புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
பூந்தலைச் சிறு கோல் I_vote_lcapபூந்தலைச் சிறு கோல் I_voting_barபூந்தலைச் சிறு கோல் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூந்தலைச் சிறு கோல்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 9:27 pm

[/justify]பூந்தலைச் சிறு கோல் Stock-photo-parents-reading-a-book-to-their-lovely-kid-59336293
[justify]“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் புறநானூற்றுப் பாடல். பெற்றோர் இக்கடன்களை நிறைவேற்றுகின்றனரா என்றால், கடனே என்று நிறைவேற்றுகின்றனரோ என்று ஐயமே எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனது செய்முறைத் தேர்வுக்கு முந்தைய தினம் மருத்துவ மனைக்கு வருகிறான். முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிகிறது. என்ன என்று கேட்டால், படி என்று சொன்னவுடன் புத்தகத்தைக் கையில் எடுக்காத குற்றத்திற்குக் கிடைத்த தண்டனை என்கிறான். கொடுத்தவர் அவனது தந்தை.

குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே எழுதிய சட்டமாகிப் போனது. பெற்றோர்களுக்கு??? இப்போது அம்மாணவன் தந்தை என்றாலே வெறுக்கிறான். அவருக்காகவே “நான் நன்றாகத் தேர்வு எழுத மாட்டேன்” என்று வாய் திறந்து கூறுகிறான். அக்குழந்தையின் இந்தப் பிடிவாதக் குணத்திற்கு யார் பொறுப்பு? அன்பும் அரவணைப்பும் இல்லாத தாங்கள்தாம் என்பதைப் பெற்றோர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

இன்று பெருகி வரும் குழந்தைக் குற்றவாளிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களின் பெற்றோர்களும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சின்னக் குழந்தைகள் வண்ண மலர்கள். ஆம் மலர்களைப் போலவே மென்மையானவர்கள். மலர்களின் பல வண்ணம் போலவே பல எண்ணம் கொண்டவர்கள். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். மலர்களின் மணத்தையோ குணத்தையோ மருந்தை அடிப்பதால் எப்படி மாற்ற முடியாதோ அப்படிதான் குழந்தைகளின் குணத்தை அடிப்பதால் மாற்ற முடியாது. அவர்களை அவர்களின் போக்கில் விடுத்து, அன்பு காட்டி அரவணைப்பதன் மூலம் மாற்ற முடியும்.



சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் விழிப்பில்; எட்டு மணி நேரம் உறக்கத்தில்; எட்டு மணி நேரம் பள்ளியில் என்று குழந்தைகளின் இருபத்து நான்கு மணி நேரம் பகிர்வு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் குழந்தைகளின் இரண்டாம் தாய் என்றும் பெற்றோர் குழந்தைகளின் இரண்டாம் ஆசிரியர் என்றும் பொதுவாகக் கூறுவது வழக்கம். எட்டு மணி நேரம் ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளை அடிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் வீட்டில் அக்குழந்தையை எப்படி வேண்டுமானாலும் அடிக்க பெற்றோருக்கு உரிமை இருக்கிறது.

அதனால்தான், “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று கூறிக் கூறி அடிப்பது, அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது” என்று அடித்துக் கை கால்களை ஒடிப்பது, “அடியாத மாடு படியாது” என்று மாட்டை அடிப்பது போல விளாசித் தள்ளுவது “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று அன்பைக் காட்டும் சாக்கில் அடிப்பது “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்று முதுகை வளைத்து அடிப்பது “ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்” என்று கூறிப் பேயாக மாறிக் குழந்தைகளுக்குச் சூடு வைப்பது எல்லாம் ஒரு சாராரின் பழக்கமாகிப் போனது.

இவர்கள் குழந்தைகளை அடிப்பதற்கான காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒன்று மதிப்பெண், மற்றொன்று தன் குழந்தை சச்சினாக, சூப்பர் சிங்கராக, பில்கேட்சாக ஆகவேண்டும் என்னும் இவர்களின் கனவு. இவை போன்ற பேராசை பெற்றோர் அவர்கள் விரும்பும் வகையில் குழந்தை, திறன் காட்டாது இருந்து விட்டால் பல வகையில் அவர்களுக்குத் துன்பம் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகளின் பண்பில் ஏற்படும் குறைபாடு பற்றி இவர்கள் கவலை கொள்வதே இல்லை.

மேற்கூறிய இவையெல்லாம் பழமொழிகளாக இருந்தாலும் நம் மூத்த தமிழ்க் குடிகள் குழந்தைகளை அடித்ததாகவோ, சிறார் குற்றவாளிகள் இருந்ததாகவோ, சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (சிறார் சிறைச்சாலைகள்) இருந்ததாகவோ பதிவுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளை அடித்ததாகக் கூட பதிவுகள் இல்லை என்றே சொல்லலாம். குழந்தைகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அடித்ததாகவோ, சூடு போட்டதாகவோ, வீட்டை விட்டுத் துரத்தியதாகவோ, சாட்சியங்கள் நம் பண்டைய இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம்.

இது எதனைக் காட்டுகிறது? அவர்கள் குழந்தை வளர்ப்பில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆடல், பாடல், கதை என்று அவர்களை மகிழ வைத்து அதனூடாகப் பண்பை ஊட்டி வளர்த்துள்ளனர்.

பால் மணம் மாறாப் பச்சிளம் பருவத்தில் பாலைப் புகட்டியது போலவே நற்பண்பைப் புகட்டுவதற்குத் தாலாட்டுப் பாடினர். தாலாட்டில் வீரத்தையும், உறவு முறைகளையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் பாடல் வாயிலாகப் புகட்டியிருக்கின்றனர்.

அதே போல சற்று வளர்ந்த குழந்தைகளுக்குப் பெரியவர்கள் இரவில் கதைகளைக் கூறி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இன்னும் வளர்ந்து விட்டால் விளையாட்டுகளின் வழியாக நன்னெறியையும் கல்வியையும் கற்றுக்கொடுத்தனர்.

இன்று இது போலச் செய்கின்றார்களா? செய்வதற்கு நேரமிருக்கிறதா? நேரமிருந்தாலும் பெற்றோர்க்குத் தம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல மனம் இருக்கிறதா? ஒரு வேளை நேரம், மனம் இரண்டும் இருந்தாலும் கதைகளுக்கு அவர்கள் எங்கு போவார்கள்? கதை சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சித் தொடர்களைச் சொல்லும் நிலையில் அல்லவா அவர்கள் இருக்கின்றனர்.

காலையில் எழுந்தவுடன் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்க்கு மாலை நேரம் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளுடன் அமர்ந்து மகிழ்வாகப் பேசி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க முடிகிறதா? பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம். பேராசை மறுபுறம். போதுமென்ற மனமில்லாததால் பொருள் தேடி அல்லறும் நிலையில் பெரும்பாலும் இன்றைய பெற்றோர்கள் இருக்கின்றனர். அந்தப் பொருளாசைக்கும் கல்வி, கலை என்று குழந்தைகளையே காரணமாகக் காட்டுகின்றனர். அவர்களின் பொருள் தேடல், அதன் காரணமான வேலைச்சுமை, நேரமின்மை, அதனால் ஏற்படும் மனச்சோர்வு, கோபம் எல்லாவற்றுக்கும் குழந்தைகள் சுமைதாங்கிகளாகி விடுவது தவிர்க்க இயலாததாகிப் போய்விடுகிறது.

துள்ளித் திரியும் பருவத்தில் பெற்றோரது நேரமின்மையால் சிறைக்கைதிகள் போல தொலைக்காட்சி முன்போ அல்லது ஒரு தனிவகுப்பிலோ (டியூஷன்) அவர்கள் அடைக்கப் படுவதும் தவிர்க்க இயலாததாகிப் போகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் அப்பா அம்மாவைக் கண்டதும் ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு அழுது அடம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு விடுகின்றன. குழந்தைகள் அடம் பிடித்தவுடன் பொறுக்க முடியாத பெற்றோர் அடித்து விடுகின்றனர். நாள் ஆக ஆக அடிப்பார்கள். அடித்து விட்டுப் போகட்டும். அடிதானே, நாம் கேட்டது கிடைத்தால் போதும் என்னும் எண்ணம் குழந்தைகளிடம் வந்துவிடுகின்றது. இப்படி காரணம் அறியாமல் தொடங்கும் அடம் பெரியவர்கள் ஆன போதும் தொடர்கிறது.

சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.

“புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,‘

உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,

அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அவள். சொல் பேச்சு கேளாத அவள் திருமணம் ஆகித் தன் கணவனது இல்லத்தில் ஒருவேளை உண்டு ஒரு வேளை பட்டினியாக இருக்க வேண்டிய அளவு வறுமையில் வாழ்கிறாள். இருந்த போதும் வழக்கிட்டு விவாகரத்து கோராமல் இல்லறத்துக்கு இனிமை சேர்க்கிறாள். பெற்றோர் கொடுத்த செல்வத்தைக் கூட வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் என்கிறது இப்பாடல். இந்தப் பண்பு அடித்து வளர்த்தா வந்தது அப்பெண்ணுக்கு? மென்மையான அன்பில் விளைவது நற்பண்பு. அதை மட்டுமே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்ப் பார்க்கின்றனர்.

வாழ்க்கையின் ஒவ்வொரு புரிதலையும் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்தான் இவர்களின் முதல் வழி காட்டியாய் இருக்கின்றனர்..

இது வளமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் குழந்தையை அடிக்காமல் வளர்த்த காட்சி. வறுமையில் வாடும் தாய் மட்டும் என்ன அடித்தா வளர்த்தாள்? பசியால் துடித்து அழுது அடம் பிடிக்கும் குழந்தையை மறப்புலி வரும் என்று சொல்லிப் பார்க்கிறாள். நிலவைக்காட்டுகிறாள்; உன் தந்தை முகம் எப்படி இருக்கும் என்று காட்டு என்கிறாள். மனம் நொந்த அவள் அவ்வருத்தத்தைக் குழந்தையிடம் காட்டாமல் இப்படியெல்லாம் விளையாட்டுக் காட்டுகிறாள்.

அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

பொதுவாக நன்மை தீமைகளைக் கூறி வளர்ப்பது மிகச் சிறந்த குழந்தை வளர்ப்பு முறை. குழந்தைகளைக் கண்டிப்பது வேறு தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது குழந்தைகள் தவறு செய்யும் முன்பே தவறைச் செய்தவர்களுக்கு இறைவனால் சமுதாயத்தால், சட்டத்தால் கிடைக்கும் தண்டனையைக் கூறி வளர்த்தல் நல்லது.

தவறு செய்யும் குழந்தையைக் கண்டியுங்கள். அது பெற்றோர்களின் கடமை. முதலில் குழந்தை அந்தத் தவறைத் தெரியாமல் செய்கிறதா? தெரிந்து செய்கிறதா? என்பதை அறிதல் மிக மிக அவசியம். அதன் தீய விளைவை எடுத்துக் கூறுதல் நல்லது. அப்போதும் குழந்தையை அச்சுறுத்துதல் நல்லதல்ல. அன்பாகக் கூறுதல் நல்லது. தெரிந்து செய்யும் தவறுக்குக் கண்டிப்பு அவசியம். எப்படி? வன்முறைகளற்ற கண்டிப்பு அவசியம். வன்முறை என்பதும் உடலளவில் மட்டுமல்ல. குழந்தைக்கு மன அளவிலும் வன்முறயற்ற கண்டிப்பு இக்காலத்தில் தேவை என்பதையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கத் தொடங்கும் போது மனச்சிதைவு அடையும் குழந்தை பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான குற்றங்களைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தைக் கைகொள்ள வாய்ப்பாக அமைந்து விடும். எனவே பெற்றோர்களே அன்பும் அரவணைப்பும் உதவுவது போல அடி ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!




பூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Tபூந்தலைச் சிறு கோல் Hபூந்தலைச் சிறு கோல் Iபூந்தலைச் சிறு கோல் Rபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:56 am

உங்களின் இந்த பதிவு இன்றைய அவசியமான தேவை அக்கா பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி




பூந்தலைச் சிறு கோல் Mபூந்தலைச் சிறு கோல் Uபூந்தலைச் சிறு கோல் Tபூந்தலைச் சிறு கோல் Hபூந்தலைச் சிறு கோல் Uபூந்தலைச் சிறு கோல் Mபூந்தலைச் சிறு கோல் Oபூந்தலைச் சிறு கோல் Hபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Mபூந்தலைச் சிறு கோல் Eபூந்தலைச் சிறு கோல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 09, 2013 2:34 pm

Muthumohamed wrote:உங்களின் இந்த பதிவு இன்றைய அவசியமான தேவை அக்கா பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி முத்து (அப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறேன்) அன்பு மலர்



பூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Tபூந்தலைச் சிறு கோல் Hபூந்தலைச் சிறு கோல் Iபூந்தலைச் சிறு கோல் Rபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Empty
Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:33 pm

இன்றைய பெற்றோறுக்கு மிகவும் பயன்னுள்ள பதிவு

நன்று அக்கா சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2013 10:39 pm

”அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!” - ஆதிரா அவர்களின் வரிகள் இன்றைய குடும்பங்களுக்கு அவசியமானவை ! காலையிலிருந்து இரவு வரை சிறார்களைப் பல இடங்களுக்கு அனுப்பி ‘அந்த வகுப்பு, இந்த வகுப்பு ’ என்று கசக்குகிறர்கள் ! இச் சிறார்கள் நாளைய உலகில் எப்படி இருப்பார்களோ ? -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 07, 2013 10:44 pm

Dr.S.Soundarapandian wrote:”அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!” - ஆதிரா அவர்களின் வரிகள் இன்றைய குடும்பங்களுக்கு அவசியமானவை ! காலையிலிருந்து இரவு வரை சிறார்களைப் பல இடங்களுக்கு அனுப்பி ‘அந்த வகுப்பு, இந்த வகுப்பு ’ என்று கசக்குகிறர்கள் ! இச் சிறார்கள் நாளைய உலகில் எப்படி இருப்பார்களோ ? -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
ஆம் ஐயா. அந்த கிளாஸ் மேனியா மாற வேண்டும். மிக்க நன்றி முனை. செளந்தர் பாண்டியன் அவர்களே.



பூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Tபூந்தலைச் சிறு கோல் Hபூந்தலைச் சிறு கோல் Iபூந்தலைச் சிறு கோல் Rபூந்தலைச் சிறு கோல் Aபூந்தலைச் சிறு கோல் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக