்பின. ஓடிய மான்களில் ஒன்று துவண்டு சுருண்டு துடித்து வீழ்ந்தது. இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. அதன் உயிர் பிரிந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியோடு ஓடி வந்து மானைத் தூக்கிக் கொண்டனர். காடு பதட்டமைடைந்தது. மான், மரைகள் ஓடி ஒளிந்து கொண்டன. வைரனின் கண்கள் சிவந்து விரிந்தன. சினத்தால் சீறி எழுந்தது. டிமாக்கோவை முறைத்துப் பார்த்தது.

“உன் அசட்டையால் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. அவைகளை அடக்கி வைக்க உன்னால் முடியவில்லையே” ஆத்திரத்தோடும், வேதனையோடும் வைரன் கூறியது.

“நான் எதிர்பார்க்கவில்லை, எச்சரித்துத்தான் இருந்தேன். என்னையும் மீறி நடந்து விட்டது” என்று கூறிக்கொண்டு வேதனையால் டிமாக்கோ பொருமியது.

டிமாக்கோவின் பக்கம் வைரன் சென்றது. “நடந்தது நடந்து விட்டது. இது எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும்” என்று கூறி எல்லாப் படைத்தளபதிகளையும் எச்சரிக்கை செய்தது. பின் திரும்பி காட்டுக்குள் சென்றது. பின்னால் டிட்டோ, கபோட்டா, றிம்போவும் சென்றன. வைரன் திரும்பிப் பார்த்தது. டிமாக்கோ அசையாது நிற்பதைக் கண்டது. டிமாக்கொவின் பக்கம் சென்று நின்றது.

“டிமாக்கோ வா போகலாம். கோபத்தில் அப்படி நடந்து கொண்டேன்.... வா” என்று அழைத்தது. டிமாக்கோ குற்ற உணர்வுடன் பின்னால் சென்றது. விலங்குகள், பறவைகள் யாவும் ஓடி மறைந்து விட்டன.

காட்டின் எல்லைக்கப்பால் நின்றன. வைரன் ஏதோ நினைத்தவாறு வானத்தைப் பார்த்தது. வானில் வெள்ளி பூத்திருந்தது. இப்போது விலங்குகள், பறவைகள் புல்வெளியில் கூடும் நேரம். நடந்து முடிந்த செயல்களை நினைத்தது. “கொம்பனின் முன் நடந்ததைக் கூறுவது எப்படி....?” குனிந்து நிலத்தைப் பார்த்தபடி நின்றது. அதன் முகத்தில் மின்னல் அடித்தது போன்றதொரு பிரமை. கண்கள் சிவந்து வேட்டைப் பற்கள் வெளியே தெரிந்தன. “டிமாக்கோ மனிதர்கள் எம்மைத் தாக்குவதா... நாம் ஒருவரை இழந்து விட்டோம்... நம் காட்டின் நிம்மதி போயாச்சு... திரும்புங்கள் போவோம்” என்று சீறியது. டிட்டோ, கபோட்டா, றிம்போ தம்தம் குரலில் செய்திகளைத் தெரிவித்தன.

டிட்டோ முன்னால் வாட்டசாட்டமான காட்டெருமைக் கடாக்கள் அணிவகுத்து நின்றன. கபோட்டாவின் தலைமையில் கரடிகள் ஓரணியில் திரண்டன. றிம்போவின் அணி முதுகை நிமிர்த்தி வந்தன. வைரனின் பின்னால் புலிகள் நின்றன. “டிமாக்கோ... நீ மெதுவாக கொம்பனிடம் செல். நாங்கள் அங்கு வந்து சேர்கிறோம்” என்று டிமாக்கொவின் கூட்டத்தை வைரன் வழியனுப்பி வைத்தது.

காட்டின் எல்லையில் யாவும் அணிவகுத்து நின்றன. டொக்சர் மெதுவாக கூடாரப் பக்கம் சென்றது. வைரன் எப்படித் தாக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தது. முன்னால் டிட்டோவின் அணி தயாராயிருந்தது. தொடர்ந்து கபோட்டா அணி. அதனைத் தொடர்ந்து றிம்போ அணி ஆயத்தமாகியது. வைரனின் அணி இடையில் புகுந்து தாக்க தயாராயிருந்தது.

டொக்சர் மெதுவாக கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்தது. சாக்கோ மட்டும் ஓரிடத்தில் மேசையின் முன் அமர்ந்திருந்து மது அருந்திக் கொண்டிருந்தான். மற்றவர்கள் இருவர் இருவராகச் சேர்ந்து மது அருந்தி கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். டொக்சர் ஊளையிட்டது. அவர்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அது வைரனுக்கு வெறியை ஊட்டியது.

வைரன் பாய்ந்து கட்டளையிட்டது. கட்டளைக்குக் காத்திருந்த காட்டெருமைக் கடாக்களும் ஏனைய கூட்டங்களும் கூடாரங்களைக் குத்திக் கிழித்து சின்னாபின்னமாக்கின. கண்மூடித் திறக்கும் முன்னர் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. விலங்குகள் கபளீகரம் செய்து விட்டு வந்த வழியே சென்று விட்டன.

சாக்கோவின் ஆட்கள் மூன்று பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்து கிடந்தன. சாக்கோ காயங்களுடன் உளவு இயந்திரப் பெட்டியின் கீழே ஒளிந்து தப்பினான். நான்கு பேர் காயங்களுடன் தப்பினர். ஒருவனைக் காணவில்லை.

தொடரும்...
05. கொம்பன் வாழ்த்து




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jan 28, 2013 12:03 pm

05. கொம்பன் வாழ்த்து
நேரம் போய்க கொண்டிருந்தது. கொம்பனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. சீட்டோவிடம் அடிக்கடி பேசியது.விலங்குகளும், பறவைகளும் வழமைபோல் கூடியிருந்தன. அனால அவற்றின் மனதில் ஏதோ சஞ்சலம். தூராதே டிமாக்கோ வருவது தெரிந்தது. கொம்பன் டிமாக்கோவை பக்கத்தில் அழைத்தது. நடந்ததை டிமாக்கோ கூறியது.

கொம்பன் தன் துதிக்கையால் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டது. சீட்டோ சோகமாக இருந்தது.
“டிமாக்கோ வைரன் எங்கே?” கொம்பன் கேட்டது.
“எல்லைப்புறம் பார்த்து வரச் சென்றது.” டிமாக்கோ பதில் கூறும்போது வைரன் வந்து கொண்டிருந்தது. அதன் பார்வையில் ஒரு வித வெற்றி தெரிந்தது.

“வைரன் அநியாயமாக நமது கூட்டத்திலிருந்த ஒரு மான் மறைந்து விட்டது. நம் கட்டுக் கோப்புக் குலைந்து விட்டதா?” கொம்பன் கவலையோடு கூறியது. வைரன் டிமாக்கோவைப் பார்த்தது. டிமாக்கோ நிலத்தைப் பார்த்தது. பின் கொம்பனைப் பார்த்து “தவறு நடந்து விட்டது. நம்மையும் மீறி நடந்து விட்டது. ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் நம்மிற் சில புத்திகெட்டு நடந்து கொள்கின்றன. அதனால் வந்த வினை இது...” என வைரன் கூறியது.

“எல்லைப்புறத்தில் வந்திருக்கும் மனிதர்களுக்கு பாடம் புகட்டி விட்டோம்.” டிட்டோ கூறியது.
என்ன நடந்தது என்பது போல் வைரனை கொம்பன் பார்த்தது. “அவர்கள் இருக்கும் இடத்தில் எங்கள் படை புகுந்து கபளீரம் செய்து விட்டு வந்துள்ளது” கபோட்டா முன் வந்து கூறியது. றிம்போ நடந்தவற்றை விளக்கமாகக் கூறியது.

கொம்பன் முகத்தில் மகிழ்ச்சி. இந்த முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தின்றி வெற்றியோடு வந்த வீரர்களைப் பாராட்டியது. அவற்றின் கடமையுணர்வுகளை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தியது. வைரனின் தோளைத் தன் துதிக்கையால் வளைத்துப் பிடித்துத் தழுவியது. வைரன் குளிர்ந்து போனது. டிட்டோ, கபோட்டா, றிம்போ ஆகியவற்றையும் தழுவி மகிழ்ந்தது.

தன் துதிக்கையை உயர்த்திப் பிளிறியது. அது அமைதிகாக்கும் தொனி. அமைதி நிலவியது. மிக நெருக்கமாக விலங்குகளும், பறவைகளும் கூடின. “நம் காட்டிலே கட்டுக்கோப்புக் குலைந்து விட்டது. எல்லோரும் ஒத்துழைப்புத் தர வேண்டும். சிலர் சொற்கேளாது திரிவதால் ஆபத்து வருகின்றது. நமது காவல் படை எவ்வளவு தியாகம் செய்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நமக்குள் ஒற்றுமை வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் காடு அமைதியாக இருக்கும்” என்று கொம்பன் பெரிய பிரசங்கம் செய்தது.

என்ன நடந்தது என்பது போல் விலங்குகளும், பறவைகளும் ஒன்றை ஒன்று பார்த்தன. நடந்த விசயம் பலவற்றிற்குத் தெரியவில்லை. காது கொடுத்துக் கேட்டன. கொம்பன் தொடர்ந்தது. “காட்டின் எல்லைப்புறம் தடை செய்யப்பட்டுள்ளது. யாரும் அங்கு செல்லக்கூடாது. நமது காவல் படையின் கட்டுப்பாட்டில் அது இருக்கிறது. அங்கு மனிதர்கள் வந்துள்ளார்கள். அவர்களை எதிர்த்து கபளீகரம் செய்துள்ளது நமது படை. படைத்தளபதி வைரன் தலைமையில் இது நடந்துள்ளது. இவர்களை வாழ்த்துவோம்” என்று மீண்டும் பிளிறியது. யாவும் ஒன்று சேர்ந்து ஒலியெழுப்பின. காடே அதிர்ந்து ஓய்ந்தது. டொக்சரும், ஆக்காண்டியும் எல்லைப்புறம் நோக்கி விரைந்தன.

தொடரும்...
06. சாக்கோ வெளியேறல்




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 8:12 pm

06. சாக்கோ வெளியேறல்

விடிந்து பொழுது வானத்தில் பவனி வந்தது. உழவு இயந்திரப் பெட்டியின் கீழே பதுங்கியிருந்த சாக்கோ விழித்துக் கொண்டான். இரவு பயத்தினால் உறக்கமின்றி இருந்தவன் பொழுது புலரும்போது தூங்கி விட்டான். கண் விழித்ததும் தான் டிரக்டரின் கீழ் இருப்பதை உணர்ந்து கொண்டான். அவன் தலை கனத்தது. கை கால்களில் வலி தெரிந்தது. மெதுவாக வெளியே வந்தான். கூடாரங்கள் கிழிந்து வீழ்ந்து கிடந்தன. யாரையும் காணவில்லை.காயங்களோடு கிடந்தவர்களின் பக்கம் போனான். அவர்கள் வேதனையில் முனங்கினார்கள். தங்களோடு வந்தவர்களில் ஒருவனைக் காணவில்லை. சாக்கோ அவனைத் தேடினான். தூரத்தே பயந்து பயந்து அவன் நடந்து வருவது தெரிந்தது. அவன் அருகில் வந்ததும் சாக்கோ உற்றுப் பார்த்தான். பயத்தை அவன் முகம் காட்டியது.

"எங்கே போயிருந்தாய் பீற்றர்" என்று சாக்கோ கேட்டான்.

"நான் கால போன பக்கம் ஓடினேன். களைத்து விழுந்து விட்டேன். அதன் பின் நடந்தது தெரியாது. கண் விழித்தபோது பொழுது புலர்ந்து விட்டது. எழுந்து நடந்து வருகிறேன்" என்றான். அவனது கால், கை உடலெங்கும் சிராய்ப்புக் காயங்கள்.

இருவரும் காயப்பட்டவர்களை மெதுவாகத் தூக்கினார்கள். பெட்டியில் இருந்த மருந்து வகைகளை சாக்கோ எடுத்தான். காயங்களைத் துப்பரவு செய்தான். ஒவ்வொருவராக மருந்து கட்டினான்.

பசி எல்லோரையும் வாட்டி எடுத்தது. பிஸ்கட் பெட்டிகள் சில தப்பிக் கிடந்தன. பிஸ்கட்டுக்களைத் தின்று தண்ணீர் குடித்தார்கள். மண்வெட்டியை எடுத்து குழி தோண்டினார்கள். இறந்த சகாக்களை குழியில் போட்டு அடக்கம் செய்தார்கள். கவலையோடு ஒருவரையொருவர் பார்த்தார்கள். சாக்கோ எழுந்தான். சைகை காட்டினான். எடுக்கக் கூடியவற்றை வண்டியில் ஏற்றினார்கள். வண்டிகள் காட்டை விட்டு வெளியேறின. வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன. சாக்கொவின் மனம் துக்கத்தாலும், கோபத்தாலும் பொங்கியது. இரவு நடந்தவற்றை எண்ணும்போது பயங்கரமாயிருந்தது.

மிருகங்கள் தங்களைத் தாக்கும் என்று அவன் நினைக்கவில்லை. தான் காட்டுக்கு வந்த திட்டத்தை நிறைவேற்ற அவன் மனம் உறுதி கொண்டது. பல லட்சம் ரூபாய்கள் சம்பாதிக்கலாம் என்ற அவன் கனவு வீணாயிற்று.

“என்ன சேர் யோசனை” மெலிதான குரலில் பக்கத்தில் இருந்த பீற்றர் கேட்டான்.

“ஒன்றுமில்லை மனது திட்டம் தவிடு பொடியாயிற்று. பல லட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது” சாக்கோ கவலையோடு சொன்னான்.

“எனக்கு விளங்கவில்லை சேர்” என்றான் பீற்றர்.

“உனக்கு ஒன்றும் விளங்காது... காட்டில் விலை உயர்ந்த மரங்களை அறுத்துக் கடத்தி சம்பாதிக்க எண்ணினேன். யானைத் தந்தங்களின் பெறுமதி தெரியுமா உனக்கு...”

“எனக்கு என்ன தெரியும் சேர்... நீங்க சொல்வதைச் செய்வேன் அவ்வளவுதான்” பீற்றர் அலுத்துக் கொண்டான்.

சாக்கோவின் மனம் பெரிய திட்டத்தில் இறங்கி இருந்தது. சாக்கோவின் வீடு மட்டக்களப்பில் இருந்தது. வாவிக்கரை ஓரமாக அது அமைந்திருந்தது. வீட்டிலிருந்து வீதியைக் கடந்தால் வாவி. பல படகுகள் அங்கு தரித்து நிற்கும். பலரை சாக்கோ வேலைக்கு அமர்த்தி இருந்தான். மீன் பிடிப்பதாக நம்ப வைத்தான்.

வண்டிகள் சாக்கோவின் வீட்டில் வந்து நின்றன. வேலையாட்கள் சூழ்ந்து கொண்டனர். என்ன நடந்தது என்று கேட்க முடியாது. சாக்கோ வேலையாட்களோடு கடுமையாகவே இருப்பான். காயப்பட்டவர்களும் நல்ல உறுதியாகவே இருந்தனர்.

தொடரும்...
07. சாக்கோவின் புதிய திட்டம்




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 27, 2013 7:13 pm

07. சாக்கோவின் புதிய திட்டம்

சில நாட்கள் கழிந்தன. சாக்கோ தனது அலுவலக அறையில் இருந்தான். அந்த அரை விசாலமானது. முட்டை வடிவில் மேசை போடப்பட்டிருந்தது. அது கூட்டங்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடு. அங்கெ ஏழெட்டுப் பெரிய மனிதர்கள் வந்தார்கள். மிகவும் வசதி படைத்தவர்கள் போல் தெரிந்தார்கள். சாக்கோ எழுந்து வரவேற்றான். வந்தவர்கள் நேராகக் கூட்டம் நடைபெறும் மேசையில் போய் அமர்ந்தனர்.

மேசை மிக அலங்காரமாக இருந்தது. சாக்கோதான் தலைமை. அமைதியாக அடக்கமாகக் கூட்டத்தைத் தொடங்கினான். காட்டில் நடந்த விபரத்தைக் கூறினான். அங்குள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் பற்றிக் கூறினான். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனதிற்குள் இலாபம் பார்த்துக்கொண்டனர்.

புள்ளி மான்களைப் பற்றி சாக்கோ சொன்னான். மான் தோலுக்கும் கொம்புக்கும் ஒருவர் கணக்கப் போட்டார். மயில்களின் அழகுத் தோகைகளைக் கூறினான். யானைகளின் தந்தங்கள் பற்றி விவரித்தான். ஆளுக்காள் கண்களைக் காட்டிக் கொண்டனர். முதிரை, தேக்கு, கருங்காலி, மலைவேம்பு மரங்களைப் பற்றி கூறும்போது ஆளையாள் தட்டிக்கொண்டார்கள். சாக்கோ தான் தொலைநோக்கி மூலம் கண்டவைகளையும் கற்பனையில் தோன்றியவைகலையும் விளக்கினான்.

அவன் பேசிய விதம் அங்கிருந்தவர்களை ஆட்கொண்டு விட்டது. அவனது திட்டம் இப்போது விரிந்தது. டேவிட் நல்ல வாட்டசாட்டமான பேர்வழி, “எங்களால் செய்யக்கூடியது என்ன?” என்று கேட்டுவிட்டு விடையை எதிர்பார்த்தான். சாக்கோ பேசாதிருந்தான். இப்போது வில்சன் பேசினான்.

“சாக்கோ நாம் ஒற்றுமையாக சேர்ந்து தொழிலில் இறங்குவோம். என்ன சொல்கிறாய்?”

பீற்றர் குடிவகைகளை வைத்து விட்டுப் போனான். எல்லாம் வெளிநாட்டுக் குடிவகைகள். போத்தல்கள் எல்லாம் வெறுமையாகிக் கொண்டிருந்தது. சாக்கோ அளவாகவே மதுவை எடுத்தான். வந்திருந்த கனவான்கள் இப்போது சுய உணர்வோடு இல்லை. போதையில் இருந்தனர். “காட்டில் உள்ள செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும். உங்கள் உதவிகள் மட்டுமிருந்தால் வெற்றி கிடைத்துவிடும். நாம் கோடீஸ்வரர்கள் ஆகலாம்.” சாக்கோ சொல்லிக்கொண்டே போனான்.

“வில்சன் உனது மரம் அரியும் தொழிற்சாலைக்கு மரங்களைத் தருவேன். அரிந்து பணமாக்குவது உன் பொறுப்பு. சம்மதமா?” நேரடியாகச் சாக்கோ சொன்னான்.

வில்சன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான். “எவ்வளவு மரங்கள் என்றாலும் தரலாம். அமைச்சர் என் கையில், பேமிட் இருக்குது. கவலை வேண்டாம். சரிதானே.” வில்சன் விளாசித் தள்ளினான்.

“வில்சன் பேச்சு மாறக்கூடாது. மரங்கள் வண்டியில் இருந்து இறங்கியதும் பணம் கட்ட வேண்டும். மரங்களுக்கு ஏற்றபடி விலை, சரிதானே?” சாக்கோ சிகரட்டை இழுத்தபடி கூறினான்.

“ஓ...கே” சொன்னான் வில்சன்.

“ஏற்றி இறக்குவது என் வண்டிகள். அதற்கு நான் தயார்.” காதர் கூறினான். அவர் பெரிய ட்ரான்ஸ்போர்ட் கொம்பனியின் உரிமையாளர்.
“பண்டா... உங்கள் கொம்பனிக்குத் தந்தங்கள் வரும் அதை விற்றுப் பணமாக்குவது உங்கள் கடமை” விளக்கினான் சாக்கோ.

“சாக்கோ பயப்படாதே. வெளிநாடுகளுக்கு நான் ஏஜன்ட். கோடிகோடியாகச் சம்பாதிப்போம்.” அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டே பண்டா கூறினான்.

“டேவிட் மிருகங்களின் தோல், மான், மரைகளின் கொம்புகள் தரப்படும். அது உங்கள் பொறுப்பு.” இறுதியாகக் கிளாசைக் காலி பண்ணிவிட்டு சாக்கோ சொன்னான்.

“அடுத்தவாரம் சனிக்கிழமை. நமது வியாபாரம் தொடங்குகிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவை. எனது பணியாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.”

“சாக்கோ உனக்கில்லாத பணமா? ஆனால் சொன்னபடி சரக்கு வரல்ல... இது பேசும்” வில்சன் ரிவோல்வரைக் காட்டி சொன்னான். பணம் கைமாறப்பட்டது. இப்போது லட்சக்கணக்கில் சாக்கோவிடம் முற்பணம் புரண்டது. கூட்டம் கலைந்தது. வந்தவர்கள் போய்விட்டார்கள்.

பீற்றரும் ஏனையோரும் மெதுவாக சாக்கோவிடம் வந்தனர். கற்றைகளாகப் பணத்தை சாக்கோ வீசினான். வெற்றிச் சிரிப்போடு. “அடுத்த திங்கள்கிழமை மீண்டும் காடு போக ஆயத்தமாகுங்கள். புதுவித துப்பாக்கிகள் கொண்டு வருவோம். ஒரு மாதம் அங்கேயே தங்குவோம். ஓ...கே, நாளை காலை வாருங்கள். இது பற்றிப் பேசலாம்.”

தொடரும்...

08. காடு புறப்பாடு




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக