புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
25 Posts - 3%
prajai
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_m10 ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2012 11:08 am

சிறப்புப் பாயிரம்:

தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:

நிலம் தரு திருவில்
பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின்
நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு
அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின்
எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின்
ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்

எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்தப் படிமையோனே

“நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில் அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்” என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.

நான்மறை:

சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சமஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். “நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை தைத்திரியம், பொடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர் சாமவேதமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது.

இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.

வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.

நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.

ஐந்திரம்:

ஐந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.

ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.

ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

அந்தணர் மறைத்தே:

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20 ஆம் சூத்திரம் வருமாறு:

எல்லா எழுத்தும்
வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி
உறழ்ச்சி வாரத்து
அகத்து எழுவளி இசை
அரில்தப நாடி
அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;
அஃது இவண் நுவலாது எழுந்து
புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு
நுவன்றிசினே

“(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துக்களும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால் மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ் நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும் உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன் எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும்.

அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன.” தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார். இந்தச் சூத்திரத்திற்கு வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார்.

அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார். அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.

தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் “அறவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது.

“ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்” என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.

ஓதல் - நான்கு வேதங்களையும் ஒதிக் கற்றல்.

ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.

வேட்டல் - யாகங்களைச் செய்தல்.

வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல்.

(யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).

ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல், ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.

வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.

ஓத்து:

தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் 31 வது சூத்திரம் “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான” என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169 வது சூத்திரம் வருமாறு.

நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்து என மொழிப உயர்மொழிப்புலவர்

“ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோர்த்தல் போல ஓர் இயலைச் சார்ந்த பொருட்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்” என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.

கீழ்க்கணக்கு நூல்கள்:

“அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே” என்று “இனியவை நாற்பது” நூலின் 7 வது பாடல் தெரிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். “இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை” என்று இன்னா நாற்பது நூலின் 21 வது பாடல் குறிப்பிடுகிறது. “வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது” என்பது பொருள்.

“கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே, செல்லின் இழுக்கும் இழவும் தரும்” இது “ஏலாதி” என்ற நூலில் 62 வது பாடல். இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும். பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்பது திருக்குறள் “பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்” என்பது பொருள். இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு. தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.

கே.சி. லட்சுமிநாராயணன்-கூராயுதம்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 25, 2012 12:12 pm

தமிழ் மொழயின் சிறப்பையும் தொல்காப்பியம் தோன்றிய வரலாறையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சிவா

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 26, 2012 10:54 pm

உண்மைக்கு மாறாக இந்த கட்டுரை 'திரித்து' எழுதப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 5:36 pm

ஐந்திரம் என்பது இலக்கண நூலாக இருக்க முடியாது,
காரணம்
ஒரு நூல் முதல் நூலாக இல்லாது போனால் அதற்குரிய முதல் நூலைத் தெரிவிப்பது கடன்
(உ-ம்)
கம்பன் தனது காவியத்தில்
நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் என்று முதல் நூலைக் குறிப்பிடுகின்றான்,

பாணினியின் மற்றொரு அவதாரமான பதஞ்சலி முனிவர் தாம் எழுதிய யோக சூத்திரத்தை "அத யோக அனுசாஸனம்' என்றே ஆரம்பிக்கிறார், அனுசாஸனம் என்பது வழி நூல் என்று பொருள் படும்

இதன் முதனூல் ஹிரண்ய கர்பர் செய்த யோக சாஸ்திரம். யாக்ஞ்ய வல்கிய சூத்திரத்தில் குறிப்பிடப் படும் செய்தி "ஹிரண்ய கர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன:" என்பதாகும் இதன் பொருள் முதன் முதலில் ஹிரண்ய கர்ப்பரே யோகசூத்திரம் செய்தார், அதற்கு முன் எவரும் செய்யவில்லை என்பதாகும்.

இதனையே ஸ்ரீ கிருஷ்ணரும்
"இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹம் அவ்யயம்" என்றார். இதன் பொருள் இந்த யோகத்தை முதன் முதலில் நான் விவஸ்வானுக்குச் சொன்னேன் என்பதாகும்

மேலும்
சிவனைப் பற்றியது சைவம்
விஷ்ணுவைப் பற்றியது வைஷ்ணவம்
இந்த சூத்திரத்தின் படி
இந்திரனைப் பற்றியது ஐந்திரம் என்றாதல் வேண்டும்
இந்திரன் இயற்றியதாக இருப்பின் இந்த்ரீயம் என்று இருக்க வேண்டும்
கவி எழுதியது காவியம்
பாடினி எழுதியது பாடினீயம்
காப்பியன் எழுதியது காப்பியம்

சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் கவுந்தியடிகளிடம் புண்ணிய சரவணம் பொருந்துவீராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவீர் என்றான், அதற்கு விடை இறுக்கும் முகத்தான் கவுந்தியடிகள் கப்பத்திந்திரன் காட்டியவெல்லாம் எமது மெய்ப்பாடியற்கையில் உள்ளது என்கிறார், அந்த நூல் இலக்கண நூலன்று, சமண மதத்தின் ஆன்மீக நூலாகும்

தமிழின் இலக்கண ஆழம் உடையது, வட மொழி இலக்கணம் மிக எளிதானது, ஆகவே தமிழ் இலக்கணத்திற்கு எந்த வகையிலும் வட மொழி இலக்கணம் வழிகாட்டி ஆக முடியாது, மேலும் எழுத்ததிகாரம் 102 ஆம் சூத்திரம் கூறும் வாக்கின் இலக்கணம் ரிக் வேதத்தில் உள்ளது,

இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.

இந்தப் பின்னூட்டத்தை எழுதியவர் நந்திதா அக்கா! அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் கணினியில் எழுத முடியாத நிலையில் உள்ளார்கள். இருப்பினும் அக்காவின் கருத்துக்களைக் கேட்டு அதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவரும் அன்புச் சகோதரி சௌமியாவிற்கு என் நன்றிகள்

jvlove இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:27 pm

அறியாத புதியவிடயம் நன்றி

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 7:34 pm

சிவா wrote:
இந்தப் பின்னூட்டத்தை எழுதியவர் நந்திதா அக்கா! அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் கணினியில் எழுத முடியாத நிலையில் உள்ளார்கள். இருப்பினும் அக்காவின் கருத்துக்களைக் கேட்டு அதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவரும் அன்புச் சகோதரி சௌமியாவிற்கு என் நன்றிகள்
நந்திதா அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:38 pm

சரவணன் wrote:
சிவா wrote:
இந்தப் பின்னூட்டத்தை எழுதியவர் நந்திதா அக்கா! அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் கணினியில் எழுத முடியாத நிலையில் உள்ளார்கள். இருப்பினும் அக்காவின் கருத்துக்களைக் கேட்டு அதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவரும் அன்புச் சகோதரி சௌமியாவிற்கு என் நன்றிகள்
நந்திதா அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல?
[You must be registered and logged in to see this link.]

கடவுளே இது பழையசேதியை புதுசா கேட்குற முதல்ஆளு நீங்கதான்

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 17, 2015 7:43 pm

ஈகரைச்செல்வி wrote:
சரவணன் wrote:
சிவா wrote:
இந்தப் பின்னூட்டத்தை எழுதியவர் நந்திதா அக்கா! அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் கணினியில் எழுத முடியாத நிலையில் உள்ளார்கள். இருப்பினும் அக்காவின் கருத்துக்களைக் கேட்டு அதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவரும் அன்புச் சகோதரி சௌமியாவிற்கு என் நன்றிகள்
நந்திதா அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல?
[You must be registered and logged in to see this link.]

கடவுளே இது பழையசேதியை புதுசா கேட்குற முதல்ஆளு நீங்கதான்
[You must be registered and logged in to see this link.]

பழைய செய்தியாக இருந்தாலும் , எனக்கும் புதிய செய்தியாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது .

அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல , யாராச்சும் அவரிடம் தொடர்பில் உள்ளனரா சோகம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 7:43 pm

பழைய செய்தியை இருந்தாலும் நலம் விசாரிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே! புன்னகை
நந்திதா அக்கா பற்றி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி சொல்லிட்டீங்க.. உடுட்டுக்கட்டை அடி வ

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:47 pm

ராஜா wrote:
ஈகரைச்செல்வி wrote:
சரவணன் wrote:
சிவா wrote:
இந்தப் பின்னூட்டத்தை எழுதியவர் நந்திதா அக்கா! அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் கணினியில் எழுத முடியாத நிலையில் உள்ளார்கள். இருப்பினும் அக்காவின் கருத்துக்களைக் கேட்டு அதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவரும் அன்புச் சகோதரி சௌமியாவிற்கு என் நன்றிகள்
நந்திதா அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல?
[You must be registered and logged in to see this link.]

கடவுளே இது பழையசேதியை புதுசா கேட்குற முதல்ஆளு நீங்கதான்
[You must be registered and logged in to see this link.]

பழைய செய்தியாக இருந்தாலும் , எனக்கும் புதிய செய்தியாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது .

அக்கா இப்ப நல்லா இருக்காங்களா தல , யாராச்சும் அவரிடம் தொடர்பில் உள்ளனரா சோகம்
[You must be registered and logged in to see this link.]

எனக்கு ஆள தெரியாது ஆனா ஈகரையை அறிவேன் பலகாலம்முதலே

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக