புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
156 Posts - 79%
heezulia
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
3 Posts - 2%
prajai
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
Pampu
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
321 Posts - 78%
heezulia
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் மரணம் வரும்..!!

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 20, 2009 3:39 pm

உங்களுக்கும் மரணம் வரும்...........

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஒரு ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற "பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு" போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. "இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்" மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை. தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

"அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண" என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

"நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்" என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

"பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்" என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

"அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?" என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டித்த‌ சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன‌.

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 20, 2009 3:47 pm

இந்த மாதிரி இறந்தவரைக் கூட தொடுவதற்கு சிலர் ரொம்ப யோசிப்பாங்க..... அவங்க வீட்ல யாராவது இறந்துட்டா இப்படித்தான் யோசிப்பாங்களா.....

என்ன மனுசண்டா அவன்

மனிதனை தொட மனிதனே யோசித்தால் என்ன ........ அவன் உயிர் வாழனும்....

மன்னிக்கவும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை உணர்ச்சிகளை....
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 20, 2009 4:33 pm

வணக்கம்
படித்தேன். இதயத்தை உருவி வெளியில் போட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. அமரர் திரு தமிழ் வாணன் அவர்கள் அடிக்கடி கூறுவார்களாம். இழவு வீட்டில் அடிக்கிற மேளச் சத்தம் " டொண்டொண்டொணக்கு டொணக்கு " என்று கேட்குமாம். அதன் பொருள் " உண்டு உண்டு உனக்கும் உண்டு " என்பதாம்,. உலகத்தில் ஆச்சரியமான விஷயம் எது என்றால் செத்தவர்க்காகச் சாம்பிணங்கள் அழுவது தான் என்றார்கள். ஆனால் அழுவது போன்று நடிப்பவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டார்கள், நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 4:40 pm

ஆமா நமக்கும் மரணம் வரும்.. அப்போ நம்மளால் நம்ம மரணத்தை(இறந்த பின்னாடி) பார்க்கவா போறோம் ..என்ற திமிர் .. ஆனா பலருக்கும் தெரியலை..நாம இறந்த பின்னாடி கொஞ்ச நேரம் நம் உடம்பின் மேல் பரப்பில் நம்ம ஆத்தமா எல்லாத்தையும் பார்த்துகிட்டேதான் இருக்குமாம்--
நாம் கல்யாண வீட்டில் உதவி செய்வது ஒரு விஷயம் இல்லை..மரண வீட்டில் தான் நாம் எல்லாமே பண்ணனும் ,,
இங்கு சொல்லி இருப்பதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ,,மனிதர்களா இவர்கள் ??

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக