ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

5 posters

Go down

ஈகரை மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by arasanrl Fri Apr 19, 2013 9:02 pm

மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Mahabharathamwrapper1

முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவில் நான் மொழி பெயர்த்து வைத்திருக்கும் பகுதிகளின் பிடிஎஃப் வடிவ மின்னூலை நான் இங்கு விருப்பமுள்ளோர் படிப்பதற்காக பதிவிறக்கத்திற்காகத் தருகிறேன்.

இந்த மின்னூலை மூன்று வடிவங்களில் தருகிறேன்.

இந்த கோப்பு படங்களுடன் கூடிய பதிப்பு, கோப்பு நிறை அதிகமாக (7 MB) இருக்கும். கணினி மற்றும் இணைய வேகம் குறைந்தோர், இதைப் பதிவிறக்க சிரமமாக இருக்கும். ஆனால் இதைப் பதிவிறக்கம் செய்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

படங்களுடன் கூடிய, நிறை அதிகமான - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (7 MB)

இணைய வேகம் குறைந்தோர் கீழ்க்கண்ட இரு லிங்குகளில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

i. படங்களற்ற, நிறை குறைந்த - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (542 KB).
படங்களற்ற, நிறை குறைந்த - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (542 KB)

ii. கருப்பு வெள்ளையாக அச்செடுத்துப் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மின்நூல் A4 தாளில் இரண்டாகப் பிரித்து அச்சடிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இருபக்கமாக அடுக்கப்பட்ட - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (509 KB)
இருபக்கமாக அடுக்கப்பட்ட - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (509 KB)மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Mahabharatham+Wrapper1


Last edited by arasanrl on Fri Apr 19, 2013 9:13 pm; edited 2 times in total (Reason for editing : படம் சேர்ப்பதற்காக மற்றும் வலைப்பூ முகவரி இடுவதற்காக)
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013

http://mahabharatham.arasan.info

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by யினியவன் Fri Apr 19, 2013 9:45 pm

வருக வருக அரசன் - வரவேற்கிறோம் ஈகரைக்கு

நல்ல பகிர்வு சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by Rangarajan Sundaravadivel Sat Apr 20, 2013 7:34 am

பதிவேற்றத்துக்கு நன்றி தோழரே, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் நான்கு வேதங்களையும் மொழிபெயர்த்துத் தாருங்கள்.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by krishnaamma Sat Apr 20, 2013 9:01 am

நன்றி நண்பரே ! ஆனால் படிப்பவர்கள் மகா பாரதத்தை தொடர்ச்சியாக படிக்க கூடாது , குறைந்த பக்ஷம் சர்கமாவது மாற்றி மாற்றி படிக்கணும் என்பார்கள். இல்லாவிட்டால் யுத்தம் வரும் என்பது பெரியவர்கள் வாக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by சிவா Sat Apr 20, 2013 10:40 am

தரவிறக்கம் செய்து கொண்டேன் நண்பரே! மிக்க நன்றி!


மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by arasanrl Sat Apr 20, 2013 7:56 pm

@Krishnaamma : நண்பரே, எது மூட நம்பிக்கை என்பதைப் பகுத்தறிந்து படிப்பதே நலம். நீங்கள் குறிப்பிடும் இந்த வரிகள் மூடநம்பிக்கை என்பது எனது நம்பிக்கை. தொடர்ச்சியாக படிப்பதே சிறந்தது.

@சிவா, ரங்கராஜன், யினியவன், கிருஷ்ணாம்மா: பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நண்பர்களே!

@ரங்கராஜன்: நண்பரே, இந்த மொழிபெயர்ப்பை முடிப்பதே பெரிய பணி என்று நினைக்கிறேன். நான் பதிவிறக்கத்திற்குக் கொடுத்திருக்கும் இந்தக் கோப்பு, முழு மகாபாரதத்தில் 5%தான். முழு மஹாபாரதத்தை மொழிபெயர்க்க எவ்வளவு நாள் ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். மேலும் நான் மொழிபெயர்ப்பது பாமர மொழியில். வேதங்களை மொழிபெயர்க்க சிறந்த இலக்கியவாதிகளால்தான் முடியும் என்று நினைக்கிறேன்.



javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013

http://mahabharatham.arasan.info

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by யினியவன் Sat Apr 20, 2013 8:00 pm

நல்ல முயற்சி அரசன் - தொடருங்கள் உங்கள் பணியை. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by arasanrl Fri May 03, 2013 7:24 am

தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு | ஆதிபர்வம் - பகுதி 85


(சம்பவ பர்வ தொடர்ச்சி)



வைசம்பாயணர் சொன்னார், "அந்த சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, புருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, மிகவும் திருப்தி கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களை காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான். ஆகையால் பெரும் இன்பத்தை பெற்றான். ஓ மன்னா, அறத்திற்கெதினான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை. தேவர்களையும், பித்ரிக்களையும் தனது வேள்விகளாலும் சிரதங்களாலும் மகிழ்வித்தான், ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லா குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டைகளைக் கொடுத்தான். யயாதி, குடிமக்களின் எல்லா பகுதிகளையும் திருப்திப்படுத்தி அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான். சிம்மத்தின் வீரத்தைக் கொண்ட அந்த ஏகாதிபதி, தனது இளைமையைக் கொண்டு தனது கட்டுக்குள் இருக்கும் எல்லா இன்பங்களையும் அனுபவித்தான், அறம் சார்ந்து எல்லையற்ற மகிழ்வை அடைந்தான்.
தனது விருப்பதுக்குட்பட்ட அனைத்தையும் அவன் அனுபவித்தான். அவன் எப்போது தனது ஆயிரம் வருட நிறைவு வரப்போகிறது என்று நினைத்தானோ அப்போதே துன்பப்பட்டான். காலத்தின் மர்மங்களை அறிந்த அந்த மன்னன், தகுந்த காலங்களையும் கஷ்தங்களையும் கவனித்து வைத்து, சில நேரங்களில் விஸ்வச்சியுடன் இந்திரனின் அழகிய நந்தவனத்திலும், சில நேரங்களில் அலகாவிலும் (குபேரனின் நகரத்தில்), சில நேரத்தில் வடக்கே இருக்கும் மேரு மலையின் உச்சியிலும் விளையாடினான். அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது புருவை வரவழைத்து அவனிடம், "ஓ எதிரிகளை அடக்குபவனே, ஓ மகனே, உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன். இருந்தாலும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் திருப்திகொள்வதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்படட்டால் வளர்வது போல அது வளர்கிறது. ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், மிருகங்கள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனி அதிபதியாக இருந்தாலும், அவன் திருப்தி கொள்ள மாட்டான். ஆகையால், இன்பத்திற்கான தாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.



உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்த தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது. நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்த தாகம் தோல்வியுறுவதில்லை. அந்த தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும். இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது. ஆகையால், வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்த தாகத்தைக் கைவிடப்போகிறேன். ஓ புரு, உன்னிடம் நான் மிகுந்த திருப்திகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள். நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்." என்றான்.



வைசம்பாயணர் தொடர்ந்தார், "பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் புரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். யயாதி தனது இளைய மகனான புருவை அரியணையில் அமற்ற விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் மன்னனிடம், "ஓ மன்னா, தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தை புருவுக்குக் கொடுப்பீர்? நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திரஹ்யுவும் அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே புரு இருக்கிறான். மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்." என்றனர்.



யயாதி, "பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே, நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேளுங்கள். தனது தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு. தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நல்லதில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர். யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திரஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன். புரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன்.



ஆகையால், எல்லோருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக புரு எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்த நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் அவன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும். ஆகையால், நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், புரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்." என்றான்.



அதன் பிறகு அந்த மக்கள், "அது உண்மைதான். ஓ மன்னா, பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன். ஆகையால், உமக்கு நன்மையைச் செய்த புரு உமது முடியைத் தாங்க தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை." என்றனர்.



வைசம்பாயணர் தொடர்ந்தார், "மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன், அரியணையில் புருவை அமர்த்தினான். உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தை புருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும் துறவிகளுடனும் கானகமேகினான்.



யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திரஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள். புருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி, நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்." என்றார்.

விடுபட்ட பதிவுகளுக்கும், இதற்கடுத்த பதிவுகளுக்கும் முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவிற்கு வந்து படியுங்கள்.


javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013

http://mahabharatham.arasan.info

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by arasanrl Mon May 06, 2013 8:21 pm

மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான் யயாதி | ஆதிபர்வம் - பகுதி 93
(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வசுமத், "ஓ மன்னா, நான் ஓஷதஸ்வாவின் மகன் வசுமத், எனது அறத்தகுதிகளின் கனிகளை நான் அனுபவிக்க எனக்கு ஏதாவது உலகங்கள் சொர்க்கத்திலோ அல்லது அந்தரத்திலோ இருக்கின்றனவா என்று நான் உம்மைக் கேட்கிறேன். ஓ உயர் ஆன்மாவே, நீர் அனைத்து நல்லுலகங்களையும் அறிந்தவராயிற்றே." என்றான்.

யயாதி, "அந்தரத்தில் எத்தனை பகுதிகள் இருக்கின்றனவோ அத்தனை பகுதிகளுடன் சேர்த்து, பூமி, மற்றும் சூரியனால் ஒளியூட்டப்படும் பிரபஞ்சத்தின் பத்து புள்ளிகள் அளவு உலகங்கள் உனக்கு சொர்க்கத்தில் உள்ளன." என்றான்.


வசுமத், "அவற்றை நான் உமக்குத் தருகிறேன். எனக்கான அந்தப் பகுதிகள் அனைத்தும் உமதாகட்டும். ஆகையால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், மொத்தமாக விழ மாட்டீர். ஓ ஏகாதிபதி, அவற்றைப் பரிசாகப் பெறுவது உமக்குச் சரியாக படவில்லையெனில், ஒரு புல்லைக் கொடுத்து (புல்லை விலையாகக் கொடுத்து) வாங்கிக் கொள்ளலாமே?" என்றான்.

யயாதி, "நான் எதையும் வாங்கியதாகவோ, அநியாயமாக விற்றதாகவோ எனக்கு நினைவில்லை. இப்படி எந்த மன்னர்களாலும் செய்யப்பட்டதில்லை. அகையால், நான் எப்படி அதைச் செய்ய முடியும்?" என்றான்.

வசுமத், "ஓ மன்னா, நீர் அப்படி விலை கொடுத்து வாங்குவது சரியல்ல என்று கருதினால், என்னுடைய பரிசாக அதை ஏற்றுக் கொள்ளலாமே. நான் எக்காரணம் கொண்டும் அந்த உலகங்களுக்குச் செல்ல மாட்டேன். ஆகையால், அவை உமதாகட்டும்." என்றான்.

அதன்பிறகு, சிபி என்பவன் மன்னனிடம் பேசினான், "ஓ மன்னா, நான் உசினராவின் மைந்தன். எனது பெயர் சிபி. ஓ தகப்பனா, நான் மகிழ சொர்கத்திலோ, அந்தரத்திலோ உலகங்கள் இருக்கின்றனவா? ஒருவன், தனது அறத்தகுதிகளின் கனியால் மகிழக்கூடிய அனைத்து உலகங்களையும் அறிந்தவர் நீர்." என்றான்.

யயாதி, "நீ உனது பேச்சாலோ எண்ணத்தாலோ, நேர்மையானவர்களையும் அறம்சார்ந்தவர்களையும் அவமதித்ததில்லை. நீ மகிழ்வதற்காக எண்ணற்ற மின்னல் போல ஒளிரும் உலகங்கள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றன." என்றான். சிபி, "அவற்றை விலை கொடுத்த வாங்குவது தவறு என்று நீர் கருதினால், அவற்றை நானே கொடுக்கிறேன். அவற்றையெல்லாம் நீரே எடுத்துக் கொள்ளும். ஓ மன்னா, நான் அவற்றை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஞானமுள்ளோர் அமைதியாக இருக்க முடியாத அந்த உலகங்களை நான் விரும்ப மாட்டேன்." என்றான்.

யயாதி, "ஓ சிபி, இந்திரனின் வீரத்தைப் போல வீரமாக இருந்து, அந்த கணக்கற்ற உலகங்களை நிச்சயமாக நீயே அடைந்தாய். ஆனால், நான் மற்றவர்களால் கொடுக்கப்படும் உலகங்களை விரும்பவில்லை. ஆகையால், நான் பரிசுகளை ஏற்பதில்லை." என்றான்.

அஷ்டகன், "ஓ மன்னா, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் அறங்களால் அடைந்த நல்லுலகங்களை விருப்பப்பட்டு உமக்கு கொடுக்க முன்வந்தோம். நீர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவற்றை உமக்கே அதை அளித்துவிட்டு, பூமி நரகிற்குள் இறங்கப் போகிறோம்." என்றான்.

யயாதி, "உண்மை விரும்பும் ஞானமுள்ளவர்களே, எனக்குத் தகுதியானதை எனக்குக் கொடுங்கள். நான் இதுவரைச் செய்யாததை என்னால் செய்ய இயலாது." என்றான்.

அஷ்டகன், "நாங்கள் காணும் அந்த ஐந்த தங்க ரதங்களும் யாருடையவை? அந்த உலகங்களுக்குச் சென்று வரும் மனிதர்கள் அதில் பயணப்படுவார்களா?" என்று கேட்டான்.

யயாதி, "நெருப்பைப் போலப் பளபளக்கும் புகழ்வாய்ந்த அந்த ஐந்து தங்க ரதங்களும் உங்களை நிரந்தர அருள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றன." என்றான்.

அஷ்டகன், "ஓ மன்னா, அந்த தங்க ரதங்களில் நீரே சவாரி செய்து சொர்கத்தை அடைந்து கொள்ளும். எங்களால் காத்திருக்க முடியாது. நாங்களும் உம்மைப் பின்தொடர்கிறோம்." என்றான்.

யயாதி, "நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செல்லலாம். நிச்சயமாக நாம் அனைவரும் சொர்க்கத்தை வென்றுவிட்டோம். சொர்கத்திற்கான புகழ்வாய்ந்த வழி கண்ணுக்குப் புலப்படுவதைப் பாருங்கள்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "பிறகு அந்த அனைத்து ஏகாதிபதிகளும் அந்த ரதங்களில் ஏறி சொர்கத்திற்குச் சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டு, முழு அந்தரத்தையும் தங்கள் அறத்தின் புகழால் ஒளிரச் செய்தனர்.

அஷ்டகன், அமைதியைக் கலைத்து, "நான் எப்போதும் இந்திரனை எனது சிறந்த நண்பனாக கருதினேன். ஆகையால், நான் மற்றவர்களுக்கு முன் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், எப்படி உசினராவின் மைந்தன் சிபி, நம்மைப் பின்தங்க வைத்து சென்றுவிட்டான்?" என்று கேட்டான்.

யயாதி, "உசினராவின் மைந்தன் அவனுக்கான எல்லாவற்றையும் துறந்து பிரம்மனின் உலகை அடைந்துவிட்டான். ஆகையால், அவனே நம்மில் முன்னவன். அதுபோக, சிபியின் ஔதாரியம், துறவு, உண்மை, அறம், அடக்கம், மன்னிக்கும் தன்மை, இனிமை, நல்லெண்ணம் செய்வதில் விருப்பம், ஆகியவை எவராலும் அளக்கமுடியாத மிகப் பெரும் செயல்களாகும்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அஷ்டகன், தனது ஆர்வ மேலீட்டால், மற்றுமொறு இந்திரனைப் போன்ற தனது தாய்வழி பாட்டனானவனிடம், "ஓ மன்னா, நான் கேட்கிறேன். உண்மையைச் சொல்லும். எங்கிருந்து நீர் வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? வேறு யாரேனும் பிராமணரோ க்ஷத்திரியரோ, பூமியில் நீர் செய்ததைப் போல செய்திருக்கிறார்களா?" என்று கேட்டான். யயாதி, "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் நகுஷனின் மைந்தன் யயாதி. நான் புருவின் தந்தை. நான் முழு பூமியின் தலைவனாக இருந்தேன். நான் உடைகளையும், வேள்விக்கான நூறு அழகான குதிரைகளையும் பிராமணர்களுகுக் கொடுத்தேன். அவற்றைப் போன்ற அறச்செயல்களுக்காக தேவர்கள் மகிழ்ந்து நன்மை செய்தனர். மேலும், இந்த முழு பூமியையும், அதன் குதிரைகள், யானைகள், பசுக்கள், தங்கள், அனைத்து விதமான செல்வங்கள் நூறு அற்புதங்களையுடைய பசுக்கள் ஆகியவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்தேன். பூமியும் அந்தரமும் எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே நிலைத்திருக்கின்றன. எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே மனிதர்களின் உலகில் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு போதும் பொய் பேசியதில்லை. இதன் காரணமாகவே ஞானுமுள்ளோர் வாய்மையைப் புகழ்கின்றனர். ஓ அஷ்டகா, நான் உனக்கும், பிரதரதனாவுக்கும் வசுமத்துக்கும் சொன்னதெல்லாம் உண்மையே. தேவர்கள் முனிவர்கள் ஆகியோர் இந்த வாய்மையின் காரணமாகவே புகழப்படுகிறார்கள் என்பதை நிச்சயமாக அறிவேன். எவனொருவன், நல்ல பிராமணர்களிடம் நாம் சொர்கத்திற்கு உயர்ந்ததைப் பற்றிக் களங்கமில்லாமல் உரைக்கின்றானோ அவன் நாம் செல்லும் உலகங்களையே நம்முடன் அடைவான்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காக சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு, பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்து சொர்கத்திற்கு உயர்ந்தான்.

விடுபட்ட பதிவுகளுக்கும், இதற்கடுத்த பதிவுகளுக்கும் முழு மஹாபாரதம் http://mahabharatham .arasan .info என்ற எனது வலைப்பூவிற்கு வந்து படியுங்கள்.


javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013

http://mahabharatham.arasan.info

Back to top Go down

ஈகரை Re: மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்
» மஹாபாரதம் - ஆதிபர்வம் பகுதிகள் 1 முதல் 100 இலவச பதிவிறக்கம்
» இலவச IDM 6.15 Patch பதிவிறக்கம்
» அசாதாரண விளைவுகள் கொண்ட அடோல்ப் போட்டோஷாப் CS5 அசல் பதிப்பு கீகன் & பேட்ச் உடன் இலவச பதிவிறக்கம்
» உடையார் நாவல் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை முதல் பகுதிகளை தவிர மற்றவைகளை ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum