ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

+4
பாலாஜி
balakarthik
ரா.ரா3275
அகல்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 Empty எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Fri Apr 26, 2013 5:29 pm

First topic message reminder :

IPL இல் சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இலங்கை கிரிகெட் வீரர் குமர சங்ககராவை சென்னையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் விளையாட அனுமதிக்காததற்கு இன்று காலை எழுத்தாளர் ஞானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதைப் பற்றிய எனது பார்வையே இந்த கட்டுரைக்குக் காரணம். வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.

http://4.bp.blogspot.com/-D_s03ytTQTc/UXpl2i4s2oI/AAAAAAAACD0/DPO3NxanD7Q/s1600/GNANI+DOLLOR+NAGARAM.JPG

ஞானியின் முகநூல் ஸ்டேடஸ்....

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு ( குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எனது கருத்தும் கேள்வியும்...

உங்களை நல்ல எழுத்தாளர் என்று சொல்லும் பலரிடம், நீங்கள் சூழலுக்கேற்ப பேசும் அரசியல் தந்திரவாதி, என்று சொல்லிய என் கருத்தும் இப்போது வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானி அவர்களே ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தடை சங்ககராவிற்கு மட்டுமான தடையல்ல. ஒட்டுமொத்த இலங்கை வீரர்களுக்கான தடை. இலங்கை என்ற நாட்டிற்கான தடை. இந்தத் தடையால் இதுவரை என்ன நடந்துவிட்டது ? என்று நீங்கள் கேட்கலாம்.

இதுவரை தமிழக மாணவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்தை தமிழகம் தாண்டி வேறெந்த மாநில மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் 1,40,000+ தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெளிமாநிலத்திலும் நாடுகளிலும் வாழும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்கள் அதற்கு சாட்சி.

இந்தத் தடைமூலம், மற்ற மாநில இளைஞர்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். சக தமிழ் நண்பர்களிடம் கேட்கிறார்கள். இதைப் பற்றிய செய்தியும், தமிழர்களின் இனப்படுகொலையை செய்யப்பட்டதின் பின்னணியும் மற்றவருக்கும் புரியும்படியான ஒரு துருப்புச் சீட்டாக இது அமைகிறது. ஒரு வகையில் இது இலங்கை மீது சர்வதேச அழுத்தம் தேவை என்ற கருத்தை வலுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.

அதோடு உங்கள் ஸ்டேடஸ் பார்க்கையில் எனக்கு சில கேள்விகள் மனதில் உதிக்கிறது. முடிந்தால் பதில் அளிக்க முயற்சிக்கவும்.

1. இது சங்ககராவிற்கு மட்டுமேயான தடை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சங்ககராவை நாங்கள் கெட்டவன் என்றும் சொல்லவில்லை. இருந்தும், ஒரு தகப்பன் நல்லவன் என்பதால் அவனுக்கு பிறக்கும் மகனும் நல்லவனாகவே இருப்பான் என்று நீங்கள் நினைப்பது மிகவும் குழந்தைத் தனமாகவே இருக்கிறது. நல்ல தந்தைக்கு பிறந்த மகன்கள் பலர் சுயநல வாதியாக, ஊதாரியாக, சமூகப் பொறுப்பில்லாமல் திரிவதை உங்கள் வீடு எனது வீட்டின் பக்கத்திலேயே பார்க்கலாம்.

உங்கள் கூற்றுப்படி, சக்ககரா நல்ல தந்தைக்குப் பிறந்ததால் நல்லவர், அவருக்கு தடைவிதிக்கக் கூடாது என்றால், தவறான தந்தைக்குப் பிறந்த மகனும் தவறானவன் என்று சொல்வீர்களா ?

2. இதேபோல் இனப்படுகொலை, நிறவெறியில் ஈடுப்பட்ட பல நாடுகளை சர்வேதேச அரங்கம் நிராகரித்திருப்பதற்கு தேவைக்கு அதிகமாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்கா அணியை 22 வருடங்கள் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதையை உலகம் அறியும்.

இப்போது தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை சங்ககராவிற்கு எதிரானதென்றால், தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்ட தடை அந்த பதினோரு வீரர்களுக்கு மட்டுமே எதிரான தடை, நாட்டிற்கு எதிரானதல்ல என்பீர்களா ? இல்லை என்றால் உங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

3. தென் ஆபிரிக்க மக்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் அல்ல. இருந்தும் நிறவெறி பிடித்த அந்த நாட்டோடு இந்திய அணியை அந்த காலகட்டத்தில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா ?

4. தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் ஈழப் பிரச்னையை இங்கு பேச வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன். அப்படியானால் நீங்கள் இதுவரை எழுதியது தமிழகத்தைப் பற்றி மட்டும் தானா ? வேறு நாடுகளைப் பற்றி எழுதியதே இல்லையா ? சூழலுக்கேற்ற வேடம் ஏன் ?

5. மற்ற இலங்கை வீரகளுக்கான தடையைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், சன் ரைசர் சங்ககராவைப் பற்றிமட்டும் பேசுவது ஏன் ? (அவரின் அப்பா நல்லவர் என்பதாலா ? இல்லை சன் ரைசர் என்பதாலா ?). இதில் பெருத்த உள்நோக்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன.

6. சில விதமான தடைகள் மூலமே, ஒரு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அரங்கம் அடிபணிய வைக்க முடியும் என்பதை பாமரனும் அறிவான், இனபடுகொலை செய்த அரசை அடிபணியவைக்க இது துளியேனும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

7. ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழர்கள்தான் அவர்களுக்கு அசல் எதிரி என்றால், அவர்களுக்காக போராடாத நண்பர் நீங்கள் என்னத்தை வாரி வாரி நல்லது செய்துவிட்டீர்கள் ? அவர்களுக்கு எதிராக எழுதுவதா ? இல்லை உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா ?

8. ஈழத்தில் என்ன வேண்டும் என்பதை ஈழத்தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள், எத்தனை ஈழத்தமிழர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறீர்கள் ? வெளிநாடுகளில் தனி ஈழம் வேண்டும் என்று போராடும் ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இல்லை அவர்களின் வாசகம் உங்களுக்கு புரியவில்லையா ?

9. இலங்கையில் எங்களுக்கு சாப்பிட மட்டுமே வாய்திறக்க அனுமதி உண்டு எனச் சொல்லும் ஈழத்தமிழர்களை உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்குத் தெரியும். வெட்டி வசனம் பேசுவதை விட்டுவிட்டு அவர்களோடு பேசிப்பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.

முறைப்படி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தடை கோரியது தமிழர்கள் செய்த தவறு என்று இப்போது எனக்குப்படுகிறது.

பல ஆண்டுகளாக எழுதும் நீங்கள், சற்று அடிப்படையை ஆராய்ந்து எழுதுங்கள். அரசியல் விமர்சகர் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இஷ்டத்திற்கு விமர்சிக்கலாம் என்பதல்ல. இனியேனும் உங்கள் உள்நோக்கத்தை ஓரம் கட்டிவிட்டு உண்மையை எழுத முயற்சி செய்யுங்கள்.

நன்றி !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_26.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Thu May 02, 2013 10:41 pm

இல்ல அண்ணே... தனியாக அவர் பக்கம் வைத்திருக்கவில்லை மற்றும் அவர் எனது நண்பர் பட்டியலிலும் இல்லை...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by சதாசிவம் Fri May 03, 2013 10:20 am

கூடங்குள பிரச்சனையில் கரப்பான்பூச்சி கதை சொல்லும் பொழுதே இவர் அழகாக கதை எழுதுபவர் என்று எண்ணம் வந்தது. பல பிரச்சனைகளை விமர்சனம் செய்யும் இவர் ஊகங்கள், வெறும் அனுமானம், பிரபலங்களின் சாதாரண கருத்துகளை பிரபல செய்திகளாக வெளியிடும் பத்திரிக்கை தர்மத்தை பற்றியும், உதவாக்கரை பத்திரிகையாளர்களைக் குறித்தும் ஏன் விமர்சிப்பதில்லை..


சதாசிவம்
எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by பார்த்திபன் Fri May 03, 2013 11:52 am

சரியான கேள்விகள் அகல். உங்களைப் போன்று நிறைய நண்பர்கள் முகநூலில் ஞானியின் இந்த நிலைக்குக் காட்டமாகப் பதில் அளித்திருந்தார்கள். எதற்குமே அவரிடமிருந்து உருப்படியான பதில் இல்லை. திரு.ஞானியைப் பொருத்தவரைத் தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பதில் அதி தீவிரமாக இருப்பவர், அது குரங்காக இருந்தாலும் கூட. பிறருடைய எதிர்வாதத்திலிருக்கும் நியாயங்களைப் பொறுத்துத் தன் கருத்தில் உள்ள தவறுகளைச் சரி செய்துகொள்பவனே உண்மையான விமர்சகனாக இருக்க இயலும். தான் அப்படிச் செய்தால் தனது இமேஜ் உடைந்துவிடும் என்ற மாயையின் காரணமாக ஞானி அவர்கள் எப்போதும் அதைச் செய்வதில்லை.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. - Page 2 Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum