ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

3 posters

Go down

ஈகரை ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

Post by Powenraj Sat Mar 02, 2013 7:02 pm

ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை வித்தியாச மனிதர்களை சந்திக்கிறோம் ! அப்படி ஒரு ரயில் பிரயாணத்தில் தான் இவரை சந்தித்தேன். மனைவி, இரு மகள்கள், தந்தை - அம்மா என குடும்ப சகிதமாய் எங்கள் அருகிலேயே பயணித்தார். அந்தகுடும்பம் குறிப்பிட்ட ஒரு ஊருக்கு கோடை விடுமுறையில் பயணம் செய்தது குறித்து பேசிக்கொண்டிருக்க, பயணம் நமது விருப்ப சப்ஜக்ட் என்பதால் நானும் அந்த பேச்சில் கலந்து விட்டேன். சிறிது நேரத்தில் தான் தெரிய வந்தது.. அவர் ஒரு ரயில் டிரைவர் என்பது !
-
அந்த ரயிலில் பயணித்த டிக்கெட் செக்கர் உட்பட ரயில்வே ஊழியர்கள் பலரும் அவரை பார்த்ததும் நின்று பேசி விட்டு சென்றனர். அவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்னியமும் ஆச்சரியமாய் இருந்தது. தொடர்ந்து அந்த ரயில் டிரைவரிடம் பேசியதில் இருந்து:
****
எ னக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பத்தாவது முடிச்சுட்டு பாலிடெக்னிக்படிச்சேன். என்னோட 19 வயசிலேயே ரயில்வேக்கு தேர்வாகிட்டேன். அப்போருந்து 25 வருஷமா ரயில்வே வேலை தான். இந்த வேலைக்கு தேர்வானவுடன் முதலில் சில மாசம் ட்ரைனிங்கொடுப்பாங்க. அப்புறம் ரயில் ஓட்டுனர் அருகே பயணிக்கும் அசிஸ்டன்ட் ஆக இருக்கணும். குட்ஸ் ரயில் ஓட்டுறது மாதிரி நிறைய படிகள் தாண்டிட்டு, பயணிகள்ரயிலை முதல் தடவையா ஓட்ட ஆரம்பிக்க பல வருஷம் ஆகும். நான் சேர்ந்து 25 வருஷம் ஆனா கூட, இன்னமும் அடிக்கடி எங்களுக்கான டிரைனிங்கில் கலந்துக்குறேன்.
http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/00366/2008011850100401_366735e.jpg
நான் வேலைக்கு சேர்ந்த புதுசில் கரி என்ஜின் தான் இருக்கும். இப்போ நினைச்சு பார்த்தா எப்படி அந்த சூழலில் வேலை பார்த்தோம்னு ஆச்சரியமா இருக்கு. இப்போ இருப்பதெல்லாம் பெரும்பாலும் டீசல் எலக்ரிக் எஞ்சின். ரொம்ப அட்வான்ஸ்ட் எஞ்சின் இது. நாம போற இந்த வண்டியோட எஞ்சின் பார்த்தீங்கன்னா வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) வந்தது.
-
எங்க வாழ்க்கை இப்போ எவ்வளவோ பரவாயில்லை. நிலக்கரி எஞ்சின் காலத்தில் எல்லாம் ஏகமா கஷ்டப்பட்டுட்டோம். இப்போ மீட்டர் காஜ் கூட ஒழிஞ்சு, எல்லாம் பிராட் காஜ் ஆகிடுச்சு. வண்டி அதனால் செம ஸ்பீட் ஆக போகும்.
குளிர் காலத்தில் எஞ்சின் இருக்கும் இடத்தில் செம குளிர் பிச்சு எடுத்திடும்.டில்லி மாதிரி ஊரில், ரயில் எஞ்சினுக்குள் ஹீட்டர் இருக்கும். Temperature குறிப்பிட்ட டிகிரிக்கு கீழ் போயிட்டா ஹீட்டர் தானாவே ஆன் ஆகிடும்.
-
இப்போ வண்டி எல்லாம் ஸ்டார்ட் செஞ்சு விட்டா போதும். ஸ்பீட் கண்ட்ரோல் செய்வது, வண்டி போற டைரக்ஷன் பார்த்து கொள்வது,பிரேக் போடுவது, டிராக்கை கண்காணித்தபடி இருப்பது - இது தான் எங்க வேலை.
சாப்பாடு, டீ, காபி சாப்பிடுவது எல்லாமே எங்களுக்கு வண்டி ஓடும்போதே தான் நடக்கும். டேஷ் போர்டில் சாப்பாடு டப்பா வச்சு பொறுமையா சாப்பிடுவோம்.
நான் ஆர்வமாய் கேட்பதை பார்த்து " இந்த வண்டி டிரைவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை; இல்லாட்டி உங்களை எஞ்சினுக்கு கூட்டி போய் காட்டுவேன்; என் மனைவியை ஒரு முறை எஞ்சின் கூட்டி போய் காட்டிருக்கேன்". என்றார்.
-
"வண்டி ஓட்டும்போது எத்தனையோ விபத்து பார்த்தாச்சு. ஒரு முறை ரயில்வே கேட் மூடிருக்கு. அதில் புகுந்து ஒரு கணவன், மனைவி கிராஸ் பண்றாங்க. கணவன் டூ வீலரில் டிராக்கை தாண்டி போயிட்டார் மனைவி கையில குழந்தையுடன் போனில் பேசியபடி நடந்து போறார். அடி பட்டுட்டார். என்ன பண்ண முடியும்? எங்களால் வண்டியை நிறுத்தி அவங்களை காப்பாத்தவே முடியாது. நான்உடனே பிரேக் போட்டாலும் வண்டி அரை கிலோ மீட்டர் தாண்டி தான் நிக்கும். பல நேரம் எங்களுக்கு ஆட்கள் அருகில் வரும்போது தான் தெரிவாங்க".
-
"தெரியாம அடிபடுறது ஒரு பக்கம்னா, தெரிஞ்சே வந்து விழுறது இன்னொரு பக்கம். ரயில் அருகில் வந்த உடன் தான் டிராக்கிற்கு வருவாங்க. ஒண்ணுமே செய்ய முடியாது. வந்த புதுசில் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்போ இத்தகைய சாவுகள் எந்தபாதிப்பும் ஏற்படுத்துறது இல்லை. பார்த்து பார்த்து பழகிடுச்சு"
"ஒரு முறை பாலம் ஒன்றில் வண்டி போகுது. வெள்ளை சட்டை கருப்பு பேன்ட் போட்டு கொண்டு ஒரு ஆள் தூரத்தில் நிக்குறான். பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. பிரேக்கை லைட்டா பிடிச்சுகிட்டு வண்டியை சற்று மெதுவா ஓட்டினேன். வண்டி அருகில் போகும்போது அந்த ஆள் டிராக்கில் வந்து படுத்துட்டான். டக்குன்னு பிரேக்கை போட்டு வண்டியை நிறுத்திட்டேன். என்னடா வண்டி நிக்குதுன்னு பார்த்த மக்கள் ஓடி போயி அந்த ஆளை பிடிச்சிட்டாங்க. பக்கத்திலேயே அந்த ஆளோட பைக் இருந்தது. அதோட சேர்த்து அவரை நம்ம வண்டியில் தூக்கி போட்டுட்டு போயி அடுத்த ஸ்டேஷனில் போலீசில் ஹாண்ட் ஓவர் செஞ்சுட்டோம். காதல் தோல்வி போலிருக்கு. இப்படி அரிதா ஓரிரண்டு பேரை காப்பாத்தியும் இருக்கேன்".
-
வண்டி ஓடும்போது ஏதும் பிரச்சனை என்றால் பயணம் செய்வோர் செயின் புல்லிங் செய்வது பற்றி கேட்க, "மிக பெரிய பிரச்சனை என்றால் தான் செயின் புல்லிங் செய்யணும். பயணிகள் அவங்களுக்குள் இருக்கும் சண்டைக்கெல்லாம் செய்ய கூடாது. செயினை பிடிச்சு இழுத்தா வண்டி உடனே தானா நின்னுடும். என்னால ஒண்ணும்செய்ய முடியாது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இழுத்தாங்களோ அதுக்கு வெளியில் ஒரு லைட் எரியும். முன் பக்கத்தில் இருந்து இழுத்திருந்தா, என்ஜினில் இருந்து நாங்க போய் பார்ப்போம். பின் பக்கத்தில் இழுத்திருந்தா கார்ட் போய் பார்ப்பார். சரியான காரணம் இல்லாம் இழுத்தா பைன் கட்டணும், கோர்ட் போகணும். சில நேரம் யார் இழுத்தாங்கன்னு தெரியலைன்னு எழுதி முடிச்சிடுவாங்க"


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

Post by Powenraj Sat Mar 02, 2013 7:09 pm

ரயில்வேயை பொருத்தவரை மொத்தமா லாபம்னு சொன்னாலும், தென்னக ரயில்வேமட்டும் பார்த்தா அது லாசில் தான் ஓடுது. சில இடங்களில் ரொம்ப கம்மியான விலையில் டிக்கெட் வாங்குறாங்க உதாரணமா திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினம் ஒரு ரயில் ஓடுது. இதில் டிக்கெட் வெறும் 10 ரூபா தான். 1000 பேர் பயணிச்சா கூட 10,000 தான் வசூல் ஆகும். டீசல் செலவு தொடங்கி,எங்க சம்பளம் மத்த செலவு என கணக்கு பார்த்தா இந்த 10,000 ரூபா பத்தவே பத்தாது.ரயில்வேக்கு லாஸ் தான். வடக்கிலே Ore - எல்லாம் குட்ஸில் நிறைய போகும். அதனால் அங்க லாபம் வந்துடுது. பொதுவா ரயில் டிக்கெட் விலை ரொம்ப கம்மியா இருக்கு. அதை கொஞ்சமாவது அதிகப்படுத்தணும்
என்னோட குடும்பத்திலே இதுவரை யாரும் ரயில்வேயில் இருந்ததில்லை. அப்பா ஸ்கூல்தலைமை ஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு பிளஸ் ஒன் படிக்கிறா டெண்த்தில் ஐநூறுக்கு 477 மார்க் எடுத்தா. அவ படிக்கிறது திருநெல்வேலியில் ரொம்ப நல்ல ஸ்கூல். இத்தனைக்கும் அங்கே படி படின்னு ரொம்ப படுத்துறதில்லை. சொல்லி கொடுக்குற விதம், படிக்க சொல்லுற விதம் எல்லாமே வித்யாசமா இருக்கும்.
வீட்டுல கேபிள் டிவி கூட கட் பண்ணலை. ஆனா அவ ஒரு மணி நேரம் மட்டும் தான் டிவி பார்ப்பா. நாங்களும் அவளை அதிகம் பிரஷர் பண்ணுறது இல்லை. அவ தானாவே தான் ஆர்வமா படிக்கிறா
ஒன்பதாவது படிக்கும் சின்னவள் சரியான வாலு. சின்ன பசங்க தான் எப்பவும் வாலா இருக்காங்க. ரெண்டாவதுகுழந்தை வந்த பின், முதல் குழந்தை சற்று மெச்சூர்ட் ஆக நடந்து கொள்ள ஆரம்பிச்சுடுறாங்க
அம்மாவுக்கு கான்சர் -அதுக்கான ட்ரீட்மென்ட்டுக்கு தான் சென்னை போறோம். அரையாண்டு லீவு ஆச்சா? பசங்க அப்படியேசென்னை சுத்தி பாக்கட்டும்னு கூட்டி போறேன்.
-
நான் ஒரு நாள் வண்டியில் கிளம்பி சென்னையோ அல்லது வேறு ஊரோ போனா, அடுத்த நாள் இரவு தான் அங்கிருந்து கிளம்பி மறுபடி வீட்டுக்கு வருவேன். ஒரு நாள் ரெஸ்ட். வீட்டில் தொடர்ந்து எங்களால் தங்க முடியாது. அதனால் வருஷத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட ஒரு வாரம் எங்காவது வெளியூர் போவோம். அந்த ஒரு வாரம் தான்குடும்பத்தோட இருக்க கூடிய நாட்கள். மத்த படி எங்க வேலையில் லீவு அது இதுன்னு நினைக்கவே முடியாது
************
எ ங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் நன்கு பேசி பழகஆரம்பித்து விட்டனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் வீட்டில் செய்த கேக் தந்தனர்.
சென்னையில் என்னென்ன இடம் பார்க்கலாம் என்ற தகவல்கள் பேசிவிட்டு, பரஸ்பரம் போன் நம்பர் தந்து கொண்டோம்.
வண்டி எங்காவது நின்றால் வாழைப்பழம் வாங்க வேண்டும் என்று நான் சொல்ல, மதுரையில் நின்றதும் " பழ வண்டி தூரமா இருக்கு; நான் போய் வாங்கி வர்றேன். நீங்க இறங்காதீங்க. வண்டி எடுத்துட்டா பிரச்சனை " என்று சொல்லி விட்டு அவர் சென்றார். திரும்பி வந்தவர்கையில் ரெண்டு டஜன் வாழைப் பழங்கள். ஒரு சீப்பு பழங்களை தங்கள் வீட்டுக்கு கொடுத்து விட்டு, அடுத்த டஜனை எங்களுக்கு தந்தார். எவ்வளவு வற்புறுத்தியும் எங்களிடம் பணம் வாங்கி கொள்ளவே இல்லை.
மனிதர்களிடம் மனம் விட்டு பேசி, பேசுவதை காது கொடுத்து கேட்டாலே, அவர்கள்மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறோம் ....இல்லையா !
************
நன்றி- வீடுதிரும்பல் முகநூல்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

Post by Muthumohamed Sat Mar 02, 2013 10:01 pm

பதிவு அருமையிருக்கு



ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Mரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Uரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Tரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Hரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Uரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Mரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Oரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Hரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Aரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Mரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி Eரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

Post by muthu86 Sat Mar 02, 2013 10:10 pm

அருமை


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

ஈகரை Re: ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum