ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

5 posters

Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by சிவா Sat Apr 20, 2013 10:32 am



‘தினத்தந்தி’ பத்திரிகை அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், நேற்று இரவு 9.55 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச் சடங்குகள், இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.

‘தினத்தந்தி’ அதிபரும், விளையாட்டுத் துறையில் அகில இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.55 மணிக்கு அவர் காலமானார்.

இறுதிச்சடங்கு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் உடல், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் நடைபெறுகிறது.

வாழ்க்கை குறிப்பு

தமிழ்ப் பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர்; தமிழ்நாட்டில் மாலைப் பத்திரிகைகள் தோன்றுவதற்கு முன்னோடி; இந்தியாவிலேயே அதிக வாசகர்களைக் கொண்ட‘‘நம்பர் 1’’ நாளிதழாகத் திகழும் ‘‘தினத்தந்தி’’யின் அதிபர்; விளையாட்டுத் துறையில், இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்தியவர். – இப்படி பல பெருமைகளுக்கு உரியவராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன். இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், பிறந்த போதே வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர் என்று கூறலாம். ஆம்; இவருடைய தந்தையார் தமிழ்ப் பத்திரிகை உலகில் மறுமலர்ச்சியையும், பெரும் திருப்பத்தையும் உண்டாக்கிய அமரர் சி.பா.ஆதித்தனார் எம்.ஏ., பார்–அட்–லா. அவர்கள்.

மாணவப் பருவம்

ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராக, 1936 செப்டம்பர் 24–ந் தேதி பா.சிவந்தி ஆதித்தன் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின், மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, “பி.ஏ.’’ பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக (சார்ஜண்ட் மேஜர்) நியமிக்கப்பட்டார். சிறந்த வீரர் (கேடட்) விருது பெற்றார்.

பத்திரிகைத் துறையில் கடும் பயிற்சிகள்


சி.பா.ஆதித்தனார், 1942–ல் ‘‘தினத்தந்தி’’யைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் ஈடுபட சிவந்தி ஆதித்தன் விரும்பினார். அதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சி.பா.ஆதித்தனார், பத்திரிகைத் துறைக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்தார்.

அந்தப் பயிற்சிகள் மிகக் கடுமையாக இருந்தன. அதிபரின் மகனாக இருந்தபோதிலும், அச்சுக் கோர்ப்பவராக – அச்சிடுபவராக – ‘‘பார்சல்’’ கட்டி அனுப்புகிறவராக – பிழை திருத்துபவராக – நிருபராக – துணை ஆசிரியராக (பத்திரிகையின் அனைத்து துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். தொழிலாளியுடன் தொழிலாளியாக, பத்திரிகையாளர்களுடன் பத்திரிகையாளராக வேலை பார்த்தார். ஒரு சிறந்த பத்திரிகையாளராக பட்டை தீட்டப்பட்ட பிறகு, நிர்வாகத் துறையிலும் பயிற்சி பெற்றார்.

‘தினத்தந்தி’ நிர்வாகம்


பா.சிவந்தி ஆதித்தனிடம் 1959–ம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை (டைரக்டர்) ஆதித்தனார் ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. சிவந்தி ஆதித்தனின் நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து வெளிவருகிறது. அதிக விற்பனையுள்ள தமிழ் நாளிதழ் என்ற பெருமையை 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல. இந்தியாவிலேயே அதிக வாசகர்கள் (1 கோடிக்கு மேல்) கொண்ட ‘நம்பர் 1’ நாளிதழாக ‘தினத்தந்தி’ திகழ்கிறது.

கல்விப்பணி

திருச்செந்தூரில் ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவுக்கு சிவந்தி ஆதித்தன் உயர்த்தினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி யியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவன தலைவராகவும் இருந்து வந்த சிவந்தி ஆதித்தன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

டாக்டர் பட்டம்

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23–ந்தேதி ‘டாக்டர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995–ம்ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004–ம் ஆண்டி லும், சென்னை பல்கலைக்கழகம் 2007–ம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982–ம் ஆண்டும், 1983–ம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

கோவில் பணி

தமிழ்நாட்டில், ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தன் செய்துள்ளார். இந்த திருப்பணிகளின் சிகரமாக திகழ்வது, தென்காசி காசிவிசுவநாதர் கோவில் ராஜ கோபுரத்தை கட்டியதாகும். 200 ஆண்டுகள் மொட்டை கோபுரமாக இருந்த இந்த கோபுரத்தை, 178 அடி உயரத்துக்கு வானளாவும் ராஜகோபுரமாக கட்டி 25–6–1990 அன்று குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.

விளையாட்டு

விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் டாக்டர் சிவந்தி ஆதித்தன். 1978–ம் ஆண்டு டிசம்பரில், தாய்லாந்து நாட்டு தலைநகரான பாங்காக்கில் நடைபெற்ற 8–வது ஆசிய விளையாட்டு போட்டிக்கு சிவந்தி ஆதித்தன் தலைமையில் சென்ற இந்திய அணி, 11 தங்க பதக்கங்களையும், 11 வெள்ள பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் (மொத்தம் 28 பதக்கங்கள்) வென்றது.

இதுவரை, இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைத்தது இந்தப் போட்டியில்தான். சிறந்த விளையாட்டு வீரரான சிவந்தி ஆதித்தன், துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்றுள்ளார். அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000–வது ஆண்டு நவம்பர் 3–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு விளையாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்து வந்த சிவந்தி ஆதித்தன், விளையாட்டு துறைக்கான உலக வரைபடத்தில் இந்தியாவை ஆழமாக பதிவு செய்தவர் என்று கூறினால், அது மிகையல்ல.

பத்மஸ்ரீ விருது

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008–ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

உலக பயணம்

சிவந்தி ஆதித்தன், பல முறை உலகை வலம் வந்தவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அவர் பல முறை சென்று வந்துள்ளார்.

தினத்தந்தி


தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by soplangi Sat Apr 20, 2013 12:31 pm

சென்னை

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனின் மரணம், பத்திரிகைத் துறை மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பத்திரிகை படிக்கும் பழக்கம்

தினத்தந்தி நாளிதழின் அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19–ந் தேதி (நேற்று) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்.

இவர் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

பேரிழப்பு

எளிமையானவரும் பழகுவதற்கு இனிமையானவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனின் மறைவு பத்திரிகைத் துறை மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-- தினத்தந்தி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by soplangi Sat Apr 20, 2013 12:32 pm

சென்னை

மறைந்த தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் உடலுக்கு இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் மகனும், தினத்தந்தி இயக்குனருமான பால சுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கருணாநிதியுடன் டி.ஆர். பாலு எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோரும்அஞ்சலி செலுத்தினார்கள்.

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அனிதா ராதா கிருஷ்ணன், பூங்கோதை, முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்,பண்ருட்டி ராமசந்திரன் மற்றும் எம்.எல்.ஏக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பட அதிபர்கள் ஏவி.எம். சரவணன், அபிராமி ராம நாதன், இசை அமைப்பாளர் இளையராஜா, ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், ராமராஜன், நெப்போலியன், டி.ராஜேந்தர், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், ,நடிகை குஷ்பு,சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாரதீய ஜனதா தேசிய ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன்.புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளன், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி, வசந்த் அன்கோ வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், ராயபுரம் மனோ, மயிலை பெரியசாமி, மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச் செயலாளர் இசக்கிமுத்து. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய கைப்பந்து சங்க தலைவர் முருகன், சித்திரை பாண்டியன், கராத்தே உசைனி. முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால், கமலிஸ்ரீபால், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

- தினத்தந்தி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:35 pm

செய்திகள் எப்படியோ - அது வேறு விஷயம்.

கிராமம் கிராமமாக, டீக் கடை டீக்கடையாக செய்திகளை கொண்டு சேர்த்தது இவரின் மிகப் பெரிய சாதனை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:38 pm

இந்த சித்திரையில் நிறையா நிரந்தர நித்திரைகள் அழுகை
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by ரா.ரா3275 Sat Apr 20, 2013 6:13 pm

சாமான்யத் தமிழனுக்கேன்றே தனித் தமிழ்நடை உருவாக்கிய ஒரே-முதல் பத்திரிகை தினத்தந்தி.

அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் எப்படி இருந்தாலும் தமிழனுக்காக குரல் கொடுப்பதில் பின்வாங்காதவர் தன் பத்திரிகை மூலம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.


தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் 224747944

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Rதினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Aதினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Emptyதினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Rதினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம் Empty Re: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட அதிபர்-டைரக்டர் ரகுநாதன் மரணம்
» மொரீஷியல் துணை அதிபர் அங்கிடி வீரய்யா செட்டியார் மரணம்
» உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum