ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

+7
Dr.S.Soundarapandian
சதாசிவம்
Muthumohamed
ராஜு சரவணன்
jeju
mbalasaravanan
சாமி
11 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by சாமி Thu Mar 21, 2013 12:48 pm

First topic message reminder :

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.

தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.

தமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா? அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா?....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.

மொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்யவேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

இதுவரை சொல்லிய உத்திகள் :-

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.
உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2. உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும்.
(எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8. மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9. சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10. வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

12. MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.

13. கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.

14. வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.

15. குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ளவர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள். ஒரு இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ).

16. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். (ஒரு நண்பர் தன்னுடைய மகனுக்கு தீட்ஷித் என்று பெயர் வைத்திருந்தார். அது வடநாட்டு சாதிப்பெயர் என்று தெரியாமல்!)

17. அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.

18. திருமணப்பரிசு அளிக்கும்போது நல்ல தமிழ்ப்புத்தகங்ககளை அளியுங்கள். எடுத்துக்காட்டு திருக்குறள் . திருக்குறளுக்கு உரையாசிரியர் மிகவும் முக்கியம். சார்பு உடையவர்கள் உரைகளை வாங்காமல் கா.சு.பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ..ராமலிங்கம் பிள்ளை, தேவநேயப்பாவாணர் உரைகளை வாங்கலாம். அதேபோல் திருக்குறளைப் போல் ஒன்றே முக்கால் அடி உரைகளை வாங்காதீர்கள்.. நல்ல விரிவான உரைகளை வாங்குங்கள்.

19. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

20. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

21. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

22. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

23. எதெற்கெடுத்தாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதற்கு பதிலாக ‘மன்னிக்கவும்’...’மன்னிக்கனும்’...’மன்னிச்சுங்குங்க’... என்று சொல்லுங்கள். அதே போல் ‘ப்ளீஸ்’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

24. மகிழுந்துகளில் செல்லக்குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

25. மகிழுந்துகளில், இரு சக்கர வாகனங்களில் தங்களின் தொழிலை எழுதும் போது தமிழில் எழுதுங்கள். எ.கா: ஊடகம் (PRESS), மருத்துவர் (DOCTOR), வழக்கறிஞர் (ADVOCATE) இன்னும்பிற.

26. தமிழ்நாட்டில் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வசதி இல்லை (அரசாங்கப் பள்ளிகளைத் தவிர). குறைந்தபட்சம் மொழிப்பாடம் தேர்வு செய்யும் போதாவது தமிழ் மொழிப்பாடம் தேர்வு செய்யுங்கள். ஹிந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லுகிற புரூடாவையெல்லாம் நம்பாதீர்கள். இன்றைய தேதியில் ஹிந்தி நன்கு தெரிந்த (தாய் மொழியாக கொண்டவர்கள்தான்) தமிழ்நாட்டில் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் ஒரு மொழியைப்படிப்பதற்கு 3 மாதங்கள் போதும். எத்தனை மொழி வேண்டுமானாலும் பள்ளிக்கு வெளியே கற்றுக் கொடுங்கள்.

27. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். இதை TEMPLATE ல் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

28. இப்பொழுதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் செய்வதில் GMAIL லில் எளிமையான பல வசதிகள் உள்ளன. மின்னஞ்சல் அனுப்புவதற்கு தமிழைப் பயன்படுத்துங்கள்.

29 அதேபோல் PASSWORD வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். (எ.கா) SAIVAM - சைவம்

30. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.

31. பேருந்துகளில் அல்லது தானிகளில் (ஆட்டோ) ஏறும்போது நிறுத்தங்களை தமிழில் மட்டுமே (வெட்கப்படாமல்) சொல்லுங்கள். எ.கா: ANNA NAGAR WEST DEPO - அண்ணாநகர் மேற்கு பணிமனை, GH / GENERAL HOSPITAL – அரசாங்க பொது மருத்துவமனை.

32. அதேபோல் எந்த ஓர் ஊரையும் சுருக்கி ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள் எ.கா: T NAGAR – தியாகராய நகர். KK NAGAR – கலைஞர் கருணாநிதி நகர். திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று அழைக்காதீர்கள். திருப்பெரும்புதூரை ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்காதீர்கள்.

33. மேற்கூறிய செயல்களைச் செய்யும் அல்லது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் (மிகச்சிறிய செயலாய் இருந்தாலும்) யாரைக் கண்டாலும் மனம் திறந்து பாராட்டுங்கள். நான்கு பேருக்குத் தெரியும்படி பாராட்டுங்கள்.

34. பேசும்போது எடுத்துக்காட்டாகச் சொல்லும்போது தமிழ் சாதனையாளர்களை மட்டும் சொல்லுங்கள். தமிழ் ஆட்கள் தெரியாவிட்டால் எடுத்துக்காட்டையே தவிருங்கள். (சாதனையில் தமிழனை மிஞ்சியவர் யாரும் இல்லை என்பதே உண்மை)
எ.கா: அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன், கல்விக்கு முருகன்...இன்னும் பிற.

35. தமிழ் இலக்கணம் முறையாக தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தமிழின் சிறப்பை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். பிறவிப் பயனை அடைய முடியும். வயதாகிவிட்டதே என கவலை கொள்ளாதீர்கள். கற்பதற்கு வயதே கிடையாது. முறையாக தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி: அஞ்சல் வழிக் கல்வியில் BA., B.Lit., M.A. (TAMIL) போன்ற பட்டப்படிப்புகளை படிக்கலாம்.


(தமிழ் வளரும்)


Last edited by சாமி on Thu Mar 28, 2013 6:10 pm; edited 9 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by தர்மா Thu Mar 28, 2013 6:29 pm

தமிழ யாரவது படி படி ன்னு சொன்னா கோவம் வருது ராஜா தம்பி இனிமேல திரிந்திகிறேன் . நாபதிரெண்டு வயசுல எங்கயா நீ திருந்தபோற என்று நீங்கள் சொல்வது கேட்குது
ராஜா wrote:
தர்மா wrote:பிரச்சனைகளை கிளறி சுகம் காண்பதே சிலருக்கு வியாதி ஆகிவிட்டது
என்ன ஆச்சுண்ணே இவ்வளவு விரக்தியா சொல்லுறீங்க புன்னகை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by ராஜு சரவணன் Thu Mar 28, 2013 7:03 pm

தர்மா wrote:இதெல்லாம் வச்சு வேலை கிடைக்குமா. சாப்ட்வேர் கம்பனி காரனையும் வெளி நாட்டு கார் கம்பனி காரனையும் சென்னை பூராம் உக்கார வச்சுட்டு நாம் தெருவில நிக்கிறோம் இதுல நீங்க சொல்ற எதையுமே செய்ய முடியாது. அட்லீஸ்ட் நம்ம குழந்தைகளுக்கு நீங்க சொன்ன மாதிரி தமிழின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல முயலுகிறேன் சாமி அவர்களே

நீங்கள் சொன்னமாதிரி நம் குழந்தைகள் தான் எதிர்காலத்து தமிழ் வளர்ச்சியின் முதற் கண்கள்.அவர்களுக்கு தமிழின் முக்கியதுவத்தை எடுத்து சொல்வதற்கு முன் அவர்களை தமிழ் மீடியத்தில் சேருங்கள் அது போதும். பிறகு பாருங்கள் நமக்கு அடுத்த தலைமுறையில் அனைவரும் எதிர்பார்ப்பது போல் தமிழ் உயர்வு பெற்று திகழும். அதை விடுத்தது கொக்கு தலையில் வெண்ணை வைத்து வெண்ணை உருகி கண்ணில் பட்டு கண் எரியும் நேரம் பார்த்து கொக்கை பிடிப்பது என்ற கதை ஆகிவிடும்.

வெண்ணை வைபதர்க்கு பதில் கழுத்தை பிடித்து கொக்கை பிடிப்பதே புத்திசாலிதனம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by Kuzhali Fri Mar 29, 2013 1:10 pm

சாமி wrote:பேசும்போது எடுத்துக்காட்டாகச் சொல்லும்போது தமிழ் சாதனையாளர்களை மட்டும் சொல்லுங்கள். தமிழ் ஆட்கள் தெரியாவிட்டால் எடுத்துக்காட்டையே தவிருங்கள். (சாதனையில் தமிழனை மிஞ்சியவர் யாரும் இல்லை என்பதே உண்மை)
எ.கா: அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன், கல்விக்கு முருகன்...இன்னும் பிற.

அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன் எல்லாம் சரி! கல்விக்கு கலைமகள் தானே... முருகன் எப்படி கல்விக்கு?
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by சாமி Tue Apr 02, 2013 10:41 pm

Kuzhali wrote:
சாமி wrote:பேசும்போது எடுத்துக்காட்டாகச் சொல்லும்போது தமிழ் சாதனையாளர்களை மட்டும் சொல்லுங்கள். தமிழ் ஆட்கள் தெரியாவிட்டால் எடுத்துக்காட்டையே தவிருங்கள். (சாதனையில் தமிழனை மிஞ்சியவர் யாரும் இல்லை என்பதே உண்மை)
எ.கா: அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன், கல்விக்கு முருகன்...இன்னும் பிற.

அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன் எல்லாம் சரி! கல்விக்கு கலைமகள் தானே... முருகன் எப்படி கல்விக்கு?

கல்விக்கு உரிய கடவுள் முருகன் மட்டும்தான்!
எனது http://www.eegarai.net/t97780-topic#946823 பதிவைப் படியுங்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by சாமி Tue Apr 08, 2014 7:44 am

அவசியமான பதிவு என்பதாலும், ஈகரையின் புதிய உறவுகளுக்கு தேவைப்படும் என்ற நோக்கில், இந்தப்பதிவை மறுபடியும் வெளிக்கொணருகிறேன்! நன்றி!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by சாமி Thu Jun 19, 2014 7:14 am

36. சுறவம் (தை) முதல் தேதி வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதைப் போல ஒவ்வொரு தமிழ் மாத முதல்தேதியும் வீட்டில் இனிப்பு செய்து கொண்டாடுங்கள்.

குழந்தைகளிடம் இன்று தமிழ் மாதம் ஆடவை (ஆனி) தொடங்குகிறது என்று சொல்லுங்கள். முடிந்தால் உங்களுடைய நெருங்கிய சொந்தங்களுக்கும் பகிர்ந்து அளியுங்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by Dr.S.Soundarapandian Thu Jun 19, 2014 8:39 pm

நன்றி நன்றி 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 6 Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum