Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - பாரதி உரைத்தாரா?
Page 1 of 1
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - பாரதி உரைத்தாரா?
‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று பாரதியார் கூறவில்லை என்பதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” எனும் இவ்வாக்கியம் யாருக்குச் சொந்தமானது என்று கேட்டால் பெரும்பாலானவரின் பதில் அது மகாகவி பாரதியார் கூறியது என்பதே. இந்த நான்கு சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு அவ்வாக்கியம் மகாகவி பாரதியாரின் சிந்தனைக்கு உரித்தானது என்றும் அவரது பல தீர்க்கதரிசன கூற்றுகளுடன் இதுவும் உண்மையாகின்றது என்றும் நம்புவோர் பலர். இவ்வாறு நிலவி வரும் கருத்து தவறானது என்று இக்கட்டுரை முடிவில் அறிந்துகொள்ளலாம்.
பாரதியார் கூற்றுக்களை மெய்ப்பிப்பதோ அல்லது குறை கூறுவதோ இவ்வெழுத்தின் நோக்கமல்ல. தமிழராகிய நாம் எந்தவொரு விடயத்தையும் பற்றி தீர்க்கமாக ஆராயாமல் உடனேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது எவ்வளவு தீங்கானது என்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
இவ்வாக்கியத்துக்கான பாரதியாரின் பாடலை முழுவதும் அறியாமல் எம்மவரில் சிலர் பாரதியார் சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது மிகவும் வேதனைக்குரியது. இதனைப் பற்றி அறியாதவருக்கு இக்கட்டுரை உதவும் என்று நம்பிக்கை உள்ளது. எனினும், சிலர் அறிந்தே எழுதி வருவது வருத்தத்துக்குரியது. பெரும் எழுத்தாளர்களாக இருப்பினும் உண்மையைக் கூறுவதன்றோ தமிழின் வளர்ச்சிக்கு முக்கியம்.
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு” துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதை “(21) தமிழ்த்தாய்”. இது தேசீய கீதங்கள் தொகுப்பில் 21வது ஆக உள்ளது.
“தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்”, “தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்” என்று இக்கவிதையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் தன்னைப்பற்றி உரைப்பது போல வரிகள் அமைகின்றன.
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
இக்கவிதை வரிகளை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொண்டால் இவ்வாக்கியத்தை யாரோ ஒருவர் பாரதியாருக்குக் கூறியுள்ளார் என்பது விளங்கும். தமிழ்த்தாய் தன்மையில் உரைப்பது போன்று அமைந்துள்ள இக்கவிதையின் சாராம்சம் வருமாறு:
சிவனால் தமிழ் மொழி உருவாக்கப்பட்டது; அதற்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார். சேரன், சோழன், பாண்டியன் எனும் மூன்று மாவேந்தர்கள் தமிழை வளர்த்தனர். தமிழ்ப் புலவர்கள் காவியம் இயற்றினர். சாத்திரங்கள் பல உருவானது. தரணியில் தமிழ் புகழ் பெற்றது. ‘காலனால்’ பல மொழிகள் அழிந்தன, ஆனால் தமிழைப் படைத்த தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இன்று மட்டும் தமிழை காலன் ஏறிட்டுப் பார்க்க அஞ்சி இருக்கின்றான்.
இந்த நிலையில், இன்று ஒரு சொல்லைக் கேட்டேன். கொல்வதற்கு ஒப்பான ஒரு வார்த்தையை தமிழைப் பற்றி கூறுவதற்குத் தகுதியில்லாத ஒருவன் உரைத்தான்.
இயற்கையின் பல் நுட்பங்களை வெளிப்படுத்தும் புதிய கலைகள் மேற்கே வளர்கின்றது. அத்தகைய கலைகள் தமிழில் இல்லை; அதைத் தமிழில் எவரும் படைப்பதும் இல்லை; அதைத் தமிழில் சொல்லுவதற்கு தமிழில் வளமும் இல்லை, என்று அந்தப் பேதை மாந்தன் உரைத்தான். இதை அவன் எனக்கு உரைத்தல் தகுமோ? எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர். தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இந்தப் பழி தீரும். என்றுமே தமிழ் புவியில் புகழுடன் திகழும்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார் என்று சில இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கேனும் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று பாரதி பாடினான் எனும் முழுமையற்ற வார்த்தைகளால் பாரதியாரை மறைமுகமாகக் குற்றம் சாற்றுபவருக்கு இக்கட்டுரையைப் படித்தவர்கள் விளக்கம் தெரிவித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Similar topics
» மெல்லத் தமிழ் இனிச் சாகும்!
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» ' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ?
» தமிழ் இனி மெல்ல சாகும்!!!!
» தமிழ் ஈழத்தாய் மடியில் சாகும் திலீபன் -உண்ணாவிரத நினைவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum