புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
91 Posts - 61%
heezulia
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
1 Post - 1%
viyasan
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
1 Post - 1%
eraeravi
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
283 Posts - 45%
heezulia
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
19 Posts - 3%
prajai
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_m10முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக


   
   
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 10:08 am

முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக 392906_593722373979942_1453216113_n

"டெல்லி" பாலியல் பலாத் காரம், பாலியல் பலாத் காரம் என்று என்னமா பிலிம் காட்டுராணுங்கள் இந்திய நார பய மீடியாக்களும், இந்திய கேவலங் கேட்ட அரசியல் வாதிகளும், பாராளுமன்றமே பொங்குதாம் ,

சோனியா நேரில் அனுதாபமாம்.. இவரின் உத்தம புத்திரன் இரு பாலியல் குற்ற வழக்குகளில் இருப்பதாக செய்திகள் வந்ததை யாமறோவோம், அமெரிக்காவில் பாலியல் குற்றத்திற்காக இவர் நுழைய முடியாதாம்.ஆடு நனையுது ஏன்னு ஓநாய் அழுவுதாம் !!!,

இந்தியாவின் தலை நகரத்தில நடந்தால் தான் இவனுகள் பொங்குவானுகளாம் .

டெல்லில நடந்தபடியால் இவனுகள் கொதித்து போனானுகள் , இதே ஒரு குக்கிராமத்தில் நடந்திருப்பின் எவனாவது பேசியிருப்பானா ?.

என் இன சகோதரிகளை மானபங்க படுத்து , பெண்ணின் தாயுறுப்பில் குண்டு வைத்தவன் சிங்களவன் கொடியவன், தமிழ் ஈழ பெண்களை மானபங்க படுத்தி சாகடித்து உயிர் அற்ற உடலுடன் உறவு கொண்டவன் சிங்களன், கோன்ஸ் வரிகளும் , கிருசாந்த்திகளும் நடந்த கூட்டு கொடூரத்துக்கு ஆளாக்க பட்டார்கள்.

என் சகோதரி இசைப் பிரியாவிற்கு நடந்தது இந்த உலகத்தில் எந்த பெண்ணுக்காவது நடந்திருக்குமா?

என் இனத்துக்கு நடந்த இந்த கொடூரம் அனைத்துக்கும் இந்த வெறி கொண்ட காந்தி தேசமே காரணம். அப்படிப்பட்ட கொடூர மான உங்கள் தேசத்தில் இப்படி நடந்தால் நானும், என்னை சார்ந்த மக்களும் ஏன் கவலைப்பட வேண்டும் ?

இப்படி நடந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான், ஏன் என்றால் இந்த வலிகளை நீங்களும் ஒருமுறை அனுபவித்து பாருங்களேன். உலகில் உள்ள எந்த தமிழனாவது "டெல்லி காம கூத்துக்கு " கவலைப்பட்டால் செருப்பால் அடிக்க விரும்புகிறேன்.




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 10:10 am

1,50,000 மக்கள் குருதி சிந்தியது , சோத்து பொட்டலத்திர்க்காக அல்ல ,சுதந்திர தமிழீழத்திற்காக!!

முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக 599789_616585511701319_1167329037_n




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 10:11 am

முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக 297038_617100858316451_724894404_n




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 10:12 am

இன்று திருநெல்வேலியில் நடைபெற்றுவரும் தொடர் முழக்க போராட்டத்தின்போது இவர்கள் ஒலி வாக்கியை(mike) கையில் பிடித்து முழக்கம் மிட்டனர் முடிவில் ஈழம் மலரும் ஈழம் மலரும் என்று முழக்கத்தை முடித்தனர் ஆம் அதில் ஐயமில்லை நாளைய தலைமுறையும் இணைந்த பெருமிதத்தில் கூறுகிறோம்.
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc7/481983_443065729095792_895895814_n.jpg




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 10:15 am

தமிழ் நாட்டிலுள்ள தொப்புள் கொடி உறவுகளுக்காக ஈழத்திலிருந்து ஒரு ஏதிலியின் கடிதம்


தமிழ் நாட்டில் உள்ள எம் தொப்புக் கொடி உறவுகளாகிய எம் நேசத்திற்குரிய கல்லூரி மாணவர்களே ஈழத்தில் இருந்து ஒரு ஏதிலியின் கடிதம் இது.
இலங்கையின் தீவில் வாழும் தமிழர்களாகிய நாம் இற்றைக்கு சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசத்தினாலும் சிங்கள மக்களாலும் அடிமைத்தனத்திற்குள்ளாக தள்ளப்பட்டதோடு, இதற்கு எதிராக போராடியும் வந்தோம்.

இதனால் எமது உயிரிலும் மேலான எத்தனையே இளைஞர்கள், யுவதிகளின் உயிர்களை இந்த மண்ணில் வித்துடல்களாக நாம் விதைத்துள்ளோம்.ஆனால் இன்று இந்திய அரசாங்கம் எம் தமிழ் இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி விட்டதால் என் அறிவு எட்டிய எம் வாழ்க்கையை மாணவர்களாகிய உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமைதி காக்கும் படையென்று இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் எம் தமிழர்களில் பலரை அநியாயமாக கொன்று குவித்தது. இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைச் சம்பவத்தை யாராலும் எளிதாக மறக்க முடியாது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்திய அமைதி காக்கும் படையின் அநியாயங்களுக்கு எதிராகவும் நாம் போராட தள்ளப்பட்டோம். இறுதியாக எம் போராட்டங்களால் இந்திய அமைதி காக்கும் படை இந்த மண்ணில் இருந்து வெளியேறியது. ஆனால் எம் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

இலங்கையின் சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அநியாயமாக பல பொது மக்கள் புக்காரா குண்டு வீச்சு விமானங்களின் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டனர்.

நவாலியில் தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்களையும் குண்டு வீசிக் கொன்றனர். எங்கள் ஊரில் ஆலங்களுக்கும் அடைக்கலத்திற்கு ஒடிச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு பல படுகொலைகளைச் செய்து இறுதியாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள இராணுவத்தினால் எம் மக்கள் வெளியேற்றப்பட்டு பலர் கொன்று அழிக்கப்பட்டு எஞ்சியவர்களை சிறைப் பிடித்து கொண்டு வந்து மீள்குடியேற்றம் செய்து அவர்களை இராணுவ மண் அணைகளுக்குள்ளே சிறை வைத்தது.

ஆனால் உள்ளே எம் மாணவிகளை மாணவர்களையும், எதிர்காலச் சந்ததியையும் சிதைக்கும் நடவடிக்கைகளே உலகத்திற்கு தெரியாமல் நடைபெற்றன. செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி போன்ற எத்தனையே மாணவிகளின் கற்புக்களும் உயிர்கள் இராணுவ முகாம்களுக்குள்ளே புதைக்கப்பட்டன.

இவ்வாறு தமிழ் மக்கள் கொன்று எமது தமிழ் இனம் அழிக்கப்படும் போது தான் எம் தேசியத் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்தை மீளக்கைப்பற்றுவதற்கான ஆயுத வழிப் போராட்டம் ஆரம்பமானது.

இதன் போது சிங்கள இராணுவ நிலைகளை தகர்தெறிந்து எம் புலிப்படைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் இந்திய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.

இதன் பின்னர் சமாதானம் என்ற போர்வையில் இலங்கையின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான சிங்கள அரசு எம் போராட்டத்தினை பொட்டுப் பூச்சி போல மெல்ல மெல்ல சிதைக்க தொடங்கியது.

துரோகியான கருணாவினை பிரித்தது முதல் பல்வேறு நாசகார நடவடிக்கைகளை செய்தது. இதனாலேயே தமிழ் மக்கள் 2005ஆம் ஆண்டு சிங்கள தேச தேர்தலை புறக்களித்ததோடு வாக்களிக்கவில்லை.

இதன் பின்னர் எம் ஆயுதப் போராட்டத்தின் மீது சிங்கள இராணுவத்தினால் ராஜபக்ஷவின் கட்டளையில் கிழக்கில் மாவிலாறிலிருந்து யுத்தம் ஆரம்பமாகி பின்னர் வடக்கு வரை அப்பேராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. இதன்போது எம் தமிழ் மக்கள் பலர் கிழக்கில் கொல்லப்பட்டனர்.

எமது ஆயுத வளங்கள் அழிக்கப்பட்டன. எம் தமிழ் ஈழ மண்ணிற்காக பல மாவீரர்களானர்கள். ஆனால் இந்திய அரசாங்கம் மற்றும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளின் உதவியுடன் பாரிய எடுப்பில் யுத்த முனைகளை எம் மக்கள் மீது சிங்கள அரசாங்கம் திறந்தது. இவற்றிற்கு எதிராக புலிகளும் முப்படைகளையும் களமிறக்கினார்கள்.

எம் போராட்ட வலுவை குறைத்து மதிப்பிட்டிருந்த இந்திய அரசாங்கம் எம் கள நாயகர்களின் தியாகளைக் கண்டு நடுங்கியது. இதனால் மேலதிகமாக இலங்கைக்கு நவீன ராடர்கள். நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்ததோடு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி வைத்தது.

இந்தியா மட்டுமல்ல எட்டிக்கு போட்டிய ஒவ்வொரு வல்லரசுகளும் தமது படைகளையும் நவீன ஆயுதங்களை அள்ளி வழங்கின. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, அநியாயமாக எமது உறவுகளின் உடல்கள் சிதறிப் போயின.

இறுதியாக எம் போராட்டத்தின் ஒவ்வொரு கணங்களும் இந்தியாவினால் மிக மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிங்கள அரசிற்கு தகவல் அனுப்பபட்டு எம் போராட்டம் சிதைக்கப்பட்டது.ஆனாலும் எம் தேசியத் தலைவர் தன்னுடைய மகனையே எம் மக்களுக்காக ஈழ மண்ணில் பலியாக்கினார்.

உலகில் எந்த தலைவனும் செய்ய துணியாத செயல்களை எம் தலைவர் செய்து எதிரிகளே புகழ்ந்து சொல்லும் அளவிற்கு துணிச்சலான முடிவுகளை எடுத்து இறுதி வரை ஒரு நோக்கத்திற்காக வாழ்ந்து காட்டினார்.

ஆனால் மறுபுறம் எமது மக்கள் மீது சிங்கள இராணுவம் கொத்தணிக் குண்டுகளை வீசியதோடு, உலகில் எந்த மூலையில் செய்யக் கூடாத மிகக் கேவலமான செயலாக நவீன இராசயன ஆயுதங்களையும் பாவித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான எம் உறவுகள் அழிக்கப்பட்டனர்.

தமிழர் என்ற இனம் இலங்கை தீவில் தினமும் சிங்கள இராணுவத்தினால் கொன்றழிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ் நாட்டின் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக 2009 ஆம் தமிழ் நாட்டில் உள்ள வாக்கு வங்கிகளை கொள்ளையடிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஒரு நாள் உண்ணாவிரத நாடகம் ஆடினார்.

இதனை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். தி.மு.க வாக இருந்தாலும், அ.தி.மு.க வாக இருந்தாலும் தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கு செயற்பாடுகளிலேயே குறியாக இருந்தன. தவிர ஈழத்தில் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன சுத்திகரிப்புக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவில்லை.

ஆனால் இங்கு எம் உறவுகள் முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட போராளிகள் சிங்கள இராணுவத்தினால் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர்.

சரணடைய வந்த புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் அணியினரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஏற்கனவே சனல்-4 ஊடகம் உலகறியச் செய்து விட்டது.இப்போது எம் நேசத்தலைவனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டது. பின்னர் படுகொல்லப்பட்டது.

சிங்கள இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை கண்கட்டி, கை கட்டி மிகவும் கேவலமாக சுட்டுக் கொல்வது, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியா, உள்ளிட்ட தமிழ் பெண்களின் அந்தரங்கங்கள் சிங்கள இராணுவத்தினால் பகிரங்கமாக்கப்பட்டது, தமிழ் பெண்கள் மீதான காமத் தனங்கள், இவைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்ட எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சிங்கள காடையர்களின் கொலை வெறித்தனங்கள்.

இவை தவிர புனர்வாழ்வு என்ற பெயரில் எத்தனை எத்தனையே ஆயிரமாயிரம் இளைஞர்களும், யுவதிகளும் தினம் தினம் சித்திரவதைகளுக்குள்ளும் பாலியல் வல்லுறவுகளுக்கும், உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை நீங்கள் அறியாதவை.

இவற்றில் இன்னும் அதிகமாக எம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல், இராணுவ முகாம்களுக்களுக்காகவும், பௌத்த விகாரைகளுக்காகவும் நில அபகரிப்பு, எமது வளங்கள் சுரண்டப்படுகின்றன. எம் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

மீள்குடியேற்றங்கள் என்ற பெயரில் எம் மக்கள் காடுகளிலும் பற்றைகளுக்குள்ளும் கொண்டு சென்று இறக்கப்படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் மனநோயாளிகளாக்கப் படுகின்றனர்.

இத்தகைய மோசமான நிலையில் தமிழ் நாட்டு உறவுகளை சாந்தப்படுத்தவும் தேடிக் கொண்ட பாவங்களுக்கு விமோசனம் தேடும் வகையிலும் 50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டம், துவிச்சக்கர வண்டிகள் என உதவிகளையும் கிள்ளி வீசியிது இந்திய அரசாங்கம்.

ஆனால் சிங்கள அரசாங்கம் தமிழ் நாட்டு தமிழ் மீனவர்களை “சிங்கள அடி தெரியுமா?” என்று கேட்டுக் கேட்டு தொடர்ந்தும் அடித்து உடைத்துக் கொண்டே இருக்கின்றது. இது கூட இந்திய அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான ஒரு வெறுப்புணர்வான செயற்பாடே ஆகும்.

இன்று எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த முறை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குல நாடுகளும் அமெரிக்காவும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

ஆனால் இந்திய அரசாங்கம் தனது துரோகத்தனத்தால் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்கியது. பின்னர் நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பது போல் ஆதரவும் அளித்தது. இதன் மூலம் இரு பக்கமும் நல்ல பிள்ளையாகியது. ஆனால் அப்போது கூறப்பட்டதைப் போல ஒரு வருட காலத்தில் எந்த விதமான முன்னேற்றங்களை காணாத அமெரிக்கா இம்முறை மிகவும் இறுக்கமாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை என்ற பொறிமுறையை உள்ளடக்கி தீர்மானத்தை முன்வைத்தது.

ஆனால் இந்திய அரசாங்கம் இம்முறையும் தனது நயவஞ்சக்காதால் இலங்கையை காப்பாற்றி விட்டது. இதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லாத உப்பு சப்பில்லாத தீர்மானமே ஐ.நாவில் நிறைவேற்றவுள்ளது.

இதற்கிடையில் அடுத்த தேர்தலை குறி வைத்து கலைஞர் கருணாநிதியும் மத்திய அரசில் இருந்து விலகுதல், டேசோ என்று தனது அரசியல் சித்து விளையாட்டுக்களை காட்ட ஆரம்பித்து விட்டார்.

எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் சிங்கள அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டள எம் அப்பாவி தமிழ் மக்களின் சிந்தப்பட்ட இரத்தின் மூலமும் ஏற்பட்டது. கடவுளாலும் எமது மக்களின் காய்ந்து போகாத இரத்தத்தினாலும் ஏற்பட்ட இந்த இறுதி சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கமும் எமக்கு துரோகத்தையே செய்தது.

இன்று மாணவர்களாகிய நீங்கள் எங்களுக்காக செய்து வரும் போராட்டங்களை குறித்து ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளாகிய நாம் மகிழ்கின்றோம். இந்தப் பேராட்ட அக்கினி எமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நாம் நம்ப ஆரம்பித்துள்ளோம்.

நீங்கள் எந்த அரசியலுக்கு பின்னாலும் செல்லாமல் இருக்கும் வரையில் எங்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் நீங்கள் குடியிருப்பீர்கள். உங்கள் போராட்டங்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பரவ வேண்டும்.

நீங்கள் எங்களுக்காக போராடுவீர்கள் என்று தெரிந்தே அன்றே தீர்க்கதரிசனமான எங்கள் மேதகு தலைவன் உங்களை குறித்து தனது மாவீரர் உரைகளில் மறைமுகமாக சுட்டியிருக்கின்றார்.

இலங்கையில் தழிழர்களுக்கு என தனியான ஒரு நாடு தான் எங்கள் பிரச்சினைக்கான தீர்வு, இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுகிறேன். அத்தோடு இந்திய அரசின் துரோகத்தனங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுங்கள்.

நாம் அனைவரும் தமிழர்கள். இது வெறுமனனே இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் அல்ல. தமிழர்கள் என்ற இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்தாலும் தமிழ் ஈழத்தில் உங்களை சந்திக்க காத்திருக்கின்றேன்.

தமிழரின் தாகம் தமீழத் தாகம்.

முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக 525090_10152682876110637_1815122341_n




அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 11:31 am

அருமையிருக்கு நண்பரே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 25, 2013 11:48 am

நாம் அனைவரும் தமிழர்கள். இது வெறுமனனே இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் அல்ல. தமிழர்கள் என்ற இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்றி இதை எப்போ நாம் புரிந்துகொள்ள போகிறோமோ தெரியவில்லையே சோகம்

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Mon Mar 25, 2013 11:58 am

அழுகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 25, 2013 12:02 pm

இவர்களின் நிலை பார்க்க பொறுக்குதில்லை அண்ணா

நான் ஒன்று சொன்னால் கோபபடகூடாது முதலில் தமிழக அரசியல் வாதிகள் ஒற்றுமை இல்லை அவர்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் என்றோ ஈழம் பிறந்திருக்கும்

தமிழக மக்களும் முட்டாள் அரசியல் வாதிகளின் பேச்சை நம்பி மோசம் போய்விட்டார்கள் சோகம்




முகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Mமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Uமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Tமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Hமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Uமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Mமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Oமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Hமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Aமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Mமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக Eமுகனூலில் பார்த்தது - தமிழீழத்திற்காக D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக