ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (மார்ச்-10)மகா சிவராத்திரி...

Go down

ஈகரை நாளை (மார்ச்-10)மகா சிவராத்திரி...

Post by Powenraj Sat Mar 09, 2013 3:07 pm

http://bhakthiplanet.com/wp-content/uploads/2013/03/mahaa-shivaratri.jpg
சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.
வேடன்
-
சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
-
குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவிஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள்.
-
நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்குஎடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.
-
முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது.அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது. வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது.
-
“என்னை கொல்வதற்கு முன் ஒருஉதவி செய். நான் என்னுடைய வீட்டுக்கு சென்று என் குழந்தைகளை பார்த்துவிட்டுவந்து விடுகிறேன்.” என்றது. மிருகங்களின் மொழி அறிந்த வேடனும், “நீ திரும்பி வருவாய் என்று உன்னை நம்புகிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்றினால், உன் குட்டிகளையும் சேர்த்தே கொன்றுவிடுவேன்.” என்று எச்சரித்து அனுப்பினான்.
-
மான் பேசும் மொழியை வேடன் எப்படி புரிந்துக் கொண்டான்? என்று சிலருக்கு கேள்வி எழலாம். பல யுகங்களுக்கு முன்பு எத்தனையோ அற்புதங்கள் ஆற்றல்கள் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் மிருகங்களின் சப்தத்தை ஒரு மொழியாக புரிந்துக்கொள்வதும்.
-
சரி நாம் கதைக்கு வருவோம். அந்த பெண் மான், வேடனிடம் “திரும்ப வருவேன் என்னை நம்பு” என்ற கூறிவிட்டு சென்றது. வேடனும் அந்த பெண்மானுக்காக காத்திருந்தான். அந்த மான் கிடைத்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று ருசியாக சாப்பிடுவார்கள் என்று ஆனந்த கனவில் இருந்தான்.
இரண்டாவது ஜாமம் வந்தது. அந்த பெண்மான் வருவது போல தெரியவில்லை. இதனால் கோபமாகதூங்காமல் மரத்தின் மேல் அசைந்து அசைந்து உட்பார்ந்தான் வேடன். அப்போதும் வேடனின் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் மீண்டும் வில்லமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது.அத்துடன் வில்லஇலையும் அந்த சிவலிங்கத்தில் பட்டது.
அந்த நேரத்தில் ஒரு ஆண் மான் வருவதை கண்ட வேடன், அந்த மானை குறி வைத்தான். இதை பார்த்த அந்த ஆண் மானும் தப்பி ஓடி முயற்சிக்காமல் வேடனிடம் பேச ஆரம்பித்தது.
-
“வேடனே எனக்கு மனைவி மக்கள்இருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.” என்றது. இதை கேட்ட வேடன் படுகோபமாக வில்லை எடுத்தான். அந்த நேரம் மூன்றாம் ஜாமம். மீண்டும் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கீழே இருந்தசிவலிங்கத்தின் மேல் பட்டு,வில்ல இலையும் லிங்கத்தின் மேல் பட்டது.
மானை பார்த்த வேடன் கோபமாக, “நான் ஏற்கனவே ஒரு பெண் மானிடம் ஏமாந்தேன். மீண்டும் ஏமாற மாட்டேன். உன்னை கொல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.” என்றான் வேடன்.
ஸ்ரீ ராமருக்கு உதவியவன்
“இரு இரு. சற்று பொறு. என்னை நம்பு. நான் சிவபக்தன். அதுவும் இன்று சிவராத்திரி.நீ இருக்கும் மரத்தின் கீழேஒரு சிவலிங்கம் இருக்கிறது.அதை வழிபடவே வந்தேன். சிவ பக்தன் ஆகிய நான் பொய் சொல்ல மாட்டேன்.” என்றது ஆண் மான். இதை கேட்ட வேடன், பரிதாபபட்டு, “சரி போ. ஆனால்சீக்கிரம் வந்துவிட வேண்டும்.” என்ற நிபந்தனையுடன் ஆண் மானை அனுப்பினான்.
-
நான்காவது ஜாமத்திலும் வேடன் நித்திரை இல்லாமல் தண்ணீர் குடிக்கலாம் என்று அருகில் இருந்த பாத்திரத்தை எடுக்கும் போது, அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. மீண்டும் வில்லஇலையும் மரத்தில் இருந்து உதிர்ந்து சிவலிங்க திருமேனில் விழுந்தது.
அப்போது, ஆண்மானும் பெண்மானும் சொன்னதுபோல் வேடன் முன்னே வந்து நின்றது.
-
“வேடனே…நாங்கள் சொன்னது போல வந்துவிட்டோம். நீங்கள்எங்களை கொன்று சாப்பிடுங்கள்.” என்றது மான்கள்.
மான் கூறியதை கேட்ட வேடன், “சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டீர்கள். மிருகங்களான உங்களுக்கே நேர்மை இருக்கும்போது, நான் மனிதன்என்பதை நானும் நிரூபிக்க வேண்டும். அதனால் உங்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பத்திரமாக திருப்பி செல்லுங்கள்.” என்றான் வேடன்.
-
வேடன் சொன்னதை கேட்ட ஆண் மானும் பெண் மானும் துள்ளிக் குதித்தபடி வில்வமரத்தை மகிழ்ச்சியுடன் சுற்றி வந்து ஓடி மறைந்தது. அந்த மான்களின் மகிழ்ச்சியை கண்டு வேடன் மிகவும் மகிழ்ந்தான்.
பிறகு, “ஈஸ்வரா…” என்று வாய் திறந்து சொல்லி மரத்தில் இருந்து இறங்கினான் வேடன். அந்த சமயம், சிவபெருமான் தோன்றினார். இறைவனை நேரில் கண்ட வேடன் அதிர்ந்து போனான்.
-
“குருத்ருஹன். உன்னை அறியாமல் நீ சிவபூஜை செய்தாய். அத்துடன் என் நாமத்தையும் உச்சரித்தாய். உன் பாவ கர்மாக்கள் தீர்ந்தது. இனி வறுமை இல்லாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வாய். அடுத்த பிறவில் நீ குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமரை தரிசித்து, பிறவி இல்லா பெருவாழ்வை பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் ஈசன்.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: நாளை (மார்ச்-10)மகா சிவராத்திரி...

Post by Powenraj Sat Mar 09, 2013 3:13 pm

இதை, நைமிசாரணியவாசிகளிடம் சொன்னார் சூத முனிவர்.
வேடன், ஒரு மகாசிவராத்திரி அன்று தன்னை அறியாமல் பூஜை செய்ததற்கே நல்ல பலன் பெற்றான். ஆனால் பல வருடங்கள் மகாசிவராத்திரி பூஜை செய்கிறோம் எங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
வங்கியில் லோன் போட்டு வீட்டை வாங்குகிறீர்கள். சில கடன் ஐந்து வருடங்கள் இருக்கும். சில கடன்கள் பத்து-பதினைந்து வருடங்கள்இருக்கும். நீங்கள் தவனையை சரியாக கட்ட கட்ட கடன் சுமை குறைவதை போல, நாம் மகாசிவராத்திரி வழிபாடு செய்ய செய்ய நம் நீண்ட கால கர்மவினை படிபடியாக குறையும். கடன் தீர்ந்தால் சொத்து திரும்ப கிடைப்பதை போல, கர்மவினைகள் தீர்ந்தால் தலைமுறை தலைமுறையாக இராஜயோக வாழ்க்கை அமையும்.
-
வீட்டில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பவர்கள், சிவலிங்கத்தின் நான்கு ஜாமத்திலும் மலர்கள், பன்னீர், வில்வ இலைகளால் பூஜிக்க வேண்டும். நான்கு ஜாமத்திலும் பூஜிக்க முடியாதவர்கள், இரவு பண்ணிரெண்டு மணிக்கு சிவபூஜை செய்தாலு்ம் பலன் கிடைக்கும். மறுநாள் சிவாலயம் சென்று வழிபடுபவது இன்னும் நல்லது.
-
முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.
ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார்.
-
சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார்.அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்குசமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, “ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ” என்ற மந்திரத்தைஉச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.
-
நன்றி-பக்திபிளானட்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum