ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுண்டாட்டம்-திரை விமர்சனம்

4 posters

Go down

சுண்டாட்டம்-திரை விமர்சனம் Empty சுண்டாட்டம்-திரை விமர்சனம்

Post by Powenraj Wed Mar 13, 2013 6:17 pm

http://www.ithutamil.com/upload/admin/1_9bcc8771-f6ed-4679-835a-03c224638154.png
கேரம்-போர்ட் விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் என்பதை தான் 'சுண்டாட்டம்' என்ற தலைப்பு உணர்த்துகிறது.
படத்தின் களம் வட சென்னை என்பதிலிருந்தே கதையை யூகிக்கலாம்.
https://lh5.googleusercontent.com/-FZ6fAO0mqw4/UT6fvdkNOrI/AAAAAAAABbI/xurjaQQeD0k/s262/Kaasi.png
'படத்தில்இரண்டு நாயகன்கள். ஒன்று இர்ஃபான்.இன்னொன்று மது' என சொல்லியுள்ளார் இயக்குநர்பிரம்மா G. தேவ். காசி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ள மதுவைநாயகன் என சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முதுகெலும்பு அல்லது மிக முக்கியமான கதாபாத்திரம் இவர் தான். அவரது போதையில் சொருகிய கண்கள், வசனம்உச்சரிக்கும் தொனி, தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் உடல்மொழி, உள்ளுக்குள் குமுறி அவமானத்தை வெறியாக வளர்த்துக் கொள்ளும் இயல்பு, செம்பட்டை தலைமுடிஎன மிரட்டுகிறார் மது.
கேரம் விளையாட்டில் பெரும் விருப்பம் கொண்ட நாயகன் பிரபாகரனாக இர்ஃபான். கையில் ஸ்ட்ரைக்கர் கிடைத்தால்.. அனைத்து காயின்களையும் குழிக்குள் கச்சிதமாக சுண்டி விட்டுவிடுவார். படத்தில் நடிப்பதற்காக ஏழு மாதங்கள் கேரம் விளையாடபயிற்சிப் பெற்றாராம். அவரது முதல்படமான பட்டாளம் பெற்றுத் தராத அங்கீகாரத்தை இப்படம் கண்டிப்பாக இர்ஃபானுக்கு பெற்றுத் தரும். விஜய் அலைவரிசையில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரில் பள்ளி மாணவனாக நடிக்கும் பொழுதே இவர் மட்டும் உயரமாய் தனித்துத் தெரிவார். அப்படி உயரமாக இருப்பதால்,சுலபமாய் பிரபாகரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். நாயகனும் அவரது நண்பர்களும் குடித்து விட்டு காவல்துறையினரிடமே செய்யும் அலப்பறை கலகலப்பூட்டுகிறது.
https://lh4.googleusercontent.com/-hC6yidoU5yI/UT6fpDyR-xI/AAAAAAAABbA/U-HFhS1v29w/s260/Arundhathi.png
இர்ஃபானின் காதலி கலைவாணியாக அருந்ததி.பாடல்களுக்கு மட்டும் ஆடும் வழக்கமான நாயகி இல்லையெனினும்.. அழுத்தமாகமனதில் பதியுமளவு இல்லை அவரது நடிப்பு. பல விடயங்களையும்கவனித்து படமாக்கியிருக்கும் இயக்குநர், ஏனோ நாயகன் நாயகி தோன்றும் காட்சிகளில் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையேயான காதலை இன்னும் அழகாக வெளிப்படுத்தி இருக்கலாம். படத்தில் திருப்பமும்,சஸ்பென்சும் இருக்க வேண்டுமென நாயகியின் சிரிக்க தெரியாத போலீஸ் அண்ணனாக ஒருவர் படத்தில் வருகிறார்.
https://lh5.googleusercontent.com/-E4AhcPC-ctA/UT6f3wNoe5I/AAAAAAAABbQ/tiACZYNUvtA/s438/Naren.png
ஆடுகளம் , சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் தோன்றி, குணசித்திர வேடங்களில் சத்தமில்லாமல் கலக்குபவர்நரேன்.இந்தப் படத்தில் வட சென்னையின் முக்கியமான தாதாவாக வருகிறார். நாயகனின் திறமையைக் கண்டு அரவணைத்துக் கொள்வதால் இவர் நல்ல தாதாவாகி விடுகிறார்.இல்லையெனில் வெறுமென கொலைகள் செய்யும் கெட்ட தாதா. சமீப கால தாதாக்களில்இருந்து ரொம்பமாறுபட்டு நரேன் அம்பாசிடர் உபயோக்கிறார். அடியாட்கள் எல்லாம் மாருதி ஆம்னியில் வருகின்றனர். சென்னை சாலைகளில் பச்சை வண்ண பல்லவன் பேருந்துகள் ஓடுகின்றது. காரணம் கதை 1990-இல் நடப்பது போல்படமாக்கப்பட்டுள்ளது. கேரம் விளையாட்டில் மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்த காலமது. அரத பழசான தொலைபேசி கருவியை உபயோகித்து ஒற்று வேலை செய்கின்றனர்.தொழில்நுட்ப வசதி இல்லா விட்டால் ஒரு கொலையைக் கூட சுலபமாக செய்ய முடியாதுபோல!! கொல்லப்பட வேண்டிய ஆள்.. தாம் காத்திருக்கும் சாலையில் வருவாரா மாட்டாரா என்ற அடியாள் ஒருவரின் பரிதவிப்பைப் படத்தில் அழகாககாட்டியுள்ளனர்.
படத்தின் முன்பாதி நேர்க்கோட்டில் பயணித்து சட்டென்று முடிகிறது. ஆனால் பின்பகுதியில் யாராவது யாரையாவது கொல்ல கத்தியுடனும், திட்டத்துடனும் விரக்தியோடு அலைந்த வண்ணம் உள்ளனர்.வாகனங்களிலும், தொலைபேசிகளிலும் 1990-ஐ கண் முன் கொண்டு வந்திடமுனைந்திருக்கும் இயக்குநர்.. நாயகனின் உடை விடயத்தில் மட்டும் பெரிதாய் கோட்டை விட்டு விட்டார். பாலகுருநாதனின் ஒளிப்பதிவும் LVK. தாஸின் படத்தொகுப்பும் கேரம்-போர்ட் விளையாட்டையும், சுற்றி நின்று வேடிக்கைப்பார்ப்பவர்களின் முகங்களையும் ரசிக்கும்படி செய்கிறது. பிரிட்டோ மைக்கேலின் இசையினில் சாவு வீட்டில் வரும் மரண கானா விஜியின் பாடல் ஈர்க்கிறது. படத்திற்கு அச்சு ராஜாமணியின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.விளையாட்டு போர் போலவும், கொலைகள் விளையாட்டாயும் சரவ சாதாரணமாய் நிகழ்கிறது. துயர சம்பவம் ஒன்றினோடு படத்தினை முடிப்பது.. தமிழ்த் திரைப்படங்களின் கட்டாய புது வழக்கமாய் மாறி வருகிறது போலும். நல்லவிதமாய் படத்தினை முடிக்க சூர்யவம்சத்து இயக்குநர் பழைய விக்ரமனனாய் மீண்டும் வந்து.. லாலாலல்லலாலா-க்களால் நம்மை குளிர்விக்கணும்.
-
இதுத்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சுண்டாட்டம்-திரை விமர்சனம் Empty Re: சுண்டாட்டம்-திரை விமர்சனம்

Post by அருண் Wed Mar 13, 2013 7:33 pm

பழைய விக்ரமனனாய் மீண்டும் வந்து.. லாலாலல்லலாலா-க்களால் நம்மை குளிர்விக்கணும்.
சிரி

பகிர்விற்கு மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சுண்டாட்டம்-திரை விமர்சனம் Empty Re: சுண்டாட்டம்-திரை விமர்சனம்

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 10:47 am

பரவாயில்லை பைத்தியம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சுண்டாட்டம்-திரை விமர்சனம் Empty Re: சுண்டாட்டம்-திரை விமர்சனம்

Post by றினா Thu Mar 14, 2013 5:14 pm

இன்னும் பார்க்கவில்லை.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சுண்டாட்டம்-திரை விமர்சனம் Empty Re: சுண்டாட்டம்-திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum