ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையான காதல்(சிறுகதை)

2 posters

Go down

நம்பிக்கையான காதல்(சிறுகதை)  Empty நம்பிக்கையான காதல்(சிறுகதை)

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 2:02 pm

ரவியின் அப்பா ரவியிடம்.........

ரவி, நம்ம தரகர் இன்றைக்கு வந்தாரு. உனக்கு வரன் பார்க்க சொல்லியிருந்தேன்.அந்த விஷயமா தான் பேச வந்திருந்தாரு. நல்லா படிச்ச அழகான பொண்ணாம், நல்ல குடும்பமாம். பொண்ணோட போட்டோ தந்திட்டு போயிருக்காரு.பொண்ண உனக்கு பிடிச்சிருந்தா, நாளைக்கே அவங்க வீட்டிற்கு போய் நிச்சயம் பண்ணிக்கலாம்.
இது தான் பொண்ணோட போட்டோ. உனக்கு பொண்ண புடிச்சிருக்கா பாரு... என்று சொல்லி போட்டாவை ரவியிடம் கொடுத்தார்.

எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அப்பா. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறமா பார்த்துக்கலாம் என்று ரவி கூற...,

முதல்ல இந்த போட்டாவை பாரு.இந்த பொண்ணு எவ்வளவு அழகாயிருக்கு. உங்க அம்மாவுக்கும் எனக்கும் இந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும். முதல்ல, போட்டாவை பாரு என்று சொல்லி போட்டாவை நீட்டினார் ரவியின் அப்பா
மனதில் ஒருவித தயக்கத்துடன் போட்டாவை வாங்கி பார்த்தான் ரவி

போட்டாவை பார்த்த ரவி இன்பத்தில் அதிர்ந்து போனான். மகிழ்ச்சியால் அவன் முகம் புதிதாய் மலர்ந்த மலர் போல மலர்ந்தது. ஏனென்றால் அந்த போட்டாவில் இருந்தது ரவியி்ன் காதலி ரேகா.

ரவியும் ரேகாவும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர்.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட காதலர்கள். எதற்காகவும் கோபப்படமாட்டார்கள். சிறு சிறு சண்டை வந்தால் கூட உடனுக்குடன் மனம் விட்டு பேசி சமாதானம் ஆகி விடுவார்கள். காதலை தங்களுக்கு கிடைத்த வரம் என்று நினைப்பவர்கள்.தங்கள் காதல் நிச்சயம் வெற்றி பெறும் என்ற தன்னம்பிக்கை நோக்குடன் வாழ்பவர்கள்.
ரேகாவின் போட்டோவை பார்த்த ரவி கனவில் மூழ்கினான். தன் காதலை பெற்றோருக்கு சொல்லாமலே, தன் காதலி தனக்கு மனைவியாக வரப்போவதை நினைத்து மகிழ்ந்தான். இதை தனக்கு கிடைத்த பாக்கியமாகவே நினைத்து கடவுளுக்கு நன்றி சொன்னான்.

ரவியின் அப்பா ரவியிடம்.........

என்னப்பா ரவி......உனக்கு பொண்ண பிடிச்சிருக்கா...? என்று கேட்க...
அப்பா...,எனக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு -என்றான் ரவி
அப்படீன்னா...நாளைக்கே பொண்ணு வீட்டிற்கு போய் நிச்சயம் பண்ணிக்கலாம். என்ன சந்தோசமா?என்று கேட்க...
ரொம்ப சந்தோசம் அப்பா என்று பதிலுரைத்தான் .

சந்தோசத்தில் ரவிக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை.ரேகாவையே மனதில் நினைத்து கொண்டிருந்தான். அவளை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்போது ரவியின் மொபைல் போனில் மணி ஒலித்தது. அது யாரென்று பார்க்கையில் அது ரவியின் காதலி ரேகா.
மொபைலை எடுத்து ...,
ம்....சொல்லு ரேகா, உன்னைத்தான் நினைச்சிக்கிட்டே இருந்தேன் என்று ரவி சொல்ல,

ரவி, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நாளைக்கு காலையில நாம எப்போதும் சந்திக்கிற இடத்திற்கு வந்திரு. நானும் வந்திடுறேன். ஓகே பாய் என்று பதற்றத்துடன் கூறி போனை வைத்தாள் ரேகா.
ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. நாளைக்கு நமக்கு நிச்சயதார்த்தம். இந்த சமயத்தில முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்றாளே. என்னவாக இருக்கும் என யோசித்தான். சரி, எதுவாக இருந்தாலும் நாளைக்கு பார்க்கலாம் என்று மனதை தேற்றி விட்டு தூங்கினான்.

மறுநாள் காலையில், ரவி செல்லும் முன்பே ரேகா, அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வந்திருந்தாள்.
ரேகாவை பார்த்ததும் ரவி புன்னகை பூத்தான். ஆனால் ரேகாவின் முகம் சற்று வருத்தமாகவே இருந்தது.
என்ன ரேகா? என்னாச்சு! ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? என்று ரவி கேட்க,

ரவி..., வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டாங்க. இன்றைக்கே நிச்சயம் பண்ண வர்றாங்களாம்.எனக்கு ரொம்ப பயமாயிருக்கு ரவி என்றாள் ரேகா.

அப்போது தான் ரவிக்கு விஷயம் புரிந்தது. ரேகாவுக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான் என்று ரேகாவுக்கு தெரியாது போல இருக்கு. அதனால் தான் ரேகா இப்படி பதற்றமா இருக்கா.
உண்மையை சொல்லலாமா? என யோசித்தான். வேண்டாம். இப்போது சொல்ல வேண்டாம். அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்து உண்மையை சொல்லாமலேயே விட்டு விட்டான்.

சரி ரேகா...நீ மாப்பிள்ளையோட போட்டோவை பார்த்தியா? என்று ரவி கேட்க
இல்ல ரவி. கல்யாண விஷயத்தில் உன்னை தவிர வேறு யாரையும் போட்டோவில் கூட நான் பார்க்க விரும்பல்ல. அது எனக்கு அருவருப்பா இருக்கு ரவி என்றாள் ரேகா.

ரேகா தன் மீது கொண்டுள்ள காதலை நினைத்து பிரம்மித்து போனான் ரவி.அவளின் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்து, உண்மையை சொல்லி விடலாமா? என மீண்டும் யோசித்தான். சரி, பறவாயில்ல...இன்னும் கொஞ்ச நேரத்தில் உண்மை அவளுக்கு தெரியத்தானே போகுது. அந்த நேரத்தில் அவள் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என நினைத்து சொல்லாமல் மறைத்து விட்டான்.

ரவி....எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை நடக்க விடாமல் பண்ணணும்.அதுமட்டுமில்லாமல், எனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை என் போட்டோவை பார்த்திட்டு..., கட்டினா இந்த பொண்ண தான் கட்டுவேன் என்று தீர்மானமா சொல்லிட்டானாம். இடியட் என்று சொல்லி வாய்க்கு வந்தபடி திட்டினாள் ரேகா.
அவள் திட்டுவதை கேட்டு ரவிக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.இருப்பினும் ,உதட்டை கடித்தவாறு சிரிப்பை அடக்கி கொண்டான். இவளிடம் ஒரு குட்டி நாடகம் நடித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து......,

ரேகா ...., நம்ம காதல் வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாம் பிரிஞ்சிடலாம். நீ என்னை மறந்திரு. உன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்க. அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது என்று மனதில் சிரித்து கொண்டே, வெளியில் வாடிய முகத்தோடு நடித்தான்.

ரேகா மௌனமாக இருந்தாள். ரேகாவின் வாயிலிருந்து உதிரும் வார்த்தைக்காக காத்து கொண்டிருந்தான் ரவி.
சிறிது நேரத்திற்கு பிறகு மெல்ல வாய் திறந்தாள் ரேகா...

ரவி....,உனக்கு தான் நடிக்க வரல இல்ல. அப்புறம் ஏன் முயர்ச்சி செய்ற. உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும். கனவில் கூட , நீ என்னை பிரிய வேண்டும் என்று நினைக்க மாட்ட. அப்படி இருக்கும் போது, நீ சொல்லும் பொய்யை கேட்டு நான் எப்படி ஏமாறுவேன்.
இந்தா பாரு ரவி..., என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ. உன் மீதும் நம்ம காதல் மீதும் எனக்கு நல்ல நம்பிக்கையிருக்கு. நம்பிக்கை என்பதன் அர்த்தத்தை, நான் உன்னை காதலித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு நிச்சயதார்த்தம். ஆனாலும் நான் இப்போது உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கறேன் என்றால், அதற்கு என்ன காரணம் ? நான் உன் மேல வைத்திருக்கின்ற நம்பிக்கை தான். என் ரவி எல்லாத்தையயும் பார்த்துக்குவான் என்ற எண்ணம்.
யாருக்காகவும், எதற்காகவும் நீ என்னை இழக்க மாட்டாய் என்பது எனக்கு தெரியும். உன்னை நான் நல்லா புரிந்து வைத்திருக்கிறேன் ரவி. எதை எதையோ சொல்லி, என்னை ஏமாற்றுவதாய் நினைத்து நீ ஏமாறாதே ரவி என்றாள் ரேகா.

ரேகாவின் வார்த்தைகளை கேட்டு, மெய் சிலிர்த்து போனான் ரவி. ரேகா என்னை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கின்றாளே என்று நினைத்து பெருமிதமடைந்தான். இனிமேலும் உண்மையை மறைத்து எந்த பயனும் இல்லை. உடனடியாக சொல்லி விடுவோம் என்று முடிவெடுத்தான்.
ரேகாவின் கையை பிடித்தான். ரேகா நீ சொன்னதெல்லாம் உண்மைதான். உன்னை ஏமாற்ற தான் நான் அப்படியெல்லாம் சொன்னேன். ஆனால் நீ என்னை நல்லா புரிந்து வைத்திருக்கிற. நம்ம காதல் மேல நல்ல நம்பிக்கையும் வைத்திருக்கிற. அதனால தான், நான் சொன்னது பொய் என்று தெரிஞ்சிக்கிட்ட. உன்னை மாதிரி ஒரு காதலி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கணும். உன்னை இப்போது தான் நான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன்.

ரேகா, இப்போ உன்கிட்ட ஒரு முக்கியமான, அதுவும் சந்தோசமான விஷயத்தை பற்றி சொல்லப்போறேன் என்றான் ரவி.
என்ன விஷயம் ரவி?.....ஆர்வத்தோடு கேட்டாள் ரேகா.
உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை நான் தான். உன்னை இன்றைக்கு நிச்சயம் பண்ண வருவதும் நான் தான் என்று ரவி சொல்ல....
ரேகாவின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. ஏதோ ஒரு நிலைபுரியா சந்தோசத்தில் ரவியை இறுக கட்டி கொண்டாள்.

ரவி...நாம போகும் போது கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டிட்டு போலாமா? என்று ரேகா கேட்க
வா...இப்போதே போகலாம் என்று பதிலுரைத்தான் புன்னகையுடன்.

(நம்பிக்கை என்பது காதலுக்கு மிகவும் முக்கியம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நம்பிக்கையோடு வாழ்ந்தால் தான் காதலும் நலமாக வாழும்.)
நன்றி:எழுத்து.கம
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நம்பிக்கையான காதல்(சிறுகதை)  Empty Re: நம்பிக்கையான காதல்(சிறுகதை)

Post by புவனா Sat Mar 23, 2013 2:46 pm

அருமையான பதிவு... பகிர்வுக்கு நன்றி....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum