புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
1 Post - 1%
mruthun
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
2 Posts - 1%
manikavi
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_m10போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டம் சரி, ஆனால் எதற்காக...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:56 pm



ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும் தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை.

ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?

நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு.

மேலும் ஒரு விஷயத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தின் அடிப்படையிலான சித்தாந்தம்!

கடந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

துனிஷியாவில் ஜைனுல் ஆபிதீன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி ஆகியோரை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம். இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹசாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹியூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்?

இவை எல்லாம் உணர்த்தக்கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல என்பதுதான் அது. போராட்டம் தனது இலக்கை எட்ட சித்தாந்தம் வேண்டும். அதிலும், கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம் வேண்டும்.

தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?

1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.

தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.

இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்திய அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால் குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!

சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?

இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?

போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப் பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.

முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.

அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்திஜி, நேருஜி, நேதாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அகற்றப்பட்டு, போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?

ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.

சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம், கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன? தான் செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள்.

இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும். உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக்கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள் என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் - இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்த தன்மையும் சேரும்போதுதான் காலம் அதற்குத் தக்க பதிலைச் சொல்லும்.

இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.

இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது.

இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.

ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.

அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம்.

இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.

இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும். மேலும், காஷ்மீர் பிரச்னைக்காகவோ, மணிப்பூர் பிரச்னைக்காகவோ நம்மில் எத்தனை பேர் போராடியிருக்கிறோம்... கைமாறு எதிர்பார்க்க?

ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.

இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.

ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மலர இருக்கும் தமிழ் ஈழமும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்!

தினமணி



போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 23, 2013 3:48 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா ,,,

யதார்த்த உண்மையை உணர்ச்சிவசப்பட்டு பேசும் போராளிகள் உணருவதில்லை....இதனால் இங்குள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை...



சதாசிவம்
போராட்டம் சரி, ஆனால் எதற்காக... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 4:57 pm

சதாசிவம் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ,,,

யதார்த்த உண்மையை உணர்ச்சிவசப்பட்டு பேசும் போராளிகள் உணருவதில்லை....இதனால் இங்குள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை...

இவர்களின் பேச்சுக்கு பொதுமக்கள் பலிகடவாகிறார்கள் சிந்தியுங்கள் பொதுமக்களே




போராட்டம் சரி, ஆனால் எதற்காக... Mபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Uபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Tபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Hபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Uபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Mபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Oபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Hபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Aபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Mபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... Eபோராட்டம் சரி, ஆனால் எதற்காக... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 5:47 pm

இந்த நாடும் அரசியல்வாதிகளும் நாமும் ஒன்றுமே செய்ய இயலவில்லையே என பொருமி உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த ஆற்றாமையின் வெளிப்பாடே இது.

அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை - இதே போராட்ட குணம் நமை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் பக்கம் வரும் தேர்தலிலும் அன்றாட பிரச்சினைகளின் பக்கமும் திருப்பினால் நன்று.




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 23, 2013 6:52 pm

ஈழப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அதீத வளர்ச்சியில் உலகநாடுகளுக்கு ஏற்பட்ட அதிருப்தி. இந்துமகா சமுத்திரத்தில் வல்லாண்மைக்காக பல நாடுகள் நானா நீயா என்று போட்டிபோடும் போது முப்படைகளும் கொண்டு துல்லியமான குறிவைத்து தாக்குதல்களை நடாத்தும் ஈழதேசம் எல்லாவற்றையும் முந்தி விடும் என்ற எண்ணம். முளையிலேயே கிள்ளிவிடாவிட்டால் பெரும் ஆபத்து தமக்கு என்னும் முன்னெச்சரிக்கை

இதனால் பல தேசங்கள் ஒன்றுகூடி இரகசிய கூட்டம் கூடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் ஈழ போராடத்தை நிர்மூலமாக்குவதென்று. அதன்படி இன்றும் ஒத்துழைக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு சுதந்திர தேசம் பங்கிட்டு கொடுத்தால் இன்னொரு புலிகள் விரைவில் எழுவார்கள் என்பது அவர்கள் ஊகிப்பாக் இருக்கலாம். அதனால் தமிழன் அடிமை இனமாக வாழச் செய்வதே உலகின் நோக்கம் ( இங்கே ராஜீவ் காந்தி எல்லாம் சும்மா போலி குற்றச்சாட்டுக்கள் மக்களை ஏமாற்ற)

அப்படியென்றால் தமிழனுக்கு விமோசனமில்லையா. ஒற்றுமை யில்லாமை மிகப்பெரிய கேடு..போராட்ட காலத்தில் விமானக்குண்டுகளென்று வெறும் மண்ணை நிரப்பி அனுப்பிவைத்ததாகவும் போராளிகளின் 15 கப்பல்களை ஆயுததுடன் கடலில் வைத்து அழிக்கவும் தமிழனே காட்டிக்கொடுத்தும் செய்யும்போது விடிவு எங்கே வரப்போகிறது?

அடுத்து மாணவார் போரட்டம்! இதுமகா பெரும் சக்தி மாணவன் நினைத்தால் மாற்றத்தை உருவக்கலாம் . இப்போது வேண்டியது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புடன் தான் இலங்கை அரசு தமிழனை வெட்டி போடுகிறது,இந்திய அரசியலில் மாற்றம் ஈழமக்களுக்கு வாழ்வு கொடுக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக