புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
33 Posts - 42%
heezulia
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
1 Post - 1%
jothi64
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
399 Posts - 49%
heezulia
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
27 Posts - 3%
prajai
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_m10விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:48 pm



‘எல்லாம் சிவமயம் என்பார்கள். ஆனால் எனக்கு எல்லாம் பயமயம்’ எனத் தொடங்கி உலகில் உள்ள எல்லாப் பயங்களும் தனக்கிருப்பதை மூச்சுவிடாமல் உளவியல் மருத்துவர் ஜெயராமிடம் அடுக்குவார் தெனாலி படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன். இன்றைய இந்தியர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் என்று சொன்னால்கூட இந்தியச் சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவினரின் உணர்வு புண்படும்போலிருக்கிறது. எந்தப் பிரிவினரின் மனத்தையும் புண்படுத்தாத ஒரு கருத்தைக் கண்டுபிடித்துக் கூறுவது என்பது கணிதத்தில் ஆகப் பெரிய பகா எண்ணைக் (prime number) கண்டு பிடிப்பதைவிடக் கடினமான காரியமாக இருக்கும். இந்தியர்களின் இந்த மனநிலை எந்த அளவிற்குக் கண்டனத்திற்குரியதோ அதைவிடப் பரிதாபத்திற்குரியது. ‘அனிச்ச மலரையொத்த’ இந்தியர்களின் உணர்வு நிலைக்கு எந்த வகையிலும் குறைவில்லாதது இந்திய அரசாங்கத்தின் நிலை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Pew Research Center’s Forum on Religion and Public Life நடத்திய உலகளாவிய ஆய்வில் மத நம்பிக்கைகள் - குறிப்பாகச் சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் - எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருப்பது தெரியவந்தது. தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களால் - அதாவது சமூகப் பகைமைகளால் - (social hostilities) மதச் சுதந்திரத்திற்கு ஏற்படும் ஆபத்து என்று வரும்போது இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உலகிலேயே ஆக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்தது. அரசாங்கத்தின் சட்டங்களாலும் கொள்கைகளாலும் மதச் சுதந்திரத்திற்கு நேரும் தடைகளைப் பொருத்து இந்தியாவின் நிலை மோசமாகவே இருக்கிறது. சமூகப் பகைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என இரண்டையும் கணக்கில் கொள்கிறபோதும் உலகின் மக்கள்தொகை மிகுந்த 25 நாடுகளில் ஈரான், எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கிறது. மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என வருகிறபோது இந்தியா எந்த அளவிற்குப் பின்தங்கியிருக்கிறது, பிற்போக்காக இருக்கிறது என்பதை Pew Research Centerஇன் இந்த ஆய்வு காட்டுகிறது. சாதி மற்றும் மதம் குறித்த வழக்கத்திற்கு மாறான கருத்துகள் இந்தியர்களிடம் எத்தகைய கொந்தளிப்புகளை உருவாக்குகின்றன என்பதைப் பார்க்கிறபோது மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வு எவ்வளவு உண்மை என்பது நமக்குப் புரியம்

.ஒவ்வொரு சாதியினரும் மதத்தினரும் பிரிவினரும் தங்களை எப்படிப் பார்க்கிறார்களோ அல்லது எப்படிப் பார்க்கப்பட விரும்புகிறார்களோ அப்படியே அனைவரும் தங்களைப் பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பதுடன் அதற்கு மாறான பார்வைகள் வரும்போது கொந்தளித்துப் போகிறார்கள். சகிப்பின்மையின் உச்சமான இந்தப் போக்கிற்கு விதிவிலக்கான ஒரு கட்சியையோ அமைப்பையோ ஏன் ஒரேயொரு அரசியல் தலைவரையோகூட இந்தியாவில் காண முடியவில்லை என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கருத்துச் சுதந்திரம் என்பது (பிறர் மனத்தைப்) புண்படுத்துவதற்கான சுதந்திரமும் உள்ளடங்கியதே என்று மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி சமீபத்தில் கூறியது மிக அபூர்வமான விதிவிலக்கு. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தினர் யாராவது கருத்துச் சுதந்திரத்தால் பாதிக்கப்படுவார் எனில் தனது நிலையிலிருந்து திவாரி அந்தர் பல்டி அடிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் உச்ச நீதிமன்றம்கூட இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதைத் தான் அஷிஷ் நந்தி மற்றும் டேம் 999 திரைப்பட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள போக்கு காட்டுகிறது. கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பாக இதற்கு முன்னர் பல முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தபோதிலும் ஒரு நிறுவனம் என்ற வகையில் கருத்துச் சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தவில்லை என்பதையே அதன் சமீப காலப் போக்கு காட்டுகிறது. நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதியை உறுதி செய்வது வேறெதுவும் இல்லை என்று ஆஸ்திரிய சட்ட மேதை Eugen Ehrlich கூறியதையே ஒரே மாதிரியான விவகாரங்களில் முற்றிலும் வேறுபடும் தீர்ப்புகளைக் கூறும் நீதிபதிகள் நிரூபிக்கின்றனர். இவை எல்லாவற்றிலும் மிகப் பரிதாபத்திற்குரிய விஷயம் இந்த விவகாரத்தில் பாதிப்புக்குள்ளாகும் கலைஞர்கள், அறிவுஜீவிகளிலேயே பலர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல் போவதுதான். கமல் ஹாசனும் அஷிஷ் நந்தியும் தங்களுக்கு வந்த எதிர்ப்புகளை எதிர்கொண்ட விதம் காட்டுவது இதைத்தான். இந்தியாவைப் பொருத்தவரை அநேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கலைஞர்களும் அறிவுஜீவிகளும் எப்படித் தங்கள் கருத்துகள் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டவையல்ல, தங்கள் நோக்கம் அத்தகையது அல்ல என்று விளக்கமளிக்கிறார்களே தவிர உங்கள் உணர்வுகள் புண்படுவது என்பது உங்கள் பிரச்சினை, அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் எங்களுடன் விவாதியுங்கள் அல்லது எங்கள் எழுத்துக்களையும் படைப்புகளையும் புறக்கணித்துவிடுங்கள் என்று சொல்லும் துணிவு கொள்வதில்லை.

சமீபத்தில் அகில இந்தியாவின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த மூன்று விஷயங்கள் நமது குடிமைச் சமூகம், அரசாங்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றுமே கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதையே காட்டுகின்றன. முதலில் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். ஹாலிவுட் பாணியில், தீவிரவாதம் மற்றும் அதற்கெதிரான போர் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்தாது எடுக்கப்பட்ட சராசரியான படம் இது. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் வெள்ளைக்கார நாயகன் அமெரிக்காவையும் உலகையும் தீவிரவாதிகளிடமிருந்தோ வேற்று கிரகவாசிகளிடமிருந்தோ காப்பாற்றுவார். இந்தப் படத்தில் நமது ‘உலக நாயகன்’ அல் கொய்தா தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றுகிறார். மற்றபடி இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஒரு கதை சொல்லியின், இயக்குநரின் மேதைமையை வெளிப்படுத்தும் விஷயங்கள் என்று எவையுமே இந்தப் படத்தில் இல்லை. அதே நேரத்தில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விஷயங்கள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் குறித்த உண்மைக்குப் புறம்பான விஷயங்கள் என்று எவையும் படத்தில் இல்லை. ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம், கைக்கொள்ளும் போர் முறைகள், அப்பாவி ஆப்கன் மக்கள் மீது போர் ஏற்படுத்தும் பெரும் நாசங்கள், அல் கொய்தாவுடனான அதன் முந்தைய கால உறவு பற்றியெல்லாம் எதுவுமே இப்படத்தில் பேசப்படவில்லை என்பதிலிருந்தே தீவிரவாதத்திற்கெதிரான போர் குறித்த கமல் ஹாஸனின் புரிதல் நமக்குப் புரிகிறது. (1967இல் வெளியான அமன் என்னும் இந்தித் திரைப்படத்தின் கதாநாயகன் ராஜேந்திர குமார் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டால் பெரும் அழிவுக்குள்ளான ஹிரோ ஷிமா, நாகசாகிக்குச் செல்லும் முன்னர் பெட்ரண்ட் ரஸ்ஸலைச் சந்தித்ததைப் போல விஸ்வரூபம் படத்தின் கதாநாயகன் ஆப்கானிஸ்தான் போவதற்கு முன்னர் நோம் சோம்ஸ்கியைச் சந்திப்பதாகவோ அவரது புத்தகத்தைப் படிக்க நேர்வதாகவோ எடுக்கப்பட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்?). இந்தப் படத்தைப் பார்த்து இரு தரப்பினர்தாம் கோபப்பட வேண்டும்: அல் கொய்தா ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரிகள். அமெரிக்காவின் பார்வையை அப்படியே எந்த விமர்சனமும் இன்றி ஏற்றிருக்கும் கமல் ஹாசனின் பார்வை எந்த இடதுசாரிக்கும் மிகுந்த எரிச்சலை, கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இஸ்லாமிய - குறிப்பாகத் தமிழக இஸ்லாமிய - அமைப்புகள் ஏன் கோபப்பட்டன என்பது புரியவில்லை. கேரளா, உத்திரப் பிரதேசம் போன்ற முஸ்லிம்கள் மிக அதிகம் வாழும் மாநிலங்களில் இந்தப் படம் பெரிய எதிர்ப்பு எதையும் கிளப்பவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.




விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:48 pm


சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் படத்திற்குத் தடை கோரியவுடன் தமிழக அரசு உடனே படத்தைத் தடைசெய்தது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா அரசாங்கம் காட்டிய முனைப்பும் தீவிரத்திற்கான உள்ளடி அரசியல் காரணங்களும் ஏற்கனவே பல பத்திரிகைகளால் அலசப்பட்டுவிட்டன. இந்தத் தடையால் ஜெயலலிதா இரண்டு விஷயங்களைச் சாதித்திருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக, பொதுவாக இந்துத்துவா சார்பு மனநிலை கொண்ட ஜெயலலிதா இந்த நடவடிக்கை எடுத்ததன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகளை ஈர்க்க முயன்றிருக்கிறார். இரண்டாவதாக, வேட்டி கட்டிய தமிழர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டுமென்று ப. சிதம்பரத்தைக் குறிப்பால் உணர்த்திப் பேசிய கமல் ஹாஸனுக்குப் பெரும் நெருக்கடி தந்து ‘பாடம் கற்பித்ததாகவும்’ ஆயிற்று. தனது அரசாங்கத்தின் தடைக்கு ஜெயலலிதா கூறிய முக்கியமான காரணங்கள் இஸ்லாமிய மக்களின் உணர்வுகள் புண்படுவதும் அதன் விளைவாக உருவாகக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும். மக்கள் உணர்வு, சட்டம்-ஒழுங்கு ஆகிய இரண்டு காரணங்களைக் காட்டியே பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் எப்போதும் நசுக்கப்படுகின்றன. ஆனால் அநேகமாக எல்லா நேரங்களிலும் இதற்கான காரணமாக இருப்பது வாக்கு வங்கி அரசியலே. இந்தியாவில் சாதி, மத அடையாள அரசியல் மிகுந்த செல்வாக்குடன் இருப்பதே இதற்குக் காரணம். இடதுசாரிக் கட்சிகள்கூட இதற்குப் பலியாவதுதான் மிகவும் வேதனைக்குரியது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சியின்போது 2004இல் சில முக்கியமான வங்க எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறுப் புத்தகம் தடைசெய்யப்பட்டது, சிங்கூர் மற்றும் நந்திகிராம் பிரச்சினைகளின்போது நந்திகிராம் பகுதியில் முஸ்லிம்கள் மத்தியில் சரிந்திருந்த தனது செல்வாக்கை மீட்பதற்காக அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நெருக்கடிக்குப் பணிந்து தஸ்லிமா நஸ்ரினை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்றியது ஆகியவை இடது சாரிகள்மீது தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டன. இந்திய அரசியல் கட்சிகளில் மதச்சார்பின்மையில் மிகவும் உறுதியாக இருக்கக்கூடிய இடதுசாரிகளின் நிலை இதுவென்றால் பிற கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. உலகின் பல கிறித்துவ நாடுகளே தடைசெய்யாத டாவின்சி கோட் திரைப்படத்தை யாரும் கேட்காமலே தடைசெய்து கேலிக்குரியவரானார் கருணாநிதி.

தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு வெளியாகும் ஒரு படத்தைச் சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டித் தடைசெய்வதை ஏற்கவே முடியாது என ஏற்கனவே பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஒரே ஒரு கிராமத்திலே, ஆரக்ஷன் (இட ஒதுக்கீடு) ஆகிய படங்கள் மற்றும் கே. எம். சங்கரப்பா வழக்கு ஆகியவற்றில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துச் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது ஒரு அரசாங்கத்தின் கடமையே தவிரப் படத்தைத் தடைசெய்வதல்ல என்பதை உச்ச நீதிமன்றம் மிக உறுதியாகவே கூறியிருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் ஆபத்திருக்கிறது எனக் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டபோது சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவது கர்நாடக அரசின் கடமை. அதைக் காரணம் காட்டிக் காவிரி நீர் தர மறுப்பதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்தச் சிறந்த பாரம்பரியத்திற்கு மாறாகச் சமீபத்தில் டேம் 999 திரைப்படத்திற்கு எதிராகத் தமிழக அரசாங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ணிuரீமீஸீ ணிலீக்ஷீறீவீநீலீஇன் கூற்று எவ்வளவு எளிய உண்மை என்பது புரிகிறது. இதுவே அஷிஷ் நந்தி வழக்கிலும் உறுதியானது.

இந்த விவகாரத்தில் கமல் ஹாஸன் ஒருபோதும் தனது கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்திப் பேசவேயில்லை என்பது மிகவும் முக்கியமான விஷயம். இந்தத் தடையைத் தன் வர்த்தகத்தைப் பாதிக்கிற விஷயமாக மட்டுமே அவர் பார்த்தார். தமிழ்த் திரையுலகினர் கருத்துச் சுதந்திரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியவர்கள். கருத்துச் சுதந்திரம் குறித்துக் கமலுக்கோ பிற திரையுலகினருக்கோ கடுகளவேனும் அக்கறையிருந்திருந்தால் டேம் 999 படத்தைத் தடை செய்தபோதே எதிர்த்திருப்பார்கள். தனது கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடும் திராணி கமலுக்கு இல்லாமல்போனதில் எந்த ஆச்சரியமுமில்லை. அஷிஷ் நந்திக்கும் அந்தத் திராணி இல்லை என்பது இந்திய அறிவுஜீவிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானது என்பதைக் காட்டுகிறது. ஜனவரி இறுதியில் நடந்து முடிந்த ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் ஊழல் பற்றிப் பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றியபோது அஷிஷ் நந்தி இவ்வாறு கூறினார்: ‘அவர் (தேஜ்பால்) தனது பேச்சில் ஒரு மிக முக்கியமான பகுதியை இங்குச் சொல்லாது விட்டுவிட்டார். அது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடியது, அது மிகவும் கண்ணியமற்றது. அதை எப்படிச் சொல்வது, அது நான் கூறுகிற மிக அருவருப்பான கூற்றாக இருக்கும். பெரும்பாலான ஊழலாளர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களிடமிருந்தே வருகிறார்கள். இந்த நிலைமை நீடிக்கும்வரை இந்தியக் குடியரசு வாழும்.’

‘இந்த நிலைமை நீடிக்கும்வரை இந்தியக் குடியரசு வாழும்’ என்ற வாக்கியம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் ஊழலை நந்தி ஆதரிக்கிறார் என்பதைக் காட்டியபோதிலும் நந்தியின் இந்தக் கூற்று அடையாள அரசியல் வலுவாக இருக்கும் இந்தியாவில் எத்தகைய கொந்தளிப்புகளை உருவாக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதற்கு விளக்கங்கள் அளித்த நந்தி தான் கூறவந்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் மேட்டுக்குடி மக்களும் ஊழலாளர்களே ஆனால் அவர்கள் ஊழலாளர்களாகப் பார்க்கப்படுவதில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடி மக்கள் ஊழல் செய்கிறபோது அது பெரிதாகச் சித்தரிக்கப்படுகிறது என்பதையே நான் கூற வந்தேன் என்று உதாரணங்களுடன் விளக்கினார். அவரது ஆதரவாளர்களும் நந்தி உண்மையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஆதரவாளர், இடஒதுக்கீட்டின் ஆதரவாளர், அவர் கூறவந்த கருத்து புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்கு நேரெதிரானது என்பதை நிறுவப் பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டனர். (1980களில் சதிக்கு எதிராக இந்தியப் பெண்ணியவாதிகளும் முற்போக்காளர்களும் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தபோது அவற்றை இந்தியப் பாரம்பரியத்திற்கு எதிரானவை என்பதாகச் சித்தரித்து மறைமுகமாகச் சதியை ஆதரித்த பின்நவீனத்துவச் சிந்தனையாளர் நந்தி. யாராவது அவரைச் சதியின் ஆதரவாளர் என்று குற்றம்சாட்டினால் எப்படித் தான் சதியின் ஆதரவாளரல்ல என்பதைப் பெரும் முயற்சிகள் எடுத்து நிறுவுவதற்குத் தனக்கு வாய்ப்பிருக்கும் வகையிலேயே அவரது வாதங்கள் மிகுந்த ‘நெளிவுசுளிவு’களுடன் இருக்கும்.




விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:48 pm


சமீபத்தில் தில்லி கும்பல் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மோகன் பகவத் முன்வைத்த கருத்தான ‘இந்தியாவில்தான் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன, பாரதத்தில் அல்ல’ என்பதைத் தனது பின்நவீனத்துவ மொழிநடையில் உடனடியாக வழிமொழிந்தவர் நந்தி. அறிவொளிக் காலச் சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரிப்பவர் நந்தி. ஆனாலும் நந்திக்கு எதிராகப் பல மாநிலங்களில் இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. குறிப்பாக எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அவர்மீது பாயக்கூடிய சூழலும் உருவான நிலையில் நந்தி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர், நீதிபதிகள் ஏ. ஆர். தேவ், விக்ரம்ஜித் சென் ஆகியோர் நந்தி உடனடியாகக் கைதாவதிலிருந்து தற்காலிமாக நிவாரணம் அளித்தபோதும் நந்தியைக் கடுமையாகவே விமர்சித்தனர். மக்களின் உணர்வுகள் புண்படுகிற விதத்திலான கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாகவே தலைமை நீதிபதியின் கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனக்குத் தற்காலிக நிவாரணம் வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி கூறிய நந்தி, ‘இப்போது நான் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எனக்கு நிவாரணம் அளித்த உச்ச நீதி மன்றத்திற்கும் எனக்காகச் சிறப்பாக வாதாடிய சட்டக் குழுவிற்கும் எனது நன்றி’ என்றார். ஆக, கருத்துச் சுதந்திரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை பற்றி நந்திக்கு எந்தக் கவலையும் இல்லை. கமலுக்குத் தான் போட்ட பணம் திரும்பிவந்தால் போதும். நந்திக்குத் தான் சிறைக்குப் போகாதிருந்தால் போதும். ஜெய்ப்பூர் இலக்கிய விழா அமைப்பாளர்களுக்கு அவர்களது விழா நடந்தால்போதும். அதன் காரணமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜெய்ப்பூர் நகரக் காவல் துறையினரிடம் ‘எந்தச் சமூகத்தினரின், மதத்தினரின் உணர்வும் புண்பட எங்கள் விழாவில் அனுமதிக்கமாட்டோம்’ என ஜெய்ப்பூர் இலக்கிய விழா அமைப்பாளர்கள் எழுத்து மூலமாக உறுதி தருகிறார்கள்.

உலக நாயகனும் பின்நவீனத்துவச் சிந்தனையாளரும் இப்படி சாஷ்டாங்கமாகச் சரணடைகையில் காஷ்மீரில் பெண்களை மட்டுமே கொண்ட ராக் இசைக் குழுவைத் தொடங்கிய பள்ளி மாணவிகள் மூவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு வந்தவுடன் தங்கள் குழுவைக் கலைப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்? ஒரேயொரு பட்வா போதும் அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க. இந்த விஷயத்தில் அந்த மாணவிகளின் உரிமைகளுக்கு ஆதரவாகப் பேசிய பல முஸ்லிம்கள் எப்படிக் குரான் இதற்கு எதிரானதல்ல, பெண்கள் பொதுமக்கள் மத்தியில் இசைப்பதை நபிகள் தடுக்கவில்லை என்றுதான் பேசினார்கள். இதன் அர்த்தம் ஒருக்கால் குரானோ நபியோ பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்கு, இசைப்பதற்கு எதிராக ஏதாவது கூறியிருந்தால் அது மீற முடியாதது என்பதே.

அஷிஷ் நந்தி கூறியபடியே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் குறித்த அவரது கருத்து மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக, கண்ணியமற்றதாக, அருவருக்கத்தக்கதாக இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அதைக் கூறும் உரிமை அவருக்கிருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்தில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளோ காட்சிகளோ இடம்பெற்றிருந்தாலும் அவற்றை வெளிப்படுத்தும் உரிமை கமலுக்கு இருக்க வேண்டும். பொது வெளியில் பெண்கள் பாடுவதற்கும் இசைப்பதற்கும் எதிராக நபிகளோ குரானோ கூறியிருந்தாலும் பொது வெளியில் பாட அல்லது இசைக்க விரும்பும் பெண்கள் அவ்வாறு செய்ய எந்தத் தடையும் இருக்கக்கூடாது. ஆனால் இந்த நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய கட்சியோ அமைப்போ இன்றைய இந்தியாவில் எதுவுமில்லை. இந்த நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய அறிவுஜீவிகள்கூட அரிதினும் அரிதாகவே இருக்கிறார்கள்.

‘மனித குலம் முழுமைக்கும் ஒரே கருத்து இருந்து, அதிலிருந்து ஒரேயொரு மனிதன் மட்டும் வேறுபடும் நிலையில் அந்த மனிதனது கருத்தை மௌனமாக்குவது என்பது அந்த மனிதனுக்கு அதிகாரமிருந்து மொத்த மனித குலத்தையும் அவன் மௌனமாக்குவது எவ்வளவு அநீதியோ அதற்குக் எந்த வகையிலும் குறைவில்லாத அநீதி’ என்ற ஜான் ஸ்டூவர்ட் மில்லின் கருத்து என்று இந்தியாவில் நடைமுறைக்கு வரும்?

- க. திருநாவுக்கரசு @ காலச்சுவடு






விஸ்வரூபம் - சிறுத்துப்போன பேருருக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 6:21 pm

நல்ல பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக