ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80

Go down

ஈகரை தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80

Post by arasanrl Sun Apr 21, 2013 11:49 am

தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80 %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர், "பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகி, கனமான வார்த்தைகளால் பேசினார். "இந்தப் பூமியைப் போலவே, பாவகர காரியங்கள் உடனே பலனளிக்காது! ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அழிக்கும். அந்தக் கனி (பலன்) தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும்.

ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது. தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்து தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கரசின் பேரனான, அந்தப் பிராமணன் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது. ஓ அசுரர் தலைவனே, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்கிறாயா? உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை லேசாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்." என்றார்.

அதற்கு விருஷபர்வன், "ஓ பிருவின் மைந்தரே, நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே, என்னிடம் கருணையோடு இருங்கள். எங்களைத் துறந்து நீர் செல்வதாயிருந்தால், நாங்கள் மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுதான். நிச்சயமாக நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது." என்றான்.

சுக்ரன், "ஓ அசுரனே, நானே அசுரர்களின் செல்வத்திற்குத் தலைவன் என்பது உண்மையாக இருப்பின், எனது மகள் தேவயானியிடம் சென்று அவளை சாந்தப்படுத்து." என்றார்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "இப்படி விருஷபர்வன் காவியரிடம் சொன்னதும், அவர் தேவயானியிடம் சென்று அனைத்தையும் சொன்னார். அதற்கு தேவயானி விரைவாக பதிலளித்தாள். "ஓ பார்கவரே, நீரே அசுர மன்னனின் தலைவராகவும், அவனது செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் இருப்பின், மன்னனே இங்கு வந்து என்னிடம் அப்படிச் சொல்லட்டும்" என்றாள். அதன்பிறகு விருஷபர்வன் தேவயானியிடம் வந்து, "ஓ இனிமையான புன்னகையுடைய தேவயானி, நீ எதை விரும்பினாலும், அது எவ்வளவு கடினமாக இருப்பினும், அதை உனக்குக் கொடுக்கிறேன்." என்றான்.

தேவயானி, "நான் சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாளாக வேண்டும் என்று விரும்புகிறேன்! எனது தந்தை என்னை எங்கு அளிக்கிறாரோ (திருமணம் செய்து கொடுக்கிறாரோ) அங்கும் அவள் என்னைத் தொடர வேண்டும்." என்று பதிலுரைத்தாள்.

விருஷபர்வன் தனது பணியாள்மங்கை ஒருத்தியிடம், "நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு கொண்டு வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்." என்று கட்டளையிட்டான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "அந்தப் பெண் பணியாள் சர்மிஷ்டையிடம் சென்று, "ஓ இனிமையான சர்மிஷ்டா, உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வா. தேவயானியின் உந்துதலால் அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே, நீ தேவயானி விரும்பியதைச் செய்ய வேண்டும்." என்றாள். சர்மிஷ்டை, "தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் உந்துதலால் சுக்ரன் என்னை அழைக்கிறார். எனது தவறால், சுக்ரன், தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு அகலக்கூடாது." என்றாள்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "தனது தந்தையால் கட்டளையிடப்பட்ட சர்மிஷ்டை, தனது தந்தையின் மண்டபத்தை விட்டு ஆயிரம் மங்கையருடன் விரைவாக ஒரு பல்லக்கில் வந்தாள். அவள் தேவயானியை அணுகி, "ஆயிரம் மங்கையருடன், நான் உனது பணியாளாக இருக்கிறேன். உன்னை உனது தந்தை எங்கு அளிக்கிறாரோ அங்கும் உன்னைத் தொடருகிறேன்." என்றாள். தேவயானி, "நான், உனது தந்தையின் புகழைப் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, இரந்துண்டு வாழும் ஒருவரின் மகள் ஆயிற்றே. நீயோ புகழப்படுபவள். நீ எப்படி எனக்குப் பணியாளாக இருக்க முடியும்?" என்றாள்.

சர்மிஷ்டை, "துன்பத்தில் உழலும் உறவினர்களுக்கு ஒருவன் அவனாலான எல்லா உதவியையும் செய்ய வேண்டும். ஆகையால், நான் உனது தந்தை உன்னை எங்கு கொடுக்கிறாரோ அங்கும் தொடர்வேன்." என்றாள்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "ஓ மன்னா, சர்மிஷ்டை இப்படி தேவயானியிடம் பணியாளாக இருப்பதாக உறுதியளித்ததும், தேவயானி தனது தந்தையிடம், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நான் திருப்தியடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன்! உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன்!" என்றாள்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "அந்த பெரும் நற்பெயர் பெற்ற பிராமணர்களில் சிறந்தவர், தனது மகளால் இப்படிச் சொல்லப்பட்டதும், அசுரர் தலைநகருக்குள் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார். அவரை தானவர்கள் பெருமதிப்புடன் வழிபட்டனர்.

இந்தப் பதிவை எனது வலைப்பூவில் காண தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80


javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013

http://mahabharatham.arasan.info

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum