ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

2 posters

Go down

ஈகரை உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

Post by Powenraj Mon Apr 01, 2013 9:04 am

எந்தப் புது தொழில்முனைவோருக்கும் சவாலான ஒரு விஷயம், அவர்களுக்கு உகந்த பணியாளர்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதுதான்.
இது பொறுப்பாகக் கையாள வேண்டிய ஓர் விஷயம். அதுவும் ஜெயிக்கப் போகிற உங்களுக்கு தொழில் அல்லது வியாபாரத்தின் துவக்கத்திலேயே மிகக் கவனமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். செய்யப் போகும் தொழிலின் பெயர், இடம், முதலீடு இவை முடிவான உடனேயே இதற்கான முயற்சிகளையும் நீங்கள் துவக்க வேண்டும். முதலில் இந்த அடிப்படையான விஷயங்களை முடிவு செய்து பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
-
1) நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலாளர்கள் செய்யப்போகும் பணிகளைப் பற்றி முழுவதுமாக உங்களுக்குத் தெரியுமா?
2) உங்களுடன், நிறுவனத்தில் முதல் கட்டமாக பணி செய்ய எத்தனை பேர் என்ன மாதிரி தகுதிகளுடன் தேவையாக இருக்கும்?
3) அவர்களுக்கு தரப்போகும் ஊதியங்கள், சலுகைகள் பற்றியவிவரங்கள்.
4) எந்த அடிப்படையில் பணியாளர்கள்- (ஒப்பந்தப் பணியாளர்களாவா? நிறுவன நிரந்தர ஊழியர்களாகவா?) தேர்வு செய்யப்பட வேண்டும்.
5) செய்யப்போகும் தொழிலில் நடைமுறையிலிருக்கும் அந்தத் தொழிலாளர்கள் பற்றிய சட்ட விதிமுறைகள்.
6) எந்த முறையில் இவர்களை தேர்வு செய்யப் போகிறீர்கள்?
இவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்து, பட்டியல் இடுங்கள். ஏனெனில், இதுதான் நீங்கள் துவக்கப்போகும் தொழிலின் அல்லது வியாபாரத்தின் மனிதவள நிர்வாகத்திற்கான அடிப்படைக் கொள்கைகள். பல தொழில் முனைவர்கள் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சரியான நபரை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்காமல் தொழிலை துவக்கிய பின்னர் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார்கள்.
-
இப்போது பட்டியலிட்டிருக்கும் விஷயங்களை எப்படி அணுகுவது என்பதைப் பார்ப்போம். முதலில் உங்கள் தொழிலின் எல்லாப் பிரிவுகளிலும் நீங்கள் நேரிடையாகப் பணியாற்றி அதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது அந்தப் பிரிவுக்குத் தேவையான சரியான நபரைத் தேர்ந்தெடுக்க உதவும். நீங்கள் முழுநேரமும் உங்கள் தொழிலில் அல்லது வியாபாரத்தில் முதல் மூன்று ஆண்டுகள் பணியாற்ற முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவுக்குப் பின்னால் உங்களது உழைப்பும் தியாகங்களூம் அதிகம் இருக்கபோகின்றன என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். இதற்காக உங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, ஓய்வு நேரம், உணவுப் பழக்கங்கள் எல்லாவற்றையுமேமாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருப்பீர்கள். தங்கள் தொழிலில் ஜெயித்தவர்கள் இதையெல்லாம்செய்து காட்டியிருக்கிறார்கள். நீங்களே நேரடிப் பொறுப்பெடுத்து நிர்வகிக்கப் போவதால், தேவையானவர்களை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
அடுத்ததாக, பட்டியலில் இருப்பது நபர்களின் எண்ணிக்கை. இது உங்கள் தொழிலின் அளவை (Size) பொருத்த விஷயம். ஆனால், முதல் கட்டமாக உங்கள் தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு இருப்பது மிக அவசியம். அதைப்போல உங்கள் பிசினஸ் பிளான்படி எது இரண்டாவது கட்டம்? அப்போது எத்தனை பேர் என்பதும் இந்தக் கட்டத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். சில நிறுவனங்களில் எப்போதும் ஆட்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டும்விலகிக் கொண்டும் இருப்பார்கள். இது, நல்ல வளரும் ஒரு நிறுவனத்தின் அறிகுறி இல்லை என்பது பரவலான கருத்து. அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள். உங்கள் தொழிலுக்குத் தேவையான அடிப்படை அறிவு அவசியம். முக்கியமாக ஆங்கிலம் படிக்க, எழுதத் தெரிந்திருப்பது அவசியம். இன்றைய சூழலில் இது மிகக் குறைந்தபட்சத் தகுதியாகி விட்டது. கல்வித் தகுதிகளைத் தாண்டிய அடிப்படைத் தகுதி ஆர்வமும்,முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும்தான்.
-
மூன்றாவது, ஊதியம். இதற்கு உங்கள் பகுதியில் நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் ஊதிய விவரம் முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும். இதற்கான சர்வேக்களைச் செய்து, அந்த விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இதுதான் நீங்கள் தரப்போகும் ஊதியத்தை நிர்ணயிக்கப்போகும் அளவுகோல். பெரும்பாலான சமயங்களில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்கள் வேலையில் சேராமலிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். ஆனால், இதை அவர்கள் காரணமாக சொல்வதில்லை. தனக்கு சம்பளம் தரப்போகும் நிறுவனத்திற்கு மார்க்கெட்நிலவரம் தெரிந்திருக்க வேண்டும் என அவர்கள் எண்ணியிருந்தால் அது தவறு இல்லையே?
-
அடுத்தது, தொழிலாளர்களை பணியில் அமர்த்தப்போகும் முறை. தேர்ந்தெடுத்தவர்களை பயிற்சிக்காலத்திற்குப் பின்னர் நிரந்தரப் பணியில் அமர்த்திக்கொள்வது என்பது பரவலாக பலர் அறிந்த முறை. இப்போது திறன் பெற்ற தொழிலாளிகள் (skilled), உற்பத்தி இலக்கு என்ற ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இயந்திர சாதனங்கள். உதிரிப்பாகங்கள், ஆடை தயாரிப்பு உற்பத்தியில் இந்த நடைமுறை பரவலாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் தொழில் இவ்வகையை சேர்ந்ததாக இருந்தால், இதை நீங்களும் முயற்சிக்கலாம்.
-
நீங்கள் செய்யப்போகும் தொழிலின் தொழிலாளர்கள் பற்றிய சட்ட விதிமுறைகளை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். முதல் கட்டங்களில் எந்த அளவிற்கு அந்த சட்டப்பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவிற்கேற்ப உங்கள் திட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு அத்துணை விதிமுறைகளும் புத்தக வடிவில் கிடைக்கின்றன. இணைய தளங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
இறுதியாக, தேவையானவர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? துவக்க கட்டங்களில் விளம்பரம் செய்து, தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை. காரணம், உங்கள் தேவைகள் மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால், சரியான நபர் அவசியம். இதை எப்படி செய்வது? நாம் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள் நம்முடைய ஊழியர்கள் என்பதைத் தாண்டி,நம்முடன் இணைந்து பணியாற்றப்போகும் ஒரு குழுவின் உறுப்பினர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும்.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

Post by Powenraj Mon Apr 01, 2013 9:16 am

ஜெயிக்கப் போகும் ஒரு தொழில் முனைபவருக்கு வேண்டிய திறமைகளில் ஒன்று, சந்திப்பவர்களின் நடவடிக்கைகளை அவர் அறியாது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல். நீங்கள் துவக்கப்போவது புதிய தொழில் முயற்சி. அதில் பணி செய்ய மிகத் திறமை வாய்ந்த,தகுதியான நபர்கள் தேடி வரமாட்டார்கள். முதல் ஆண்டு நீங்கள்தான் அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில் இருப்பீர்கள். தொழிலில் திறமை, நாணயம், ஆர்வம் இத்தனையும் இருக்கும் சிலரை தேடிக்கண்டுபிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஆனால், முடியாதது என்பதில்லை.
-
சரியான நபரைக் கண்டறியும் நடவடிக்கையின் மூலம் நீங்களே உங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வீர்கள். உங்கள் தொழில் துவக்கும் முயற்சிகளில் பல இடங்களுக்குப் போகும், பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் தினசரி இருக்கும். அந்தக் கட்டத்திலேயே இந்தத் தேர்வை உங்கள் கூரிய பார்வையில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். பல இடங்களில் துடிப்பான இளைஞர்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிகளிலிருந்து மாறி, சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். உங்கள் தேவையும் அவர்கள் எதிர்பார்ப்பும் சந்திக்கும் தருணங்களை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.
-
அம்மாதிரியான இளைஞர்களை சந்திக்கும்போது, அவர்களதுபணியை ஒருசில வார்த்தைகள் பாராட்டி, உங்களுடன் தொடர்பிலிருக்கச் சொல்லுங்கள். ஆர்வத்துடன் இருப்பவர்கள் நிச்சயம் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். இம்மாதிரி தொடர்பு கொள்ளக்கூடியவர்களைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். அதைப்போல பயிற்சி நிலையங்களுடன் தொடர்பிலிருங்கள். நீங்கள் துவக்கப்போவது ஒரு சிறிய லேத் ஒர்க் ஷாப் என்றால், அருகில் இருக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையம், அரசு பாலிடெக்னிக் போன்ற பயிற்சிக் கூடங்களின் பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருங்கள். கேம்பஸ் செலக்ஷன் போன்ற பெரிய விஷயங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். உங்களுக்குத் தேவையானவர்கள் மிகச் சிலர் மட்டுமே. நல்ல மாணவர்களுக்கு உதவ விரும்பும் எந்த ஆசிரியரும் அவர் பார்வையில் தகுந்தவராகக் காணப்படுபவரை அனுப்புவார். இந்த முயற்சிகளை நீங்கள் உங்கள் தொழிலைத் துவக்கத் திட்டமிட்டிருக்கும் நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே செய்யத் துவக்க வேண்டும். பலர் செய்வதைப்போல போர்டு போட்டு, தொழிலைத் துவக்கிய பின், ஆட்களை தேடிக்கொண்டிருக்கக் கூடாது.
-
மனிதவள மேலாண்மை என்பது, ஒரு தொழிலின் வளர்ச்சியில் மிக மிகப் பெரிய பங்களிக்கிறது. இது 10 உறுப்பினர்கள் இருக்கும் நிறுவனத்திற்கும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள்இருக்கும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். ஒருதொழிலாளி, தான் பணி செய்யும் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்ப்பது வெறும் சம்பளம் மட்டுமில்லை. தான் நன்றாக நடத்தப்படுவோம், தனது திறன்கள் மதிக்கப்படவேண்டும் என்பதையும்தான். துவக்கிய தொழிலில் ஜெயிக்கப்போகும் நீங்கள் இதை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். உங்கள் தொழிலாளிகள் மிகச் சிறிய குழுவினராக இருந்தாலும் இந்த நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.
-
தொழிலாளர்களையும் ஊழியர்களையும் தேர்ந்தெடுத்த பின்னர், அவர்களை நிர்வகிப்பதில் முதல் கட்டம், அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிப்பது. இதற்கு நீங்கள், உங்களை சிறப்பாக தயாரித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், உங்களுக்கே உங்கள் தொழில் புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் துவக்குங்கள். தலைமைப் பண்பு என்பது ஒரே இரவில் உருவாகும் விஷயம் இல்லை என்பது உண்மையானாலும் அதற்கான மனநிலை உங்களுக்கு ஒருநாளில்தான் உருவாகியிருக்கிறது. நீங்கள் அதனால் தான் ஒரு தொழில்முனைவராக முடிவெடுத்திருக்கிறீர்கள்என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் ஊழியர்களிடமிருந்துஎன்ன எதிர்பார்க்கிறீர்கள்என்பதைப் பற்றி அவர்களுக்கு தெளிவாகச் சொல்ல, அவர்களுக்குத் தரவேண்டிய பயிற்சிகள் பற்றிய விவரங்களுடன் உங்களை தயாரித்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி பயிற்சிகளை அளிக்க, சில பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், தொழிலைத் துவக்கியிருக்கும் காலகட்டத்தில் இதை நீங்களேநேரிடையாகச் செய்வது நல்லது. இங்கு ஊழியர்களுக்கு பயிற்சி என்பது முழுக்க முழுக்க உங்கள் நிறுவனத்தின்தொழில் தேவைகள் மட்டுமில்லை. பணியாளர்களுடைய பொது அறிவுத் திறன், செயல் முறை, வாடிக்கையாளர்களைக் கவரும்முறை, பிரச்சினைகளை அணுகும்முறை போன்ற விஷயங்கள். இவை உங்கள் நிறுவனத்தில் எப்படி அமைய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
-
‘வணக்கம்! இன்றைய நாள் ஒரு இனிய நாளாக இருக்கட்டும். உங்கள் காரின் சர்வீஸ் இந்தவாரத்தில் செய்யப்படவேண்டும். எந்த நாள் வசதியாக இருக்கும் என்று சொல்ல முடியுமா?’ கனிவான இந்தத் தமிழ் வார்த்தைகள் ஒரு சிறுதொழில் முனைவருக்கு வந்த டெலிபோன். வந்தது, ஒரு மிகப் பெரிய கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு விற்பனை நிறுவனத்திடமிருந்து.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

Post by Powenraj Mon Apr 01, 2013 9:22 am

அந்தப் போனுக்கு பதில் சொன்ன பின்னர், அவர் அந்த நிறுவன மேலாளரிடம், ‘தமிழில் பேசுவது மகிழ்ச்சிதான். ஆனால், தமிழ் தெரியாத உங்கள் கஸ்டமர்களுக்கு கஷ்டமில்லையா?’ எனக் கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில்: ‘அவர்களிடம் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் கேட்பார்கள். எங்கள் கஸ்டமர்கள் பேசும் மொழி விவரம், கஸ்டமர் டேட்டாவில்இருக்கிறது’ என்பதுதான். அந்த நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியை, அணுகுமுறையை, வாடிக்கையாளர்களைப் பட்டியலிடும் முறையைக் கவனியுங்கள். ஆங்கிலம் பேசினால்தான் மரியாதை என்பதை மாற்றுவதோடு, மற்றவர்களிடமிருந்து மாறுதலாகவும் செய்ய விரும்பும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்போல் மாறுதலான விஷயங்களைச் செய்ய உங்கள் நிறுவனத்தின் குழுவினரை நீங்கள் எப்படி உருவாக்கப் போகிறீர்கள் என்பது பற்றி சிந்தித்து, அடுத்த வாரத்திற்குள் குறிப்பில் பதிவு செய்துவிடுங்கள். ஏன்என்றால், அடுத்த வாரம் உங்கள் நிறுவனக் கணக்குகளை எப்படி எளிதாகக் கையாள்வது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டுமே...
-
டாடாவின் கலாச்சாரம்!
அமெரிக்காவில் கட்டிடக் கலை படித்த உடனேயே ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்குஒரு நல்ல வேலை கிடைத்திருந்தது. ‘நீ உன் ஐ.பி.எம். வேலையை ராஜினாமா செய்துவிட்டு, உடனே இங்கே வா. நமது கம்பெனிகளில் நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று மாமாவிடமிருந்து வந்த அந்தத் தந்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னை அமெரிக்கா அனுப்பியதே அவர்தான்.
-
1962ல் இந்தியா திரும்பியவுடன் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை, ஜாம்ஷெட்பூர் உருக்கு ஆலையில் தொழிலாளர் பணி. சுண்ணாம்புக் கற்களை கொதிகலனில் இடுவதிலிருந்து, ஸ்டீல் கம்பிகளை அடுக்கி எடை போடுவதுவரை எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். டாடா நிறுவனத்தில் உயர் பதவிக்குப் போகப் போகிறவருக்கு அவர், நிறுவனரின் குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் எல்லாப் பணிகளும் சரியாக தெரிந்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அந்தப் பகுதியையும் தொழிலாளர்களையும் நிர்வகிக்க முடியும் என்பது டாடா நிறுவனத்தின் ஒரு கலாச்சாரம் என்று எனக்குச் சொல்லப்பட்டது அந்த நாட்களில் எடுத்த நீண்ட பயிற்சிகள், எனக்கு இன்றும் பல விஷயங்களில் உதவுகின்றன."
-
- ரத்தன் டாடா
முன்னாள் தலைவர், டாடா குழுமம்.
-
புதிய தலைமுறை


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

Post by mbalasaravanan Mon Apr 01, 2013 10:28 am

சூப்பருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum