ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மை என்னும் பெரும் கருணை...

+3
ராஜா
சார்லஸ் mc
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rameshnaga Mon Mar 18, 2013 6:15 pm

நேற்றுவரை...

பெண் என்னும் அடையாளங்களோடு பிறந்தால்...

கள்ளிப்பால் தந்து...
குப்பைத் தொட்டியின் குழந்தையாக்கி...

பிழைத்தால்...
அடுக்களைக்குள்...
எரியும் நெருப்புடன் கருக வைத்து...

களைத்த கணங்களில்...
கடவுளோடும்...காற்றோடும் பேசித் திரிய வைத்து...

எப்பொழுதும் பருத்திருக்கும் கருப்பையுடன்
வாழ்வின் சுமை சுமந்து திரிந்து...
மூன்று முடிச்சுக்குள்...மூச்சுத் திணறி...

கசங்கிய காகிதமாய்..
கேட்பாரற்றுக் கிழிந்து போய்க் கிடக்க...

நீ
துடைத்தெறிந்த குப்பையல்ல நான் இன்று.

நீ
பெருந்தன்மையாய் வீசி எறியும்...
இட ஒதுக்கீட்டுப் பிச்சைப் பாத்திரத்தின்
நசுங்கிய பாகமல்ல இன்று நான்.

இந்தக் கணத்தில்...
என்னை வாசிக்கும் கவிதை நான்...
எனக்கேயான அர்த்தங்களுடனும்...
எனக்கேயான விருப்பங்களுடனும் கூட.

நேற்றுவரை...
நீ என்னை அடைத்திருந்த மண் புழுதியில்...
புழுவாய் நெளிந்து...
நத்தைஎன நகர்ந்து...
கூடு என உன்னையும் சுமையாய் சுமந்த
நாட்களை உடைத்து....
என் வெப்பத்தில்
இன்று என்னை அடைகாத்து...
நானே வெளியேறி இருக்கிறேன்...
ஒரு சிறகு முளைத்த பறவை என..
இந்தக் கணங்களில்.

யுகம்...யுகங்களாய்...
கறை படிந்து...
கடவுளின் பெயரால்...
நீ நிகழ்த்திய பெண் வர்க்கப் படுகொலையின்...
இரத்தம் வழிந்த அழுக்கு நதியில்..
நீ நீந்தித் திரிய...

திசையற்றுத் திரிந்த துரும்பென...
அலைந்த நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன்...
உன் அகந்தையில்...
நீ ஒரு போதும் அறிய இயலாத எதிர் நீச்சலோடு.

காலம் காலமாய்...
கண் குனிந்து வரைந்த சிக்குண்ட புள்ளிகள்
நிறைந்த கோலங்களிளிருந்து
என் கண்களை அகற்றி...
கொடித் துணியோடு.. உலர்ந்த காலங்கள் அகற்றி..
பாண்டி ஆட்டங்களையும்...பல்லாங்குழிகளையும்
மூடி விட்டு...
எப்பொழுதும்...என் விதியைக் கிறுக்கலாய் எழுதும்
பனிரண்டு கட்டங்களைக் கலைத்துவிட்டு...

இந்தக் கணத்தின் பெண்ணாய்...
வாழ்ந்து...எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை.

இன்று வரை...
பெண் எனப் பிரித்து பேதையாக்கி
நீ என் மேல் குத்தி அடுக்கிய
முள் சிலுவைகளைக் கழற்றி வீசி எறிந்துவிட்டுத்தான்
வந்திருக்கிறேன்...இந்தக் கணத்தில்

என்றாலும்...
வழி தவறிய ஆடாய்த் திரியும்
உன் பாதை திருத்தி...

நல் மேய்ப்பனாய் இருப்பேன் நான்...
இன்றும்...என்றும்...

பெண் என்னும்
பெண்மையின் பெரும் கருணையோடு.
********************************************************************************

மார்ச்-8- பெண்கள் தினத்திற்காக என் நண்பரின் மகளுக்கு எழுதிக்
கொடுத்தது.
பதிய இன்றுதான் நேரம் கிடைத்தது.
**************************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by சார்லஸ் mc Mon Mar 18, 2013 6:50 pm

தாமதமாய் வந்தாலும் ... கவிதை அருமையிருக்கு


பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by ராஜா Mon Mar 18, 2013 6:54 pm

சூப்பருங்க அருமை அண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rameshnaga Mon Mar 18, 2013 6:58 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்., ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rameshnaga Tue Mar 19, 2013 11:04 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சார்லஸ்., ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 1:29 pm

அருமை அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by ஜாஹீதாபானு Tue Mar 19, 2013 1:58 pm

நீ
துடைத்தெறிந்த குப்பையல்ல நான் இன்று.

நீ
பெருந்தன்மையாய் வீசி எறியும்...
இட ஒதுக்கீட்டுப் பிச்சைப் பாத்திரத்தின்
நசுங்கிய பாகமல்ல இன்று நான்.

இந்தக் கணத்தில்...
என்னை வாசிக்கும் கவிதை நான்...
எனக்கேயான அர்த்தங்களுடனும்...
எனக்கேயான விருப்பங்களுடனும் கூட.

ரொம்ப அருமை அண்ணா மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rameshnaga Tue Mar 19, 2013 2:06 pm

ரொம்பவும் நன்றி! பாலசரவணன்., ஜாஹீதாபானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rameshnaga Tue Mar 26, 2013 5:22 pm

mbalasaravanan wrote:அருமை அருமையிருக்கு
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by rc.lakshmi Tue Mar 26, 2013 6:16 pm

அருமையான கவிதை வாழ்துக்கள்


" alt="" />
rc.lakshmi
rc.lakshmi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2012

Back to top Go down

பெண்மை என்னும் பெரும் கருணை... Empty Re: பெண்மை என்னும் பெரும் கருணை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum