ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

5 posters

Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by அகல் Wed Apr 24, 2013 12:46 pm

தெரியாத காரணம்

தெருவோர முனையில்,
பனித்துளிகளில்
குளித்துக் கொண்டிருக்கும்
ஒற்றை மின்சார விளக்கோடு
என்ன தகராறோ

இரவு முழுதும்
மல்லுக் கட்டியே
மாய்ந்து போனது
தட்டாரப்பூச்சி !

சொர்க்கம்

தாயின் கருவறையை
பார்த்தபின்பு
ஒரு முடிவுரைக்கு
வந்துவிட்டேன்

இருள் நிறைந்து இருப்பது
நரகமட்டுமல்ல
சொர்கமும்தான் !

இயற்கையின் பரிசு

ஏதோ பரிசளிப்பதாகச்
சொன்னாய்

பூங்காவின் ஓரத்தில்
ஒற்றை மரத்தடியே
உனக்காக காத்திருந்து
ஏமாற்றத்துடன்
எழும் நொடிப்பொழுதில்

உச்சந்தலையில்
விழுந்து
உள்ளங்கையை
வருடியது ஒரு
வெள்ளைப்பூ

ஏமாற்றவில்லை இயற்கை !

மிகையல்ல

உன் அழகை
உள்ளது உள்ளபடியே
எழுதினாலும்

அது உருவகமாகவே
தெரிகிறது
ஒரு சிலருக்கு !

கவிஞனின் காதல்

கவிதை எழுதியே
கழிகிறதென் காலம்
காதலியை அறியாமல் !

படுகொலை

முள்ளி வாய்க்காலில்
பூத்த முல்லைக்கு
கொல்லி போட்டது

பாஸ்பரஸ் குண்டுகளில்
வெடித்துச் சிதறிய
பிள்ளையின் சதையும்
பீரங்கிடம் விடுதலைபெற்ற
பிரமாண்ட தோட்டாக்களும் !

காதலி

அவள் என் முன்னே வந்தால்...

பசி மறந்து போகிறது
மனதில் ஆயிரம்
பட்டாம் பூச்சிகள் பறக்கிறது
உலகம் பிரகாசமாகிறது
சூரியன் நிலவாகிறது
கோடைகாலமும் குளிர்கிறது
கூவம் காவிரியாய்த் தெரிகிறது
என்றெல்லாம் பொய்
சொல்லத் தெரியவில்லை...

ஆனால் அவள்
என் முன்னே வந்தால்...

ஏதோ செய்கிறது !

எதார்த்தம்


கிரிக்கெட் மைதானம்
ஒளிவீசிக் கொண்டிருக்கையில்
மின்மினிப் பூச்சிகள்
விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது
கிராமத்துக் குடிசையில் !

குமரி

கொல்லைப்புறத்தில்
குடியமர்த்தப்பட்ட
அழகான ராட்சசி
அரளிப்பூ !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/14.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by பாலாஜி Wed Apr 24, 2013 1:03 pm

அனைத்தும் மிக சிறப்பு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by Ahanya Wed Apr 24, 2013 1:11 pm

அனைத்தும் அருமை அகல் அண்ணா.... அன்பு மலர்


எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by யினியவன் Wed Apr 24, 2013 1:14 pm

சிறப்பு பதிவாளர் அகல் அண்ணே - கவிதை சூப்பரன்னே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by அகல் Wed Apr 24, 2013 1:19 pm

யினியவன் wrote:சிறப்பு பதிவாளர் அகல் அண்ணே - கவிதை சூப்பரன்னே
நன்றிகள் அண்ணே... சிறப்புப் பதிவாளரா ? இது எப்பண்ணே நடந்தது (கொஞ்சநாளா ஈகரைப் பக்கம் வரல)... நானும் கவிதையா எழுதி போட்டுட்டே இருக்கேன் சிறப்பு கவிஞர் எல்லாம் தரமாட்டிங்களா ? ஹ ஹா ஹா ஹா ஹா புன்னகை ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by அகல் Wed Apr 24, 2013 1:19 pm

பாலாஜி wrote:அனைத்தும் மிக சிறப்பு சூப்பருங்க
மிக்க நன்றிகள் பாலாஜி அண்ணே...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by அகல் Wed Apr 24, 2013 1:20 pm

Ahanya wrote:அனைத்தும் அருமை அகல் அண்ணா.... அன்பு மலர்
நன்றிகள் அகன்யா...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by யினியவன் Wed Apr 24, 2013 1:21 pm

அகல் wrote:நன்றிகள் அண்ணே... சிறப்புப் பதிவாளரா ? இது எப்பண்ணே நடந்தது (கொஞ்சநாளா ஈகரைப் பக்கம் வரல)... நானும் கவிதையா எழுதி போட்டுட்டே இருக்கேன் சிறப்பு கவிஞர் எல்லாம் தரமாட்டிங்களா ? ஹ ஹா ஹா ஹா ஹா புன்னகை ...
கவிதை, கட்டுரை எழுதும் உங்களை கவிதை வட்டத்தில் அடைக்க விரும்பல, அதான் கட்டுரை சதுரம், முக்கோணம் இவற்றை கருத்தில் கொண்டு இப்படி செஞ்சுட்டோம் அகல் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by அகல் Wed Apr 24, 2013 1:23 pm

ஹ ஹா... ஆனாலும் நான் கவிதைப் பிரியன் தான்... கட்டுரைகள் அவ்வப்போது எழுதுவது புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by உமா Wed Apr 24, 2013 2:16 pm

அனைத்து கவிதைகளுமே அருமை. அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14  Empty Re: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum