ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவிப் பிரமாணம்

2 posters

Go down

பதவிப் பிரமாணம் Empty பதவிப் பிரமாணம்

Post by mukildina@gmail.com Tue Mar 05, 2013 11:08 am

பதவிப் பிரமாணம்
(சிறுகதை)

மாலை ஏழு மணி.

தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் எஸ்.எம்.பாலகிருஷ்ணனும், அவரது உதவியாளர் சண்முக நாதனும்.

இடைத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எம்.பாலகிருஷ்ணனின் வெற்றி நிலவரம் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.

அதே போல், வெற்றி பெற்றால் கிடைக்கவிருக்கும் மந்திரி பதவியும் ஒரு ஊசலாட்டத்தில்தான் இருந்தது.

'அண்ணே…எப்பவுமே இடைத் தேர்தல்னு வரும் போது ஆளுங்கட்சிக்குத்தாண்ணே சான்ஸ் அதிகம்….அதனால கண்டிப்பா நீங்கதாண்ணே…ஜெயிப்பீங்க…” உதவியாளர் தன் விசுவாசத்தை வார்த்தைகளாக்கி விரித்தார்.

'ம்ம்ம்…அதெல்லாம் சரிப்பா…மந்திரி பதவின்னு வரும் போது …அந்த மலையனூர் முருகு போட்டியா இருக்கானே?” எஸ்.எம்.பாலகிருஷணன் தன் கவலையைக் கொட்டினார்.

'ஆமாம்ண்ணே…நீங்க சொல்றது சரிதாண்ணே….நம்ம கட்சி ஆளுங்களிலேயே பாதிப் பேர் உங்களுக்கும்…பாதிப் பேர் அந்த மலையனூர்க்காரனுக்கும்தான் மந்திரி பதவின்னு பேசிக்கறாங்க….ரெண்டு பேருமே சரிக்குச் சரியா இருக்கீங்கண்ணே…எனக்கே குறிப்பிட்டுச் சொல்ல முடியலைன்னா பார்த்துக்கங்களேன்…!..கட்சித் தலைவர் தேவநாதன் கைலதான் இருக்கு…யாருக்கு மினிஸ்டர் போஸ்ட்ங்கறது”

'ஏதாவது ஒரு புது டிரிக் பண்ணித்தான் மக்கள்கிட்ட ஓட்டைப் பிடுங்கி ஜெயிக்கணும்…அதே மாதிரி ஏதாச்சுமொரு தகிடுதத்தம் பண்ணித்தான் மந்திரி பதவியையும் ‘லபக்‘ பண்ணனும்…அதுக்காகத்தான் நம்ம ஆலோசகர் டேனியல் ஜுலியட்டோட மொபைல் நெம்பரை டிரை பண்ணிட்டே இருக்கேன்…கெடைக்கவே மாட்டேங்குது” எஸ்.எம்.பாலகிருஷணன் சொல்லியபடியே இன்னொரு முறை முயற்சி செய்ய, ரிங் போனது. 'அட…பரவாயில்லை…ரிங் போவுது…ஹலோ…வணக்கம்…நான் எஸ்.எம்.பி. பேசறேன்”

'வணக்கம் எஸ்.எம்.பி.சார்…எப்படி இருக்கீங்க?...எப்படிப் போயிட்டிருக்கு உங்க பிரச்சாரமெல்லாம்?” ஆலோசகர் டேனியல் ஜுலியட் உற்சாகமாய்க் கேட்க,

'ப்ச்….ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை…ஜெயிப்புக்கே ஹோப் இல்லே”

'அய்யய்ய..என்ன இப்படிப் பேசறீங்க?...நம்பிக்கை வேணும் சார்…வெற்றிக்கே அதுதான் சார் ஆதாரம்”

'யோவ்…அதெல்லாம் பேச்சுக்கு நல்லாத்தான்யா இருக்கும்…நிஜத்துல வரும் போது வயத்தைக் கலக்குதுய்யா” எஸ்.எம் பாலகிருஷ்ணன் தன் உண்மை மனநிலையை சற்றும் கூச்சமின்றிச் சொன்னார்.

'ம்ம்ம்…ஓ.கே.சார்…நான் இப்பலே புறப்பட்டு அங்க வர்றேன்”

'வாய்யா..வா…உன்கிட்ட ஆலோசனை கேட்கத்தான் நானும் காத்திட்டிருக்கேன்” சொல்லி விட்டு போனைத் துண்டித்தார் எஸ்.எம் பாலகிருஷ்ணன்.

அடுத்த அரை மணி நேரத்தில் எஸ்.எம் பாலகிருஷ்ணன் வீட்டு ‘மெத்…மெத்‘ சோபாவில் தாடையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார் டேனியல் ஜுலியட்.

'யோவ்…என்னய்யா நீ?...ஏதாச்சும் ஐடியா சொல்லுவேன்னு பாத்தா இப்படிச் சிலையாட்டமா உட்கார்ந்திட்டிருக்கே…” எஸ்.எம்.பாலகிருஷ்ணன் அவசரப்பட,

'சார்..ஒரு ஐடியா…அதுக்கு நீங்க கொஞ்சம் நடிக்கணும்….முடியுமா?”

'யோவ்..ஜெயிக்கறதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்…சொல்லுய்யா…குட்டிக்கரணம் போடணுமா?”

வாய் விட்டுச் சிரித்த டேனியல் ஜுலியட், 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…உங்களோட கடைசி பிரச்சாரக் கூட்டம் எங்கே…எப்போ?”

'ம்ம்ம்….பதிமூணாம் தேதி…மாலை நாலு மணிக்கு….தெப்பக்குள மைதானத்துல…ஏன்….எதுக்குக் கேட்கறீங்க?”

'ஓ.கே…அந்த மேடைல…உங்களுக்கு மாரடைப்பு வருது….நீங்க நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சாயறீங்க…உங்களை அள்ளிப் போட்டுக்கிட்டு உங்க பிரச்சார வேன்…கே.ஜி.ஹாஸ்பிடலுக்குப் போவுது…அங்க நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுல அட்மிட் ஆகறீங்க…அடுத்த இரணடாம் நாள் எலக்ஷன்…அன்னிக்கும் நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுலதான் இருக்கீங்க…” டேனியல் ஜுலியட் சொல்லிக் கொண்டே போக,

இடையில் புகுந்தார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், 'ஓ.கே…ஓ.கே…புரிஞ்சிட்டுது…புரிஞ்சிட்டுது…அனுதாப ஓட்டுக்கு அடி போடுறீங்க…அப்படித்தானே?”

'கரெக்ட் சார்…கடைசி நிமிஷத்துல நடக்கறதுதான் மக்கள் மனசுல நிக்கும்…அதுதான் அவங்க ஓட்டைக் கூடத் தீர்மானிக்கும்…” நம்பிக்கையுடன் சொன்னார் டேனியல் ஜுலியட்.

'பார்த்தியா…இதுக்குத்தான்யா நீ வேணும்கறது…” சொல்லிவிட்டு டேனியல் ஜுலியட்டின் முதுகில் தட்டிக் கொடுத்தார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன்.

சிறு வயதில் பள்ளி நாடகங்களில் நடித்த சிறு சிறு அனுபவங்களையும், சினிமாக்களில் பார்த்த மாரடைப்புக் காட்சிகளையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, பதிமூணாம் தேதி மேடையேறி, அனல் பறக்க…ஆக்ரோஷம் தெறிக்க…விழிகள் பிதுங்க…கழுத்து நரம்புகள் புடைத்தெழ…தெப்பக்குள மைதானத்தில் பேசி முடித்த எஸ்.எம்.பாலகிருஷ்ணன், டேனியல் ஜுலியட் ஐடியாபடி,

திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார்;;;.

துடித்தார்.

துடிதுடித்தார்.

திட்டமிட்டபடியே பிரச்சார வேன் அவரை அள்ளிச் சென்று, கே.ஜி.மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தது.

கட்சித் தலைவரும், கட்சியின் இதர முக்கியப் பிரமுகர்களும் மருத்துவ மனைக்கு வந்து அவசர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் தங்கள் வேட்பாளரை காண முடியாமல் கவலையோடு திரும்பினர்.

பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்தச் செய்தியை பரபரப்பாய் வெளியிட்டு எதிர்க்கட்சி வேட்பாளரை சோகத்தில் ஆழ்த்தின.

பிரச்சாரம் ஓய்ந்தது.

வாக்குப் பதிவு தினத்தில் நிலவரத்தைத் தன் உதவியாளர் சண்முகநாதன் மூலம் தெரிந்து கொண்ட எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மகிழ்ச்சியில் மிதந்தார். 'ஹா..ஹா..ஹா..வெற்றிக்கனியும் எனக்கே…மந்திரி பதவியும் எனக்கே”

நான்காம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப் பட்டதும், ஓடோடி வந்தார் உதவியாளர் சண்முகநாதன், 'அண்ணே….நான் சொன்ன மாதிரியே நீங்க ஜெயிச்சிட்டீங்க”

'பின்னே..சாதாரண நடிப்பா நடிச்சேன்?...சிவாஜி கணேசனையே மிஞ்சுற அளவுக்கல்ல நடிச்சேன்?...சரி..சரி..மொதல்ல அந்த டேனியல் ஜுலியட்டைக் கூப்பிடு…இந்த ஐடியாக் குடுத்ததற்காக ஒரு பாராட்டு தெரிவிச்சிடலாம்”

மொபைலைத் தன் உதவியாளரிடம் நீட்டிய எஸ்.எம்.பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியின் இடதுபுறம் லேசாய் ஒரு வலி தெரிய, முகத்தைச் சுளித்தார்.

'அண்ணே…டேனியல் சார்;;; லைன்லே” சண்முகநாதன் மொலைத் தர,

வாங்கிப் பேசினார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன். 'யோவ்..டேனியல்…இனிமேல் நீதான்யா என்னோட நிரந்தர அரசியல் ஆலோசகர்…படா கில்லாடிய்யா நீ…அந்த சாணக்கியனையே மிஞ்சிட்டே போ…”

முதுகிலிருந்த வலி லேசாய் இடம் மாறி நெஞ்சின் இடப் பகுதிக்கு வந்தது. தன் இடது கை கட்டை விரலால் வலிக்கும் பகுதியை இதமாய்த் தேய்த்துக் கொண்டார்.

'எஸ்.எம்.பி. சார்…உங்களை எதிர்த்து நின்னானே அந்த எதிர்க்கட்சி வக்கீல்;;;; …டெபாசிட்டே காலியாம்”

'ஹா…ஹா…ஹா…' வலியின் தீவிரம் சிரிப்பை மட்டுப் படுத்த நிறுத்திக் கொண்டார்.

'எஸ்.எம்.பி. சார்…உங்க தலைவர் அறிவிச்சிட்டார்…மினிஸ்டர் உங்களுக்குன்னு…மருத்துவ மனையிலிருந்து திரும்பியதும்…பதவிப் பிரமாணமாம்”

'ஓ!…அ…ப்….ப….டி….யா….?' வலி உச்சமாகி குரல் சற்று விநோதமாய் மாற, போனை அணைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டார் 'எஸ்.எம்.பி.

ஐந்தே நிமிடத்தில் பெருக்கெடுத்த வியர்வையில் அவர் உடல் தெப்பலாய் நனைய, கண்கள் மேல் நோக்கிச் செருக,

'அண்ணே…அண்ணே” தன் உதவியாளர் கூவுவது எங்கோ தூரத்தில் கேட்க.

மெல்ல…மெல்ல..சிவலோகப் பதவியைப் பிரமாணம் செய்து கொண்டார் 'எஸ்.எம்.பி.

பத்து மாதங்களுக்குப் பிறகு,

இடைத் தேர்தல் அறிவிப்பு வர,

'வெற்றி என்னவோ கொஞ்சம் நெருடலாய்த்தான் இருக்கு…ஏதாச்சும் ஐடியாப் பண்ணித்தான் ஜெயிக்கணும் போலிருக்கு…என்ன பண்ணலாம் சொல்லுங்க டேனியல் ஜுலியட்!”

ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்டிருந்த மலையனூர் முருகு தன் அரசியல் ஆலோசகரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்.

mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

பதவிப் பிரமாணம் Empty Re: பதவிப் பிரமாணம்

Post by பாலாஜி Tue Mar 05, 2013 12:16 pm

நல்ல முடிவு ... நல்ல கதை ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics
»  பதவிப் பித்தர்கள்!
» ஆதி சங்கரரின் பிரமாணம்
» சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
» உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகள் நியமனம்: வரும் 25ம் தேதி பதவி பிரமாணம்
» திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி - யுணிற்றா நாதன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum