ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசு - எனும் பிசாசு

4 posters

Go down

கொசு - எனும் பிசாசு Empty கொசு - எனும் பிசாசு

Post by சிவா Thu Mar 14, 2013 4:54 pm



கொசு ஜாதியில் 3000 பிரிவுகள் இருக்கின்றன. ஆர்க்டிக் துருவத்திலிருந்து ஆப்பிரிக்கக் காடுகள் வரை அவை வாசம் புரியாத பகுதிகளே பிரபஞ்சத்தில் கிடையாது. மனித இரத்தமே அதன் பிரதான ஆகாரம். விடியக்காலைப் பொழுதும் இரவு துவங்கும் பொழுதும் அவை உணவு உண்ணத் தேர்ந்தெடுக்கும் உல்லாச நேரங்கள்.

கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று கொசுக்கடி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். கை, கால் மற்றும் நுடம்பின் சில பகுதிகளில் கொசுக்களை கடித்துச் சுவைக்க அனுமதித்தார்கள். கொசு கடிக்காது. அதற்குப் பல் கிடையாது. ஆனால், கொடுக்கு மூலம் இரத்தத்தை உறிஞ்சும். ஆனால், நாம் அனைவரும் கொசு கடிக்கிறது என்றே கூறி வருகிறோம். கனடா நாட்டு விஞ்ஞானியின் மேனியில் 9000 கடிகள் கடிக்க கொசுவை அனுமதித்தார்கள். அதற்கு இரண்டு மணி நேர அவகாசம் அளித்தார்கள். விளைவு என்ன தெரியுமா? அந்த விஞ்ஞானியின் உடம்பில் உள்ள இரத்தத்தில் கலோரி அளவு குறைந்து விட்டது.

1,20,000 கொசுக்கள் கடிக்க ஒரே ஒரு முறை அனுமதித்தால் போதும். உங்கள் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் கூட மிஞ்சாது.

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் ஆண், பெண் கொசுக்களின் திறன் (அதாவது கடிப்பது) பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள். மனிதர்களுக்கு இணையாக ஆண் கொசுக்களின் காதுகளில் பாலுணர்வைத் தூண்டும் செல்கள் உள்ளதாகவும், அதன் மூலமாக தங்கைக் கடந்து செல்லும் பெண் கொசுக்களுடன் இரண்பொரு விநாடிகளில் கூடிக் கலவி செய்து இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். பெண் கொசுக்கள், இந்த இனவிருத்தி விஷயத்தில் அவ்வளவு இலகுவில் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்பதும் இந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. இருந்த போதிலும் கொசு உற்பத்தியின் வேகம், சூப்பர் ஸானிக் ஜெட் வேகத்துடன் போட்டிப் போட கூடியதே.

ஆண் கொசுக்கள், பழச்சாறு, தேன் தாவரங்களில் உள்ள நீர்ச்சத்து இவற்றையே உணவாகக் கொள்கிறது. ஆனால் பெண் கொசுக்கள், மனித இரத்தத்தையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு உயிர் வாழ்கிறது. மனித இரத்தத்தில் உள்ள புரோட்டின் அதற்குத் தேவை. இதைக் கொண்டு, அவை தன்னுள் “முட்டை’யை உருவாக்கிக் கொள்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கொசுக்களின் “சைஸ்’ தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரியது. காலப்போக்கில் இவற்றின் உருவம் சிறுத்துவிட்டது. (நல்ல வேளை)

கொசுக்களின் முகங்களின் பெரும்பகுதியைக் கண்களே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. (அவ்வளவு பெரிய கண்கள்)

மனிதர்கள் சுவாசத்தின் போது வெளியேற்றும் கரியமில வாயுவை நுகர்ந்து பார்ப்பதன் வாயிலாகவே, மனித இருப்பைக் கொசு உணர்கிறது. மணிக்கு ஒன்றரை மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. உங்கள் கையில் அகப்படாமல் பெரும்பான்மையான சமயங்களில் தப்பித்து விடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரன் மீது பரணி பாடியதாகத் தமிழில் ஒரு இலக்கிய நூல் (கலிங்கத்துபரணி) இருக்கிறது. நூறு கொசுக்களையாவது அடித்துக் கொன்ற ஒரு வீரன் மீது யாராவது ஒரு புதுக் கவிஞர் பரணி பாட முன் வரக் கூடாதா?

கொசுவினால் (கடியினால்) விளையக்கூடிய வியாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அவற்றுள் லேட்டஸ்ட், டெங்கு!

ஆப்பிரிக்காவில் மலேரியாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை பத்து லட்சம்.

எயிட்ஸ் நோயாளிகளின் இரத்தத்தைக் குடிக்கும் கொசு செத்து மடியாது. காரணம், எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தில் உள்ள வைரஸ் கிருமிகளை, கொசுவின் குடல் ஜீரணித்து ஏற்றுக் கொண்டு விடும்.

நைஜீரியாவில் உள்ள அபூஜர் என்ற நகரில் உலகின் மிகப் பெரிய கொசு வலையை உருவாக்கியிருக்கிறார்கள். 2000ம் ஆண்டு இதைத் திறந்து வைத்த நாட்டுக்கு (உலகுக்கு) அர்ப்பணித்துள்ளார்கள். இருநூறு குழந்தைகள் ஒரே நேரத்தில் இந்தக் கொசுவலையில் படுத்துத் தூங்கலாம்.

கொசுக்கடியால் ஏற்படக் கூடிய வியாதிகள் ஒழிப்பு விழிப்புணர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பிரம்மாண்டமான கொசுவலை.

கனடா நாட்டில் உள்ள கோமர்னோ, மானிடோபா என்ற பகுதியைக் கொசுக்களின் தலைநகரம் என்று அழைக்கிறார்கள். இங்கு கொசுவின் பிரமாண்ட சிலை ஒன்று நிறுவியிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய கொசு சிலை இதுவே. (உக்ரேனிய மொழியில் கோமர்னோ என்றால் கொசு என்று அர்த்தம்)

1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கொசு சிலை உருக்கினால் ஆனது. கொசுவின் இறக்கை மட்டுமே 15 அடி. காற்று, மழை, பனி, வெயில் என்ற இயற்கை கால மாறுபாட்டினாலும் இந்தச் சிலைக்கு எந்தப் பிரச்சினையும் வராது.


கொசு - எனும் பிசாசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசு - எனும் பிசாசு Empty Re: கொசு - எனும் பிசாசு

Post by சிவா Thu Mar 14, 2013 4:54 pm

டெங்கு!

“ஏடிஸ்’ எனும் வகைக் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் உண்டாகின்றது.

அதற்கான அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, தசைவலி, உடலில் சிவப்புத் திட்டுகள் தோன்றும். சிறிய குழந்தைகளுக்குக் காய்ச்சல் மற்றும் சிவப்பு திட்டுகள் ஏற்படும். பெரிய குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அறிகுறிகள் மூன்று நாட்களுக்குப் பின்பே தெரியவரும். டெங்கு காய்ச்சலால் வரும் பின்விளைவுகள்: இரத்தத்தில் தடங்களின் (அடர்த்தி) எண்ணிக்கை குறைந்து உடலில் ரத்தக் கசிவு ஏற்படும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு தோன்றும். ரத்தசோகை உண்டாகும்.
(மாடர்ன் கிச்சன் இதழிலிருந்து)

- ஜனகன்


கொசு - எனும் பிசாசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொசு - எனும் பிசாசு Empty Re: கொசு - எனும் பிசாசு

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 5:08 pm

நல்ல பகிர்வு தீர்வு தான் என்ன
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கொசு - எனும் பிசாசு Empty Re: கொசு - எனும் பிசாசு

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Mar 14, 2013 5:14 pm

mbalasaravanan wrote:நல்ல பகிர்வு தீர்வு தான் என்ன
கொசுவை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
உதாரணமாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முதலியன


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கொசு - எனும் பிசாசு Empty Re: கொசு - எனும் பிசாசு

Post by றினா Thu Mar 14, 2013 6:17 pm

மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அழித்து விடுங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கொசு - எனும் பிசாசு Empty Re: கொசு - எனும் பிசாசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum