ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி திருக்கல்யாணம்!

2 posters

Go down

மீனாட்சி திருக்கல்யாணம்! Empty மீனாட்சி திருக்கல்யாணம்!

Post by krishnaamma Tue Apr 23, 2013 8:53 am

மீனாட்சி திருக்கல்யாணம்! Tamil_News_large_697242

பச்சை நிறத்தில் பெண் இருக்கிறாளா! ஆம்...ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை போருக்குச் சென்றவள். மொத்தத்தில், அந்த மரகதவல்லி ஒரு சாதனைச் செல்வி. அவளுக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளை இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! அவள் அன்பால் அடக்கியாள்பவள். அவரும் அவளது அன்பில் மயங்கியிருக்கிறார். அவள் தான் அன்னை மீனாட்சி. சுந்தரேஸ்வரப்பெருமானை அவள் இன்று திருமணம் செய்ய இருக்கிறாள்.
மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே! உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றாள்.
அம்மா, ""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருக்குமானால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும்,'' என்றாள் அந்தப்பெண்.
மீனாட்சி மனமுவந்து அந்த வரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா' என்றால் "தங்கம்'. தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை.
அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் "பொதிகை மலை' தான் சின்னமாக இருந்துள்ளது. "மலையத்துவஜனை' "மலை+ துவஜன்' என்று பிரிப்பார்கள். "துவஜம்' என்றால் "கொடி'. "மலைக்கொடியை உடையவன்' என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும்.
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு "தடாதகை' என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர்.
அப்போது, அசரீரி ஒலித்தது.
""மகனே! கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும்,'' என்றது.
அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், "சுந்தரேஸ்வரர்' என பெயர் பெற்றார். "சுந்தரம்' என்றால் "அழகு'. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை "சுந்தர பாண்டியன்' என மக்கள் அழைத்தனர்.
தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர்.
மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளித்திருக்கிறாள் மீனாட்சி!

இன்றய செய்தி மதுரை:மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெறுகிறது.திருக்கல்யாணம் காலை 8.17 மணிக்கு மேல் 8.41 மணிக்குள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.இதை நேரில் காண இலவச அனுமதியும், ரூ.500, ரூ.200 கட்டண அனுமதிச் சீட்டும் அளிக்கப்படடுள்ளது.திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொள்கிறார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெறுகிறது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீனாட்சி திருக்கல்யாணம்! Empty Re: மீனாட்சி திருக்கல்யாணம்!

Post by பாலாஜி Tue Apr 23, 2013 11:43 am

பகிர்வுக்கு நன்றி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum