ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகக் களஞ்சியம்

Go down

நாடகக் களஞ்சியம் Empty நாடகக் களஞ்சியம்

Post by சாமி Wed Mar 20, 2013 2:22 pm

"கலைக்கரசு' என்று போற்றப்படும் கலை - நாடகக் கலை.

"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று போற்றப்படுபவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

சமரச சன்மார்க்க நாடகச் சபையை நிறுவியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.

மனோன்மணீயம், இரகசியவழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.

"அனிச்ச அடி' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - அ.பழனி.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் - அனிச்ச அடி.

"மண்ணியல் சிறு தேர்' என்னும் நாடகம், வடமொழி நூலான மிருச்சகடிகம் என்ற நூலைத் தழுவி பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியாரால் எழுதப்பட்டது.

தமிழில் முதன் முதலில் தோன்றிய சமூக நாடகம் - டம்பாசாரி விலாசம்.

"டம்பாசாரி விலாசம்' எனும் நாடகத்தின் ஆசிரியர் - காசி விசுவநாத முதலியார்.

"நந்தனார் சரித்திரம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - கோபால கிருஷ்ண பாரதியார்.

"தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நூல்கள் - அபிமன்யு, சுந்தரி, அல்லி அர்ஜூனா, இலங்கா, இலங்கா தகனம், கோவலன், சிறுத்தொண்டர் முதலியன.

சங்கரதாஸ் சுவாமிகளின் பட்டப்பெயர்கள் - பேரறிஞர், நடிப்புக் கலைவன பேராசான், ஞானச்செம்மல், மகாமேதை, கலங்கரை விளக்கம், நாடக உலகின் இமயமலை, நாடக உலகின் ஓர் நல்லிசைப்புலவர்.

"ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடலை (திருவிளையாடல் - ஒüவையார்) இயற்றியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

"சுகுண விலாச சபை'யை நிறுவியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்கள் - நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நாடகத்தமிழ், நடிப்புக் கலை, நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்போ?, நாடகமேடை நினைவுகள்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய சிறப்பான நாடகங்கள் - சதிசுலோச்சனா, யயாதி, காலவரிஷி, சபாபதி, கலையோ காதலோ?, பொன் விலங்குகள், குறமகன், தாசிப்பெண் ஆகியவை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், சூர்ப்பனகை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் - நாடகவியல்.

(தொடரும்) நன்றி - தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நாடகக் களஞ்சியம் Empty Re: நாடகக் களஞ்சியம்

Post by சாமி Wed Mar 20, 2013 2:23 pm

புராணக் கதைகளை மையமாகக் கொண்டு கிராமங்களில் நடத்தப்படும் நாடக வகை - தெருக்கூத்து.

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவது நாடகம். இதற்குக் கூத்துக்கலை என்ற பெயரும் உண்டு.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நாடகங்கள் - 94.

கட்டியக்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள் - அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம்.

மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல் - மந்தவிலாசம்.

சேக்ஸ்பியரின் நாடகங்களைப் பெருமளவில் மொழிபெயர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.

மதுரையில், தமிழ் மூதாட்டி "ஒüவை' நாடகம் அரங்கேறிய ஆண்டு 1942. இதில் ஒüவையாராக வேடமிட்டு நடித்தவர் டி.கே.சண்முகம்.

நாடக வேந்தர், நடிகர் கோ, முத்தமிழ் கலா வித்துவரத்தினம் எனப் போற்றப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"நாடக அரசி' எனப் போற்றப்படுபவர் - பாலாமணி அம்மையார்.

சகஸ்ரநாமம் நிறுவிய நாடகக் குழுவின் பெயர் - சேவாஸ்டேஜ்.

டி.கே.எஸ். சகோதரர்கள் நிறுவிய சபையின் பெயர் - சண்முகானந்த சபை.

"நாடக மறுமலர்ச்சித் தந்தை' என்று போற்றப்படுபவர் - டி.கே.எஸ். சகோதரர்கள்.

"தண்ணீர் தண்ணீர்' நாடகத்தின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்.

"பைத்தியக்காரன்' எனும் நாடகத்தை இயற்றியவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி. இதைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

பாரதியாரின் "பாஞ்சாலி சபதத்தை' நாடகமாக இயற்றி, அந்நாடகத்தில் தானே பாரதியாராக வேடமிட்டு நடித்தவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

"நாடகத் தொல்காப்பியர்' என்று பாராட்டப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"தமிழ் நாடக மன்றம்' அமைத்தவர் - எம்.ஆர். ராதா.

புராண நாடகங்களைச் சிறப்பாக நடத்தியவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

நாடகத் திலகம், நாடகக் காவலர் என்று போற்றப்படுபவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

இரத்தக் கண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் - திருவாரூர் தங்கராசு.

அண்ணா இயற்றிய நாடகங்கள்: சந்திரோதயம், ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி, சொர்க்க வாசல், இன்ப ஒளி, நல்லதம்பி, கண்ணாயிரத்தின் உலகம், சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்.

நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் இலக்கணம் வகுத்த நூல்கள் - முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலியவை.


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum