ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு !

2 posters

Go down

ஈகரை தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு !

Post by Powenraj Mon Apr 01, 2013 1:01 pm

பாண்டிச்சேரியில் ஆட்டோவில் பயணிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான ஆட்டோ காரரை சந்தித்தேன் அவர் பேசியதில் இருந்து சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன். ஒரு சாதாரண மனிதர் தான். ஆனால் அரசியல் வாதிகள் குறித்தும், தனது ஊர், அதன் வரலாறு, நிறுவனங்கள், எக்கானமி, தமிழக மின்வெட்டு என எத்தனைவிஷயம் தொட்டு சென்றுள்ளார் பாருங்கள் ! அவரது பெயர் கூறினார் எனினும் அதனை இங்கு தவிர்க்கிறேன்.
-
இனி பாண்டிச்சேரி பற்றி அவர் சொன்ன சில விஷயங்கள் :
முன்பெல்லாம் பாண்டியில் பல பொருட்கள் விலை குறைவு என்பதால் வீடு கட்ட தேவையானபொருட்கள் உட்பட பலவும் பிறமாநிலத்திலிருந்து இங்கு வந்து வாங்கி போவார்கள். அப்போது இங்கு வரி மிகவும் குறைவு. VAT வந்த பிறகு இந்த வித்யாசம் அகன்று வரிச்சலுகை முழுதும் ஒழிந்து விட்டது. இப்போது படங்களின் DVD (எல்லா இடத்திலும் வெறும் இருபது ரூபாய் சார் !) போன்ற ஒரு சிலபொருள் தவிர மற்றவை தமிழகத்தில் என்ன விலையோ ஏறக்குறைய அதே விலை.
-
மதுபானங்கள் விலை முன்பு மிக குறைவு; இப்போது அந்த வித்யாசமும் பத்து முதல் இருபது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. ஒரு காலத்தில் பார்டரில் இருந்து தினம் இங்கு வந்து குடித்து செல்வோர் உண்டு. இப்போது விலை வித்யாசமே பத்து ரூபாய் என்பதால், பஸ்ஸில் வந்து செல்ல அதற்குமேல் செலவாகிறது என தினம் வரும் குடிமக்கள் கூட்டம் குறைந்துள்ளது
http://2.bp.blogspot.com/-XGwuUbyZFuk/UMfmTZhffsI/AAAAAAAAIuI/P_NuAqZZWgk/s640/DSC07690.JPG
பாண்டிச்சேரி ஆரோவில்லில்...
சனி, ஞாயிறுகளில் பாண்டிச்சேரி வருகிற கூட்டம் இன்றைக்கும் மிக அதிகமாகவே உள்ளது. பார்கள், ஹோட்டல்கள் லாட்ஜுகள் நிரம்பி விடுகின்றன. நீங்கள் வார இறுதியில் பாண்டிச்சேரி வருவதாக இருந்தால் முன்பே ரூம் புக்செய்து விடுவது நல்லது. இல்லா விடில் கிடைக்கிற இடத்தில் தங்குகிற மாதிரி ஆகி விடும் !
சென்னைக்கு இணையாக பல்வேறு கம்பனிகளும் இங்கு இருக்கின்றன. இரும்பு, சாராயம், கணினி துறை என ஏராளகம்பனிகள் ! சில வருடங்கள் முன் வரை இங்கு கம்பனி துவங்கினால் முதல் ஐந்து வருடங்கள் நிறுவனத்தின் விற்பனை வரி கட்ட வேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. (Tax Holiday for 5 years) இதனால் புது புது நிறுவனங்கள் துவங்கப்பட்டுவந்தன. அதிலும் ஐந்தாண்டு ஆனதும் அதே நிறுவனம் நஷ்டம்என கணக்கு காட்டி மூடி விட்டு இன்னொரு புது நிறுவனம் துவங்குவார்கள் .. அப்போ தானே மறுபடி விற்பனை வரி சலுகை கிடைக்கும் ? இப்போது இத்தகைய வரிச்சலுகை எதுவும் புதிதாய் துவங்கும் நிறுவனத்துக்கு கூட இல்லை !
எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் யூனியன் டெர்ரிடரி தான் பாண்டிச்சேரி; ஆனால் வருகிறபணம் முழுசும் மக்களுக்கு போகிறதா எனில் ஹீ ஹீ. ஒரு எம். எல் ஏ அடுத்தடுத்து இருமுறை தேர்வானார். கடைசியாக நடந்த தேர்தலில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அதற்குள் நான்கு ஹோட்டல் மூன்று பார்கள் அவர் வசம் வந்து விட்டது. இனி அரசியல் இல்லாவிட்டால் கூட, வாழ் நாளைக்கு தேவையான வசதியுடன் அவர் செட்டில் ஆகிவிட்டார்.
-
ஒரு தேர்தலில் ஜெயிக்க அம்பது லட்சம் செலவு பண்ணி பதவிக்கு வர்றாங்க. அந்த காசையும் அதுக்கு மேலே அவர்வாழ்க்கைக்கு தேவையான சொத்து சுகம் பதவியில் இருக்கும் போது சேர்த்துடுறாங்க. காசு வாங்கிக்கிட்டு தானே மக்கள் ஓட்டு போடுறாங்க? அப்புறம் எப்படி ஏன் லஞ்சம்வாங்குறே என கேட்க முடியும்?
பாண்டிச்சேரி ஆங்காங்கு பிரிந்து உள்ளது. பாண்டிச்சேரி பார்டரில் தமிழ் நாடு வருகிறது ஆனால் இருபது கிலோ மீட்டர் சென்ற பின் மீண்டும் பாண்டிச்சேரி வந்துடுது. இப்படி பாண்டிச்சேரி விட்டு விட்டு இருக்கு. இதை விட முக்கியமா கேரளா மற்றும் கர்நாடகாவில் ஒரு சிறு பகுதி இன்னும் பாண்டிச்சேரி கீழ் வருது. மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) என்று சொல்லப்படும் இந்த இடங்கள் ஒவ்வொன்றும் நான்கைந்து தெருக்கள் தான். இப்படி ஆந்திராவில் இருக்கும் நான்கைந்து தெரு மற்றும் கேரளாவில் இருக்கும் சில தெருக்கள் இன்றும் பாண்டியின் கீழ் இருக்கு. அவற்றை அந்த மாநிலத் தோடே கூட சேர்த்துடலாம். ஆனால் எதோ சில காரணங்களால் அப்படிசெய்வதில்லை. மக்கள் அவை பாண்டிச்சேரி கீழ் தான் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்
பாண்டிச்சேரியை பிரிட்டிஷ்ஆளவே இல்லை. இந்தியாவின் பல பகுதிகளை பிரிட்டிஷ் ஆண்டபோது இந்த இடத்தை பிரன்ச்சு காரர்கள் கைப்பற்றியிருந்தனர். கடல் வழியே வந்து ஆங்காங்கு கைப்பற்றிய போது இப்படி பிரிந்து பிரிந்து அவை அமைந்து விட்டன
பாண்டிச்சேரி முழுதுமே தெருக்களில் சாக்கடைகள் ஓபன் ஆக ஓடுகிறது. இதை கவனித்து கேட்டபோது மழைக்காலத்தில் சாக்கடை நிரம்பி அதன் தண்ணீர் ரோடில் வழிந்தோடும் என்றார்.
http://3.bp.blogspot.com/-Zlc7z2oBPa8/UMfRFnbNSnI/AAAAAAAAIs4/LSJRjYvOf6o/s640/DSC07731.JPG
குறுகிய தெருக்கள் ஓபன் சாக்கடைகள்
-
இத்தனைக்கும் டிரைநேஜ் வசதி இருக்கிறது என்கிறார்கள் ! பாதி இடங்களில் பைப் உடைத்து கொண்டு தெருவில் சாக்கடையாய் ஓடுகிறது. மிக முக்கிய பெரிய தெருக்கள் தவிர 90 % இடங்களில் இப்படித்தான் இருக்கிறது என்றார்.
போலவே கூவம் போல ஒரு பெரிய சாக்கடை ஆறு ஆங்காங்கு ஓடுகிறது. அது முழுக்க குப்பை கொட்டி வைத்துள்ளனர் இவ்விஷயத்தில் அப்படியே சென்னையை ஒத்துள்ளது பாண்டிச்சேரி
வீடுகளுக்கு தண்ணீர் அரசாங்கமே பைப் மூலம் தருகிறது. காலை, மதியம், மாலை ஒவ்வொரு வேலையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தண்ணீர் விடுகிறார்கள் . இதனால் வீடுகளில் போர்வெல் பயன்பாடு சற்று குறைவு தான். இம்முறை மழை மிக குறைவு என்பதால் அரசாங்கத்தால் வெயில் காலம் மற்றும் ஜூன், ஜூலையில் இதே போல் தண்ணீர் விட முடியுமா அப்படிங்குறது கொஞ்சம் பயமா இருக்கு .
http://1.bp.blogspot.com/-d1aBASN-gpA/UMfSS9TyMAI/AAAAAAAAItI/FO8iC6f00MQ/s400/DSC07800.JPG
நல்ல தண்ணீர் மிக எளிதாய் கிடைப்பதால் செடிகள் எல்லாம் மிக பசுமையாக, நன்கு வளர்கின்றன சென்னையை விட செடி, கொடிகள் நிச்சயம் அதிகமே !


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு !

Post by balakarthik Mon Apr 01, 2013 1:07 pm

புகை படத்தில் இருப்பது நீங்களா சார் மூனு புள்ளி ரெண்டே கால் கேள்விகுறி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு !

Post by Powenraj Mon Apr 01, 2013 1:13 pm

! இத்தனைக்கும் தானே புயலுக்கு கிட்டதட்ட 60 சதவீத மரம் செடி கொடிகள் அழிந்துவிட்டது. இப்போது நீங்கள் பார்ப்பது மிச்சம் மீதியே !
ரியல் எஸ்டேட் எல்லா இடம் போல் நன்கு வளர்ந்து விட்டது. 800 sq feet உள்ள சிறு பிளாட் ( காலி மனை ) ஊருக்கு வெளியே ஆறு லட்ச ரூபாய்க்கு கிடைக்குது. இதுவே ஊருக்கு உள்ளே, கமர்ஷியல் என்றால் 800 sq feet, இருபது லட்சம் வரை கூட போகும் ! (அவர் ரியல் எஸ்டேட் பற்றி ஆர்வமா பேசியதை பார்த்தால் சைட் பிஸினஸா அது செய்கிறாரோ என தோன்றியது)
டிராபிக் மிக அதிகமாக காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் தான் இருக்கும் (பள்ளி மற்றும் ஆபிஸ் செல்வோர் போகும் நேரம்)
தமிழகத்தில் இருக்க மாதிரி இங்கு கரண்ட் கட் பிரச்சனை சுத்தமா கிடையாது எப்பவாவது கரண்ட் நிறுத்தினா அரை மணி போல் நிறுத்துவாங்க. அவ்ளோ தான். மின்சாரம் பற்றாக்குறை என்றால் கடைகள் அல்லது நிறுவனங்களுக்கு நிறுத்தி, ஜெனரேட்டர் பயன்படுத்துங்கஎன்று சொன்னாலும் சொல்வார்களே தவிர மக்கள் பாதிக்கிற மாதிரி பல மணி நேரம் கட் ஆவதில்லை என்றவரைஇடை மறித்து " பாண்டிச்சேரிசின்ன ஊர் அதனால் சமாளிக்க முடியுதோ ? " என்று கேட்க, " இருக்கலாம் சார். அதுக்குன்னு ஊர் பக்கம் 18 மணி நேரம், 20 மணி நேரம் கரண்ட் நிறுத்துவதெல்லாம் ரொம்ப கொடுமை இல்லியா?
-
தமிழகத்தில் எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்டில் வயசானபெரியவர்கள் இருவர் இருந்தாங்க . நைட்டு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தா ஒரு பாம்பு உள்ளே வந்துடுச்சு; இருக்கிற விளக்கை எல்லாம் வச்சிக்கிட்டு தேடினா கண்டு பிடிக்க முடியலை. கரண்ட் இல்லாம என்ன பண்றது? தூங்கவும் முடியாம பயந்துகிட்டு உட்கார்ந்திருந்தாங்க. யாரையாவது கடிச்சு உயிர் போனா என்ன ஆறது ? அரசாங்கம் இப்படி இருக்க கூடாது சார்" என்றார்
இவங்க ஆட்சிக்கு வந்து வந்து ரெண்டு வருஷம் ஆக போகுதே சார் ! ஏதாவது செஞ்சிருக்கலாமே ! போக போக நிலைமை மோசமா தானே போகுது ! கம்பெனிகளுக்கு அதிகம் மின்வெட்டு செய்து, நீங்க ஜெனரட்டர் போட்டு ஓட்டுங்க என சொல்லிட்டு, மக்களுக்கு ஓரளவு குடுக்கலாம் இல்லியா? பாண்டிச்சேரியில் போத்தீஸ் புதுசா துணிக்கடை திறந்தாங்க. அவங்களுக்கு மின் இணைப்பே இன்னும் தரலை. முழுக்க ஜெனரேட்டரில் மட்டும் தான் ஓடுது. முழுக்க, முழுக்க ஜெனரேட்டரில் ஓடினாலும் அவங்களால சமாளிக்க முடியுதே. அது மாதிரி கம்பனிக்கு உங்க ஊரில் செய்யலாமே !
-
மேட்டூர் கல்பாக்கம் மின் நிலையங்களில் ரிப்பேர் வேலை ஒழுங்கா செஞ்சு முழுசாமின்சாரம் தயாரிக்கலாம் ! சோலார் மின்சாரம் நல்ல யோசனை தான். ஆனா அதுக்கு ஆயிரக்கணக்கில் தானே யாரும் செலவு செய்ய மாட்டாங்க. அரசு தான் மானியம் மாதிரி ஏதாவது தரனும் அப்ப தான் அந்த ப்ராஜக்ட் வெற்றி ஆகும்; எல்லாத்தையும் விட முக்கியம் மத்திய அரசோடு ஒத்து போகணும் சார். அப்படி இருந்தா உங்க ஊரில் இவ்வளவுமின்வெட்டு பிரச்சனை பெருசா இருக்காது “என்று பேசிக்கொண்டே போனவரை பார்க்க வியப்பாய் இருந்தது !
*****
வீடு திரும்பல் வலைப்பூ


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழக மின்வெட்டு : பாண்டிச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சொன்ன தீர்வு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum